Wednesday, January 7, 2009

மின்னணு உதவியுடன் நடந்த சாப்பாட்டுப் போட்டி.

கல்லூரியில் ஆண்கள் விடுதி பரபரப்பாக இருந்தது. இந்தவார இறுதியில் விடுதி தினம் கொண்டாடப் போகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளில் எல்லோரும் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். சிலர் கொண்டாடவே ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் விடுதியில் இட்லிசாப்பிடும் போட்டி நடப்பதாக இருந்தது.


போட்டிக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவிலும் இருவர். அவர்களுக்கு 25 இட்லிகள் கொடுக்கப் படும். அதனை வேகமாக சாப்பிட்டு முடிப்பவர் வென்றவராக அறிவிக்கப் படுவார். விடுதி சமையலறையில் அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுவந்தன. மாலை 7மணியளவில்பெயர் கொடுத்தவர்களை பார்த்தபோது ஏறக்குறைய 30அணியினர் இருந்தனர். விடுதி சமையலறையில் ஒரே நேரத்தில் 500 இட்லிகள் மட்டுமே தயார் செய்யும்வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டுமுறை சமையல் செய்து போட்டி நடத்தலாம் என்றால் ஆறிய இடலி, சூடான இட்லி பாகுபாடு வருமே.. ஒரு சுற்றுக்கும் மற்றொரு சுற்றுக்கும் நடுவே அரைமணிநேரம் இடைவெளி கிடைக்கும்


போட்டி நடத்துபவர்கள் தங்கள் மூளையை கண்டபடி கசக்கி ஒருவழியைக் கண்டுபிடித்தனர். முதல்முறை இட்லி எடுத்தவுடன் முதல் சுற்றினை நடத்துவது ஒவ்வொருவரின் நேரத்தையை குறித்துக் கொள்வது. பின்னர் இரண்டாம் முறை நடத்துவது . அதில் போட்டியாளர்களின் நேரங்களை குறித்துக் கொள்வது ,, குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களை வெற்றியாளர்களாக அறிவிப்பது என முடிவானது. அனைத்து ஆண்டு மாணவர்கள் பிரதிநிதிகளும் ஒத்துக் கொண்டணர்.

முதல் சுற்றில் இறுதிஆண்டு-இளைஞர்பிரிவில் இருந்த எம்ஜியார்-சிவாஜி ஜோடி நான்கு நிமிடங்களுக்கு சில வினாடிகள் குறைவான நேரத்தில் 25 இட்லிகளையும் சாப்பிட்டுவிட்டனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அஜித்-விஜய் ஆகியோர் நான்குநிமிடங்கள் மற்றும் சிலவினாடிகள் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் எல்லோருமே 5நிமிடங்களுக்கு மேலே எடுத்துக் கொண்டனர்.


அஜித்-விஜய் ஜோடிக்கு பயங்கர ஃபீலிங்ஸ். பின்னே.. சில வினாடிகளில் முதலிடம் பறிபோனது மனதை உலுக்கும் செய்திதானே.. அவர்களுக்கு அதிக நேரம் செலவானதன் காரணங்கள் நண்பர்களால் ஆராயப் பட்டது. உடனடியாக அவர்கள் அடுத்த முடிவு எடுத்தனர். அது
அவர்கள் அடுத்த சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்தனர்..
ஏற்கனவே 25 இட்லிகளை சாப்பிட்டவர்கள் மீண்டும் 25 இடலி சாப்பிட உட்கார்ந்தால் அதிர்ச்சியாக இருக்காதா..

அந்த அதிச்சியிலேயே அவர்கள் கலந்து கொள்வதை மற்றவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களும் உட்கார்ந்தனர். சாப்பிட்டனர். ஆனால் இந்தச் சுற்றில் அவர்கள் ஏறக்குறைய நான்கு நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தனர். அதாவது இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை அவர்கள் கைப்பற்றினர்.


அவர்கள் முதலிடம் பெறாவிட்டாலும் அவர்களது இந்த பெர்ஃபாமன்ஸ் பார்த்து விடுதியே அதிர்ந்துதான் போனது.

பின்குறிப்பு:-
1..50 இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தாகசாந்திக்கு வேறு கொஞ்சம் குளிர்பானம் குடித்தனர்.
2.. போட்டியின்போது எலக்ட்ரானிக் வாட்ச் உபயோகப் படுத்தப் பட்டது. தமிழில் மின்னணு கடிகாரம்.

===========================================

இது ஒரு மீள்பதிவு, வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வருவதற்கு வெகுநாட்கள் முன்பே (7-1-1009) எழுதப்பட்டது.

13 comments:

 1. அவர்கள் முதலிடம் பெறாவிட்டாலும் அவர்களது இந்த பெர்ஃபாமன்ஸ் பார்த்து விடுதியே அதிர்ந்துதான் போனது.///

  பழைய கதை - நினைவுகள் இனிமையானவை

  ReplyDelete
 2. ஹாஸ்டல்ல சாதாரணமா 10 புரோட்டா சப்பிடுவேன். இப்ப முடியலையே!

  ReplyDelete
 3. ஹாஸ்டல் சிக்கன் கிரேவி மாதிரி வேற எங்கேயும் காணோம்!! ஏன்?

  ReplyDelete
 4. நானும் என் ஃப்ரென்டும் மெஸ்ஸுக்கு போனா உள்ள சாதம் இருக்கான்னு பாத்துட்டுதான் இலையைப் போடுவாங்கன்னா பாத்துக்குங்களேன்.

  இப்பல்லாம் :(((

  அதுசரி, இதுல நீங்க எம்ஜியாரா, சிவாஜியா, அஜித்தா, விஜய்யா? கமல் ரஜினி ஏன் போட்டில கலந்துக்கல?

  ReplyDelete
 5. வாருங்கள் thevanmayam ,

  இளைய பல்லவன் அவர்களே.. நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 6. இளைய பல்லவன் கூறியது.

  //அதுசரி, இதுல நீங்க எம்ஜியாரா, சிவாஜியா, அஜித்தா, விஜய்யா? கமல் ரஜினி ஏன் போட்டில கலந்துக்கல?//

  ரஜினி கமல் மட்டுமல்ல... ரவிச்ச்ந்திரன், முத்துராமன், சிவக்குமார், சுதாகர் கூட கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு தலைமுறையின் பிரதிநிதிகள்.

  ReplyDelete
 7. மின்னணு வேக சாப்பாட்டு பதிவு

  ReplyDelete
 8. மிண்ணனு கைக்கடிகாரம்

  ReplyDelete
 9. தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்

  தமிழ் தரவுத்தாள் தளம்

  Tamil Electronics Datasheets

  www.tamildata.co.cc

  ReplyDelete
 10. அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் ஃபார் ​மென் - ஹாஸ்டல்ல சாப்பிட்ட அனுபவம் உண்டா? 1994-97 வரைக்கும் அதை சாப்பிட்டு தப்பிப் ​பொழச்ச சில சென்மங்கள்ல நானும் ஒண்ணு!

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails