ஐ. பி. எல் பாருங்க பாஸ். என்னதான் பணம் விளையாடினாலும் நம்ம ஊர் லட்சுமிபதி பாலாஜியெல்லாம் இந்த மாதிரி டி.வி. ல நேரடி ஒளிபரப்பு செய்யும் ஆட்டம், செய்தி தாள்களில் அரைப்பக்கத்துக்கு செய்தி வரும் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு வருமா?
பாலாஜி, பத்ரியெல்லாம் பேர் வாங்கும் அளவுக்கு ஆடப் படும் ஆட்டங்களுக்கு ஒரு ஜே போடுங்க தல..,
உள்ளூர் கிரிக்கெட் வளருது ஓ.கே.., ஆனா தலைவர் பதவிக்கு வெளிநாட்டு ஆட்கள் தேவையா.. எப்படிப் பார்த்தாலும் மார்க்கெட்டிங் சூப்பராத்தான் போய்க்கிட்டு இருக்கு. உள்ளூர் பசங்கதான் ஒவ்வொரு அணிக்கும் தலைவராக இருக்க முடியும்ன்னு சொல்லிடலாமே .., கேப்டன் பதவிக்கு ஆட்களைத் தயார் செய்த மாதிரியும் இருக்கும்.
ஏற்கனவே யுவராஜ் சிங்கின் கேப்டன் திறமை நன்கு வெளிப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவருக்கு மேலும் பயிற்சிகள் தரலாம். பார்டர், வாக் போன்றவர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் வக்கார் யூனுஸையாவது கூப்பிட்டு பயிற்சி கொடுக்கச் சொல்லலாம். ஏதோ முதல் வருடத்தில் நாதியற்றுக் கிடந்த ராஜஸ்தான் அணிக்கு ஓய்வு பெற்ற சானவரன் தலைமையேற்றதை ப் பார்த்து எல்லோரும் வெளிநாட்டு தலைவர்களை போட ஆரம்பித்து இருக்கின்றனர்.
அப்படி யாருமே இல்லையென்றால் கவுரவத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி வெளிநாட்டு வீரர்களுக்குக் கொடுக்கலாம். அல்லது பொதுச் செயல்ர் பதவியாவது கொடுத்துவிட்டு தலைவர் பதவியை இந்திய வீரர்களுக்கு கொடுக்கலாமே..,
மகேந்திர சிங் டோனி கையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு விலக 10 நாள் ஓய்வு எடுக்கப்போகிறாராம். அதனால் சுரேஷ் ரெய்னாவை தலைவராக இருப்பாராம். நல்லவேளை ஹெய்டனை தலைவராக்காமல் போனார்களே அதுவரை சந்தோஷப் படுங்கள். டோனிக்கு சூப்பர் கிங்ஸ் அணியைவிட நைட் ரைடர்ஸ்தான் பிடித்த அணீயாக இருக்கிறதாமே நிஜமாகவா?
லாரா ஐ.பி.எல் லில் கலந்து கொள்வார் என்று பேசிக் கொள்கிறார்கள். அவரெல்லாம் சச்சின் காலத்தில் ஆட வந்தவர். அவரே விளையாட்டு வீரராக வருகிறார். ஏற்கனவே கும்ளே பந்துவீச்சில் அசத்தி வருகிறார். 20-20 வகையில் கபில்தேவ், கவாஸ்கர் போன்றவர்கள் எல்லாம் விளையாட வந்தால் அவர்களது அனுபவம் புதிய விளையாட்டு வீரர்களுக்கு மிக உதவிகரமாக அமையும். எதிர்கால இந்தியாவில் கிரிக்கெட் வளரவும் உதவும். செய்வார்களா? ஏற்கனவே கில்க்ரிஸ்ட் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களை இந்திய வீரர்களுக்கு வாரித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நல்லா தானே போய்ட்டு இருக்கு. ஏன் இப்புடி பீதிய கெளப்புறீங்க...
ReplyDeleteஎன்ன தல கபில்தேவுமா?
ReplyDelete20-20 போட்டிக்கு தகுதியான ஆள் ஒருத்தர் கீராரு.. ச்சீக்கா..
ReplyDeleteஅவர இறக்கி விடலாம் சென்னை டீம்ல. அவரையே கேப்டனாவும் போடலாம். நீங்க கேக்குற மாதிரி தமிழன் தலைவனாவாவது இருப்பான்..
பாஸ், முதல்ல இந்த டீமுங்கள்லாம் முதலாளிகளோட கம்பெனி மாதிரி..
ReplyDeleteநீங்க போயி ஐ.பி.எம் கம்பெனிக்கு எதுக்குடா மலேசியால இருந்து ஒருத்தன கூட்டிட்டு வந்து தலைவராக்குறீங்கன்னு கேள்வி கேப்பீங்களா?
போங்க பாஸு போங்க. அவிங்களுக்கு லாபம் வந்தாப் போதும்.
உங்களுக்கென்ன, மாட்ச் பாக்கையில 4 மணி நேரம் பொழுது போவுதா.. அதோட விட்டிருங்க.
அப்பு அப்ப யுவராஜ்சிங் நல்ல தலைவர் எண்டு சொல்லுறதில இருந்தே உங்கட கிரிக்கட் விற்பனதனம் விழங்குது!! உள்லூர் வீரர்களை வளர்க்க ஏன் வெளிநாட்டுகாரர்களை கூப்பிடுறிங்க??? அவங்கள விட்டுட்டு உங்கட உள்ளூர்காரர்களையே வச்சு விளயாடவேண்டியதுதானே???
ReplyDeleteஅடக்கடவுளே...நல்லா தானே போய்ட்டு இருக்கு....
ReplyDelete// ஸ்ரீ.கிருஷ்ணா said...
ReplyDeleteநல்லா தானே போய்ட்டு இருக்கு. ஏன் இப்புடி பீதிய கெளப்புறீங்க...//
வாங்க தல.., ஏதோ நம்மால் முடிஞ்சது..,
// அக்பர் said...
ReplyDeleteஎன்ன தல கபில்தேவுமா?//
ஆமா தல.., டான் பிராட்மேனின் ஆட்டத்தைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா.., அதுபோன்று கபிலின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே காரணம்
// முகிலன் said...
ReplyDelete20-20 போட்டிக்கு தகுதியான ஆள் ஒருத்தர் கீராரு.. ச்சீக்கா..
அவர இறக்கி விடலாம் சென்னை டீம்ல. அவரையே கேப்டனாவும் போடலாம். நீங்க கேக்குற மாதிரி தமிழன் தலைவனாவாவது இருப்பான்..//
:))
// rooto said...
ReplyDeleteஅப்பு அப்ப யுவராஜ்சிங் நல்ல தலைவர் எண்டு சொல்லுறதில இருந்தே உங்கட கிரிக்கட் விற்பனதனம் விழங்குது!!//
அன்புள்ள rooto அவர்களே,
சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் ஏற்றி சுந்தரத் தமிழில் எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். தெளிவான பொருள் புலப்படும். அவருக்கு பயிற்சி வேறு கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளேன். இது போன்று மாற்றுக் கருத்துக்கள் சொல்லும்போது உங்களது உறுதியான அடையாளத்தை வெளிப் படுத்திச் சொன்னால் உங்கள்மேல் ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்படும்.
ஓப்பன் ஐ.டி. வழியை திறந்து வைத்திருப்பது நகைச் சுவைப் பின்னூட்டங்களுக்காக மட்டுமே...,
// seemangani said...
ReplyDeleteஅடக்கடவுளே...நல்லா தானே போய்ட்டு இருக்கு...//
இனிமேலும் நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கும்..,
//போங்க பாஸு போங்க. அவிங்களுக்கு லாபம் வந்தாப் போதும்.//
ReplyDeleteயாரைத் தலைவர் ஆக்கினாலும் லாபம் வரும் தல.., எனக்கென்னவோ வெற்றி தோல்விகளெல்லாம் முதலிலேயே தேர்வு செய்யப் பட்டது போல தோன்றுகிறது தல..,
முதல் வருடத்தில் சானவரன் அணி வென்றது. அந்த வருடத்தில் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த ஆண்டு இறுதிப் போட்டிகளில் மோதியது. சென்ற ஆண்டு மண்னைக் கவ்விய நைட் ரைடர்ஸ் இந்த ஆண்டு அசத்திக் கொண்டு வருவது. எப்போதும் போல எல்லோராலும் பரிதாபகரமாகப் பார்க்கப் படும் அணியே வெற்றி பெறுமாறு அமைக்கப் படுவது..,
ஏறக்குறைய நன்கு திரைக்கதை, வடிவமைக்க்க சினிமாவேதான் தல..,
ஏதோ உள்ளூர்காரர்கள் தங்கள் திறமையைக் காட்ட பயன்படுத்தலாமே என்ற நப்பாசைதான் காரணம்தல..,
என்னமோ பேசிக்கீறிங்க....ஒண்ணுமே புரியலை..போயிட்டு அப்புறம் வாறேன்...நீங்க பேசுங்க..
ReplyDelete// தாராபுரத்தான் said...
ReplyDeleteஎன்னமோ பேசிக்கீறிங்க....ஒண்ணுமே புரியலை..போயிட்டு அப்புறம் வாறேன்...நீங்க பேசுங்க..//
இதைக் கூட நீங்கள் உள்குத்துடன் பேசுவதாகவும், லலித் மோடியைப் பற்றிய காட்டமானவிமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதுதான் ஐ.பி.எல். வாங்க தல பேசுவோம்..,
ipl இல் எல்லாமே காசு தான். நாடு பேதம் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்குவார்கள்.
ReplyDeleteஇந்த பதிவை நான் வன்மையாக கண்டித்தது வெளிநடப்பு செய்கிறேன். பின்னே என்னங்க, எங்க யூத் பிளேயர் பட்டோடியை என் விட்டு விட்டீர்கள்?
ReplyDeleteஉங்களோட போக்கை பார்த்தால் பிஷன் சிங் பேடியை கூட கொண்டு வரவேண்டும் என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே?
ReplyDelete//ஏற்கனவே யுவராஜ் சிங்கின் கேப்டன் திறமை நன்கு வெளிப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவருக்கு மேலும் பயிற்சிகள் தரலாம். //
ReplyDeleteஹா ஹா ஹா. நல்ல கருத்து
// குறைந்தபட்சம் வக்கார் யூனுஸையாவது கூப்பிட்டு பயிற்சி கொடுக்கச் சொல்லலாம்.//
ReplyDeleteஎன்ன ஒரு கொலைவெறி?
// என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteipl இல் எல்லாமே காசு தான். நாடு பேதம் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்குவார்கள்.//
அதனால்தான் தல சொல்கிறேன். நம்ம ஊர் படங்களே இருந்துவிட்டுப் போகட்டுமே..,
//King Viswa said...
ReplyDeleteஇந்த பதிவை நான் வன்மையாக கண்டித்தது வெளிநடப்பு செய்கிறேன். பின்னே என்னங்க, எங்க யூத் பிளேயர் பட்டோடியை என் விட்டு விட்டீர்கள்?//
ஆமாம் ஆமாம் அவர் விளையாடியும் நாங்கள் பார்த்ததில்லை..,
//King Viswa said...
ReplyDelete// குறைந்தபட்சம் வக்கார் யூனுஸையாவது கூப்பிட்டு பயிற்சி கொடுக்கச் சொல்லலாம்.//
என்ன ஒரு கொலைவெறி?//
ஆமாம் தல இதுபோல பல விளையாட்டு வீரர்கள் வர்ணனை வாய்ப்பு கூட இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் ஒழிந்துகிடக்கும் திறமைகளை வெளிக் கொணரவேண்டியது நமது கடமை..,
//rooto said...
ReplyDeleteஅப்பு அப்ப யுவராஜ்சிங் நல்ல தலைவர் எண்டு சொல்லுறதில இருந்தே உங்கட கிரிக்கட் விற்பனதனம் விழங்குது!! உள்லூர் வீரர்களை வளர்க்க ஏன் வெளிநாட்டுகாரர்களை கூப்பிடுறிங்க??? அவங்கள விட்டுட்டு உங்கட உள்ளூர்காரர்களையே வச்சு விளயாடவேண்டியதுதானே??//
வந்துட்டாய்ங்கய்யா விரலைத்தூக்கிக்கிட்டு...
ஏனுங்க, வெளிநாட்டு வீரர்களைப் பத்தி நீங்க பேசுறீங்களா? உங்க நாட்டு டீம்ல எதுக்குங்கோ தமிழர்களைச் சேக்க மாட்டேங்கிறாங்க. நீங்க சொல்ற மாதிரி உள்ளூர் வீரர்களை வளர்க்க வெளிநாட்டு வீரர்கள் தேவையில்லைன்னா??
முரளியத் தவிர வேற தமிழர்களே இல்லையா இல்ல அவங்களுக்கு வெளையாடத் தெரியாதா??
//ஒழிந்துகிடக்கும் திறமைகளை//
ReplyDeleteதல,
இதிலும் உங்கள் டிரேட் மார்க் உள்ளதே?
அதாவது அவர்களின் திறமை ஒழிந்து போய் விட்டது. அதனை மறுபடியும் நியாபகப்படுத்தி பார்க்கிறார்களோ?
@King Viswa
ReplyDeleteநன்றி தல..,
venaam...vittudu...azhuthuruven! (vadivel ishtyle!)
ReplyDelete-MCE
தல, மீ த பேக்.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி
முகிலன் எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடதெரிந்த தமிழர்கள் நிறையவே உண்டு. ஆனால் இலங்கை அணியில் இடம்பிடிக்குமளவிற்கு அவர்களது தரம் போதாது. உண்மை அதுவே. அதற்கான காரணம் தமிழர்கள் வாழும்பகுதியில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு போதிய வசதிகள், உபகரணங்கள், பயிற்சிப்பட்டறைகள் எவையும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கில்(மேற்குடன் ஒப்பிடும் போது) தவிர நான் கூறிய கருத்துகும் உங்கள் வாதத்திற்கும் சம்பந்தமே இல்லையே!! நான் கூறவந்தது எல்லாம் யுவரஜ் சிங்கை விட ஜெயவர்தன, சங்ககார மிகச்சிறந்த தலைவர்கள் அதை நான் சொல்லவில்லை ICCயே தங்கள் விருதுகள்மூலம் ஒப்புகொண்டுள்ளது.
ReplyDelete