Thursday, November 20, 2008

MGR ஆக மாறிய M.N.நம்பியார் சாமி

திரையுலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடைபெரும் மாற்றம் ஒன்று. அடுத்த தலைமுறையின் ஆதிக்கம் தொடங்கும்போது முந்தைய தலைமுறை நடிகர்கள் வலிமையான கவுரவ வேடத்திற்கு செல்வார்கள்.

எம்.கே.ராதா, நாகையா, சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர். இந்தியில் அனைத்து நடிகர்களும் (அமிதாப் கூட) செய்துள்ளனர். அந்த வலிமை வாய்ந்த தந்தை அல்லது பெரியவர் வேடத்திற்கு பழைய நாயகர்களே சிறப்பாக அமைய முடியும்.

80களில் எம்ஜியாரின் இடத்தை திரையுலகம் நம்பியார் சாமி அவர்களுக்குக் கொடுத்து மரியாதை செய்தது. தூரல் நின்னு போச்சு, தாய் வீடு, தாய் நாடு, உழவன் மகன் ஆகிய படங்களின் பாத்திரங்கள் ஒரு நாயக நடிகர் செய்ய வேண்டிய பாத்திரங்களே. இந்த பாத்திரங்களை அவருக்கு கொடுத்ததன் மூலம் திரையுலகம் அவரை ஒரு நாயகனாக ஏற்றுக் கொண்டு முழு மரியாதை செய்ததாகவே ஏற்றுக் கொள்ளலாம்.

நாயகனாக ஆரம்பித்தவர், நகைச்சுவையாளனாக பின்னர் வில்லனா(ர்)க வலம் வந்தாலும் தமிழகம் அவரை பெரிய பலசாலியாகவே பார்த்தது. அது உண்மையும் கூட. அவரை வெற்றி பெருவதன் காரணமாகவே பல படங்களில் நாயக நடிகர்களின் பாத்திரம் வெற்றி அடைந்ததாகச் சொல்லலாம். சராசரி வில்லன்கள் செய்திருந்தால் படம் தோல்வி அடையக் கூடிய அபாயம் இருந்திருக்கிறது. அதனாலேயே இரண்டு கூடாரங்களிலும் அவரால் தொடர்ச்சியாக நடிக்க முடிந்தது.

எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நட்பு இருந்தது என்பதை நம்பியாரே
ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு
எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர்
என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர்
போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப்
போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை
விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சொல்லுவதானால் அவர் மட்டுமே நம்பியார் மற்ற யாருமே துவக்க காலத்தில் இவ்வளவு மரியாதையுடன் அழைக்கப்
பட்டதில்லை

3 comments:

  1. இயக்குனர் Sridhar பற்றி ரஜினிகாந்த் என்னவோ சொல்லி அவர் குடும்பத்தாரின் கோபத்திற்கு ஆளானது போல நம்பியாரைப் பற்றி ரஜினி எதாவது பேசாமல் இருக்க வேண்டுமே.

    சகாதேவன்

    ReplyDelete
  2. நன்றி சகாதேவன், ராப்ப், முக,

    சில mgrன் ஹிட் படங்களில் சாமி வில்லனாக நடித்திருந்தால் எவர் கிரீன் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என்பது என் எண்ணம்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails