தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.
இப்போது திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால் பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.
யோசனை 1:-
படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள். இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.
யோசனை 2=
சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.
யோசனை 3=
இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.
யோசனை 4=
படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.
யோசனை 5=
படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.
யோசனை 6=
ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.
யோசனை 7=
படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.
யோசனை 8=
அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.
யோசனை 9=
படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.
யோசனை 10=
எந்திரன் படம் injar என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு injar என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்
டிஸ்கி:-மீள்பதிவுதான்
Kalakkal doctor
ReplyDelete\\நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்\\
:-)))))
யோசனை 5= வரவேற்கிறேன்! :))))
ReplyDelete// முரளிகண்ணன் said...
ReplyDeleteKalakkal doctor//
நன்றி தல
// gulf-tamilan said...
ReplyDeleteயோசனை 5= வரவேற்கிறேன்! :))))//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
தல,
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் நட்பு வட்டாரத்திற்கும், என்னுடைய உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.
தல,
ReplyDeleteஉங்கள் யோசனைகள் அனைத்துமே அருமை. குறிப்பாக அந்த சண் டீ டி எச் திட்டம். ஹிந்தியில் இப்படித்தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தல, நான் உங்கள மாதிரி யூத்து என்பதால் சென்ற ஜெனரேஷன் படங்களை பத்தி அவ்வளவாக தெரியாது. அதனால் அந்த குதா கவா மேட்டர் பத்தி சொன்னால் நன்றாக இருக்கும்.
தல,
ReplyDelete//படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்//
என்ன ஒரு யோசனை. தல, நீங்கள் ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
தல,
ReplyDelete//எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்// இந்த யோசனை சற்று கடினமான ஒன்று தலைவரே. ஏனென்றால் அரசியலில் மக்கள் நம்பி, நம்பி கடுப்பாகி விட்டார்கள்.
தல,
ReplyDelete//அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்// அவங்களுக்கு பொங்க வைக்க தெரியுமா? ஐ மீன் பொங்கலை?
இவிங்க (சன் பிக்சர்ஸ்) செஞ்சாலும் செய்வாய்ங்க...
ReplyDelete//.. யோசனை 10 ..//
ReplyDeleteஅருமையான யோசனை..
படப்பெட்டியை ஏதாவது குதிரை அல்லது ஒட்டகத்தின் முதுகில் கட்டி வைத்து சவுக்கால் தட்டி விட்டால் படம் ஓடவில்லை என்று யாரும் சொல்ல முடியாமல் போகும்.
ReplyDeleteநல்ல யோசனைதான்
ReplyDelete//"எந்திரனை ஓட வைப்பது எப்படி?"//
ReplyDeleteneenga thurathina athu odum
உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.
ரஜினி மற்றும் விஜய பற்றி அடிக்கடி
ReplyDeleteஎழுதி கிண்டலடித்து நீங்கள் தான் உங்க ப்ளாக்கை ஓட்டுற மாதிரி தெரியுது! :-))))
எந்திரனை ஓட வைக்க நீங்க மெனக்கெட வேண்டாம் சார்..
ReplyDeleteVoted. good one Dr.
ReplyDelete// King Viswa said...
ReplyDeleteதல,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் நட்பு வட்டாரத்திற்கும், என்னுடைய உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.//
நன்றி தல.., வருகை தரும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
// மீன் பொங்கலை?//
ReplyDeleteநாங்க வெண்பொங்கல் கேள்விப் பட்டிருக்கோம். சக்கரைப் பொங்கல் கேள்விப் பட்டிருக்க்கோம். ஆனால் மீன் பொங்கல் கேள்விப் பட்டதில்லையே தல..,
// என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteஇவிங்க (சன் பிக்சர்ஸ்) செஞ்சாலும் செய்வாய்ங்க...//
பார்ப்போம் தல.., என்ன நடக்கிறது என்று!
// பட்டிக்காட்டான்.. said...
ReplyDelete//.. யோசனை 10 ..//
அருமையான யோசனை..//
நன்றி தல..,
// சுல்தான் said...
ReplyDeleteபடப்பெட்டியை ஏதாவது குதிரை அல்லது ஒட்டகத்தின் முதுகில் கட்டி வைத்து சவுக்கால் தட்டி விட்டால் படம் ஓடவில்லை என்று யாரும் சொல்ல முடியாமல் போகும்.//
??
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநல்ல யோசனைதான்//
நன்றி தல..,
// jaisankar jaganathan said...
ReplyDelete//"எந்திரனை ஓட வைப்பது எப்படி?"//
neenga thurathina athu odum
உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.//
நன்றி தல..,
// jaisankar jaganathan said...
ReplyDelete//"எந்திரனை ஓட வைப்பது எப்படி?"//
neenga thurathina athu odum
உளம் கனிந்த மனம் உவர்ந்த இனிய தைத்திங்கள்-தைப்பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துக்கள்.//
நன்றி தல..,
// கிரி said...
ReplyDeleteரஜினி மற்றும் விஜய பற்றி அடிக்கடி
எழுதி கிண்டலடித்து நீங்கள் தான் உங்க ப்ளாக்கை ஓட்டுற மாதிரி தெரியுது! :-))))//
சில நேரங்களில் அப்படி ஆகிவிடுகிறது. ஆனால் அவதூறுகளை எழுதுவதில்லை. அவர்கள் திறமையற்றவர்கள் என்றும் எழுதியதில்லை.
// முகிலன் said...
ReplyDeleteஎந்திரனை ஓட வைக்க நீங்க மெனக்கெட வேண்டாம் சார்..//
மனநிறைவு கொடுக்கும் எந்தப் படைப்புமே வெற்றியடைந்துவிடும் தல..,
// அக்பர் said...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//
நன்றி தல.., அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..,
// ஸ்ரீராம். said...
ReplyDeleteVoted. good one Dr.//
நன்றி தல..,
தலைப்பிலேயே நிறைய சந்தேகம் இருக்கு ‘தல’
ReplyDelete--------------------
3ஆவது யோசனை அருமை
5ஆவது அடுத்த பொங்களுக்கா ?
7ஆவது கொலை வெறி
8ஆவது - உள்குத்து
// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteதலைப்பிலேயே நிறைய சந்தேகம் இருக்கு ‘தல’
--------------------
3ஆவது யோசனை அருமை
5ஆவது அடுத்த பொங்களுக்கா ?
7ஆவது கொலை வெறி
8ஆவது - உள்குத்து//
நன்றி தல
// சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.//
ReplyDelete:))