Monday, January 18, 2010

நன்றி,வாழ்த்துக்கள் மற்றும் சபதம்

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

என்ற கொள்மையுடன் ஆரம்பிக்கப் பட்ட நமது வலைப்பூ வலையுலகில் பல போட்டிகளை சந்தித்து வந்துள்ளது. நமது வலைப்பூவுக்கும் 189 பிந்தொடர்பவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இருந்தாலும் ஒரு மொக்கை வலைப்பூ என்ற பிம்பத்துடனேயே காலத்தை ஓட்டி வரும் நமது வலைப்பூ தமிழ்மணம் நடத்திய போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாகவே கருதுகிறேன். இந்த வலைப்பூவிலிருந்து அனுப்பப்பட்ட 


சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?


விலைமகளே பரவாயில்லை 


ஆகிய இரண்டு இடுகைகளுமே அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தகுதிப் பெற்று இருந்தது. இந்த வலைப்பூவிற்கு பதிவர்கள் மத்தியில் கிடைத்த பெரிய அங்கீகாரமாகவே அமைந்திருந்தது. 


அந்த இடுகைகளுடன் பெரிய பெரிய தலைகளுடன் போட்டிபோட்டதில் நம்மைவிட அதிக ஆதரவு பெற்ற இடுகைகள் நிறைய இருந்த காரணத்தால் அந்த இடுகைகள் வெற்றிக் கனியைப் பெற்று விட்டன. 


எனவே அவர்களுக்கும், அவர்களோடு போட்டியிட்டு வென்ற  மற்ற இடுகைதாரர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


பெரிய பெரிய தலைகளின் இடுகைகளோடு நமது இடுகையையும் இடம் பெற வைத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓட்டுப் போட்ட வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஏதோ கிவ் அண்ட் டேக் பாலிஸி மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்தாலும், நம்மை ஊக்குவித்துக் கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருந்தால் நமது வலைப்பூவில் வரும் எழுத்துக்கள் விரைவில் தத்துவங்களாகக் கருதப் படும் காலம் விரைவில் வந்து விடும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




13 comments:

  1. //வாசகர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருந்தால் நமது வலைப்பூவில் வரும் எழுத்துக்கள் விரைவில் தத்துவங்களாகக் கருதப் படும் காலம் விரைவில் வந்து விடும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.//

    இப்பவே அப்படி தானே தல இருக்கு.

    ReplyDelete
  2. கனவுகளே தளம் மேலும் பல சிகரங்களை அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தல.

    ReplyDelete
  3. வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணே...அடிச்சு தூள் கிளப்புங்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆமா சொல்லவே இல்லை டாக்டர் சார்

    உங்க மனசு பூப்போல ..

    ReplyDelete
  7. ஏற்கனவே எங்கள் உள்ளங்களை வென்று விட்டீர்கள் தல.

    நீங்க ஒரு ஜீனியஸ்.

    ReplyDelete
  8. சபதம் நிறைவேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வருகை புரிந்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களூக்கும் நன்றி..,

    ReplyDelete
  10. பெரிய்ய்ய!! பதிவர்களோட போட்ட போட்டிக்கு வாழ்த்துக்கள் பாஸ், தொடர்ந்து உங்கள் தத்துவங்களை தொடருங்கள்

    ReplyDelete
  11. வருகை மற்றும் பின்னூட்டங்கள் தந்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails