Wednesday, August 5, 2009

அரங்கேற்றம்

அரங்கேற்றம் அப்படினா என்ன அர்த்தம் அப்படின்னு எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த படம். எந்தப்பெண்ணுமே இதற்கு மேல் கஷ்டபட முடியுமா என்று தெரியவில்லை.

நீங்க அந்தப் படம் பார்த்திருங்கீங்களா...? அப்படியென்றால் நீங்கள் ஒரு புரட்சிக்காரராகவோ சமூக சீர்த்திருத்தவாதிகவோதான் இருப்பீர்கள்.
அல்லது அவ்வாறு மாறி இருப்பீர்கள். அந்த அளவு ஒரு அழுத்தமான படம் அது.


கல்லூரி விடுதியில் ஏதோ ஒரு சேனலில் இரவு 10 மணிக்கு மேல் பார்த்தபடம்.எங்களைப் போல ஒரு சிலர் அன்றிரவு தூக்கம் வராமல் தொலைக்காட்சி அறைக்குச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் ஒருவர் காதல் தோல்விக்கு ட்ரீட் வைத்துவிட்டு தன் கூட்டத்தோடு அங்கு வந்து வந்து சேர்ந்தார். அவர்களில் சிலருக்கு இந்தப்படத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பார்கள் போல. இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும் சொன்னார்கள். நாங்களும் வேறு வழி இல்லாமல் அந்தப் படத்தோம். நேரம் செல்லச்செல்ல நிலமை வேறு மாதிரி ஆனது. அந்தக் கூட்டம் அமைதியாக உட்கார ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரத்தில், போதை சுத்தமாக தெளிந்து விட்டது. ட்ரீட் கொடுத்த ஜந்து கூட மிரண்டு போனான். மறுநாள் கல்லூரிக்கு போனவர்கள் பேயரைந்தது போல் சென்றது தனிக்கதை...

அந்தப் படத்தில் குறீப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பல விஷயங்கள் இருக்கிறது.
அரசியல்வாதி சிபாரிசு பற்றி எச்சரித்து இருப்பார்கள்..... அங்கேதான் அரங்கேற்றமே... அப்போது ஒரு பாடல் வேறு வரும்.

மூத்தவள் நீ இருக்க.........

குடும்பத்திற்கு ஓடாக உழைக்கும் பெண்மணியாக பிரமீளா நடித்திருப்பார். உங்களுக்கு பிரமிளாவைப் பற்றி தெரியவில்லையா.., தீர்க்க சுமங்கலியில் கே. ஆர். வியுடன் இளமை துள்ள வருவாரே அவர்தான். இன்னும் நினைவுக்கு வரவில்லையென்றால் இன்னொரு செய்தியையும் சொல்லலாம். தங்க பதக்கத்தில் வரும் வற்றாத நதிகளெல்லாம் என்று துவங்கும் வசனத்தைப் பேசுவாரே அவரேதான்.


இந்தப்படம் பார்த்த பெண்களுக்கு தன்னம்பிக்கை கண்டபடி அதிகரித்திருக்கும். ஆனால் அவர்கள் அதற்கடுத்து சொந்தம் பந்தம் ந்ண்பர்கள் யாரையாவது நம்புவார்களா என்பது கேள்விக்குறி.....

அந்த அளவு தன்னம்பிக்கையை வளர்க்கும் படமாக அமைந்திருக்கும். மகள் தந்த தன்னம்பிக்கையில் அவரது தாயார் இன்னொரு குழந்தைக்கு தாயாகும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் நாயகி இருப்பார்.

இதையெல்லாம் விட கமலஹாசன் வேறு தம்பியாக வருவார். அவரும் அக்காவின் தன்னம்பிக்கையைக் கொஞ்சம் சீண்டுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சிவகுமார். முறுக்குடன் கலந்த அறும்பு மீசையுடன் வருகிறார். அவர்தான் நாயகியின் ஜோடி. நாயகியின் ஜோடி அவ்வளவுதான்; நாயகன் கிடையாது.


http://img220.imageshack.us/img220/192/scanimage0013ol.jpg

42 comments:

  1. //உங்களுக்கு பிரமிளாவைப் பற்றி தெரியவில்லையா..,//
    பிரமீளாவைப் போய் தெரியாதா சார்?...ஹிஹி...ஹி-:)

    ReplyDelete
  2. தொடர் கேள்வி பதில் பதிவிற்கு அழைத்துள்ளேன் சார். எனது வலைபூவில்.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    // சே.வேங்கடசுப்ரமணியன். said...

    தொடர் கேள்வி பதில் பதிவிற்கு அழைத்துள்ளேன் சார். எனது வலைபூவில்.//

    அரங்கேற்றிவிட்டேன்

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  5. அரங்கேற்றம் படம் பற்றி எவ்வளவோ சொல்லலாம். நீங்கள் அரைகுறையாக சொல்லி விட்டு விட்டீர்களே ? எழுதுவதை முழுமையாக எழுதுங்கள். இப்படிப்பட்ட படத்திற்கு விட்ட குறை தொட்ட குறையாக எழுதாதீர்கள். ப்ளீஸ்,

    ReplyDelete
  6. //உங்களுக்கு பிரமிளாவைப் பற்றி தெரியவில்லையா.., தீர்க்க சுமங்கலியில் கே. ஆர். வியுடன் இளமை துள்ள வருவாரே அவர்தான். இன்னும் நினைவுக்கு வரவில்லையென்றால் இன்னொரு செய்தியையும் சொல்லலாம். தங்க பதக்கத்தில் வரும் வற்றாத நதிகளெல்லாம் என்று துவங்கும் வசனத்தைப் பேசுவாரே அவரேதான்.
    //

    பிரமிளாவுக்கு இப்படி ஒரு அறிமுகம் வேறு இருக்கிறதா.

    :)

    ReplyDelete
  7. // லோகு said...

    நல்ல விமர்சனம்..//

    நன்றி தல..,

    ReplyDelete
  8. //kave said...

    அரங்கேற்றம் படம் பற்றி எவ்வளவோ சொல்லலாம். நீங்கள் அரைகுறையாக சொல்லி விட்டு விட்டீர்களே ? எழுதுவதை முழுமையாக எழுதுங்கள்.//

    உண்மைதான்.., முழுமையாக எழுதிவிடுகிறேன்..,



    உங்கள் பெயரில் வரும் தொடுப்பு செல்லும் தளம் உங்களுடையதுதானா? முடிந்தவரை கூகிள் கணக்கில் வந்து பின்னூட்டம் இடுங்க்ளேன்

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said..//

    அவர் நல்ல நடிகை தலைவரே..,

    ReplyDelete
  10. Enna aachu..Nallathane poitu irundhadu ..Meethi paadhi engha?
    Krish

    ReplyDelete
  11. //உங்கள் பெயரில் வரும் தொடுப்பு செல்லும் தளம் உங்களுடையதுதானா? முடிந்தவரை கூகிள் கணக்கில் வந்து பின்னூட்டம் இடுங்க்ளேன் //


    என்னுடையதுதான் ஏன் ?

    ReplyDelete
  12. // UM said...

    Enna aachu..Nallathane poitu irundhadu ..Meethi paadhi engha?
    Krish//

    முழுமைப் படுத்தி விடுகிறேன்

    ReplyDelete
  13. //Blogger kavi said...

    //உங்கள் பெயரில் வரும் தொடுப்பு செல்லும் தளம் உங்களுடையதுதானா? முடிந்தவரை கூகிள் கணக்கில் வந்து பின்னூட்டம் இடுங்க்ளேன் //


    என்னுடையதுதான் ஏன் ?//

    நீங்கள் சென்றமுறை பின்னூட்டமுறையில் யார் வேண்டுமானாலும் உங்கள் பெயரையும், தளத்தையும் உபயோகப் படுத்த முடியும். அதனால் ஒரு சந்தேகம்..,

    ReplyDelete
  14. சந்தேகம் சரி, தீர்வு சொல்லக்கூடாடா, அதை எப்ப்டி தடுப்பது

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் தல.

    கிடைத்தால் அந்த படம் பார்க்கனும்.

    பிரமிளா யாருங்கோ. கவரிமான் ல வருவாங்களே அவங்களா.

    ReplyDelete
  16. //உங்களுக்கு பிரமிளாவைப் பற்றி தெரியவில்லையா.., தீர்க்க சுமங்கலியில் கே. ஆர். வியுடன் இளமை துள்ள வருவாரே அவர்தான். இன்னும் நினைவுக்கு வரவில்லையென்றால் இன்னொரு செய்தியையும் சொல்லலாம். தங்க பதக்கத்தில் வரும் வற்றாத நதிகளெல்லாம் என்று துவங்கும் வசனத்தைப் பேசுவாரே அவரேதான்.
    //

    பிரமிளாவுக்கு இப்படி ஒரு அறிமுகம் வேறு இருக்கிறதா.

    :)

    எனக்கு ஊர்... ஊர்மிளா தெரியும் ரங்கீலாவில்

    பிரமீளா எங்கயோ பாத்த ஞாபகம்

    ReplyDelete
  17. //தங்க பதக்கத்தில் வரும் வற்றாத நதிகளெல்லாம் என்று துவங்கும் வசனத்தைப் பேசுவாரே அவரேதான்.//

    நல்ல அடையாளம்..படமும் நல்ல படம்

    ReplyDelete
  18. நல்ல விமர்சணம்

    ரொம்ப பிடிச்சது

    [[அவர்தான் நாயகியின் ஜோடி. நாயகியின் ஜோடி அவ்வளவுதான்; நாயகன் கிடையாது.
    ]]

    ReplyDelete
  19. // kavi said...

    சந்தேகம் சரி, தீர்வு சொல்லக்கூடாடா, அதை எப்ப்டி தடுப்பது//

    முடிந்தவரை கூகிள் கணக்கில் பின்னூட்டமிடுங்கள் தல,,,,

    ஒருமுறை இதைப் பற்றி கண்ணி படித்தவர்கள் வேறொரு பதிவில் நிறைய விவாதித்திருந்தார்கள். தடுக்க ஓரே வழி; யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருத்தலே..,


    இதற்கு தெளிவான பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete
  20. //அக்பர் said...

    நல்ல விமர்சனம் தல.

    கிடைத்தால் அந்த படம் பார்க்கனும்.

    பிரமிளா யாருங்கோ. கவரிமான் ல வருவாங்களே அவங்களா.//

    சூப்பர், எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை; அறிமுகத்திலேயே சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  21. //Starjan ( ஸ்டார்ஜன் ) said..//

    உங்களுக்காகத்தான் படம் ஒன்றை இணைத்துள்ளேன்

    ReplyDelete
  22. //கிரி said...

    நல்ல அடையாளம்..படமும் நல்ல படம்//

    அடையாளத்திற்கு உகந்த வகையில் அனைவருக்கும் தெரிந்தபடம்

    ReplyDelete
  23. //நட்புடன் ஜமால் said...

    நல்ல விமர்சணம்

    ரொம்ப பிடிச்சது

    [[அவர்தான் நாயகியின் ஜோடி. நாயகியின் ஜோடி அவ்வளவுதான்; நாயகன் கிடையாது.
    ]]//

    நன்றி தல..,

    ReplyDelete
  24. விகடன் ரேஞ்சுக்கு பதிவு போட்டாச்சா (அதுலேதான் பழைய படத்தை விமர்சனம் போடுறாங்க)

    ReplyDelete
  25. //அபுஅஃப்ஸர் said...

    விகடன் ரேஞ்சுக்கு பதிவு போட்டாச்சா (அதுலேதான் பழைய படத்தை விமர்சனம் போடுறாங்க)//

    நான் எம்ஜியாரின் நாடோடி மன்னன் பற்றியும் எழுதி இருக்கிறேன். படித்துச் சொல்லுங்கள்

    ReplyDelete
  26. தூங்கரவங்கள எழுப்பலாம் ஆனா தூங்கரவங்க மாதிறி நடிக்கரவங்கள?

    ReplyDelete
  27. Prameela - super figure sir.. she acted so many good hot movies.. aiyoo parthalae kick varum sir.. edhukkum netil prameela bf parthittu chollunga sir.. arangetram pathi apparam pesa matteenga.. eyes, lips, ellame sexy than.. ada ponga sir unarchiyai kilapatheenga

    ReplyDelete
  28. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  29. //இந்தப்படம் பார்த்த பெண்களுக்கு தன்னம்பிக்கை கண்டபடி அதிகரித்திருக்கும். ஆனால் அவர்கள் அதற்கடுத்து சொந்தம் பந்தம் ந்ண்பர்கள் யாரையாவது நம்புவார்களா என்பது கேள்விக்குறி.....
    ///

    நல்ல விமர்சனம் தலைவரே

    ReplyDelete
  30. @குறை ஒன்றும் இல்லை ?
    @Anonymous ??
    @பாஸ்கர் நன்றி தல
    @ஆ.ஞானசேகரன் நன்றி தல

    ReplyDelete
  31. இனிமையான நினைவூட்டல்! நன்றி தல!

    ReplyDelete
  32. நான் இன்னும் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு
    அமையவில்லை, உங்கள் இடுகையை படித்த
    பிறகு பார்க்க தூண்டுகிறது.

    ReplyDelete
  33. @ஜெகநாதன் நன்றி தல
    @ஜெட்லி நிஜமாவா... தல

    ReplyDelete
  34. பார்க்கல நான் இளசுங்க பிரமீளான்ன யாருண்ணே போட்டோ ஒண்ணு தனியா போட்டுருக்கலாம்

    ReplyDelete
  35. //பார்க்கல நான் இளசுங்க பிரமீளான்ன யாருண்ணே போட்டோ ஒண்ணு தனியா போட்டுருக்கலாம்//

    இந்தப் படத்திலும் இருக்கிறார். தனியாகவும் போட்டுவிடுகிறேன்

    ReplyDelete
  36. இந்த படம் எந்த தியேட்டர்லங்க ஓடுது இப்போ

    ReplyDelete
  37. இந்தப் படத்தின் முடிவு பற்றிய டிஸ்கஷன் “மூன்று முடிச்சு” படத்தில் வரும்.முதல் காட்சியில் ரஜினி-கமல் ரூமில் பேசுவார்கள்.

    ReplyDelete
  38. மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் என்பது பாடல்..

    அரங்கேற்றம் பிரமீளா, கமல் சிவகுமார் என்றெல்லாம் பார்க்காமல் பாலச்சந்தர் படம்.புதுமை என்ற பெயரில் பெண்கள் கஷ்டத்திலிருந்து விடுபட வழியே இல்லாதது போல தீர்வு சொன்ன "ஞானி" அவர்.

    ReplyDelete
  39. கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..,


    பாலசந்தரின் ஓரிரு படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் பிரண்மனை நோக்குதல் இயல்பான விஷயமாக காட்டப் படும் தல..,

    ReplyDelete
  40. நானும் பார்த்து இருக்கிறேன். மிகவும் நல்ல படம்.

    ReplyDelete
  41. இந்தப்படத்த பத்தி கேள்விப்பட்டு இருக்கேன் தல.ஆனா பாத்தது கெடயாது.சீக்கிரமே பாக்குறேன்.Thanks.

    ReplyDelete
  42. என்னை மாதிரி ஆளுகளை அந்த காலத்திற்கே கூட்டிக்கிட்டு போயிட்டீங்க.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails