Thursday, July 2, 2009

நண்பனின் மனைவி பாகம்-2

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்



சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................

அடுத்த பாகத்திற்கு இங்கே செல்லவும்

10 comments:

  1. பயங்கர சஸ்பெண்ஸ் த்ரில்லர் ஆகிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  2. வாங்க தல..

    நீளம் அதிகமா இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக.. த்ருகிறேன்

    ReplyDelete
  3. நல்ல பதிவு!

    எழுத்துப் பிழைகள் அதிகம்.

    ReplyDelete
  4. அட..
    அதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்???
    நன்றி எல்லாம் வேண்டாங்க...
    இப்பிடி போட்டு எல்லோரும் பயனடைய வழி செஞ்சதுக்கு உங்களுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  5. வாங்க ஜோ, வேத்தியன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    சரிசெய்துவிடுகிறேன்

    ReplyDelete
  6. மேலும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது. நீங்க டிவில் மெகா தொடர் எழுதலாம், உங்களது தொடர் தான் CRT ரேடிங்கலே முதல் வரும் :) .

    ReplyDelete
  7. //சந்துரு said...

    மேலும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது. நீங்க டிவில் மெகா தொடர் எழுதலாம், உங்களது தொடர் தான் CRT ரேடிங்கலே முதல் வரும் :) .
    //


    வாங்க பாஸ்

    பாராட்டுதல்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. அடுத்த அத்தியாயம் எப்பொழுது சார்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails