அதில் ஹிட் கவுண்டர்களைப் பார்த்த பின் இன்னும் நிறைய பதிவிடும் ஆசை வந்தது. இந்த காலகட்டத்தில் பொங்களுக்குப்பின் ஜனவர், பிப்ரவரியில் வேலைப் பளு மிகவும் அதிகரித்து விட்டதால் பதிவிடவே முடியவில்லை.சின்ன சின்னதாய் பத்து) பின்னர் மார்ச்சில் தொடங்கியபோது சக்கரை சுரேஷ்ம் எழுத ஆரம்பித்திருந்தார். அவரது அதிரடிக்கு முன் எனது பெயர் (பெயர் குழப்பத்தின் காரணமாக) கொஞ்சம் திரை மறைவிற்குச் சென்றது. அதே காலகட்டத்தில் பிந்தொடர்பவர் பட்டியல் வேறு காணாமல் போனது.
சிலமாதங்கள் கழித்து பட்டியல் கிடைத்தபின் நமது பிந்தொடர்பவர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று நூறு நபர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல் லட்சம் ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.(வருகைகள் குறைவாக இருந்தாலும் பார்வையிட்ட பக்கங்கள் லட்சத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கிறது) அதுவும் வலைப்பூவில் எந்தவித உருப்படியான விஷய்ம எதுவும் எழுதப் படாத சூழலில் இது மிகவும் ஆச்சரியமே. எனக்குப் பின்னால் எழுத வந்தவர்களில் சிலர் 100, 200 பின் தொடர்பவர்கள் இருந்தாலும் கூட என்னைவிட மிகச் சிறப்பாக சுவாரஸிமாக எழுதக் கூடிய பலருக்கும் முன் நான் இந்தக் குறியீடுகளை அடைவது பிரம்மிப்பாகவே இருக்கிறது. அதுவும் அலெஸ்கா வரிசையும் ஓரளவு சிறப்பாகவே இருப்பதும் ஆச்சரியமே. (அதில் யாரும் தங்கள் தொழில் நுட்ப திறமை காட்டி மாற்றம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.) பின்னூட்டங்கள் என்றெடுத்துக் கொண்டாலும் சராசரியாக பத்து இருபதுதான் வருகின்றன. இருந்தாலும் 200+ இடுகைகளுக்கு லட்சம் என்பது கொஞ்சம் அதிகம்தான்.
ஸ்டார்ஜன்
விருதினைக் கொடுத்திருக்கிறார். இதை மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். மற்ற விருதுகளுக்கும் இந்த விருதுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற விருதுகள் யார் கொடுத்தாலும் ஒரே பெயர்தான் வரும். அதனால் நம் நண்பர்களில் யார் கொடுத்தாலும் அதன் பெயர் ஒன்றுதான். ஆனால் இதில் மட்டுமே நான், எனது என்ற சொற்கள் இடம் பெறுகின்றன.திருவள்ளுவர் கூட தனது குறளில் ஒரே இடத்தில் மட்டுமே யாம் என்றபதத்தை உபயோகப் படுத்துகிறார்
யாமெய்யாய் கண்ட வற்றில் இல்லை
வாய்மையின் நல்ல பிற
நான், எனது என்ற பதங்களை பயன்படுத்தி ஒரு விருதினைக் கொடுக்க போகிறோம் என்னும்போதே ஒரு பதட்டத்தினை ஏற்படுத்துகிறது இந்தவிருது.
அதுவும் நண்பன் விருது;
நண்பன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இதுதான்
இந்தப் பாடல் நண்பர்களுக்குள் இருக்கும் ஈகோ க்களை அவரவர் போக்கிலேயே காட்டும். பெரிய அளவில் தியாகம் இல்லாமல் நண்பனாக வைத்திருக்கும் வகையில் இருக்கும்.
கல்லூரி நட்பு என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாடல் போல
இதையெல்லாம் பார்த்த பிறகு யாருக்கு இந்த விருதினை வழங்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்த போது கீழ்கண்ட மாணிக்கங்கள் நினைவுக்கு வந்தார்கள் (மாணிக்கத்தின் இன்னொரு பெயர் பாஷா என்பதை நினைவு கூறுவது எனது கடமை)
Suresh Kumar
சம்பத்
LENIN KARUNAKARAN
selvarani
sakthi
வடிவேலன் ஆர்.
Sutha
மயாதி
ஜெகநாதன்
குறை ஒன்றும் இல்லை !!!
அக்பர்
herve anita
நாஞ்சில் நாதம்
சித்து
ஒலக காமிக்ஸ் ரசிகன்
Kakkoo
ஆடிப்பாவை
ராஜ நடராஜன்
ஆ.ஞானசேகரன்
அத்திரி
Thandora
என்னை பார்க்க வராதீங்க!
அபுஅஃப்ஸர்
கீத் குமாரசாமி
Chandru
Shaggy
dhinesh
Kannan.S
shirdi.saidasan@gmail.com
சரவணகுமரன்
STARJAN
வைகரைதென்றல் (vaigaraithenral )
nellaitamil
நாங்கள்
இரவுப்பறவை
Adi ardian putra
முக்கோணம்
saravanan d
vasanth kumar
sankar ganesh
sarathy
தர்ஷன் ' in ' DSHAN2009 TAMIL NETWORK
Sukumar Swaminathan
பயங்கரவாதி டாக்டர் செவன்
திவ்யா செந்தமிழ் செல்வன்
தமிழினி
விஷ்ணு.
Rafiq Raja
Vijay
King Viswa
ஜெட்லி
பாலா
Pradeep
viswam
கடைக்குட்டி
வழிப்போக்கன்
Suresh
உலவு.காம்
Ramya
ஆளவந்தான்
Radialista / Rádio Nova Friburgo Am
Loshan ARV
Seenu
akathiyin
அனுபவம்
Chandru
சே.வேங்கடசுப்ரமணியன்.
சினிமா ரசிகன்
Barani Krishnan
புருனோ Bruno
vinu
சுந்தர்
DG
ச.இலங்கேஸ்வரன்
த.ஜீவராஜ்
நசரேயன்
கணேஷ்
வாழவந்தான்
இளைய பல்லவன்
தமிழ் தோழி
தமிழன் வேணு
தேவன் மாயம்
Jaffer
bhaskar Lakshman
kudikaran .
Coalition
jothi kannan
Madhan Reddy
கதியால்
Maddy
Ab
பிராட்வே பையன்
PRAKASH
வினோத்கெளதம்
முரளிகண்ணன்
தமிழக மருத்துவர்
தமிழ்தினா
ஆனந்தன் சச்சின் டெண்டுல்கர் 90லிருந்து கொஞ்சம் நிதானம் காட்டுவது போல 98லிருந்து கொஞ்சம் நிதானித்து வந்து இப்போது 99வது பிந்தொடர்பவராக
Mrs.Menagasathia வந்திருக்கிறார்
அவரோடு சேர்ந்து 99 பேருக்கும் இந்த விருதினைக் கொடுத்து அனைவரையும் கவுரவப் படுத்த விரும்புகிறேன்.
நூறாவது பிந்தொடர்பவராக இணைந்துள்ள இவர்கள் இல்லாமல் இன்னும் சிலபேர் அனானியாக தங்களை வெளிப் படுத்த விரும்பாமல் பின் தொடரலாம். அவர்களுக்கும் கூட இந்த விருதினை வழ்ங்கி பெருமைப் படுத்த விரும்புகிறேன்.

இந்த விருதினை இங்கு வந்து சேரும் அனைவரும் தங்கள் வலைப்பூவில் ஒட்டிவைத்துக் கொண்டு இந்த விருதினையும், நண்பர்கள் தினத்தையும் சிறப்புறச் செய்தால் சிறப்பாக இருக்கும்.
அதைவிட இந்தப் பாடல் நண்பர்கள் கூட்டத்தில் உபயோகப் படும்
இன்னொரு காணொளியும் இருக்கிறது. இதில் வருபவர்களும் ந்ண்பர்கள்தான்
இந்தப் காணொளிகளை ரசிக்கும் காலகட்டத்தில் தமிழீஷ், தமிழ்மண மேல் நோக்கிய விரல் ஆகியவற்றில் ஒரு கிளிக் செய்து விட்டு ஒரு பின்னூட்டமும் போட்டுவிடுங்கள்.
அனைவருக்கும் நண்பர்தினவிழா வாழ்த்துக்கள்.
இந்த விழா எடுக்க வழிவகுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனக்கு வழிஅமைத்துக்கொடுத்த ஸ்டார்ஜனுக்கும் கோடானுகோடி நன்றிகள்
நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு விருதினை கொடுத்து மகிழுங்கள்
பின்குறிப்பு:- சிலர் தனியாக வலைப்பூ தொடங்காததுபோல் அறியப் படுகிறது அவர்கள் விரைவில் ஒரு பூவினைத்தொடங்கி நமது விருதினை மாட்டிக் கொள்ளவும்


