60களில் வந்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. ராஜா கதை ஜமீந்தார் கதையாகி நவீனப் படுகிறது. 20ம் நூற்றாண்டுக் கதையாய் மாறி வெளிவருகிறது.
சில ஆண்டுகள் கழித்து கதை இன்னும் நவீனப் படுகிறது. தொலைந்து போன குழந்தை வில்லன் கட்டுப் பாட்டில் வளர்கிறார். திருடனாக வளர்கிறது. பின்னர் ஆள்மாறாட்டம். தந்தையைக் கொண்றவனை சகோதரர்கள் ஒன்று சேர்ந்து பழிவாங்கி கடைசியில் சுபம். குடியிருந்த கோவில்
மூன்றிலுமே நம்பியார் கட்டுப் பாட்டில்தான் ஹீரோ.
அடுத்த கட்டத்தில் இன்னும் ந்வீனப் படுகிறது. சென்ற படத்தில் வில்லனைப் பிடிக்க ஆள்மாறாட்டம் நடக்கிறது. இதில் கொள்ளை அடிக்க உருவ ஒற்றுமையை பயன்படுத்துகிறார் வில்லன்(ஹீரோ). நினைத்ததை முடிப்பவன்.
கொள்ளை என்ற அளவில் இருந்த கதை கொலைக்குச் செல்கிறது. ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப் பட அடுத்தவர் ஆள்மாறாட்டம் செய்து ஹீரோவைக் காப்பாற்றுகிறார். சிவாஜியின் உன்னைப் போல் ஒருவன்.
ஆள்மாறாட்டம் செய்யும் ஹீரோவைக் காப்பாற்ற வரும் குப்பத்து இளைஞனாக ரஜினி தோன்ற போக்கிரி ராஜா.
மீண்டும் பின்னோக்கிச் சென்று மாற்றங்கள் ஏற்படுகிறது. வில்லனைப் பிடிக்க ஆள்மாறாட்டம் உபயோகப் படுத்தப் படுகிறது. ஆள்மாறாட்டம் செய்த அதிகாரி இறந்துவிட கதை பில்லா.
போக்கிரி ராஜாவில் இருவரும் சகோதாரர்களாக மாறுகிறார்கள். ஒருவர் வெளியூரிலிருந்து கிராமத்திற்கு வந்து சகோதரனைக் காப்பாற்ற உழவன் மகன்.
கொலைக்குற்றத்தை போதைப் பழக்கமாக மாற்ற வருகிறது. தூங்காதே தம்பி தூங்காதே.
சரி தலைப்புக்கு வருவோம். உத்தம புத்திரன் 23ம் புலிகேசியாகவும் ( அது எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கும் சுட்டி இது) பில்லா, பிற்காலத்தில் பில்லா2007ஆக வந்ததல்லவா. அதுதான் மேலே தலைப்பு.
மற்க்காமல் தமிழ் மண கட்டைவிரலிலும். தமிழிலீஸிலும் கிளிக் செய்யுங்கள்
என்ன சுரேஷ் அஜித்தின் "அட்டகாசம்" விட்டுடிங்க.
ReplyDelete"அவசர போலீஸ் 100 " - பாக்யராஜ்
இந்த மாதிரி நெறைய படங்கள் இருக்கு
சேர்த்துக் கொள்ளுவோம்.
ReplyDeleteநம்ம பிளாக்கர்,
நம்ம சிஸ்டம்,
நம்ம பேடு,
நம்ம விரலு.....
நல்ல தகவல் சுரேஷ்
ReplyDeleteபதிவு கும்ம்னு குஷ்பூ போல நல்லா இருந்தது சுரேஷ் அவர்களே.
ReplyDeleteநன்றி.
நல்லபதிவு
ReplyDeleteதற்போது வெளிவந்துள்ள காதலில் விழுந்தேன் படமும் குணா, காதல் கொண்டேன் படங்களின் தழுவல். நாக்க முக்க மட்டும் இல்லாதிருந்தால் படம் பப்படம்,
நன்றி சதிஷ், நசரேயன், லெனின் பொன்னுசாமி, வந்தியதேவன்.
ReplyDeleteவந்திய தேவன் பற்றி பல இடுகைகள் உள்ளன. படித்து விட்டீர்களா
ReplyDeleteபொதுவுடமை தத்துவம் பற்றிய இடுகைகளையும் படித்து விட்டீர்களா
ReplyDeleteஇரட்டை வேடங்கள் கொண்ட திரைக்கதைகளிலேயே நான் பார்த்ததில் மிக அற்புதமானவை இரண்டு படங்கள்.. அந்த படத்தின் நாயகனின் பெயர் நினைவில்லை.. ஆனால் இரு படங்களிலும், அவர் செய்த உருவ வேற்றுமைகள், அடடா.... அந்த படங்களை பற்றி தனி பதிவே இடலாம்.. அந்த படங்கள்
ReplyDeleteஅழகிய தமிழ் மகன், வில்லு....
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நிறைய ரிமேக்குகள் இருக்கும் போது அஜித்தை மட்டும் சொல்வது நல்லதில்லை ஆமாம் சொல்லிட்டேன்..(வடிவேலையும்தான்னு சொல்லாதீங்க..)
ReplyDeleteமறக்காமல் தமிழ் மண கட்டைவிரலிலும். தமிழிலீஸிலும் கிளிக் செய்யுங்கள்(இதுல இரண்டு கட்டைவிரல் இருக்கே.. ஹி ஹி இரன்டிலுமேவா?)
தமிலிஷ் டூல்பாரே தற்சமயம் எதிலும் இல்லை(அஜித்தை பற்றி யாராவது தப்பா சொல்லாதீங்ன்னா கேட்டாதன!)
எல்லாமே ஜோக்தாங்க ஆட்டோவ அனுப்பிடாதீங்க.(தமிலிஷ் மட்டும் நிஜமாவே இல்ல)
வம்புக்கு வழி வகுக்குறீங்களே லோகு
ReplyDeleteஇணைத்து விட்டேன் செய்தி வளையம்
ReplyDelete//dharshini said...
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...,
//dharshini said...
ReplyDelete(தமிலிஷ் மட்டும் நிஜமாவே இல்ல)//
இப்போது வந்துவிட்டது தல..,
சுரேஷின் திரை அறிவு அபாரம்!!
ReplyDeleteshivaji nadichadhu "Ennai pol oruvan" nu ninaikiren...Krish
ReplyDelete"எங்க வீட்டுப் பிள்ளை" தான் எல்லா இரட்டை வேடப் படங்களுக்கும் தாத்தா. அதை அப்படியே அடித்த படங்களும் ஏராளம், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து வந்த படங்களும் ஏராளம்.
ReplyDeleteஉதாரணங்கள்: சீதா அவுர் கீதா, வாணி-ராணி,வந்தாளே மகராசி,செத்துப்போன ரஜினி உயிர் பிழைக்கிற மாதிரி வருகிற படம்(பெயர் நினைவில்லை),தூங்காதே தம்பி தூங்காதே இப்படி நிறைய்ய.
http://kgjawarlal.wordpress.com
suresh,
ReplyDeletepokkiri raja = rajathi raja
u missed it.
@தேவன் மாயம்
ReplyDelete@.Krish
@Jawarlal
@யாசவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,