Thursday, August 20, 2009

வலிமையான ஆறு வலைப்பதிவுகள்

வலிமை வாய்ந்த பெண்கள் பற்றிய பட்டியல் வெளியிடப் பட்டு பலரும் பார்த்தும் படித்தும் இருப்பீர்கள். கண்டிப்பாக யாராவது வலிமைவாய்ந்த ஆண்கள் பற்றியும் பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அவர்களுக்குப் போட்டியாக இல்லாவிட்டாலும் அவர்களை காப்பியடித்து நாமும் ஒரு வலிமைப் பட்டியலைத் தயாரித்துப் பார்த்தோம். அது வலிமையான வலைப்பதிவுகள்... இதில் உணர்வுகளைத்தூண்டக்கூடிய கவர்ச்சிப் பெண்களைப் பற்றிய வலை விஷ்யங்களை ஒதுக்குவிட்டுப் பார்த்தால் நமக்குக் கிடைப்பவை.


6.இல்க்கியம், கவிதை: தமிழ் இலக்கியங்கள் குறிப்பாக பொன்னியின் செல்வன் பற்றிய பதிவுகள் ஹிட்ஸ்களை கூட்டச் செய்யும்

5.18+ மென்மையான கெட்டவார்த்தைகள், அல்லது 18+, சில நேரங்களில் 8+ என்று தலைப்பு வைப்பது கூட ஹிட்ஸ்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும்

4.சக பதிவர்களை திட்டுவது: பொதுவாக சண்டையை வேடிக்கை பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த பொழுதுபோக்கு அல்லவா..

3.ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் என்று தலைப்பு மட்டும் வைத்திவிட்டு உள்ளே ஒன்றுமே எழுதாமல் இருந்தால் கூட ஹிட்டுகளைக் குவிக்கும் திறமை இந்தப் பெயருக்கு உண்டு.

2.இரண்டாம் இடம்: தமிழ்மணம் , பொதுவாகவே திரட்டிகளைப் பற்றிப் பதிவு போட்டாலே கொஞ்சம் ஹிட் கூடத்தான் செய்யும் அதிலும் தமிழ்மணம் பற்றி பதிவு போட்டால் ஹிட்ஸ் எண்ணிக்கை ஏற்முகம்தான். ஆனாலும் தமிழ் மணத்தைவிட ஹிட்ஸ்களை குவிக்கும் இன்னொரு நபரும் இருக்கத்தான் செய்கிறார்.

1.முதல் இடம்: தமிழ் பதிவுகளில் என்றுமே சாம் ஆண்டர்சன் தான் முதலிட மனிதர். அவரைப் பற்றிப் பதிவு போட்டுப் பாருங்கள். ஹிட்ஸ்களின் எண்ணிக்கை ஏதோ பலான தளத்திற்கு வருவதுபோல வரும். அந்த அளவிற்கு ஹிட்ஸ்களைக் குவிக்கும் வலிமைவாய்ந்தவர். பதிவுகளின் நாயகன் அவர்தான்.

==================================================================
இந்த இடுகையின் முதல் பதிப்பின் போது சாம்மிடம் இருந்த முதல் இடம் இன்று வேறொருவருக்கு மாறிவிட்டது. இருந்தாலும் மீள்பதிப்பு என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்..,

23 comments:

  1. அருமையான வரிசை

    ஓ இப்படியும் உண்டா ? ... சரியா போச்சு

    ReplyDelete
  2. I AM THIRD & FOURTH

    முதல்ல கமெண்ட் போட , 2 பேர் முந்திட்டாங்க‌

    ReplyDelete
  3. மருத்துவர் அய்யா... கிழிச்ட்டீங்க...

    எப்படிங்க அய்யா இதெல்லாம்..

    என்னப்பனே முருகா, பழனியாண்டவா... நம்ம மருத்துவருக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்க வழிச் செய்யப்பா..

    ReplyDelete
  4. அட... நம்ம சாம் ரஜினியையே முந்திட்டாரா....

    ReplyDelete
  5. @பிரியமுடன்...வசந்த்
    @சம்பத்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @இராகவன் நைஜிரியா
    @Kiruthikan Kumarasamy
    @ஆ.ஞானசேகரன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...,

    ReplyDelete
  6. பிரிச்சி மேஞ்சிட்டீங்க போல ...

    :)

    ReplyDelete
  7. உக்காந்து யோசிப்பீங்களோ??

    ReplyDelete
  8. இதுவும் நல்ல ஐடியாதான்

    ReplyDelete
  9. இந்த பட்டியலில் எங்க பா.ம.உ(MP) அண்ணன் ஜே.கே.ரித்திஷ் இடம் பெறாத்தை வன்மையாக கண்டிக்கிறேன்..

    சுரேஷ் அண்ணனுக்கு சவாலும் வைக்கிறேன் .. சாம் ரித்திசானு ..

    (விட்டமின் ப,மற்றும் பிரியாணி கொடுத்தாச்சும் அதிக ஹிட்ஸ் வாங்கிருவோம் நாங்க)

    ReplyDelete
  10. ரூம் போட்டுயோசிச்சதுபோயி "பெரிய மண்டபம் பிடிச்சி யோசிப்பிங்களோ?.

    ReplyDelete
  11. @நட்புடன் ஜமால்
    @இரவுப்பறவை
    @கதிர் - ஈரோடு
    @சூரியன்
    @Karthikeyan G
    @புருனோ Bruno
    @குறை ஒன்றும் இல்லை !!
    @jerry eshananda.
    @குரு


    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  12. இந்த லிஸ்டில் ரஜினியுடன் விஜய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்

    ReplyDelete
  13. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. புத்தாண்டு வாழ்த்துக்கள்,..

    இனி வரும் காலங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்

    ReplyDelete
  15. வலிமையோ வலிமை:-)

    உங்க 'தலை'ப்பே நிறைய ஹிட்ஸ் கொண்டுவந்துருமே!!!!

    ReplyDelete
  16. // முரளிகண்ணன் said...

    இந்த லிஸ்டில் ரஜினியுடன் விஜய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்//

    இன்றைய சூழலில் ரஜினியைவிட வலிமையானவர், அவருக்கான ஹிட்ஸ் மிக மிக மிக மிக மிக மிக மிக அதிகம்

    ReplyDelete
  17. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .//

    // நசரேயன் said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//


    // jothi said...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்,..

    இனி வரும் காலங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்//


    // T.V.Radhakrishnan said...

    :-)))//

    // துளசி கோபால் said...

    வலிமையோ வலிமை:-)

    உங்க 'தலை'ப்பே நிறைய ஹிட்ஸ் கொண்டுவந்துருமே!!//


    வருகை மற்றும் வாழ்த்துக்களைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails