Friday, August 7, 2009

வாழ்த்துக்கள் கேப்டன்

கேப்டனுக்கு மரியாதை

இதுவும் ஒரு பஞ்சாயத்து செய்திதான். பஞ்சாய்த்து செய்யும் ஐவர் குழுவில் நமது கேப்டனும் இடம் பிடித்து இருக்கிறார். வழக்கமாக கேப்டன் என்பது மிகவும் கவுரமான ஒரு வார்த்தையாக கருதப் பட்டுவருகிறது. ஆனால் உலக வரலாற்றிலேயே உதவிக் கேப்டனுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து கேபடனுக்கு இரண்டாம் இடம் கொடுத்து ஒரு கேப்டன் நியமிக்கப் பட்டது அனில் கும்ளேவாகத்தான் இருக்கும்.

இப்போது பேசப்போவது கேப்டன் கும்ளேக்கு கொடுக்கப் பட்டுள்ள ஒரு கவுரவத்தைப் பற்றிய செய்திதான் இது. உலக் ஊக்க மருந்து தடுப்பு மையம் மற்றும் பி.சி.சி.ஐ இடையேயான பிரச்சனையைத் தீர்க்க ஐவர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்துள்ளது.

இக்குழுவில் ஐ.சி.சி., ஊக்கமருந்து தடுப்பு குழு தலைவர் டிம் கெர், ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி ஹரூன் லார்கட், முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், ஐ.சி.சி.,யின் தலைமை ஆலோசகர் ஐ.எஸ்.பிந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவில் இடம் பெற்றுள்ளதற்கு கும்ளே மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மற்ற விளையாட்டுவீரர்களுக்கு இல்லாத இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு இந்தக் குழு தீர்வு காண முயற்சிக்கும் என்று தெரிகிறது

8 comments:

  1. வாழ்த்துகள் கும்ளே...

    ReplyDelete
  2. கும்ளேக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கேப்டன்!


    அட அவரில்லைப்பா ;)

    ReplyDelete
  4. நான் கூட விசயகா பற்றி சொல்லியிருக்கியலோனு உங்க கடைக்கு வந்தேன் ..

    எப்டியிருந்தாலும் ஜம்போ சிவ சம்போ..

    ReplyDelete
  5. நமக்கும் மட்டை பந்துக்கும் ரொம்ப தூரம் ஜி...
    ஒட்டு போட்டாச்சு...

    ReplyDelete
  6. @வழிப்போக்கன்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @நட்புடன் ஜமால்
    @குறை ஒன்றும் இல்லை !!
    @சூரியன்
    @ஜெட்லி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  7. சே! கேப்டன் நெலம இப்படியாகிப்போச்சே!!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails