Saturday, January 23, 2010

இது ஒரு ஃபாண்டஸி கதை

முன்னறிவிப்பு:- இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும். தற்கால அவலங்களை சாடுவதாக அங்காங்கே வசனங்கள் வரும்.  முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக முயற்சி செய்ய பட்டிருந்தாலும் சில நேரங்களில் கொஞ்சம் கொடுமையும் வருவதால் மனம் திடமானவர்கள் மட்டும் படித்தல் நலம். ஆனால் இது ஆயிரத்தில் ஒருவனின் தழுவல் அல்ல.., 


கொடைக்கானல் மலையுச்சியில் இருந்து கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு கிராமம் அது. அதற்காக மலையின் அடிவாரம் என்று நீங்களாக கணக்குப் போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த பாதாள லோகத்தில் ஒரு ஓட்டுச் சாவடி. அந்த மக்களுக்கு  ஓட்டுரிமை இருப்பதே தெரியாமல் வசித்து வருகிறார்கள். ஆனால் நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு ஆகிக் கொண்டு இருக்கிறது. அங்கே பணிக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உயர் அதிகாரிகளும் உடனே அதற்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார்  அந்த அதிகாரி. அத்தோடு காணாமல் போய் விடுகிறார்.

==================================================


அவரது தோழர் இன்னொரு அரசு அதிகாரி இருக்கிறார். அவர் சத்திய மங்கலத்திலிருந்து பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திற்குச் செல்கிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார்.

=====================================================


உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது. சாட்டிலைட்டின் உதவியோடு ஒரு தங்கப் பேழையும் பட்டுத்துணிகளும் கண்டறியப் படுகின்றன. அந்தப் பட்டுத்துணிகளில் அந்த கிராமத்திற்குச் செல்லும் வழிகள் கண்டறியப் படுகின்றன. அவைகளில்   கொடுத்துள்ளப் படி அந்த கிராமத்திற்குச் செல்லும் வழியானது லண்டன் நகரத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர் கோவா வருகிறார்கள். கோவாவிலிருந்து புகை வண்டி மூலமாக சென்னை வந்து சென்னையிலிருந்து மதுரைவரை சாலை பயணமாகவும். பின்னர் வத்தலகுண்டுவரை மாட்டுவண்டிப் பயணமாகவும் வத்தலக் குண்டிலிருந்து கொஞ்சம் நடை ப் பயணம் சென்று பின்னர் காட்டுக்குள் கிடைக்கும் வழிகளெல்லாம் பயணித்தால் கிடைக்கும் வழிகள் மூலமாக அந்த கிராமத்திற்குச் சென்றடைய முடியும் என்பதாக அமைகிறது. அந்தக் காட்டுக்குள் வரும் மிருகங்கள் தரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தக் காட்டுக்குள் பிறந்த ஒரு ஆளை பிடிக்கிறார்கள்.

குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உடல் வலிமைமிக்க பெண்கள் நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக கிராமத்தான் கம்புவீரன் நியமிக்கப் படுகிறான்.

கம்புவீரன்: ஒரு குவாலிஸ் எடுத்துக்களாம் சார். நேரா வத்தலக்குண்டு தாண்டி அந்த கிராமம் வரைக்கும் போயிடலாம். அப்புறம் எப்படின்னு அங்க விசாரிச்சுக்கலாம்.

முக்கிய பொறுப்பாளர்: இப்படி பொறுப்பில்லாம போய்த்தான் இரண்டு அரசு அதிகாரிகள் என்ன ஆனாங்கன்னே தெரியல. பேசாம பட்டுச் சுவடிய பின்பற்றுங்க..


கம்புவீரன்: அப்பிடியில்ல சார். எப்படியும் சுத்தி சுத்தி வத்தலக் குண்டுதானே வரப்போறோம். அப்புறம் ஏன்சார்.

மு.பொ. இதுக்குத்தான் படிச்ச பசங்கள வேலைக்கு வெக்கணும்கறது.  இத்தன பேர் ஆலோசனை பண்ணி போட்ட திட்டம் இது. அந்த கிராமத்துக்கு நாம நன்மை செய்தே தீர வேண்டும். அதுக்காக எவ்வளவு இடையூறு எவ்வளவு செலவு வந்தாலும் நாங்க கவலைப் பட போறதே இல்ல.

அந்தக் காலத்தில பல ஆராய்ச்சிகள் செய்து நம்ம முன்னோர் கண்டுபிடிச்ச பட்டுப் பத்திரம்  இது. காரணம் இல்லாம எதையும் சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க பேசாம ஃபாலோ பண்ணுப்பா..,

இல்லேன்னா மக்காச்சோளவீரன் தயாரா இருக்கான். அவனைக் கூட்டிட்டுப் போய்விடுவோம்.

கம்புவீரன்:- என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்

=======================================================================

லண்டன் மாநகரில் அவர்களுக்காக பாய்மரக்கப்பல் தயாராக இருக்கிறது.

கம்புவீரன்: யோவ் என்னய்யா இது.., இப்பல்லாம் போக்குவரத்து பயங்கர வேகம்யா.., இப்பப் போய், பாய்மரப் படகு, நீராவி எஞ்சின் அப்படின்னு..,

முக்கியப் பொறுப்பாளர்:-  கம்புவீரா., நீ இப்ப டம்மி பீஸு, வத்தலக் குண்டு வந்த பிறகு தான் உன் வேலை ஆரம்பிக்கும். அதுவரை அடக்கிவாசி

================================================================
கப்பலில் கேப்டன் தனித்தன்மை வாய்ந்த உடையுடன் இருக்கிறார்.

மு.பொ.:- கப்பலை நேராகச் செலுத்துங்கள்

கேப்டன்:- சார் நேரா போனா மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் போகும். அந்த வழியில போனா என்ன ஆகும்னு அமெரிக்கோ வெஸ்புகி சொல்லிட்டாரு.

மு.பொ. :- எங்க நாட்டுல ஒரு கிராமமே என்ன ஆச்சுன்னு தெரியல, உனக்கு வரலாற்று நக்கல் கேட்குதா போய்யா , சொன்ன வேலையை மட்டும் செய்.

====================================================================

படகு போகும் வழியில் கப்பலின் கேப்டன் முக்கிய பெண் அதிகாரியைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டே வண்டியை ஓட்ட கப்பல் ஒரு பெரிய பனிப் பாறையில் முட்டி பாய்மரங்கள் எல்லாம் சேதாரம் ஆகிவிடுகின்றன. கப்பலில் இருந்த முக்கிய பணியாளர்கள் இறந்து விடுகிறார்கள்.  சில பெண் அதிகாரிகள் மற்றும் கம்புவீரன் ஆகியோர் மட்டும்  பக்கத்து தீவுக்குள் கரை ஒதுங்குகிறார்கள்.

அந்த தீவில் கறுப்பாக ஆஃப்ரிக்க தேசத்தவர் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களின் தலைவன் முன்னாள் நிறுத்துகிறார்கள்.

தலைவன்:- ஆஹா.., நம் வம்சம் விருத்தி செய்ய சிறந்த பெண்கள் இவர்கள்தான். நாளை பூஜை நடக்கட்டும்.

மூவரும் நடுமைதானத்தில் கட்டிவைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பல நூறு ஆண்கள் நிர்வாணமாக மது அருந்திய படி பூஜை நடக்கிறது. .....................,
..............................................,
................................                            .......................              ..........................


...............................................................,







...........................



........................................( நடப்பதை எல்லாம் எழுதினால் ஓ.எஸ். கரப்ட் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் வெறும் புள்ளிகள் மட்டும் வைக்கப் பட்டுள்ளன)


இந்த நேரத்தில்  கட்டை அவிழ்த்துக் கொண்ட கம்புவீரன்  உடன் இருக்கும் பெண் அதிகாரிகளுடன் அந்த இடத்தைவிட்டு தப்பி விடுகிறான்.  தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்.  அங்கிருந்து பறக்கும் ஒரு பெரிய பறவையின்  காலில்  கம்புவீரன் தொங்க அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு  பெண்கள் தொங்க  பெரிய பறவை பறந்து வந்து  ஓரிடத்தில் போட்டு விடுகிறது.

எந்த இடம் என்றே தெரியவில்லையே..,

கொஞ்ச தூரம் நடந்து போவோம்.  எதாவது தென்படுகிறதா பார்ப்போம்.

சொல்லிய படியே மூவரும் நடந்து அந்தக் காட்டுக்குள் செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களது வழியைக் குறுக்கிடும் யானையை அடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டு நடக்கிறார்கள். ஓரிடத்தில்  ஒரு திசை காட்டி கிடக்கிறது.  அதில் வத்தலகுண்டு 30 கி.மீ. என்று எழுதப் பட்டு உள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே செல்லச் செல்ல  ஒரு பாறை தென்படுகிறது.  அந்தப் பாறைக்கு அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று கம்புவீரன் பார்க்க உள்ளே இரு நாகரீக மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களிடம் பேச கம்புவீரனுடன் வந்த பெண்கள் முற்படுகிறார்கள்.

அப்போது அந்த மனிதர்கள் தங்களை கவுரவர்கள் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன கவுரவர்களா..,

ஆமாம். பாரதப் போரின் முடிவில் உயிர்பிழைத்த கவுரவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதாகவும் நல்ல செய்தி கிடைத்தால் திரும்பவும் பாரத தேசத்திற்கு திரும்பலாம் என்று இருப்பதாகவும் தங்களை பாண்டவர்களின் ஒற்றர்கள் என்று கைது செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவுரவர்களின் மன்னன் 110 ஆம் துரியோதனன் அங்கு வந்து மூவரையும் கைது செய்கிறான்.

அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிந்துவிடும்.

32 comments:

  1. ரொம்ப நீளமா இருக்கு, படிச்சி முடிச்சிட்டு சொல்றேன் தல

    ReplyDelete
  2. //இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும்.//

    தல உங்க பேச்சு கா.

    இருக்கும்னு சொல்லி பதிவ பார்த்தா மருந்துக்கு கூட ஒன்னும் இல்லை.

    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப்போச்சு எதாவது டானிக் இருந்தா கொடுங்க தல.

    ReplyDelete
  3. //சங்கர் said...
    ரொம்ப நீளமா இருக்கு, படிச்சி முடிச்சிட்டு சொல்றேன் தல
    //

    ;;

    ReplyDelete
  4. பிஞ்சு மனசு அண்ணே தாங்கல...சொன்னா கேட்டாதானே...
    ஹையோ...ஹையோ....

    ReplyDelete
  5. // சங்கர் said...

    ரொம்ப நீளமா இருக்கு, படிச்சி முடிச்சிட்டு சொல்றேன் தல//

    படித்துவிட்டீர்களா தல..,

    // பழமைபேசி said...

    //சங்கர் said...
    ரொம்ப நீளமா இருக்கு, படிச்சி முடிச்சிட்டு சொல்றேன் தல
    //

    ;;//

    நீங்களும் சொல்லுங்க தல..,

    ReplyDelete
  6. // அக்பர் said...

    //இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும்.//

    தல உங்க பேச்சு கா.

    இருக்கும்னு சொல்லி பதிவ பார்த்தா மருந்துக்கு கூட ஒன்னும் இல்லை.

    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப்போச்சு எதாவது டானிக் இருந்தா கொடுங்க தல.//



    எழுதி இருந்தேன் தல..,

    ஓ.எஸ் ஸில் ஏதோ பிரச்சனை, அதனால் வெறும் புள்ளிகளாக மாறிவிட்டன..,

    ReplyDelete
  7. // seemangani said...

    பிஞ்சு மனசு அண்ணே தாங்கல...சொன்னா கேட்டாதானே...
    ஹையோ...ஹையோ....//

    நன்றி தல..,

    ReplyDelete
  8. ஆமா ஆமாம் நீளம்தான்

    ReplyDelete
  9. // ஆ.ஞானசேகரன் said...

    ஆமா ஆமாம் நீளம்தான்//


    கதையைத்தானே தல சொல்றீங்க..,


    இன்னும் ஒரே ஒரு பாகம்தான் தல..,

    ReplyDelete
  10. எங்கள் தலைவரை அழைத்துவந்திருந்தால் சுலபமாக முடித்திருப்பார்.

    ReplyDelete
  11. ஐயோ சுராஷ் :-) என்ன ஆச்சு உங்களுக்கு?!

    //தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்//

    அதுசரி அப்புறம் கம்புக்கு துணி? .....ஏய் ஹலோ நான் சொன்னது கம்புவீரனுக்கு துணி?

    //அடுத்த பாகம்//

    நீங்க ஒரு முடிவு எடுத்த அப்புறம் உங்க பேச்சை நீங்களே கேட்ட மாட்டிங்க :-)

    ReplyDelete
  12. கொஞ்சம் வித்தியாசமான கதை..

    ReplyDelete
  13. தல - எனக்கு பிடித்ததே மேற்கிந்திய தீவு ஜோக்தான். சூப்பர் :-)

    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  14. அருமையான கதை ; மருந்துக்கு கூட ஒண்ணையும் காணோம் .

    ஏமாத்திபுட்டீங்களே , சிரிச்சாச்சு மாத்திரை எங்கே

    ReplyDelete
  15. //மக்காசோளவீரன் said...

    எங்கள் தலைவரை அழைத்துவந்திருந்தால் சுலபமாக முடித்திருப்பார்.//

    வாங்க தல.., உங்களுக்கு கண்டிப்பாக வேலை கொடுக்கப் படும். அடிக்கடி வந்து கொண்டே இருங்கள்

    ReplyDelete
  16. // சிங்கக்குட்டி said...

    ஐயோ சுராஷ் :-) என்ன ஆச்சு உங்களுக்கு?!

    //தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்//

    அதுசரி அப்புறம் கம்புக்கு துணி? .....ஏய் ஹலோ நான் சொன்னது கம்புவீரனுக்கு துணி?
    //


    அவர் இதெற்கெல்லாம் கவலைப் படாதவர்.

    கதையிலேயே சொல்லி இருக்கிறேன். அடுத்த காட்சியில் வரும் யானையை அடித்து அதன் தோலை ஆடையாக அணிந்து கொள்கிறார்.

    ReplyDelete
  17. ////அடுத்த பாகம்//

    நீங்க ஒரு முடிவு எடுத்த அப்புறம் உங்க பேச்சை நீங்களே கேட்ட மாட்டிங்க :-)//


    பாருங்க தல.., இதற்கு முன்னால் பின்னூட்டம் போட்டவர்கள் நீளமாக உள்ளதாகச் சொல்றாங்க தல..

    எனக்கே ரொம்ப நீளமாக இருந்ததால்தான் அடுத்த பாகம். கண்டிப்பாக முடித்து விடுவேன்

    ReplyDelete
  18. //Sangkavi said...

    கொஞ்சம் வித்தியாசமான கதை..//

    நன்றி தல..,

    ReplyDelete
  19. // Karthick said...

    தல - எனக்கு பிடித்ததே மேற்கிந்திய தீவு ஜோக்தான். சூப்பர் :-)

    http://eluthuvathukarthick.wordpress.com///


    நன்றி தல..,

    ReplyDelete
  20. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அருமையான கதை ; மருந்துக்கு கூட ஒண்ணையும் காணோம் .

    ஏமாத்திபுட்டீங்களே , சிரிச்சாச்சு மாத்திரை எங்கே//


    நன்றி தல.., அடுத்த பாகம் படியுங்கள் தல..,

    சற்று நிறையவே வந்து கொண்டிருக்கிறது..,

    ReplyDelete
  21. வித்தியாசமான கதைகளம்

    எதிர்பார்தது ஒன்னும் கிடைக்கலே

    அடுத்தபதிவிலாவது பார்ப்போம்

    ReplyDelete
  22. செக்ஸ் நிறைய இருக்கும்..."//

    இரண்டாம் பாகத்திலா?

    // ஆ.ஞானசேகரன் said...

    ஆமா ஆமாம் நீளம்தான்//


    கதையைத்தானே தல சொல்றீங்க..

    பதிவை விட பின்னூட்டத்தில்...

    ReplyDelete
  23. // அபுஅஃப்ஸர் said...

    வித்தியாசமான கதைகளம்

    எதிர்பார்தது ஒன்னும் கிடைக்கலே

    அடுத்தபதிவிலாவது பார்ப்போம்//

    வாங்க தல.., அடுத்த பின்னூட்டம் பார்த்தீங்களா...,

    ReplyDelete
  24. // ஸ்ரீராம். said...

    செக்ஸ் நிறைய இருக்கும்..."//

    இரண்டாம் பாகத்திலா?

    // ஆ.ஞானசேகரன் said...

    ஆமா ஆமாம் நீளம்தான்//


    கதையைத்தானே தல சொல்றீங்க..

    பதிவை விட பின்னூட்டத்தில்...//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,,,

    ReplyDelete
  25. என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்....!!!

    ம்ம் நடத்துங்க பாஸ்!

    ReplyDelete
  26. சில படங்கள் நம்மை இந்த அளவுக்கு கூட கொண்டுபோய் விடும் என்பதை நயம்பட பதிந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  27. // ஜெகநாதன் said...

    என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்....!!!

    ம்ம் நடத்துங்க பாஸ்!//

    வாங்க தல சேர்ந்து நடத்துவோம்

    ReplyDelete
  28. // தாராபுரத்தான் said...

    சில படங்கள் நம்மை இந்த அளவுக்கு கூட கொண்டுபோய் விடும் என்பதை நயம்பட பதிந்துள்ளீர்கள்.//

    நன்றி ஐயா..,

    ReplyDelete
  29. எழுதி இருந்தேன் தல..,

    ஓ.எஸ் ஸில் ஏதோ பிரச்சனை, அதனால் வெறும் புள்ளிகளாக மாறிவிட்டன..,]]

    பதிவை விட - இதுதான் டாப்பு

    ஹா ஹா ஹா

    செம ஹாஸ்யம் போங்கோ ...

    ReplyDelete
  30. // நட்புடன் ஜமால் said...

    எழுதி இருந்தேன் தல..,

    ஓ.எஸ் ஸில் ஏதோ பிரச்சனை, அதனால் வெறும் புள்ளிகளாக மாறிவிட்டன..,]]

    பதிவை விட - இதுதான் டாப்பு

    ஹா ஹா ஹா

    செம ஹாஸ்யம் போங்கோ ...//



    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,,,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails