இது கொஞ்சம் அவசரமா எழுதும் பதிவு. நமது வலைஞர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது உடனடியாக எழுதத்தோன்றியது.
இது நான் எப்போதோ பார்த்த படம் ..
தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றுவார். அவரது கூட்டாளிகள் கெட்டவர்கள்.. அவர்கள் எதிரி நாட்டுக்கு ரகசியங்களை விற்கும்போது மேஜர் தமிழ்மணி பார்த்து விடுவார். அப்போது அவரை கொண்றுவிட்டு அவரை தேசத்துரோகி ஆக்கிவிடுவார்கள். தேசத்துரோகக்குற்றம் சாட்டப் பட்டதால் அவரது வீட்டை சூறையாடி விடுகிறார்கள். மகன் வளர்ந்து பெரியவர் ஆக வளர்கிறார்.
அவருக்கு பழைய கதை தெரிகிறது. தந்தை கூட்டாளி எதிரிகளை தேடுகிறார். ஒருவர் முக்கிய அரசியல் கட்சி தலைவராகவும் ஒருவர் பெரிய தொழிலதிபராகவும் இருக்கிறார். என்னவொரு ஒற்றுமை என்றால் அதில் ஒருவர் ராஜூகாரு மாதிரியே இருப்பார். அவரை பின்னி பெடலெடுப்பார் ஆனந்த்.
இது தாய்நாடு திரைப் படத்தின் கதைசுருக்கம். சத்தியராஜ் இரட்டை வேடத்திலும் ராதிகா, ஸ்ரீவித்யா, நம்பியார், இளவரசன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
இதேபோல் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதை இந்திப் படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்களாம். நம்பாதீர்கள். அது முழுக்க நமது தமிழனுக்கே சேர வேண்டிய பெருமை.
தலைப்பிலேயே பயங்கர உள்குத்து இருக்கு... நடக்கட்டும் நடக்கட்டும்...
ReplyDeleteஏன் மொக்கை-னு வகைபடுத்தியிருக்கீங்க? உள்குத்தை கொஞ்சம் வெளிச்சம் போட்டு வெளிக்காட்டவும்
ReplyDeleteஇது ஒரு பகுதிதான்.மத்தபடி இது கொள்ள கூட்ட பாஸ் கதைதான்/
ReplyDeleteகுகு
வாங்க ஆளவந்தான்,
ReplyDeleteவருங்கால முதல்வர் அவர்களே....
நான் படம் பார்க்கவில்லை, பார்த்த உடன் அர்ச்சுனரு வில்லு, அரிச்சந்திர சொல்லு அப்படின்னு சொல்லிடறேன்.
// வருங்கால முதல்வர் கூறியது...
ReplyDeleteஇது ஒரு பகுதிதான்.மத்தபடி இது கொள்ள கூட்ட பாஸ் கதைதான்///
boss................
தலைப்பிலேயே பயங்கர உள்குத்து இருக்கு... நடக்கட்டும் நடக்கட்டும்...
ReplyDelete//////
ஆமாம் எனக்கும் அப்படித்தன் தோனுது