Thursday, January 20, 2011

நட்டநடுராத்திரியில், வெளிநாட்டு பாணியில்......,

கல்லூரியில் நண்பன் வீட்டில் goat cutting. எங்களை அழைத்திருந்தான். பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் போகும் வழியில் வீடு. {ஆனால் அதை ஊர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவனே அதை தோட்டம் என்றுதான் கூறுவான்}.


அவனது குடும்பம் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். அவனது தந்தை திருப்பூரில் ஏற்றுமதியாளர். தவிர நிறைய விவசாயம். சுருக்கமாகச் சொன்னால் சூரிய வம்சம், நாட்டாமை சரத் குமார் வீடு மாதிரி. அவனது அண்ணன் சென்னையில் பொறியியல் துறையில் ஏதோ வேலை. அவனது அக்கா குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில்தான் goat cutting. [கிடா வெட்டும் நிகழ்ச்சிதான்]



வசதி படைத்த குடும்பம் அல்லவா.. அதில் உணவுகள் எல்லாம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தினர். வீட்டின் கீழ்ப்பகுதியில் தலைவாழை இலைபோட்டு சோறு, கூட்டு, குழம்பு, ரசம், பொறியல், வடை, ஆடு, முட்டை, கோழி என்று அமர்க்களப் படுத்தி இருந்தார்கள். எங்களுக்கு மாடியை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்.

நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள் [மட்டுமே].


பார்த்த உடனேயே எங்களுக்கு ஒரே ஏமாற்றம் . இருந்தாலும் சமாளித்துக் கொண்டோம். இருந்தாலும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சாப்பாடு வாங்கத்தொடங்கினோம்.

டேய்.. மணி... நண்பனின் பால்ய சிநேகிதர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கீழே உள்ள சொந்தங்களுக்கும் சப்பாத்தி, காளான், கறி வகையறாக்கள் சிறப்பு உணவாக வழங்கப் படுவது தெரிந்து அவர்களும் வர ஆரம்பித்தனர். சின்ன அறையில் வெளியே வராமல் உள்ளேயே நின்று கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அந்த அறையின் மொத்த கொள்ளளவினையும் தாண்டி............ வெளியே செல்லவும் வழியின்றி.... மறுபடியும் வாங்க படியேறி வரவேண்டுமே...... ஒரே நேரத்தில் எல்லாப் பொருட்களையும் தட்டில் வாங்கிக் குவித்து மொத்தமாய் பிசைந்து சாப்பிட...


எப்படியோ ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம். கீழே வந்தால் எல்லோரும் தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எங்கு பஃபே முறையில் சாப்பிட்டாலும் அந்தக் காட்சிதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

29 comments:

  1. //டேய்.. மணி...//

    கூப்ட்டீங்களா? பெரிய படிப்புக்காரங்க வாறாங்கன்னு இந்தக் கூத்த நடத்தி இருப்பாங்க போல இருக்கு...எங்கயோ நெகமம் சுல்தான்பேட்டைப் பக்கம் போயிருக்கீங்க போல இருக்கு...இஃகிஃகி!

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி

    நீங்க எல்லாரும் பர்முடாஸ் போட்டுகிட்டு அதுக்கு மேலே லுங்கியை தூக்கி கட்டிகிட்டு போயிருந்தா கிடா வெட்டுன குழம்பு கிடச்சிருக்கும்

    ReplyDelete
  3. அதிகம் படிச்சாலே இதுதான் பிரச்சனை

    ReplyDelete
  4. சப்பாத்தி, காளான்னு ஒரே சைவ உணவா சொல்றீங்க.

    ReplyDelete
  5. //
    நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள்
    //

    பேரா முக்கியம், சோறு தானே அப்பு முக்கியம்.

    ReplyDelete
  6. //அதிகம் படிச்சாலே இதுதான் பிரச்சனை//

    அதே ! அதே !!

    ReplyDelete
  7. வாருங்கள் பழமைபேசி ஐயா
    புருனோ Bruno ஐயா
    நசரேயன் ஐயா
    சின்ன அம்மிணி அம்மா
    ஆளவந்தான் ஐயா
    சதங்கா (Sathanga) ஐயா ....


    உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. மொதல்லே தெளிவா நாங்க எல்லாம் லோக்கலு என்று சொல்லிவிடவேண்டியதுதானே ?

    ReplyDelete
  9. // செந்தழல் ரவி கூறியது...

    மொதல்லே தெளிவா நாங்க எல்லாம் லோக்கலு என்று சொல்லிவிடவேண்டியதுதானே ?//


    ஆனா......... அவுக பெரிய இடமில்ல..........

    ReplyDelete
  10. நசரேயன் கூறியது...
    அதிகம் படிச்சாலே இதுதான் பிரச்சனை

    எதை ப்லாகையா...

    ReplyDelete
  11. ///நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள் [மட்டு///

    நல்லா மாட்டிக்கிட்டிங்களா! வாயைத்தொறந்து இதுதான் வேணும்னு சோல்ல முடியாம

    எனக்கு முதல் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி!!!

    ReplyDelete
  12. வாங்க

    அமிர்தவர்ஷினி அம்மா.


    thevanmayam ஐயா.


    //நல்லா மாட்டிக்கிட்டிங்களா! வாயைத்தொறந்து இதுதான் வேணும்னு சோல்ல முடியாம//


    நாங்க சொன்னோம். அவங்கதான் படிக்கற பசங்க கூச்சமில்லாம சாப்பிடுங்கன்னு சொல்லி.....

    ReplyDelete
  13. //சரவணகுமரன் கூறியது...

    :-))//


    நானும் :-))

    ReplyDelete
  14. வாப்புரு சும்மா தள தளன்னு மினு மினுன்னு இருக்கு தல‌

    ReplyDelete
  15. //எல்லோரும் தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.//
    அவுங்ளுக்கு வவுத்த வலிச்சிறுக்க போவுது

    ReplyDelete
  16. முந்தியே படிச்ச மாதிரி இருக்கே?

    மீள் கட்டிங்கா?

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புருனோசார், தூயா சார், கதிர் சார், துளசி கோபால் மேடம்

    ReplyDelete
  18. //துளசி கோபால் said...

    முந்தியே படிச்ச மாதிரி இருக்கே?

    மீள் கட்டிங்கா?
    //

    ஆமாம் தல, மீள் பிரசுரம்தான்

    ReplyDelete
  19. பழனியிலிருந்து வீராங்கன்!!! அஃகஃகா... நல்லா இருக்கு புதுப் பேரு!!!

    ReplyDelete
  20. //T.V.ராதாகிருஷ்ணன் said...

    :)))
    //

    நன்றி தல

    ReplyDelete
  21. //பழமைபேசி said...

    பழனியிலிருந்து வீராங்கன்!!! அஃகஃகா... நல்லா இருக்கு புதுப் பேரு!!!
    //


    [co="green"]என்னைக் கவர்ந்த ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் தல[/co]

    ReplyDelete
  22. எச்சூஸ்மீ............... முந்தியே இந்தப் பதிவைப் படிச்ச நினைவு இருக்கே! எங்கேன்னுதான் நினைவுக்கு வரலை:(

    மீள் பதிவா??????????????

    ReplyDelete
  23. //துளசி கோபால் said...

    எச்சூஸ்மீ............... முந்தியே இந்தப் பதிவைப் படிச்ச நினைவு இருக்கே! எங்கேன்னுதான் நினைவுக்கு வரலை:(

    மீள் பதிவா??????????????
    //


    [co="red"]ஆமா தல உங்கள் பழைய பின்னூட்டத்தையும் தேதியையும் கூட பாருங்களேன்[/co]

    ReplyDelete
  24. [co="blue"]ஆமா தல, முதல் பின்னூட்டத்தின் தேதியில் போட்டது[/co]

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails