Wednesday, November 19, 2008

கிரிக்கெட் ஏன் இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது?

கிரிக்கெட்டில் உள்ள வசதிகளை பட்டியல் போட்டுப் பார்த்தால் விடை ஓரளவு பிடிபடலாம்.



1.கிரிக்கெட்டை யார் வேண்டுமானாலும் விளையாடிப் பார்க்கலாம். பெரும்பாலான விளையாட்டுகளை விளையாடி பார்க்கமுடியாது. கால்பந்து பத்து நிமிடங்கள் விளையாடினால் மூச்சு வாங்க ஆரம்பிக்கும். கைப்பந்து, டென்னிஸ் போன்றவைகளுக்கு பந்து கைக்கு வருவதற்கே பயிற்சி எடுக்க வேண்டும். தடகள விளையாட்டுகளை தவம் போல கருதுபவர்கள் மட்டுமே விளையாட முடியும். சில விளையாட்டுகளுக்கு செலவு அதிகம்.

2.கிரிக்கெட்டின் பரபரப்பை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இன்னும் எத்தனை ரன்? எத்தனை பால்? எளிதில் புரியும். கால்பந்தில் கூட எத்தனை கோல் என கேட்க முடியும், ஆனால் கிரிக்கெட்டில் நிமிடத்திற்கு நிமிடம் புள்ளிவிவரங்கள் மாறும். பரபரப்பு கூடும். மற்ற விளையாட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது.

3.கால்பந்து, கைபந்துகளில் யார் சிறப்பாக விளையாடிகிறார்கள் என்பது பார்த்தால் மட்டுமே புரியும்.

4.அதுவும் விளையாட்டு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிரிக்கெட்டுக்கு அந்த அவசியம் கிடையாது.

5கிரிக்கெட் பற்றி நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும்.(20/20 பத்தி அப்புறம் பார்ப்போம்).

6.தூய வெள்ளை மற்றும் கவர்ச்சியான கல்யாண மாப்பிள்ளை போன்ற உடைகளுடன் கிரிக்கெட் விளையாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளில் அப்படி இல்லை.(செஸ், துப்பாக்கி தவிர).

7.டி.வி.யில் பல கோணங்களில் காட்டும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. (ஸ்டம்பிலயே காமிரா வைக்கிறாங்களே)

8. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஒளிபரப்பும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. அதனால் தொலைக்காட்சிக்கு தனிகாதலே உண்டு.

9.கிரிக்கெட் முடிந்த பின் அரைமணிநேரம் விவாதிக்க முடியும்.அதற்கு மேல கண்ட காரணங்களே உதவும்.

10.மூச்சு விடுவது கூட சாதனையாக கிரிக்கெட்டில் மட்டுமே கருதப்படுகிறது. தொடர்ச்சியாக 0 எடுப்பது கூட இங்கு சாதனை. தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் கடைசி பந்துகளில் 4 எடுத்தால் இந்த மைதானத்தில் இது 3ம் தடவை. இந்த நாட்டிக்கெதிராக இது 8ம் முறை. இந்த நவம்பர் மாதத்தில் இது முதல் முறை. அந்த நேரத்தி சச்சின் மிட் ஆனில் நிற்பது இது 15ம் முறை என்றெல்லாம் சாதனைப்பட்டியல் போடுவார்கள்.

11.இந்தியாவும் பாகிஸ்தானும் சமபலத்தில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஹாக்கி கூட ஒரு காலத்தில் புகழுடன் இருந்தது நினைவு இருக்கலாம்.



மீள்பதிவு அண்ணாச்சி

20 comments:

  1. ரொம்ப சூப்பரா சொல்லிருக்கீங்க. எனக்கும் இதெல்லாம் சரின்னு தோனுது

    ReplyDelete
  2. என்ன மாதிரி சோம்பேரியும் விளையாட முடியும்

    ReplyDelete
  3. நன்றி ஆட்காட்டி,

    அடிமை மனப்பான்மையும் இருக்கலாம். ஆனால் கால்பந்து கூட பிரபலமாகியிருந்தால் நன்றாயிருக்கும்

    ReplyDelete
  4. நீங்க சொல்வது சரி தான்..முக்கியமா அனைவருக்கும் எளிதா புரியும் படி இருக்கு.

    ReplyDelete
  5. நீங்க சொல்வது சரி தான்..

    ReplyDelete
  6. இதோடு இந்தியர்களின் உடல் வாகுக்கு ஏற்ற விளையாட்டு இது தான். இதில் தான் தனி மனித வழிபாட்டிற்கு வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  7. யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும்.


    ஹி ஹி. அடி அடி என்று என்னுடைய டாடியும் சந்தோஷமாக கிரிக்கெட் பார்த்தது நினைவுக்கு வந்துவிட்டது......

    ReplyDelete
  8. // கிரி said...

    நீங்க சொல்வது சரி தான்..முக்கியமா அனைவருக்கும் எளிதா புரியும் படி இருக்கு.//

    நன்றி தல

    ReplyDelete
  9. // பிரபு said...

    நீங்க சொல்வது சரி தான்..//

    நன்றி தல..,

    ReplyDelete
  10. // முகிலன் said...

    இதோடு இந்தியர்களின் உடல் வாகுக்கு ஏற்ற விளையாட்டு இது தான். இதில் தான் தனி மனித வழிபாட்டிற்கு வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்.//

    நன்றி தல..,

    ReplyDelete
  11. //செந்தழல் ரவி said...

    யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும்.


    ஹி ஹி. அடி அடி என்று என்னுடைய டாடியும் சந்தோஷமாக கிரிக்கெட் பார்த்தது நினைவுக்கு வந்துவிட்டது......//


    வருகைக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி தல,,

    ReplyDelete
  12. இதே கருத்துதான் எனக்கும்.

    நல்ல அலசல்.

    ReplyDelete
  13. நல்ல வரையறை கிரிக்கெட்டை பத்தி

    ReplyDelete
  14. ஆஹா அசத்திட்டிங்க.....

    ReplyDelete
  15. //அக்பர் said...

    இதே கருத்துதான் எனக்கும்.

    நல்ல அலசல்.

    Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நல்ல வரையறை கிரிக்கெட்டை பத்தி

    சந்ரு said...

    ஆஹா அசத்திட்டிங்க.....
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,.,.,

    ReplyDelete
  16. அடிச்சி ஆடுங்க தல! நல்ல ஆய்வுக் கட்டுரையா​தோணுது இது! ஆனா அதிகமா சம்பாதிக்கிற விளையாட்டும் இதுதான். மத்த விளையாட்டுக்காரங்களை கால்ல மிதிச்சு தள்ளிட்டுப் ​போய்ட்டே இருக்காய்ங்க! துட்டும் நல்லா வட்டி நிறைய வாங்கிறாய்ங்க. இது பத்தாதுன்னு விளம்பரம், ​மேட்ச் ஃபிக்ஸிங் அளப்பற​வேற! ஒரு கருத்த​சொல்லுங்க பாஸு!

    ReplyDelete
  17. ஆமா சுரேஷ்!!
    பல விளையாட்டுக்கள் பள்ளியில் காணாமல் போய்விட்டன!!

    ReplyDelete
  18. கிரிக்கெட்டு விளையாட நல்லா ஓட தெரியணுமே?அப்புறம்,வெள்ளை வெளேரென்னு கால் சட்டை,டீ சேர்ட்டு போட்டுகிட்டு தான் டேவிஸ் கப்பு என்கிற டெனிஸ் போட்டியில வெளையாடலாம்!மத்த டெனிஸ் போட்டிங்க விதி விலக்கு!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails