இப்போது தந்தை மகன் கதைகள் புதிது புதிதாக வந்து கொண்டு இருக்கின்றன். இந்த படங்கள் முடிந்த பின் உங்கள் தந்தையை நினைத்துப் பாருங்கள் என்று மிரட்டல் வேறு விடுகிறார்கள். ஆனால் மிரட்டல் விடாமல் வந்த தமிழ் படங்களைப் பார்க்கலாம்.
மூன்று முகம்.
அலெக்ஸ் பாண்டியனைக் கொன்றவனை ம்கன் ரஜினிகள் போட்டி போட்டுக் கொண்டு கொலை செய்யும் படம் ஒரு ரஜினி அ.பா.வின் மறு பிறவியா? என நினைக்கும் வகையில் எடுக்கப் பட்டிருக்கும். மசலா படம் என்றாலும் ரஜினியின் மாறுபட்ட வேடங்களில் திறமை காட்டியிருப்பார்.
கடல் மீன்கள்.
தந்தையை மகன் பழிவாங்கும் படம். பண்பாட்டை வேறு கட்டிக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கப் பட்டிருக்கும். கடைசியில் அப்பா அம்மா ஆகியோர் ஜலசமாதி அடைந்து விடுகிறார்கள். உழைப்பிற்கு உதாரணம் ஆன அப்பா, கமலின் உழைப்பைக்கும் எடுத்துக் காட்டும் முயற்சி.
முத்து
அப்பாவை தெய்வமாக காட்டி மகனை பக்தனாகக் காட்டி ரஜினியை வணங்கும் ரசிகர்களுக்கு விடுகதை போட்டு காலத்தின் கையில் பொறுப்பை ஒப்படத்த படம்.
அருணாச்சலம்
அப்பா சொன்னார் மகன் முடிப்பார் என எடுக்கப் பட்ட படம். மகன் எப்படி முடித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப படம் பார்க்கும் போது கூட தந்தையின் ஞாபகம் வரலாம்
இந்தியன்
அப்பா மகன் தானே.... ஒவ்வொரு மகனும் நினைத்திருக்கலாம். எங்க அப்பா சுதந்திரப் போராட்ட வீரர் அட்டை வைத்திருந்தால் ரிசர்வேசன் கிடைக்கும் என்று. கடைசியில் பயந்திருக்கலாம்.
வானத்தைப்போல....
படம் பார்க்கும் வரை அப்பா என்றே நினைக்க வைத்த படம். அப்பானா இவர் அப்பா என சொல்ல நினைத்து அண்ணா என்று சொல்ல வைத்த படம்.
சூரிய வம்சம்.
அமிதாப் பச்சனையே அப்பாவை நினைத்து கண்கலங்க வைத்த படம். பிறகு ரீமேக் கில் நடித்தும் கண் கலங்கினார்.
தியாகம் செய்தே கலங்கடித்த அப்பாக்களுக்கு மத்தியில் கட்சி ஆரம்பிக்க கூப்பிட்ட அமைதிப் படை அப்பாவும் உண்டு.
ஆக சினிமாவில் அப்பாக்கள் ஆயிரம்.
நல்ல தொகுப்பு.
ReplyDeleteதவமாய் தவமிருந்து???
ReplyDeleteஇரட்டை வேடமிட்ட சினிமா தந்தைகளை மட்டுமே எடுத்துக் கொண்டேன். இது போன்ற இடுகைகளில் த.த. கொண்டுவருவது தவறு.
ReplyDeleteநன்றி மு.க., வா.வ.
புதியமுகம் ?? இந்த பட்டியலில் வருமா வராதா
ReplyDelete