Saturday, August 22, 2009

எந்திரன் விமர்சனம்.

1. ஏற்கனவே மலைக்கள்ளன், குரு, சிவாஜி என்ற பல பெயர்களில் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்ற பலரும் நடித்த கதை,திரைக்கதை, வசனம்.

2.ஏற்கனவே ஆங்கில்ம், இந்தி, தெலுங்கு கொஞ்சம் மலையாளம் போன்ற மொழிகளில் வந்த பிண்ணனி மற்றும் முண்ணனி இசைக் குவியல்

3.வில்லன் மாதிரியான் கதாநாயகி, பல இடங்களில் அவரால்தான் ஹீரோவுக்கு பிரச்சனை

4.துவக்கக் காட்சி அப்படியே ஆங்கிலத்தில், இந்தியில், பழைய ரஜினி படத்தில் வந்த காட்சி, அடுத்த அடுத்த காட்சிகளும் அப்படியே

5. தேவையில்லாத நகைச்சுவை நடிகப் பட்டாளம்

6. நல்ல நடிகர், மிஷின் மாதிரி உழைத்திருக்கிறார்.

7. 20 ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப் பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள்

8.போலீஸுக்கு தெரியும் ஆனால் பிடிக்க மறுக்கும் காரணங்கள்தான் தெரியவில்லை.

9.மாறு வேடத்தில் இருப்பவர்க்கு எதற்கு இன்னொரு மாறுவேடம் என்றுதான் தெரியவில்லை

10. விஜய், அஜித் படங்கள் ஓடுவதுபோல் இதுவும் ஓடும்

பின்குறிப்பு:- கந்தசாமி வெளிவருவதற்கு முதல்நாள் இந்த விமர்சனத்தைப் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்குத் தெரியாமலேயே படம் வெளிவந்துவிட்டது என்பதை பதிவுகளின் மூலம் உணர முடிந்ததால் அதனால் இந்த விமர்சனத்தையே எந்திரன் படத்துக்கும் வைத்துக் கொள்ளுமாறு முன் கூட்டியே ரசிகர்களை கேட்டுக் கொள்க்கிறேன்.

டிஸ்கி:- மீள்பதிவு, எந்திரன் விமர்சனத்தை முதலிலேயே போட வேண்டும் என்ற தனியாத தாகத்தில் போட்டது

21 comments:

  1. ஹா.. ஹா.. அப்படினா நீங்க படமே பாக்கலையா.. நல்லதா போச்சு..

    ReplyDelete
  2. ஓட்டு வாங்குற டெக்னிக் நல்லாயிருக்கு

    ReplyDelete
  3. இன்னும் பல தமிழ் படங்களுக்கு இதே விமர்சணம் சேமிச்சி வச்சிகலாம்.

    ReplyDelete
  4. உங்களுக்கு கொஞ்சம் நீளம் தான்...
    குசும்பை சொன்னேன் தல...

    ReplyDelete
  5. ஜெட்லி said...
    ///உங்களுக்கு கொஞ்சம் நீளம் தான்...
    குசும்பை சொன்னேன் தல...///

    கொஞ்சம் இல்ல ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளம்.. நானும் குசும்பைத்தான் சொன்னேன்

    ReplyDelete
  6. நல்ல நடிகர் என்ற ஒரு சொல்லே விக்ரமின் நடிப்பில் குறையில்லை என்பதை உணர்த்துகிறது..இது போதும்(காரணம் நானொரு விக்ரம் ரசிகர்..)..

    ReplyDelete
  7. சூப்பர் நக்கல் தலைவா!

    ReplyDelete
  8. அண்ணே.. இது உங்களுக்கு
    http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html

    ReplyDelete
  9. // லோகு said...

    ஹா.. ஹா.. அப்படினா நீங்க படமே பாக்கலையா.. நல்லதா போச்சு..//

    பார்த்துவிடுவேன்

    // குடிகாரன் said...

    ஓட்டு வாங்குற டெக்னிக் நல்லாயிருக்கு//

    ஹி ஹி

    // நட்புடன் ஜமால் said...

    இன்னும் பல தமிழ் படங்களுக்கு இதே விமர்சணம் சேமிச்சி வச்சிகலாம்.//

    இனி எல்லா படங்களுக்கும் இது வரும் தல

    ReplyDelete
  10. @ஜெட்லி
    @T.V.Radhakrishnan
    @Kiruthikan Kumarasamy
    @வழிப்போக்கன்
    @பிரியமுடன்...வசந்த்
    @ஆ.ஞானசேகரன்
    @சங்கா
    @மகேஷ்
    @ஊர்சுற்றி

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  11. ச்சே.. அப்படியா இருக்கும்? இருக்காதுங்க! எந்திரன் ஷங்கர் கதைன்னு நினைச்சுட்டீங்க போல! அது சுஜாதா கதை!

    ReplyDelete
  12. // pappu said...

    ச்சே.. அப்படியா இருக்கும்? இருக்காதுங்க! எந்திரன் ஷங்கர் கதைன்னு நினைச்சுட்டீங்க போல! அது சுஜாதா கதை!//

    சுஜாதா கதை ஒண்ணு ஆனந்தத் தாணடவம் ஆடுச்சு.., பாத்தீங்களா தல..,

    விமர்சனம் அப்படிங்கறது நம்ம எழுதறதுதானே...,

    சந்தோஷமா பாத்து எழுதினா நல்ல படம்.., வீட்டில் சண்டைப் போட்டுவிட்டுப் பார்த்தா கொஞ்சம் அப்படி இப்படின்னுதான்..,

    ReplyDelete
  13. தல ... செம விமர்சனம். ... தீர்கதரிசி தீர்கதரிசி அப்படின்னு சொல்றாங்களே ... அது உங்களைத்தானா ?

    சுஜாதாவின் என் இனிய இயந்த்ராவை தான் இந்திரன் என்று எடுக்கிறார்கள் என்று கேள்வி.
    அந்த புதினமே ஒரு ஆங்கில புதினத்தின் தழுவல்.

    உங்க தழுவல் கவிதையையும் படிச்சேன் ....

    குசும்புங்க .... உங்களுக்கு :)))

    ReplyDelete
  14. வாங்க தல இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும் அல்லவா

    ReplyDelete
  15. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    by
    TS



    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails