இப்பொழுதெல்லாம் நமது திரைப்படங்கள் உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்கின்றன. குறைந்தபட்சம் உலகத்தமிழ் மக்களின் சந்தைக்கு வருகிறது. சில நேரங்கள் மக்களின் ரசனை என்பதும் வியாபாரம் என்பதும் வேறு வேறு பாதையில் சென்று விடுகிறது. உலக சினிமா கலைஞர்கள் பல்வேறு விருதுகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏதோ நமக்குத் தெரிந்த சில நுடபங்களை சொல்லிக் கொடுத்து நம் மக்களை விருதுகள் வாங்கி குவிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை துவங்கப் படுகிறது. உங்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆலோசனைகளைப் பெற்று தமிழ் படத்துக்கு ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதே நமது லட்சியம்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதே அதன் கதையின் காலடியில்தான் இருக்கிறதாம். அதனால் நல்ல கதை வேண்டும். தமிழ் படம் எடுப்பதால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிற்போக்கான கிராமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கே இருக்கும் மூட நம்பிக்கைகள், மது மாது இன்னபிற பழக்கங்களை கதையின் அடிநாதமாக கொண்டிருக்க வேண்டும். அதன் தீமைகளைப் பற்றியும் திருத்துவதைப் பற்றியும் படம் எடுத்து விடக் கூடாது. அப்படி எடுத்து விட்டால் இயல்புக்கு மீறிய (லாஜிக் இல்லாத) படமாகக் கருதி நிராகரிக்க படும்.
விதவைகளைப் பற்றி ப்டம் எடுத்தால் அவர்கள் விரகதாபத்தால் வேதனைப் படுவதையும் குடும்பத்தார் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் எடுக்கவேண்டும். குடும்பத்தார் ஆதரவுடன் கடுமையாக உழைத்து குடுப்பத்தை முன்னேற்றுவதாக எடுத்தால் அது வெறும் வியாபார ரீதியான படமாகவே கருதப் படும். தவிரவும் மேலை நாட்டினர் நம்மை இவ்வளவு நல்லவர்களாகவே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். மது, மாது குடிப்பதை எதிர்க்கும் மனிதர்கள் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே கிடையாது என்ற கருத்துடந்தான் இந்தப் படங்களைப் பார்ப்பார்கள்.
கற்பினைக் காப்பாற்றுவதற்காக பல நாள் பட்டினி என்று படம் எடுத்தால் கொஞ்சமும் நம்பும் படி இல்லை என்று நிராகரித்து விடுவார்கள்.
முதியவர்களை ஒதுக்கித்தள்ளுவது போலவும் அவர்களை கொடுமைப் படுத்துவது போலவும் படம் எடுக்கவேண்டும் அவர்களுக்கு ஆதரவு தரவும் ஆள் இருக்கிறது என்பது படம் எடுப்பது தவிர்க்கப் படவேண்டும்.
பல ஆண்டுகளாக ஒரே ஆளை ஒருதலையாய் காதலிப்பது அதை உள்ளே வைத்துக் கொண்டு உருகுவது எல்லாம் பூ.... போன நூற்றாண்டிலேயே முரளி செய்துவிட்டார் என ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
கதாநாயகியை கொலை செய்வது என்று முடிவு செய்தால் ஒரு கத்திக்குத்து, தோட்டா உபயோகப் படுத்துவது உலகத்தரம் வாய்ந்த தமிழ் அல்லது இந்திய சினிமாவுக்கு அழகல்ல. கற்பழித்துதான் கொலை செய்யப் படவேண்டும். பலரும் சேர்ந்து கற்பழித்தால் அறிவுஜீவிகளால் பாராட்டப் படும் வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் பிச்சை எடுப்பது அவர்களை அடித்து கையைகாலை உடைத்து பிச்சை எடுக்க வைப்பது போன்ற நெஞ்சைக் கண்க்கவைக்கும் காட்சிகள் இருந்தால் கூடுதல் மரியாதை கிடைக்கும்.
குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஆண்மகன் பாத்திரமே படத்தில் இல்லாமல் இருப்பது கூடுதல் மதிப்பெண் தரும்.
ரத்தம் சிந்திக்கொண்டே இருப்பது , நிர்வாணமாகத்தோண்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றே தீர வேண்டும்.
நிற்பது, நடப்பது, உட்கார்வது, கதவைத்திறப்பது போன்ற காட்சிகள் மிக இயல்பாக எடுக்கப் படவேண்டும். கதவைதிறக்காமல் வீட்டுள் நுழையும் லாஜிக் இல்லாத படங்கள் நிராகரிக்கப் படும்.
நாயகனோ, நாயகியோ மோசமான குணமுடையவர்களாகக் காட்டுதல் நலம். கடைசியில் கொடுமையான முறையில் பிரிவது இன்னும் நலம்.
இதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கான யோசனைகள். உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.
ரத்தம் சிந்திக்கொண்டே இருப்பது , நிர்வாணமாகத்தோண்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றே தீர வேண்டும்.
ReplyDelete///
படங்களை
அக்கு வேறு
ஆணி
வேறாக
அலசுறீங்க
சுரேஷ்!!!
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!
தேவா......
பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்ன SUREஷ்,பொங்கலும் அதுவுமா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்களே!
ReplyDelete//
ReplyDeleteநிற்பது, நடப்பது, உட்கார்வது, கதவைத்திறப்பது போன்ற காட்சிகள் மிக இயல்பாக எடுக்கப் படவேண்டும். கதவைதிறக்காமல் வீட்டுள் நுழையும் லாஜிக் இல்லாத படங்கள் நிராகரிக்கப் படும்.
//
செம நக்கலு இது :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeletethevanmayam
நசரேயன்
ஹேமா
ஆளவந்தான் அவர்களே....
70-80களில் வந்த பாலச்சந்தர், ருத்ரய்யா ஆகியோரின் படங்கள் உங்கள் இலக்கணத்திற்குள் ஒரளவு அமைகின்றன!.
ReplyDeleteஉலகத்தரம் என்பது ஒரு நாட்டின், பண்பாட்டின், சமூகத்தின் பிரதிபலிப்பாக அமையவேண்டும். கூட்டல், குறைத்தல், மசாலா என்பதெல்லாம் உலகத்தரமாகாது.
நிச்சயம் தமிழ்ப்படங்கள் உலகத்தரத்திற்கு வரவேண்டும். காஞ்சீவரம் அது போன்ற ஒரு படம் என்றே நினைக்கிறேன். இன்னும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாங்க இளைய பல்லவன் அவர்களே..
ReplyDeleteபருத்துவீரன், மிருகம் போன்ற படங்களும் உலகத்தரத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன்..
முடியல தாங்கல....
ReplyDelete// ச்சின்னப் பையன் கூறியது...
ReplyDeleteமுடியல தாங்கல....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச்சின்னப் பையன் அவர்களே...
தலைப்புக்காக சொல்லியிருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இடுகைக்குத்தானே சொன்னீர்கள்..
//பருத்துவீரன், மிருகம் போன்ற படங்களும் உலகத்தரத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன்..//
ReplyDeleteநிஜம் தான் சுரேஷ் ...உலகத் தரம் என்பதை எதைக் கொண்டு நிர்ணயிக்கிறார்களோ?நிஜ வாழ்க்கை...இயல்பு வாழ்க்கை என்ற பெயரில் அதிக பட்ச சோகமும் வன்முறையும் தான் உலகத் தரமா?அப்படியானால் வாழ்வின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் உலகத தரம் போல?!!!
நோட் பண்ணிக்கிறேன்
ReplyDelete///பின்குறிப்பு:-
ReplyDeleteவில்லு படம் தோல்வி எனப்து போல் நிறைய இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சூடான இடுகைக்கும் அதிக வாசகர் பரிந்துரையுடனும் வருகின்றன. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.....................? அல்லது ..................?//
உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.
வாங்க
ReplyDeleteமிஸஸ்.டவுட்
முரளிகண்ணன்
T.V.Radhakrishnan
அவர்களே
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இவரின் ஆதங்கத்தையும் பாருங்க தல
ReplyDeletehttp://sakthivelpages.blogspot.com/2009/07/blog-post_7180.html
பதிவர்கள் அவரை கும்மியதையும் இந்த பதிவில் பார்க்கவும்.
http://sakthivelpages.blogspot.com/2009/07/blog-post_15.html
என்ன நடக்குது இங்கே.
//குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஆண்மகன் பாத்திரமே படத்தில் இல்லாமல் இருப்பது கூடுதல் மதிப்பெண் தரும்.//
ReplyDeleteநல்லாயிருக்கு தல.. நல்ல சினிமா ரசிகராயிருப்பீங்க போல.. பழனி சினிமா தியேட்டர்கள வெச்சு ஒரு இடுகை எழுதுங்களேன் ப்ளீஸ்..?
ஓ.கே.., அக்பர்
ReplyDeleteஓ.கே.., ஜெகநாதன்