Tuesday, July 28, 2009

மணியனின் படைப்பு வெளியான அன்று.......

அன்றே சொன்னான் மணியன். இதெல்லாம் வேண்டாம்டா..,

இருந்தாலும் நரேந்திரன் அடம்பிடித்தான்
உன் திறமை உனக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். நீ எழுதுடா.., மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்..,


நரேந்திரனின் தூண்டுதலால்தான் இதை எழுதவே செய்தான். ஊர்காரர்கள் எல்லோருக்கும் இன்று தெரிந்துவிட்டது. சிலர் அதைப் படித்திருந்தனர். பெரும்பாலோனோர்க்கு செவி வழிச் செய்திதான்.

என்ன தைரியம்? இந்த வயசில் எப்படி எழுதி இருக்கான் பாரு? பலராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் ஜாதியின் பெருமைகளை ஒருமுறை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர். ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் படைப்பினை புரிந்து கொள்ளும் சக்தி அந்த ஊரில் யாருக்குமே இருக்க வில்லை.

சகமாணவர்கள் கூட பொரிந்து தள்ளிக் கொண்டு இருந்தார்கள். என்னடா ஒரு கேவலமான ரசனை, வர்ணணை இவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்று துக்கம் விசாரித்துச் சென்றனர்.

தனது படைப்பு ஒன்று பலரையும் சென்றடந்தது மணியத்திற்கு மகிழ்ச்சிதான். வழக்கமாக தமிழ் இரண்டாம் தாளில் மட்டும் கவிதை, கதை எழுதி வந்தவனின் படைப்பு இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது ஓரளவு மகிழ்ச்சியே தந்தது.

ஊர் பெரியவர் ராஜசேகர் எழுதியவர்களை அடிப்பதற்கு ஆட்களையே தயார் செய்து அனுப்பியிருந்தார் என்றால் அதன் விளைவுகளை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அவரது மகள் கோமதி கூட மணியன் நரேந்திரனுடந்தான் படித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு அடித்தடி, பதட்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட மணியன் இதெற்கெல்லாம் கவலைப் படமால் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் இதெல்லாம் எதிர்பார்த்தது தான். அதனால்தான் எழுதியவன் பெயராக தன்பெயரைப் போடாமல் நரேந்திரன் பெயரைப் போட்டிருந்தான். ஆனால் நரேந்திரந்தான் எதிர்பார்க்கவில்லை.

படித்துப் பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கப் படும். நான் வேறொரு முயற்சி செய்யலாம் என்று நினைத்திருந்தான். இதற்கு முன் அவனது பலபடைப்புகளுக்கு வரவேற்பு அப்படித்தான் இருக்கும். எழுதியதும் தெரியாது, நிராகரிக்கப் பட்டதும் தெரியாது, குப்பைத் தொட்டிக்குப் போனதும் தெரியாது. அதனால்தான் இந்த முறை மணியனிடம் எழுதி தரச் சொல்லியிருந்தான். அவனும் கூட சின்ன யோசனைகள் சொல்லி அதை மெருகு படுத்தி இருந்தான். படித்துப் பார்த்த போது நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது.



இதெல்லாம் இந்த கோமதியால் வந்தது. அவள்தான் இதெற்கெல்லாம் காரணம். கொடுத்த கடிதம் பிடிக்கவில்லையென்றால் கிழித்தெறிந்துவிட்டுப் போக வேண்டியது தானே..., அதை பத்திரமாக அவள தந்தையிடம் கொடுக்க அவர் கோபத்தில் எகிர ஊரே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

17 comments:

  1. ஹா ஹா ஹா

    காதல் கடிதமா!

    சூப்பர் ‘தல’

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  3. உண்மை கதை போல தெரியுது..இந்த கதைல உங்க கேரக்டர் என்ன டாக்டர்???

    ReplyDelete
  4. லட்டர் கொடுத்த உடனே எங்க ஒத்துக்கிட்டாங்க இந்த பெண்கள் ....

    ReplyDelete
  5. நான் உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளேன்

    பெற்றுக்கொள்ளவும்

    ReplyDelete
  6. என்ன தல இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டிங்க.

    ReplyDelete
  7. நல்லா சொல்றீங்க கடிதத்துக்கு அடி வாங்கியதை ..

    ReplyDelete
  8. ///வழக்கமாக தமிழ் இரண்டாம் தாளில் மட்டும் கவிதை, கதை எழுதி வந்தவனின் படைப்பு இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது ஓரளவு மகிழ்ச்சியே தந்தது.///

    :-)

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    குறை ஒன்றும் இல்லை !!

    லோகு

    பழமைபேசி

    Starjan ( ஸ்டார்ஜன் )

    அக்பர்

    சூரியன்

    ReplyDelete
  10. ஹ ஹ ஹா......

    லெட்டர் கொடுக்குற காலமெல்லாம் போய்டுச்சு தல இப்போ ஒரே ஒரு எஸ் எம் எஸ் தான்

    ReplyDelete
  11. //பிரியமுடன்.........வசந்த் said...

    ஹ ஹ ஹா......

    லெட்டர் கொடுக்குற காலமெல்லாம் போய்டுச்சு தல இப்போ ஒரே ஒரு எஸ் எம் எஸ் தான்//

    அதனால்தான் கதையை ஒரு குக்கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கொண்டு எழுதியுள்ளேன்

    ReplyDelete
  12. நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய!!!!

    ReplyDelete
  13. முகவரி இல்லாத காதல் கடிதங்கள் எப்பவுமே Safe....

    ReplyDelete
  14. @ஜெகநாதன்
    @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails