படிக்காதவன் இளம்பருவத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றாத படம். முதல் காட்சியிலேயே இரத்தச் சிவப்பினை குளோசப் காட்ட்சியில் காட்டி பயமுறுத்துகின்றனர். அடுத்த காட்சியிலேயே அதனை தக்காலியாக மாற்றி விடுகிறார்கள். டைட்டில் சாங் அற்புதமாக அமைந்திருக்கிறது.
பின்னே சிவாஜிகணேசன் m.p.பாடும் பாட்டென்றால் சும்மாவா.... ஒரு கூட்டுக் குயிலாக... மலேசியா வாசுதேவன் குரலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். குழந்தைகளாக சூப்பர் தம்பிகள். பாட்டு முடிந்ததும் தேர்வெழுத அவ்ளோ பெரிய சிவாஜி தன்னோட சின்னத்தம்பிகளை அண்ணியிடம் விட்டு விட்டு செல்கிறார்.
அண்ணியின் சொற்கள் தாங்காமல் தம்பிகள் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.
இந்தப் படத்தை முன்னமே பார்த்த காரணத்தாலேயே வெள்ளைச்சாமி அண்ணன் தன் தம்பிகளை அண்ணியிடமிருந்து காப்பாற்றிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (வானத்தைப் போல).
மூட்டை தூக்கியாவது தம்பிக்கு ரொட்டி வாங்கி கொடுக்கும் உன்னதமான பாத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு. பின்னி பெடல் எடுப்பார்.
தப்பி வந்த தம்பிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தந்தையாக நாகேஷ். அவரது மகனும், மக்ளும் சூப்பர் அவர்களை அண்ணா என்றே அழைக்கிறார்கள்.
சூப்பர் ஒரு கார் வைத்திருப்பார். அதில் யாராவது போதைப் பொருளுடன் ஏறினால் ஸ்டார்ட் ஆகாது. சிவப்பு விளக்கு எறியும். வயிற்றீல் இருந்தால் கூட எறியும். லக்ஷ்மி ஸ்டார்ட்.. சூப்பர் சொல்லும் வசனம்.. நாங்கள் சைக்கிள் எடுக்கும் போது சொல்வது வழக்கமாய் மாறியது.
காரோட்டியாக மாறி தம்பியை காலேஜில் படிக்கவைக்கிறார். தம்பியின் கல்லூரியை விட்டு வரும்போது சட்டை, பேண்ட், கோட் என எல்லா பாக்கெட்டுகளில் இருந்து பணம் கொடுப்பார். கண்கலங்குவார். தனது புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களுக்குப் பின் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.
தம்பியின் காதலியாக மனைவியாக நீலாம்பரி வருவார். தம்பியை பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக கேட்கும்போது சுயமரியாதைபேசிவிட்டு தம்ம்பியின் எண்ணம் தெரிந்தபின் திரும்பவும் போய் சம்பந்தம் பேசுவது, தம்பி பாஸ் என்று தெரிந்த பின் குதியாட்டம் போடுவது.. பின்னர் போலி எண்ணை கொடுத்தி ஏமாற்றிவிட்டார் என தெரிந்தபின் தம்பியிடம் போய் நியாயம் பேசுவது,, பின்னர் தம்பியிடம் மூக்குடை பட்டு திரும்பி வருவது என சூப்பர் அசத்துவார்.
தம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).
பின்னர் அதே தம்பி சின்ன மாமனாரால் ஏமாற்றப் பட்டு திரும்ப அவர் வீட்டுக்கு திருமபச் செல்ல அங்கே கொலைக் குற்றம் சாட்டப் பட நீதி மன்றத்தில் நிறுத்தப் படுகிறார். அங்கே நீதிபதியாக பெரியண்ணன்.
பெரிய அண்ணனை முதலிலேயே சூப்பர் பார்த்து விடுகிறார். அவர் முன்னிலையில்தான் தம்பிக்கு திருமணமே செய்து வைக்கிறார்.
குற்றவாளியின் பேர் ஊர் கேட்டவுடன் பெரிய அண்ணன் தெரிந்து கொண்டவுடன் கண் கலங்கி மீண்டும் வக்கீலாக மாறுகிறார். கோர்ட் காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். ஃபோட்டோவில் இருக்கும் நின்று போன வாட்சைவைத்து உண்மை கொலை குற்றவாளிகளை கண்டறிகிறார்.
கடைசியில் சூப்பர் சண்டை போடாவிட்டால் படம் ஓடுமா.. என்ற சந்தேகம் போல .. ஒரு துரத்தல் சண்டை போட்டு வில்லன் ஜேம்ஸ் பாண்டை பிடித்துக் கொடுக்க அண்ணியும் திருந்த சுபம்.
யப்பா... எவ்ளோ பெரிய கதை. இதுல அம்பிகா.. நாகேஷ். அவர்தம் பிள்ளைகள், வில்லன் செயல்பாடுகள் பத்தி வேற எதுவும் எழுதுல..............
எத்தனை படம் எடுத்திருக்கலாம். ஒரே படத்தில் வைத்துவிட்டார்கள்.
அவ்வ்வ்.. நெனெச்சேன்.. இன்னும் இந்த மாதிரி யாரும் எழுதலையேன்னு..... மொக்கையோ மொக்கை....
ReplyDeleteதங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா...
ReplyDeleteவாங்க
ReplyDeleteச்சின்னப் பையன்
அவர்களே....
உங்கள் கருத்துக்களுக்கும், செய்திகளுக்கும் உங்கள் துப்பாக்கிக்கும் நன்றி.
ஆமா தெரியாமத்தான் கேக்றேன் இந்த படம் புடிக்றவங்களுக்கெல்லாம் கற்பனை வத்திப் போச்சா?ஏன்தான் இப்படி அரைச்ச மாவையே அரைக்கிறாங்களோ
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுடியலை.. முடியலை
ReplyDeleteநல்லாத்தான போயிக்கிட்டு இருந்துச்சு
ReplyDelete//முரளிகண்ணன் கூறியது...
ReplyDeleteநல்லாத்தான போயிக்கிட்டு இருந்துச்சு
//
ரிப்பீட்டேய்ய்ய்..
நல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ்.. அப்படியே பில்லாவும் எழுதினீங்கன்னா நல்லா இருக்கும்
:)))))))))Super.. :))
ReplyDeleteநீங்க நல்லா எழுதி இருக்கீங்க....
ReplyDeleteநானும் எதோ எழுதி இருக்கேன்....
படிக்காதவன்: ஒரு மாறுபட்ட பார்வையில்!
//குற்றவாளியின் பேர் ஊர் கேட்டவுடன் பெரிய அண்ணன் தெரிந்து கொண்டவுடன் கண் கலங்கி மீண்டும் வக்கீலாக மாறுகிறார். கோர்ட் காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். ஃபோட்டோவில் இருக்கும் நின்று போன வாட்சைவைத்து உண்மை கொலை குற்றவாளிகளை கண்டறிகிறார்.//
ReplyDeleteஇது போல் நீதிபதி கலங்கும் மற்றொரு படம் தெரியுமா.
//இது போல் நீதிபதி கலங்கும் மற்றொரு படம் தெரியுமா.//
ReplyDeleteபார்க்க வேண்டியது http://kanavukale.blogspot.com/2008/12/3.html
இதுலே தனுசு எங்கே வாரார்?
ReplyDeleteHey...hey...hey......
வாங்க
ReplyDeletegoma
நசரேயன்
முரளிகண்ணன்
narsim
ஸ்ரீமதி
பழமைபேசி
புருனோ Bruno
நையாண்டி நைனா
அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி.
//ரிப்பீட்டேய்ய்ய்..
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க சுரேஷ்.. அப்படியே பில்லாவும் எழுதினீங்கன்னா நல்லா இருக்கும்//
ஏற்கனவே எழுதிவிட்டேன் ஐயா...
இணைப்பு தனி கட்டத்தில் உள்ளது. நான்கு பில்லாவையும் எழுதிவிட்டேன்
//ஏன்தான் இப்படி அரைச்ச மாவையே அரைக்கிறாங்களோ//
ReplyDeleteகொஞ்சூண்டு ஈசி பாருங்க
தம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).
ReplyDelete:)))))))))))
இதுவும் ஒரு அமிதாபின் படத்தை தமிழில் எடுத்ததே...படம் பெயர் குத்தார்.
ReplyDeleteY the other comments here showing older date? They are also "மீள்பதிவு?"
ReplyDeleteதல இந்த பதிவில உள்குத்து ஏதும் இல்லையே.
ReplyDeleteகலக்கல் விமர்சனம் தல்.
// ஸ்ரீதர்கண்ணன் said...
ReplyDeleteதம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).
:)))))))))))//
உங்களுக்குத் தெரியும்தானே..,
// ஸ்ரீராம். said...
ReplyDeleteஇதுவும் ஒரு அமிதாபின் படத்தை தமிழில் எடுத்ததே...படம் பெயர் குத்தார்.//
நன்றி தல..,
// ஸ்ரீராம். said...
ReplyDeleteY the other comments here showing older date? They are also "மீள்பதிவு?"//
தமிழ்மணத்திற்கு மறுசமர்ப்பணம்
// அக்பர் said...
ReplyDeleteதல இந்த பதிவில உள்குத்து ஏதும் இல்லையே.
கலக்கல் விமர்சனம் தல்.//
உள்குத்துக்கு ஏதும் வாய்ப்பு இருக்கிறதா தல..,