Wednesday, January 6, 2010

நந்தினி =/= பஞ்சவன் மாதேவி

பொன்னியின் செல்வன் பதிவெழுதி ரொம்ப நாளாச்சில்ல..,

ஏதாவது எழுதுவோம் என்று சில மாதங்களாக யோசனை இருந்தது.

அப்போது இந்த தளத்தில்  பஞ்சவன் மாதேவி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

பஞ்சவன் மாதேவி ராஜராஜ சோழனின் மனைவி என்பதற்கு உடையாரை சாட்சி சொல்லுகிறார்.

பஞ்சவன்மாதேவி ராஜேந்திரனின் மனைவி என்பதற்கு உளியின் ஓசையைச் சாட்சி சொல்லுகிறார்.

அந்தக் கதையில் நந்தினி மட்டும்தான் ஒரு குழப்பமான படைப்பு என்றால் பஞ்சவன் மாதேவியுமா?

இல்லை குந்தவை மாதிரி இரண்டுபேர்களா?

உண்மையை நிலையை யாராவது சொல்லுங்களேன்.

பின்குறிப்பு:-
உடையாரின் சில பக்கங்கள் படித்ததுண்டு. அதுவும் விவாதங்களில் பாலகுமாரன் ரசிகர்களை திட்டுவதற்காக..,

உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.

13 comments:

 1. //உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.//

  தலைவரே உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை

  ReplyDelete
 2. மன்னிக்கவும் சரித்திர பாடத்தில் நாம கொஞ்சம் வீக்.

  மற்றதில் அதை விட வீக் :-).

  ReplyDelete
 3. /// சங்கர் said...

  //உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.//

  தலைவரே உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை ////////

  சும்மா கன்னா பின்னா ரிப்பீட்டு ...

  பொன்னியின் செல்வனை எதிர்பார்க்கிறோம் .

  ReplyDelete
 4. உளியின் ஓசை கையிலேயே குறுந்தகடு இருந்தும் பார்க்கும் துணிவு வரவில்லை.
  நீங்கள் காட்டிய தளத்திலிருந்து அடுத்தடுத்தடுத்தடுத்த தளம் சென்று கொண்டிருக்கிறேன்...!

  ReplyDelete
 5. ராஜேந்திரனின் மனைவியின் பெயர் வீரமாதேவி. அவள் ராஜேந்திரன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள் எனப் படித்துள்ளேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. சிங்ககுட்டியை வழிமொழிகிறேன்.

  தல உங்க கல்லூரி கதை அடுத்து எப்போ.

  ReplyDelete
 7. @சங்கர்
  @சிங்கக்குட்டி
  @Starjan ( ஸ்டார்ஜன் )
  @ஸ்ரீராம்
  @dondu(#11168674346665545885) s
  @அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

  படத்தின் குறுந்தகடு எனக்குக் கிடைக்கவில்லை..,

  விக்கிபீடியாவில் ராஜேந்திரனின் மனைவி என்று குறிப்புகள் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..,

  கல்லூரி கதை வழக்கம்போல் வெளிவரும்..,

  ReplyDelete
 8. உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
  பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.ஆனால் களம் முதல் பாத்திரங்கள் முதல் அனைத்தும் அப்பட்டமான பொ.செ.னின் தழுவலாக எழுந்தது உடையார்.

  ஆனால் துரதிருஷ்ட வசமாக பொ.செ.னின் நிழலாகக் கூட வர உடையாரால் முடியவில்லை;ஒரவேளை வேறொரு வரலாற்றுச் சூழலை மையமாக எடுத்துக் கொண்டு எழுதி இருந்தால் கூட உடையார் இன்னும் நன்றாக வந்திருக்கக் கூடும் !

  பாத்திரப்படைப்புகளைப் பொறுத்த வரை,கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.

  பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் பா.கு.அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.

  உண்மையில் ராஜராஜனின் பட்டத்து ராணியாக அமர்ந்தவள் வானவன் மாதேவி;அவள் கல்கி சித்தரித்த வானதி அல்ல.

  வானதி என்று கல்கி குறிப்பிட்ட பாத்தரத்துக்கு பிறந்தவனே ராஜேந்திரன்;அவனை வளர்க்கும் பொறுப்பையும் குந்தவையே ஏற்றுக கொண்டிருக்கலாம் என்று வரலாறு சுட்டுகிறது.

  உடையாரைப் பொறுத்த வரை அது ஒரு இலக்கியத் தரம் மிக்க கதையின் மாதநாவல் காப்பி என்றுதான் சொல்ல வேண்டும்.அநியாயமாக அதற்கு 6 பாகங்கள் வேறு.முழுக்கப் படிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

  ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.

  இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..

  ReplyDelete
 9. ஓன்ந்தெரியாதுங்க.. தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டேன் சாமீய்ய்ய்ய் :-)

  ReplyDelete
 10. //உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.//

  நான் பார்த்து விட்டு கதை சொல்ல ஆள் தேடுகிறேன் எந்த நல்லவரும் மாட்டவில்லை...நன்றி அண்ணே...

  ReplyDelete
 11. //அறிவன்#11802717200764379909 said...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..,

  உங்கள் பின்னூட்டம் தொடர்பான சில பகிர்தல்களை இங்கு கொடுத்துள்ளேன்.

  ReplyDelete
 12. // கடைக்குட்டி said...

  ஓன்ந்தெரியாதுங்க.. தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டேன் சாமீய்ய்ய்ய் :-)//

  இணையத்தில் மின்னூல் முழுவதும் அனைத்து பாகங்களும் இருக்கின்றன தல.., படித்துப் பாருங்கள்

  ReplyDelete
 13. // seemangani said...

  //உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.//

  நான் பார்த்து விட்டு கதை சொல்ல ஆள் தேடுகிறேன் எந்த நல்லவரும் மாட்டவில்லை...நன்றி அண்ணே...//

  முழுக்கதையும் சொல்லுங்க தல கேட்போம். ஆங்கிலத்தில் வெளிவந்து கோவை அப்சரா திரையரங்கில் நூறுநாள்கண்ட டிவைன் லவ்வர்ஸ் போன்றதொரு கதை என்று சொன்னார்கள்.

  படம் பார்க்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை.

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails