Thursday, November 27, 2008

நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின்................

உலகில் புதிது புதிதாக பல ஆயுதங்களும் அதனை எவ்விதம் அழிவுப் பாதையில் செலுத்துவது என்பது பற்றியும் பலரும் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்..


இதற்காக தனியாக சம்பளம் வேறு கொடுக்கிறார்கள். காமிக்ஸ்களில் இதற்கென்றே தனியாக விஞ்ஞானிகளும் இருப்பதாக காட்டுவார்கள். அவர்களுக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். காமிக்ஸ் பற்றிய இணைய தளங்களே இவர்கள் பெயரில்தான் நடத்தப் படுடின்றன. என்பதே மக்கள் இவர்களை எவ்வாறு கவர்ந்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக அமைகின்றன.



ஆனால் உலகத்தின் அதிபயங்கர ஆயுதம் என்னவென்பதனை உலகலந்த தமிழ் சமுதாயம் ஏற்கன்வே கண்டறிந்து விட்டார்கள். பழைய பாடல் ஒன்றினைக் கேட்க நேர்ந்தது. அதில்தான் இதைப் பற்றி பேசுகிறார்கள். நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்குதான் உலகத்தில் பயங்கர ஆயுதம்.



பில்டப் பாருங்கள். வெருமனே நாக்கு என்று கூறினாலே தத்துவார்த்தமாக ஏற்றுக் கொள்வார்கள். கவிஞர் அதனை இன்னும் கூர்படுத்துகிறார், (மிகைப் படுத்துவதாக சொன்னால் ஏற்க முடியாது)



வஞ்சக எண்ணம் கொண்டவனின் நாக்கினைச் சொல்லுகிறார். அவனும் நயவஞ்சகனாக இருக்கிறான். அவனும் தன்னிலை தவறியவனாக இருக்கிறான். அவனது பேச்சுக்களைப் போன்ற அழிவு தரக்கூடிய ஆயுதம் உலகத்தில் வேறெதுவும் கிடையாது.



நாட்டில், உலகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் அதன் தொடர்ச்சியாக பலரும் பல்வேறு விதங்களீல் பேசுவதைப் பார்க்கும் போதும் அணு ஆயுதங்களை விட கொடிய நிகழ்வுகள் இதனை வாய்க்கு வந்த படி பேசுவதால் ஏற்படுகிறது என்பதனை உணர வேண்டும். அன்றே சொன்னவன் தமிழன் என்பதனை தமிழ் கூறும் நல்லுலம் உணர வேண்டும். ஊருக்கும் சொல்ல வேண்டும்.




மறக்காமல் தமிழீஸிலும், உயர்த்திப் பிடித்த தமிழ்மணக் கட்டை விரலிலும் கிளிக் செய்து விடுங்கள்

13 comments:

  1. வன்முறைக்குக் காரணம் ஆயுதங்கள் அல்ல, எண்ணமும் அதனை ஆனையிட்டு சொல்லச் சொல்லும் நாக்கும் தான். நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் ! பாராட்டுகள் !

    ReplyDelete
  2. நன்றி கோவி. கண்ணன் அவர்களே...............

    இந்த வரிகளை எழுதியவர் பெயர் தெரியவில்லை

    ReplyDelete
  3. //நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்குதான் உலகத்தில் பயங்கர ஆயுதம்.//
    True

    ReplyDelete
  4. கலைவாணர் என்.எஸ்.கே அவர்களும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்தப் பாடலுக்கு தத்ரூபமாக உயிரூட்டியிருப்பார்கள்.

    அந்தப்பாடலில் இன்னும் சமுதாயக் கருத்துக்கள் நிறைய இருக்கும். எனக்கு பிடித்த பாடல்.

    தாங்கள் எழுதும் யுக்தி சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றி கபிஷ்., தமிழ் ஓவியா அவர்களே

    ReplyDelete
  6. ஞாபகம் வருகிற்தா தமிழ் ஓவியா அவர்களே

    அரச சபையில் நடைபெறும் போட்டிகளில் தமிழிசைப் பாடல்கலையும். நாட்டுப் புற நாட்டியத்தையும், இசைக் கருவிகளையும் உபயோகப் படுத்திய படம்

    ReplyDelete
  7. அநேகமாக தமிழிசை அரச சபையில் ஒலித்த ஒரே படம்.

    ReplyDelete
  8. //தாங்கள் எழுதும் யுக்தி சிறப்பாக இருக்கிறது.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  9. //நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்குதான் உலகத்தில் பயங்கர ஆயுதம்//

    அது அந்த காலம்

    இன்று நயவஞ்சகனின் பத்திரிகை, நயவஞ்சகனின் வலைப்பதிவு என்று பல ரூபங்கள் இருக்கின்றனவே

    ReplyDelete
  10. நன்றி புருனோ அவர்களே

    //இன்று நயவஞ்சகனின் பத்திரிகை, நயவஞ்சகனின் வலைப்பதிவு என்று பல ரூபங்கள் இருக்கின்றனவே//

    நிலை கெட்டுப்போன என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. //நாட்டில், உலகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் அதன் தொடர்ச்சியாக பலரும் பல்வேறு விதங்களீல் பேசுவதைப் பார்க்கும் போதும் அணு ஆயுதங்களை விட கொடிய நிகழ்வுகள் இதனை வாய்க்கு வந்த படி பேசுவதால் ஏற்படுகிறது என்பதனை உணர வேண்டும். அன்றே சொன்னவன் தமிழன் என்பதனை தமிழ் கூறும் நல்லுலம் உணர வேண்டும். ஊருக்கும் சொல்ல வேண்டும்.//

    சொல்லிடுவோம்

    உங்களப்பத்தி எதுனா சொல்லணுமா தல

    ம்ன்னு சொல்லுங்க.....

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails