Monday, January 17, 2011

தமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை

தமிழ்மணத்தில்  சென்றவருட சிறந்த பதிவுகள் விருதுகள் அறிவித்துவிட்டார்கள். முதலில் விருது வழங்கியவர்களுக்கு நன்றிகளையும் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.


பொதுவாக எந்த ஒரு கதை அல்லது படைப்புகளைப் பொறுத்த மட்டிலான போட்டி என்றால் அது நடுவர்களின் மனதிற்கு அல்லது அவர்களின் மனதில் உள்ள த்ராசின் கணிக்கப் பட்ட அளவிலானதுதான். எனவே இது போன்ற போட்டிகளில்  வெற்றிபெறாதவர்கள் கவலைப் பட வேண்டியது இல்லை என்பதே நமது கருத்து. அதை ஏற்கனவே வெறொரு இடுகையில் கூறியுள்ளேன்.


ஆனால் தமிழ்மணம் விருதுகள் என்பது முற்றிலும் வேறுபட்டது. அது ஓட்டுக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது. வாசகர்கள் ஆகட்டும்.  பதிவர்கள் ஆகட்டும் . அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரே ஒரு ஓட்டுத்தான் உண்டு.  அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல எண்ணம் மற்றும் பலவீனம் ஒன்று உண்டு. அதாவது தனது நண்பர்கள் முன்னிலை பெறவேண்டும்.  என்றே எண்ணுவார்கள். எனவே தங்கள் ஓட்டுக்களை பெறும்பாலும் ந்ந்ந்ந்ந்ந்ந்ந்நெருங்கிய நண்பர்களுக்கு அளிக்கவே விரும்புவார்கள். அவை போக மிச்சம் மீதி ஓட்டுக்கள் இருந்தால் அதை மற்ற நபர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். எனவே  பெரும்பாலும் அதிக நண்பர்கள் உள்ளவர்கள் மற்றும் அதிக நண்பர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்கள் ஆகியோரே இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறமுடியும்.  அதிலும் அதிக நண்பர்கள் கணீனி வைத்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் வெற்றிபெற்ற இடுகைகளில் மூன்றாம் கட்ட நடுவர்கள் தேர்ந்தெடுத்தால்கூட முதல் இரண்டு கட்டங்களில் வெல்வது என்பது ஓட்டுக்களின் அடிப்படையில்தான்.

எனவே தமிழ்மணத்தில் சிறந்த இடுகைகளில் எழுதியும் முதல் இரண்டு கட்டங்களை தாண்டவில்லை என்று நினைத்தால் மற்றும் அடுத்த ஆண்டில் இந்த விருதுகளைப் பெறவேண்டும் என்று நினைத்தால் வாக்குரிமை படைத்த அனைவரையும் நேரில் சந்தித்து  அவர்களின் அன்பினைப் பெற்று அவர்களது வாக்கினையும் பெற முயற்சி செய்தால் கண்டிப்பாக அடுத்த ஆண்டு விருதுகளையும் பெற்றுவிடமுடியும்.  அதே ஓட்டுரிமை பெற்ற அதிக நண்பர்கள் இருந்தால் உங்கள் பதிவு  அடிக்கடி பரிந்துரைக்கப் பட்ட பதிவாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஏழு ஓட்டுக்கள் இருந்தாலே போதுமானது. பின்னர் என்ன புகுந்து விளையாடுங்கள்.

9 comments:

  1. //தமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை //

    ஒரு மாதிரியான பார்வை

    ReplyDelete
  2. நகைச்சுவை எல்லாம் நமக்கு வராது.

    குழுக்களாக செயல் பட்டு பல குப்பைகளையும் பரிந்துரைக்கப்பட்டதாக மாற்றுகிறார்கள். அந்த மாதிரி பதிவுகளுக்கு வண்டி வண்டியாய் வரும் பின்னூட்டத்தை வைத்து என்ன செய்வார்கள்

    ReplyDelete
  3. // குழுக்களாக செயல் பட்டு பல குப்பைகளையும் பரிந்துரைக்கப்பட்டதாக மாற்றுகிறார்கள். அந்த மாதிரி பதிவுகளுக்கு வண்டி வண்டியாய் வரும் பின்னூட்டத்தை வைத்து என்ன செய்வார்கள்... //

    ஹா... ஹா... ஹா... ஒட்டுமொத்த பதிவுலகத்துக்கும் இதே பீலிங் இருக்கு போல...

    ReplyDelete
  4. //THOPPITHOPPI said...

    //தமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை //

    ஒரு மாதிரியான பார்வை
    //

    வாங்க தல

    ReplyDelete
  5. //ரிஷபன்Meena said...

    நகைச்சுவை எல்லாம் நமக்கு வராது.

    குழுக்களாக செயல் பட்டு பல குப்பைகளையும் பரிந்துரைக்கப்பட்டதாக மாற்றுகிறார்கள். அந்த மாதிரி பதிவுகளுக்கு வண்டி வண்டியாய் வரும் பின்னூட்டத்தை வைத்து என்ன செய்வார்கள்
    //

    நகைச்சுவை வராது என்று சொல்லிவிட்டு பின்னூட்டத்தில் கூட நகைச்சுவையில் அசத்துகிறீர்களே தல

    ReplyDelete
  6. //Philosophy Prabhakaran said...

    // குழுக்களாக செயல் பட்டு பல குப்பைகளையும் பரிந்துரைக்கப்பட்டதாக மாற்றுகிறார்கள். அந்த மாதிரி பதிவுகளுக்கு வண்டி வண்டியாய் வரும் பின்னூட்டத்தை வைத்து என்ன செய்வார்கள்... //

    ஹா... ஹா... ஹா... ஒட்டுமொத்த பதிவுலகத்துக்கும் இதே பீலிங் இருக்கு போல...
    //



    எல்லாம் பிரமை

    ReplyDelete
  7. //ராம்ஜி_யாஹூ said...

    nice
    //

    வாங்க தல

    ReplyDelete
  8. நல்லா குடுக்குறாய்ங்கய்யா விருது ... :)

    ReplyDelete
  9. [im]http://images.pictureshunt.com/pics/m/movies_jurassic_park-10820.jpg[/im]

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails