1.உலக நாயகன் பாண்டு நமக்கு ராணிக் காமிக்ஸ் உதவியுடன் அறியா வயதில் அறிமுகம் ஆனவர். வந்திய தேவன் மிக மெதுவாக நாம் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தபோது அறிமுகம்( 5பகுதிகள் படிக்கிறது சுலபமா)
2.ஜேம்ஸ் பாண்ட் முதல் காட்சியில் துப்பாக்கியுடன் அறிமுகம் ஆவார். பொ.செல்வனில் குதிரையுடன் வந்திய தேவன் அறிமுகம் ஆகிறார்.
3. அவர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட். இவர் வந்தியத்தேவன், வல்லவரையன் வந்தியத்தேவன்
4.பாண்ட் படத்தில் நுழையும்போது சண்டை போடுவார். இவரும் கடம்பூர் மாளிகையில் நுழையும் போது சண்டை போட்டுக் கொண்டே நுழைவார்.
5. இருவரும் ஒற்றர்கள்.
6.மாடியில், நீரில், நிலத்தில்,சுரங்கப்பாதையில் எல்லா இடங்களிலும் சண்டை போடுவார்கள்.
7.பெண்களைப் பார்த்ததும் மெய்மறந்து போவார்கள்.
8.அனுப்பியவர்கள் நேரடியாக இவருக்கு உதவிசெய்ய தயங்குவார்கள்
9.எந்த ஒரு பிரச்சனையிலும் மனம் தளரவே மாட்டார்கள்
10.பல நாடுகளுக்கு பயணம் செய்வார்கள்
11.அனைத்து இடங்களிலும் பெண்பிள்ளைகள் இவருக்கு உதவுவார்கள்
12.நந்தினி போன்ற பல குழப்பங்களைக் கொண்ட லட்சிய வெறிமிக்க பெண்கள், பாண்டுவுக்கும் வந்திய தேவனுக்கும் மட்டுமே எதிரிகளாக இருப்பார்கள்
13.என்றுமே தனது அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள். மண்ணாசை, பொண்ணாசை தாண்டி
14.கதை முடிந்ததும் தனக்கு விருப்பமான பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அருமையான கருத்துக்கள்
ReplyDelete//14.கதை முடிந்ததும் தனக்கு விருப்பமான பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.//
கல்கி சத்தியமாக இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்
நன்றி சார். ஆனால் கல்கி அவ்வாறுதானே முடித்திருக்கிறார்
ReplyDeleteசுத்த மோசம். பாண்டு ஏ பாண்டு. வந்தியத்தேவன் யூ/ஏ வந்தியத்தேவன்.
ReplyDeleteதேவருக்கு 5 பாகத்திலும் ஒரே வேலை. (காதலிப்பது) பாண்டுக்கோ பல வேலை.
//நன்றி சார். ஆனால் கல்கி அவ்வாறுதானே முடித்திருக்கிறார்//
ReplyDeleteரெண்டு ”பேச்சுவார்த்தை”யும் ஒன்னா சார்
//
ReplyDelete6.மாடியில், நீரில், நிலத்தில்,சுரங்கப்பாதையில் எல்லா இடங்களிலும் சண்டை போடுவார்கள்.//
வந்தியத்தேவனுக்கு நீந்தத் தெரியாதுங்கற ஒரே விஷயத்தை தவிர எல்லா வகையிலயும் நான் மிகவும் ரசித்த ஒரு ஹீரோ வந்தியத்தேவன்.
வந்தயத்தேவன் வல்லவரையன் வந்தியத்தேவன்'ங்க...
ReplyDeleteவானவரையன் வந்தியத்தேவன் இல்லை.
எஜமான் படம் எப்பவும் மனசில இருக்கோ???
ரூம் போட்டு யோசிப்பியளோ?
ReplyDelete//பாண்டு ஏ பாண்டு//
ReplyDeleteநன்றி ஆட்காட்டி சார்.கோல்டன் ஐ காலத்திலேயே சிறுவர்கள், சிறுமியர், தந்தையருடன் வர ஆரம்பித்து விட்டனர். இப்போது சிறுகிராமங்களிலும் எல்லோரும் பார்க்கிறார்கள்
/////வந்தியத்தேவனுக்கு நீந்தத் தெரியாதுங்கற ஒரே விஷயத்தை தவிர ////
ReplyDeleteஇருந்தாலும் கந்தமாறனைக் காப்பாற்ற, அருள்மொழித் தேவரைக் காப்பாற்றவும் (இவரைக் காப்பாற்ற பொ.செ. நடத்துவது) நீரில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்துவார்.
நன்றி ஊர்சுற்றி சார்.
ReplyDeleteநன்றி அறிவன் சார்.
//வல்லவரையன் வந்தியத்தேவன்'ங்க...//
அவர் ஹீரோ அல்லவா.... அதுதான் போல...
திருத்திவிட்டேன்
நன்றி சே.வெ.சு. சார்
ReplyDeleteநன்றி புருனோ சார்....
ReplyDeleteஹி...ஹி....
இந்த இருவர்களின் 'பாஸ்'களை விடவும் நமக்கு இவர்களே நெருக்கமானவர்கள்.
ReplyDeleteபாண்டு கைல நிறைய சமாசாரம் இருக்கும்.
ReplyDeleteவ.தேவன் வாயில நிறைய சமாசாரம் இருக்கும்.
பாண்டு வெசர்ஸ் வந்தியத்தேவன்னு வந்தா வ.தேவன் தான் ஜெயிப்பார். ஏன்னா அவர் ஃபைட் பண்றத விட அவருக்கு சப்போர்ட் பண்றவங்க ஜாஸ்தியாச்சே:)))
அடடா!இப்படியும் கூட ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ன? அந்தநாட்டு பாண்டு நம்மநாட்டு வந்தியன்ன்னு மூழ்கி முத்தெடுத்து இருப்பீங்க போல இருக்குதே!
ReplyDelete//dharumi2 said...
ReplyDeleteஇந்த இருவர்களின் 'பாஸ்'களை விடவும் நமக்கு இவர்களே நெருக்கமானவர்கள்.
//
உண்மைதான் தல.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//இளைய பல்லவன் said...
ReplyDeleteபாண்டு கைல நிறைய சமாசாரம் இருக்கும்.
வ.தேவன் வாயில நிறைய சமாசாரம் இருக்கும்.
பாண்டு வெசர்ஸ் வந்தியத்தேவன்னு வந்தா வ.தேவன் தான் ஜெயிப்பார். ஏன்னா அவர் ஃபைட் பண்றத விட அவருக்கு சப்போர்ட் பண்றவங்க ஜாஸ்தியாச்சே:)))
//
யெஸ் பாஸ்
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஅடடா!இப்படியும் கூட ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ன? அந்தநாட்டு பாண்டு நம்மநாட்டு வந்தியன்ன்னு மூழ்கி முத்தெடுத்து இருப்பீங்க போல இருக்குதே!
//
வாங்க தல எல்லோரும் மூழ்கி முத்தெடுக்கலாம்
எப்படி சுரேஷ் உங்களால் மட்டும் இப்படி முடிகிறது. நல்லதொரு ஒப்பீடு, எனக்கு ஏனோ பாண்டை விட வந்தியத்தேவனைப் பிடிக்கிறது. என்ன பாண்ட் திரையில் பல படங்களில் வந்துவிட்டார், வந்தியத்தேவன் இன்னும் வரவேயில்லை.
ReplyDeleteரூம் போட்டு யோசிப்பீங்க போலிருக்கே!
ReplyDeleteஅருமையான ஒப்பீடு!
ReplyDelete@வந்தியத்தேவன்
ReplyDelete@சங்கா
@Robin
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
unga karpanai kuthirai ya kambu la katuga mutika poguthu
ReplyDelete