கத்தியின்றி இரத்தம் இன்றி போராடும் முறை என்று அஹிம்சை முறயைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அஹிம்சை என்பது முற்றிலும் வேறு பட்ட ஒன்று.
அதில் ரத்தம் அளவே இல்லாமல் சிந்தப் பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரிலேயே எத்தனையோ தியாகிகள் தங்கள் இரத்தத்தையும், இன்னுயிரையும் தந்திருக்கின்றனர். அவர்கள் சிந்திய இரத்தத்தைப் பார்த்து அதிகாரம் கொண்டிருப்பவர்கள் தங்கள் மனசாட்ட்சியால் ஹிம்சை செய்யப் பட்டு நரக வேதனை அடைந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டனர். மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அஹிம்சை என்பது கத்தியும் ரத்தமும் இன்றி போராடும் முறையா...? இரத்தம் சிந்துவதைப் பற்றி கவலையே படாத லட்சிய வாதிகளின் போராட்டமுறையா...?
ஆயுதம் எடுத்துப் போராடுவதற்கு வெறும் உடல்வலிமை மட்டும் போதும். ஆயுத வீரர்களுக்கு வழி நடத்த கொஞ்சம் போர்தந்திரங்கள் தெரிந்தால் போதும். ஆனால் அஹிம்சை முறையில் போரிடுவதற்கு வன்முறையைத்தாங்கும் உடல் வலிமையும், மன வலிமையும் மிகமிக அவசியம். அவமானங்களைத் தாங்கும் உள்ளத்தெளிவும் அவசியம். அந்த அளவு உடல் வலிமையும் மன வலிமையும் உள்ளத்தெளிவும் இல்லாதவர்கள் அஹிம்சை முறையைப் பின் பற்றுவதற்கே தகுதி இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.
பாட்ஷா படத்தில் பாட்ஷாவை கட்டி வைத்து அடிப்பார்கள். ஆனால் பாட்ஷா மிக அமைதியாக சிரித்துக் கொண்டு இருப்பார். காந்தி, யேசு போன்றோரையெல்லாம் உவமைப் படுத்துப் பாடுவார்கள். அந்தப் பாட்டிற்கு முன் பாட்ஷா தம்பிக்காக கெஞ்சுவார். அவரை கட்டி வைக்க அழைத்துச் செல்லப் படும்போது கொதித்தெழும் கூட்டாளிகளை ஒரு விரல் அசைவில் நிறுத்தி வைப்பார். அடிக்கப் படும்போது கூட வலியைத்தாங்கி கொண்டு சிரிப்பார். அடி வாங்கி ஓய்ந்த பிற்கு கூட வலியுடன் சிரிப்பார். அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டு நிற்கும் வல்லமை படைத்தவராக நாயகனைக் காட்டுவார்கள்.
கீழே உள்ள காட்சியில் 3நிமிடம் கழித்து வருகிறது, மேற்கண்ட காட்சிகள்
அப்படி அமைதியாக பொறுமை காத்தவர் பொங்கி எழும் காட்சியை கீழே பாருங்கள்
அஹிம்சையை பின்பற்ற நினைப்பவர்களின் அடிப்படைத்தகுதிகளை மிக அழகாக பாட்ஷா படத்தில் பாட்ஷாவைக் கட்டி வைத்து அடிக்கும் போது வரும் காட்சிகளில் அற்புத்மாக விளக்கியிருப்பார்கள்.
அஹிம்சையைப் போன்ற ஹிம்சை வேரேதுமில்லை.
ReplyDeleteவாங்க சே.வே.சு அவர்களே.....
ReplyDeleteஅஹிமசைக்குத்தான் மிகப் பெரிய உடல் மன வலிமை தேவைப்படும்
தங்களின் 50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். கலக்கலாய் தொடர்ந்து எழுதுங்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்க்களிக்கு நன்றி ராம்சுரேஷ் அவர்களே... உண்மையில் 50 இந்த பிளாக்கில் மட்டும். நான் இன்னொரு பிளாக்கிலும் எழுதி வருகிறேன் இணைப்பு இந்தப் பக்கத்திலேயே உள்ளது.
ReplyDeletesir,
ReplyDeletesorry for posting this comment here:
அன்புடையீர்,
கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html
லெட் த கும்மி ஸ்டார்ட்.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
தல,
ReplyDeleteஎல்லாம் சரி. அது என்ன கடைசியாக ஒரு ஜக்கு பாய் படம்? அது எதுக்கு தல?
தல,
ReplyDeleteஉங்களுடைய புதிய ப்ரொபைல் படத்தில் பத்து வயது குறைந்து ஸ்கூல் செல்லும் பையனைப் போல இருக்கிறீர்கள்.
(மாயாண்டி குடும்பத்தினர் படம் பார்த்ததால் வந்த விளைவு)
தல,
ReplyDeleteஅது என்ன ஐம்பதாவது பதிவு? நீங்க இந்த வருஷம் மட்டுமே செஞ்சுரி அடித்து இருக்கிறீர்களே?
//King Viswa said...
ReplyDeleteதல,
அது என்ன ஐம்பதாவது பதிவு? நீங்க இந்த வருஷம் மட்டுமே செஞ்சுரி அடித்து இருக்கிறீர்களே?
//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தல..,
இது ஒரு மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு..
பின்னூட்டம் அப்போ வந்தது.
//பூங்காவனம்,
ReplyDeleteஎப்போதும் பத்தினி.//
தெய்வமே படித்துவிட்டேன்
தமிழிஷ், தமிழர்ஸ், ஈதமிழ், நியூஸ்பானை ஆகிய தளங்களில் வாக்களிக்க இந்த சுட்டியை ஒரு முறை மட்டும் சுட்டினால் (க்ளிக் செய்தால்) போதும
ReplyDeleteநாங்க எல்லாம் இம்சைவாதிகள்
ReplyDelete