சூரியனைச்
சுற்றும் கோள்கள்
குறிப்பிட்ட காலத்தில்
குறிப்பிட்ட பாதையில்
குறிப்பிட்ட வேகத்தில்
துளியும் மாறாமல்
பிசகாமல்
யோசித்து
தானும் குழம்பி
பிறரையும் குழப்பாமல்
தானுண்டு
தன்வேலையுண்டு
என்றிருக்கும்
கோள்களுக்கு இருக்கும்
பெயரை
மனைவிக்கு வைத்த
மாயம் என்ன?
காரணம் தெரியமால்
கழுத்தைச் சொறிந்த
கணங்கள் உண்டு.
கிரகம் பிடித்தால்
தெய்வதிற்கே
சக்தி கிடையாதாம்.
ந்டைசாத்தி
தெய்வத்தையே
பாதுகாக்க வேண்டுமாம்.
அப்ப சரி
அவ்வளவு
பயமும் பாதுகாப்பும்
தேவையாக
இருக்கக்கூடிய
ஒன்று
கிரகம்தான்.
அதாகப் பட்டது
நீயும்
கிரகஸ்தன் தான்
அண்ணே சத்தம் போட்டு சொல்லாதிங்க அண்ணே...நல்லா இருக்கு..இருக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணே...
ReplyDeleteநல்லாருக்கு டாக்டர்.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteகிரகஸ்தன் என்றால் திருமணமாகி மனைவி குழந்தை உடையவன் என்று நினைக்கிறேன்!.
ReplyDelete//பெயரை
மனைவிக்கு வைத்த
மாயம் என்ன?//
இது கற்பனையா அல்லது அனுபவமா?
தல,
ReplyDeleteஇன்னும் ரெண்டு வாரத்தில உங்க ஊருக்கு வரவேண்டிய வேல இருக்கு. அப்போ வந்து அண்ணிகிட்ட பேசிக்குறேன் இந்த கவிதா மேட்டர.
ஓக்கேவா?
தல,
ReplyDeleteடென்ஷன் ஆவாதீங்க. அது கவிதா மேட்டர் இல்ல, கவிதை மேட்டர்.
நல்லாருக்கே இதெல்லாம் ...
ReplyDeleteதல நல்லாயிருக்கு
ReplyDeleteஅட கிரகச்சாரமே... அதை ஏங்க ஆராயஞ்சிகிட்டு...!
ReplyDeleteவருகையும் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கருத்து தந்து கொண்டிருக்கும் அனைவரும் நன்றி நன்றி..,
ReplyDelete// King Viswa said...
ReplyDeleteதல,
இன்னும் ரெண்டு வாரத்தில உங்க ஊருக்கு வரவேண்டிய வேல இருக்கு//
வாங்க தல வரும்போது தகவல் கொடுங்கள்..,
பயணம் இன்னும் பைனலைஸ் ஆகல தல. நாளைக்கு தான் தெரிய வரும்.
ReplyDelete