Sunday, January 9, 2011

தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்

ஒருவழியாக இந்த ஆண்டில் பொழுதுத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

எந்திரன் படம் போல விரும்பி வருபவர்களுக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் விருந்தளிப்பதற்கான ஐ.பி.எல். விரைவில் வெளிவரப் போகிறது. அதற்கான ஏலமும் ஒப்பந்தமும் நடந்து கொண்டே இருக்கின்றன.  சச்சின். டோனி போன்றவர்களை அந்தந்த அணியிலேயே ஒரு சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொண்டார்கள்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வீரர்களை ஏலம் விட்டத்தில் சச்சின், டோனி போன்றவர்களை விட காம்பீர் அதிகச் சம்பளம் பெற்றிருக்கிறார்.

ஒருவேளை சச்சின், டோனி போன்றவர்கள் கூட பொது ஏலத்தில் வந்திருந்தால் அதிகம் சம்பாதித்து இருப்பார்களோ?

=============================================================

கங்கூலியும் கூட ஏலத்தில் விடப் பட்டார்கள். சின்ன பையன்களைக்கூட எடுப்பவர்கள். கங்கூலியை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். யானை படுத்தாலும், குதிரை மட்டம்தானே?  தெரியவில்லை.  அவரைவிட திற்மையான 11 பேர் அணியில் தேர்வாவது போல இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வெகு வெகு சிறிய ஆட்டக்காரர்கள் கூட ஏலம் போய் இருக்கிறார்கள். ஆனால் கங்கூலி இல்லை.

இந்த ஆண்டு கங்கூலிக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு சச்சின், டோனி போன்றவர்களுக்கு ஏற்படாது என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் அப்ப்டி சூழல் வந்தால் கும்ளே மாதிரி நாகரீகமாக தப்பித்து விடலாம் அதுவரை அவர்களுக்கு நிம்மதி.


========================================================

பழைய கால திரைப்படங்களை போல ஏலம் நடைபெறும் இடத்தில் மட்டை, பந்து போன்றவற்றை கொண்டு வந்து ஒரு ஆட்டம் போட்டிருந்தால் ஏலம் எடுத்திருக்க மாட்டார்களா?

குறைந்த பட்சம் பழைய் ஆட்டங்களையெல்லாம் தொகுத்து ஒரு டிவிடி போட்டு அதை ஒரு சுற்று விட்டிருக்கலாமோ!

முதலிலேயே உச்ச நீதிமன்றம் போய் ஏலம் எடுக்கப் படுவதற்கு ஒரு தடையில்லா சான்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ!   ஏற்கனவே இவ்வாறு நடந்த நிகழ்வு பற்றி செய்தி இடத்திலும் அதைப் பற்றிய சில கருத்துக்கள் இந்த இடத்திலும் உள்ளன்.

தனது தீவிர ரசிகை ஒருவரை பினாமியாக போட்டு தனியாக ஒரு அணியை விலைக்குவாங்கி இருக்கலாமோ!

=================================================================
கிரிக்கெட் வீரர்களை இந்தப் பாட்டில் வைத்து கற்பனை செய்துபார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.., ஏனென்றால் ஐ.பி.எல் ஏலம் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே இந்தப் பாட்டு வந்து விட்டது.



மின்னஞ்சலில் படிப்பவர்களுக்கு வீடியோ தெரியாதென்றால் இங்கும் லின்க் களில் ஒரு தட்டுத்தட்டி தளத்திற்குவந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

18 comments:

  1. கங்குலியின் இந்த நிலையை எண்ணி என்னைப்போன்ற கங்குலி ரசிகர்கள் கவலைப்படுவதைதவிர வேறென்ன செய்ய இயலும்?

    ஆனாலும் இதன் பின்னர் ஏதேனும் ஒரு கதை இருக்கும், கண்டிப்பாக வெளிவரும்.

    ReplyDelete
  2. //தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்// டாக்டர் சொல்லவே இல்ல... சச்சின் உங்க பாலோயர்னு !!!!!

    ReplyDelete
  3. //King Viswa said...

    கங்குலியின் இந்த நிலையை எண்ணி என்னைப்போன்ற கங்குலி ரசிகர்கள் கவலைப்படுவதைதவிர வேறென்ன செய்ய இயலும்?

    ஆனாலும் இதன் பின்னர் ஏதேனும் ஒரு கதை இருக்கும், கண்டிப்பாக வெளிவரும்.
    //


    வந்தாலும் வரும் தல

    ReplyDelete
  4. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    //தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்// டாக்டர் சொல்லவே இல்ல... சச்சின் உங்க பாலோயர்னு !!!!!
    //



    அடக் கடவுளே, இப்படியெல்லாம் கேள்வியா..,?

    ஆ, ஐ. இப்ப கடவுள் உங்க ஃபாலோவரான்னு கேப்பிங்களா தல..,
    ============================================

    சச்சின் காதுக்குப் போகாட்டியும் நம்மூர் வளரும் வீரர்கள் காதுகளுக்கு கூடவா போகாது.

    ReplyDelete
  5. இந்த இடுகைக்குத் தமிழ்மணத்தில் உங்களால் ஓட்டுப் போட முடிகிறதா? நான் போட்டால் நோ சச் போஸ்ட் அப்படின்னு வருது

    ReplyDelete
  6. ஆமா எனக்கும் கூட அப்படி தான்.. ஓட்டிட முடியவில்லை

    ReplyDelete
  7. ஆடாமால் ஆடுகிறார்கள் - என்ன செய்வது - ஒன்றும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
  8. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    ஆமா எனக்கும் கூட அப்படி தான்.. ஓட்டிட முடியவில்லை
    //

    எப்படி சரி செய்வது என்று யாராவது சொல்லுங்களேன்

    ReplyDelete
  9. //cheena (சீனா) said...

    ஆடாமால் ஆடுகிறார்கள் - என்ன செய்வது - ஒன்றும் சொல்வதற்கில்லை
    //


    :))

    ReplyDelete
  10. தல, சச்சினுக்கும் தோனிக்கும் 1.8 மில்லியன் மட்டுமா குடுப்பாங்கன்னு நினைக்கிறீங்க? கம்பீருக்கு 2.4 மில்லியன்னு ஆனப்புறம் அவங்க டீம் முதலாளிகக் கிட்ட நெகோசியேஷன் செய்யாம இருப்பாங்கன்னா எதிர்ப்பார்க்கிறீங்க? ரொம்ப அப்பாவி பாஸ் நீங்க??

    ReplyDelete
  11. ஆமா இதுல எதுக்கு தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்?

    போல ஐபிஎல்ல ஃபைனல்ஸ் வந்த டீமுக்குக் கேப்டன். இன்னைக்கும் சச்சின் பேரைச் சொன்னா விக்காத பொருள் இல்லை. போன வருசம் தான் 50-50 போட்டியில 200 ரன் அடிச்ச முதல் பேட்ஸ்மேன். எந்த கிரவுண்டுக்குப் போனாலும் சச்சின் சச்சின் சச்சின்னு கோஷம் போடுற ரசிகர்கள். இதெல்லாம் போதாதா? சச்சின் ஏலத்துல இருந்திருந்தா கண்டிப்பா 3 மில்லியன் மார்க்கைத் தொட்டிருப்பார்.

    இந்த ஐபிஎல் போட்டிகள்ல ஒரு ப்ளேயரை எடுக்கிறது அவங்க பேட்டிங் திறமைக்காக மட்டுமில்லை. அவங்க எவ்வளவு கிரவுடைக் கூட்டுவாங்க. எந்த அளவுக்கு மார்க்கெட்டபிளா இருப்பாங்க, இதையேல்லாம் பாத்துத்தான் வாங்கறாங்க.

    ReplyDelete
  12. உங்களுக்கு காண்ட்ரவர்ஸியா தலைப்பு வைக்கிறதுக்கு மட்டும்தான் தெரியுது.

    ReplyDelete
  13. //முகிலன் said...

    ஆமா இதுல எதுக்கு தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்? //

    குறையொன்றும் இல்லைக்கு நான் கொடுத்த பதிலை இங்கும் சொல்ல விரும்புகிறேன்

    ReplyDelete
  14. //முகிலன் said...

    உங்களுக்கு காண்ட்ரவர்ஸியா தலைப்பு வைக்கிறதுக்கு மட்டும்தான் தெரியுது.
    //

    நன்றி தல, ஆனால் இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை

    ReplyDelete
  15. //சச்சின் ஏலத்துல இருந்திருந்தா கண்டிப்பா 3 மில்லியன் மார்க்கைத் தொட்டிருப்பார்.
    //

    அது சரிதான் தல, ஆனால் ஏலத்தில் இல்லை. ஏலம் போடப் பட்டவர்களைவிட இவர அதிக மதிப்பு மிக்கவர் என்று நினைத்திருந்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டவர்களைவிட இவருக்கு ஒரு ரூபாயாவது அதிகமாக கொடுத்திருக்கவேண்டும். அப்படிக் கொடுக்கவில்லை என்பதே அவரை ஏமாற்றும் வேலைதான்

    ReplyDelete
  16. //Philosophy Prabhakaran said...

    நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
    //

    சீக்கிரம் வெளியிடுங்கள் தல

    ReplyDelete
  17. தமிழ்மணத்தில் ஓட்டு போடப்போனால் "no such post" என்று சொல்கிறதே...

    ReplyDelete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

    என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails