இதனைப் படிக்க ஆரம்பிக்கும் முன் நீங்கள் ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். எனக்கு முதலீடுகள் பற்றியோ பங்கு வர்த்தகம் பற்றியோ எதுவும் தெரியாது. ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி குடிமகன் எப்படியெல்லாம் நினைத்து கொண்டிருப்பானோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். (உண்மையில் நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதும் அதே குக்கிராமத்தில்தான் கல்லூரி படிப்பு மட்டும் கோவையில் )
கல்லூரி பேராசிரியர் ஒரு அறிவுரை சொல்லியிருந்தார். சம்பாதிக்கும் பணத்தை பூட்டி வைத்துக் கொண்டிருப்பதற்கு அந்தப் பணத்தை சம்பாதிக்கலாமலே இருக்கலாம் என்று கூறுவார். அவரது அறிவுரைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். உதாரணமாக நம்மிடம் வேலை செய்யும் ஒருவருக்கு வேலை தெரியவில்லை என்றால் அவருக்கு நாம் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். கழிப்பிடம் சுத்தம் செய்பவருக்கு சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு சொல்லித்தரும் அளவுக்கு நாம் வேலை தெரிந்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் ஒரு அமைப்பை நிறுவி நடத்தமுடியுமாம்.
பணி செய்யும் இடத்தில் நிறைய பேர் வருகிறார். நீட்டும் இடத்தில் மட்டும் கையெழுத்துப் போடுங்கள். பங்கு மார்க்கெட் போகும் வேகத்தில் ஒரே நாளில் உங்களுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். சிறு நகரத்திற்கு{கிராமத்திற்கு தொடர்புடைய நகரம். அவ்வளவுதான் மற்றபடி அங்கு போவதுகூட ஒரு சுற்றுலா போவது மாதிரியான நிலைதான்} அவர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் வேதவாக்கு. கரும்பு விற்ற காசுகளைக்கூட சிலர் கொடுத்து வந்தனர். என்னைப் போன்ற சிலருக்கு இணையம் மூலம் வர்த்தகம் முதலீடு என்பதே புரியாத நிலையில் இருந்தது.
சில காகிதங்களைக் காட்டி இதன் மதிப்பு ஒரு லட்சம் என்றார்கள். சில நாட்கள் கழித்து ஒன்றரை லட்சம் என்றார்கள். திடீரென வர்த்தகம் வீழ்ச்சி அதனால் அதன் மதிப்பு 75ஆயிரம் என்கிறார்கள். நமக்கு தேவைப் படும்போது பணமாக்கலாம் என்றால் முடியாதாம் நல்ல நிலையில் இருக்கும்போது விற்றால்தான் லாபமாம். கண்ட நேரத்தில் விற்றால் நட்டமாம். இப்படி சிலருக்கு அனுபவம். இதில் எத்தனை அவர்களுக்கு ஏற்பட்டதோ.. எத்தனை அவர்களாகவே சேர்த்துக் கொண்டதோ தெரியவில்லை.
நேற்று 170 ரூபாயாக இருந்த காகிதம் இன்று 30 ரூபாயாக மாறியிருக்கிறது. நேற்றும் அதை உபயோகப் படுத்தி ஒரு கடலை மிட்டாயும் வாங்க முடியாது. இன்றும் வாங்க முடியாது. உபயோகமாகாத பணம் எந்தப் பேரில் எந்த மதிப்பில் இருந்தால் என்ன.... வர்த்தகர்களுக்கு வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பட்டையைக் கிளப்பலாம். எங்களுக்கு பட்டைதான் போடும்.
அடுத்ததாக சோப்பு, பேஸ்ட், பவுடர் விற்பது... ஒரு பேஸ்ட், டூத் பேஸ்ட்தான் 75ரூபாயாம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு இவ்வளவு லாபம் வரும் என்கிறார்கள். மக்களை சேர்த்து கொண்டே போனால் நம் காட்டில் பண மழை பொழியுமாமே. என்னைச் சந்தித்த ஒருவர், இனிமேல் எந்த வேலையுமே செய்யாவிட்டாலுமே மாதம் ஒரு லகரம் வருமாம். கம்பனியில் ஊக்கப் படுத்தி கார், வெளிநாட்டுச் சுற்றுலா எல்லாம் கூட்டிப் போகிறார்களாம். அது எப்படி ஒரு வேலையும் செய்யாதவருக்கு ஒரு லகரம் ஊதியம் தருவார்கள்.. அதற்கும் அவர் விளக்கம் கொடுக்கிறார். இதுவரையில் அவர் செய்த வேலைக்காக நிறுவனமே கொடுக்கும் ஊக்கத்தொகையாம். அவர் சேர்த்து விட்டவர்கள் முதலீடு செய்ய செய்ய இவருக்கு ஒரு பங்கு ஊக்கத்தொகையாக க் கிடைக்குமாம். இப்படியே நிறையப் பேருக்கு ஊக்கத்தொகை கொடுத்தால் உண்மையில் எவ்வளவுதான் உண்மையான முதலீடு? இவ்வளவு கமிஷன் போனால் அந்த பவுடர், பேஸ்ட்டின் உண்மையான விலைதான் என்ன..? இவர்கள் நேரடி மார்க்கெட்டில் நுழைந்தால் அதன் விற்பனை விலைகள் என்னவாக இருக்கும்..? இவர்கள் பொருடகளை விற்பதற்காக கூட்டம் சேர்க்கிறார்களா.. அல்லது அதன் போர்வையில் முதலீடுகளை சேர்க்கிறார்களா... அல்லது மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்களா....
இத்தனை பேருக்கு கொடுக்கும் ஊக்கத்தொகை புதிய சேர்ர்க்கையாளர்களுடையது என்றால் அந்தப் பணம் கமிஷன் கொடுக்க போதுமானதாக இருக்குமா. ... அப்படியென்றால் எதுதான் முதலீடு?
இதெற்கெல்லாம் எனக்கு மட்டுமல்ல... பலருக்கும் பதில் தெரியாமல்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் பதில் சொல்லுவது போல் ஏதாவது பதிவுகள் இருந்தால் அதன் லிங்க் களைக் கொடுங்களேன்..
பின் குறிப்பு:-
மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஷேர் மார்க்கெட், இன்னும் பல முதலீடு செய்ய என்னை அனுகியவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் எழுதியவை. மற்றபடி இதனால் யாருக்காவது மன வருத்தம் இருந்தால் பொருத்தருளுங்கள்.
இது ஒரு மீள்பதிவு
gr8!
ReplyDeleteபணம் பண்ணுவது ஒரு கலை... ன்னு சொல்வாங்க. சும்மா இல்ல... சம்பாதிச்சா மட்டும் போதாது.. சம்பாதிச்ச பணத்தை காப்பாத்திக்கிடவும் கத்துக்கணும்... அதோட இப்ப இருக்கற சூழ்நிலையிலே... பணத்தை பெருக்கணும் னு பேராசை படவும் வாய்ப்பு இருக்கறதுல பங்கு வர்த்தகமும் ஒண்ணு... கவனமா இருந்தா பொழைக்கலாம்..!
ReplyDelete//நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதும் அதே குக்கிராமத்தில்தான்//
ReplyDeleteகொடுத்து வைத்தவர் நீங்கள்.
கழுத்துல டை
ReplyDeleteகையில பை
வாயில பொய்
இது தான் எல்லாத்துக்கும் காரணம், கேட்டா தொழில் தர்மமாம்.
There is a dialogue in "North by Northwest" movie. In the world of advertising/Marketting, there's no such thing as a lie. There's only expedient exaggeration.
People started to give explanation for their mistake, instead of correcting themselves.
Instead of blaming others, we have to be very careful while investing. Thats the easiest way I know to resolve this.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ReplyDeleteபழமைபேசி
shanevel
சே.வேங்கடசுப்ரமணியன்
ஆளவந்தான் அவர்களே...
இந்த உலகத்தில் கத்துக்க முடியாத விஷயங்கள் என்று எதுவுமில்லை சார். ஷேர் மார்க்கெட்டை பொறுத்த வரையில் உன்னிப்பாக எல்லா பக்கமும்/பங்குகளையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், அது தான் கத்துக்க வேண்டிய விஷயமும் கூட. இரண்டே இரண்டு வாரம் மார்க்கெட்டை நன்றாக ஸ்டடி பண்ணினால் போதும். அப்புறம் நீங்கள் தான் ராஜா. நம்பிக்கையான நண்பன்/பழக்கமுள்ளவர்கள் தவிர யாருடைய அறிவுரையையும் கேட்டு இன்வெஸ்ட் பண்ணாதீர்கள். அவ்வளவு தான்.
ReplyDeleteஷேர் மார்க்கெட் ஒண்ணும் கம்ப சூத்திரம் அல்ல.
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
ReplyDeleteஅன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com
சுரேஷ்!!!
ReplyDeleteஉங்களுக்கு
பட்டாம்பூச்சி
விருது
வழங்கியுள்ளேன்!!!
என் தளத்தில் இருந்து
ஒட்டிக்கொள்ளவும்.
தேவா...
சுரேஷ்,
ReplyDeleteஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பங்குச்சந்தை தாதா வாரன் பஃபெட் 'When others are greedy, you should be afraid. When others are afraid you should be greedy' என்று சொல்லியிருக்கிறார். அதாவது மார்க்கெட் அதல பாதாளத்தில் இருக்கும் போதுதான் இன்வெஸ்ட் செய்யவேண்டும். அந்த நேரத்தில் யாரிடமும் பணமிருப்பதில்லை.
ஷேர் மார்க்கெட்டில் எந்த அடிப்படையும் செல்லுபடியாவதில்லை. வதந்திகள் மட்டுமே நடத்துகின்றன. ஆகவே அதிலிருந்து விலகியிருப்பதே விவேகம்.
எம்.எல்.எம்மும் அப்படித்தான். வாங்கும் பொருளுக்குண்டான விலையை விட அதிகமாகத்தான் வாங்குவோம். எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் எம்.எல்.எம்மால் பணக்காரர்களானதில்லை.
இவை மட்டுமல்ல. ஒருகாலத்தில் 48 சதவீத வட்டி. தங்க நாணயம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தினார்கள்.
மொத்தமாக, ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள்.
//ராம்சுரேஷ் said...
ReplyDeleteஷேர் மார்க்கெட் ஒண்ணும் கம்ப சூத்திரம் அல்ல.//
நன்றி தல....,
//KaveriGanesh said...//
ReplyDeleteபடித்துவிட்டோம் தல..,
//thevanmayam said...
ReplyDeleteசுரேஷ்!!!
உங்களுக்கு
பட்டாம்பூச்சி
விருது
வழங்கியுள்ளேன்!!!
என் தளத்தில் இருந்து
ஒட்டிக்கொள்ளவும்.
தேவா...//
நீண்ட போராட்டத்திற்கு பின் ஒட்டி விட்டோம்
//இளைய பல்லவன் said...
ReplyDeleteயோசிக்க வேண்டிய விஷயம்//
arumai
ReplyDelete