உங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு வயதில் குழந்தைகள் இருக்கிறார்களா.... அவர்கள் என்றாவது ஒரு மூன்று மணி நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்களா,,,
நானும் பார்த்ததில்லை. அப்படி ஒரு முப்பது குழந்தைகளாவது அமர்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் வரக்கூடிய சூழல் எனக்கு ஏற்பட்டது.
அன்று வேலைநிமித்தம் பொழுதுசாயும் வேலையில் ஒரு தேநீர் சாலையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சாலைக்கு அருகில் ஒரு திரையரங்கம் இருந்தது. அந்த நேரத்தில் திரைப்படம் முடிந்து மக்கள் சாரைசாரையாகச் சென்று கொண்டிருந்தனர்.
இப்பொழுதெல்லாம் வெகு அபூர்வமாகவே திரையரங்கிற்குச் செல்கிறோம். அப்படியே போனாலும் இரு சக்கரவாகனத்தில் சென்று படம் முடிந்த உடனே கிளம்பிடுவோம். பள்ளியில் படிக்கும் காலத்திலும் இருசக்கரவாகனமே.. மிதிவண்டி. அதனால் இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.
அது ஒரு கிராமத்தில் உள்ள திரையரங்கு. கிராமம் என்றால் வாரம் ஒருமுறை சந்தை நடக்கும். அந்த அளவு சற்றே பெரிய கிராமம்தான். சனி, ஞாயிறுகளில் மதிய காட்சியுண்டு. தேநீர் அருந்திக் கொண்டே அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பார்வையில் பட்டவிஷயம் இதுதான். நிறைய தாய்மார்கள் தங்கள் ஒரு அல்லது இரு வயது குழந்தைகளுடன் வந்து படம் பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். எப்படியும் இருபது முப்பது குழந்தைகளாவது இருப்பார்கள். அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான்.
கண்டிப்பாக குளிர்சாதனவசதி செய்யப் பட்ட அரங்கம் கிடையாது அது. ஒரு சிலர் தங்கள் கணவருடன் வந்திருந்தனர். பொதுவாக குழந்தைகள் அரை மணிநேரம் அடங்கி இருந்தாலே அது ஆச்சர்யப்படத்தக்க விஷ்யம் தான். இவர்கள் எப்படி மூன்று மணிநேரம் குழந்தையுடன் படம் பார்த்திருப்பார்கள்.? உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரியுமா..
சாதாரணமாக கல்யாண வீடுகளிலோ, கோயில்களிலோ எப்படியும் குழந்தைகள் ஏதாவது ஒன்றாவது அழுது கொண்டும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த குழந்தைகள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின் திரைப்படம் விட்டுவரும் கூட்டங்களைப் பார்த்தால் எப்படியும் பல தாய்மார்கள் குழந்தைகளுடன் படம்பார்த்துவிட்டு வருகிறார்கள். எப்படி இது சாத்தியம்...? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்................
பொதுவாகக் குழந்தைகளுக்கு இடம் பொருள் ஏவல் நன்றாகத் தெரியும். அதிலும் ஏழைக் குழந்தைகள்... மிகவும் பக்குவப்பட்டவர்கள். எனக்கே கூட இரண்டு மூன்று மணி நேரம் காத்திருந்து, முறை வரும்போது ஓடி வந்து அம்மா அல்லது அண்ணன் எவராவது ஒருவரை சீமை எண்ணெய் வாங்க அழைத்துச் சென்ற அனுபவம் உள்ளது.
ReplyDeleteதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் என்றால் பாலூட்டி தூங்க வைத்து விடுவார்கள்
ReplyDeleteஒன்று/இரண்டு வயதுக் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கி விடுவார்கள்.
ReplyDeleteமின்னல் வேகத்தில் வந்து ஊக்கத்தையும் கருத்துக்களையும் சொன்ன பழமைபேசி மற்றும் புருனோ அவர்களுக்கு நன்றி.
ReplyDelete//தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் என்றால் பாலூட்டி தூங்க வைத்து விடுவார்கள்//
ReplyDeleteஅப்படித்தான் இருக்கும் சார். ஆனால் மூன்று மணி நேரம் மிக அதிகம்.
சரி......... அதுக்கு எதுக்கு சார் இந்தப்படம்.
ReplyDeleteகுமுதத்தில் கவுரவ ஆசிரியர் பதவி காலியிருக்குதாம் சார்.
//சரி......... அதுக்கு எதுக்கு சார் இந்தப்படம்.
ReplyDeleteகுமுதத்தில் கவுரவ ஆசிரியர் பதவி காலியிருக்குதாம் சார்.//
மிகவும் ரசித்த மறுமொழி :) :) :) அசத்திட்டீங்க சார்
தல
ReplyDeleteவேங்கிட் சாரின் கருத்துடன் நானும் ஒன்றுபடுகிறேன் :) :) :)
குழந்தை பருவத்தில் திரைப்படம் பார்க்க அழைத்து சென்ற என் சித்தி பசியாலும் இருட்டு பயத்தினாலும் சதா நான் அழ 5 வாழை பழங்களை கொடுத்து (அடைத்து) என்னை தூங்க செய்து விட்டதாக என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteபி.கு: அதற்கு பிறகு நான்கு நாட்கள் எனக்கு சரியான காய்ச்சலாம்.
சித்திக்கு செம திட்டு.
SUREஷ்,உண்மைதான்.நீங்கள் சொன்னபிறகு நானும் யோசித்துப் பார்கிறேன்.அதிசயம்தான் இன்றைய வளரும் குழந்தைகள்.சிலசமயம் வசதியான வீட்டுக் குழந்தைகள்.
ReplyDeleteஇப்போதெல்லாம் கார்ட்டூன் போட்டால்தான் சாப்பிடுகிறார்கள்.
குத்துப்பாட்டுக் கேட்டால்தான் தூங்குகிறார்கள்.ஆனால் நீங்கள் சொன்னதின்படி பார்த்தால் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றால்,இன்றைய குழந்தைகளின் மன வளர்ச்சி அபாரம்தான்.
சாதாரணமாக அன்று நாங்கள் வளர்ந்த விதம் "பேக்கு"கள் மாதிரி என்றுதான் சொல்ல வேணும்.
அப்படியல்ல ஹேமா. இது செயற்கை. அது இயல்பு..
ReplyDeleteவாங்க
ReplyDeleteசே.வேங்கடசுப்ரமணியன் அவர்களே..
வண்ணத்துபூச்சியார் அவர்களே..
ஹேமா அவர்களே...
//சரி......... அதுக்கு எதுக்கு சார் இந்தப்படம்.//
புரியாத விஷயமாக இருந்ததால் புரியாத படம் போட்டேன். ச்சும்மா..
இடுகையின் கடைசி வரிக்கும் புகைப்படத்திற்கும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது.(இது தான் அமைப்பியல் வாதமோ?)
ReplyDelete.நீங்கள் சொன்னபிறகு நானும் யோசித்துப் பார்கிறேன்.அதிசயம்தான்
ReplyDelete/////////////////////////////////
ReplyDeleteபிளாகர் சே.வேங்கடசுப்ரமணியன். கூறியது...
இடுகையின் கடைசி வரிக்கும் புகைப்படத்திற்கும் தொடர்பு உள்ளது போல் தெரிகிறது.(இது தான் அமைப்பியல் வாதமோ?)
January 4, 2009 11:05 AM
நீக்கு
பிளாகர் இயற்கை கூறியது...
.நீங்கள் சொன்னபிறகு நானும் யோசித்துப் பார்கிறேன்.அதிசயம்தான்
///////////////////////////////
ஆஹா... ஆஹா.........
ஒரு சர்வர் டவுன் ஆனா கூட பார்த்து விடலாம், ஒரு குழந்தையை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் :-)
ReplyDeleteகண்டிப்பாக குளிர்சாதனவசதி செய்யப் பட்ட அரங்கம் கிடையாது அது. ஒரு சிலர் தங்கள் கணவருடன் வந்திருந்தனர். பொதுவாக குழந்தைகள் அரை மணிநேரம் அடங்கி இருந்தாலே அது ஆச்சர்யப்படத்தக்க விஷ்யம் தான். இவர்கள் எப்படி மூன்று மணிநேரம் குழந்தையுடன் படம் பார்த்திருப்பார்கள்.? உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரியுமா.. ///
ReplyDeleteகுழந்தைகளைப்பற்றி நிறைய ரகசியங்கள் பெற்றோர்களுக்கே தெரியாது!!!!
தேவா.........
உங்க பதிவின் விஷயத்துக்கும் சிம்பு நயன்தாரா ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம் சார்?
ReplyDeleteசீதைக்கு ராமன் சித்தப்பா!!!
ReplyDelete-):....:)
பிறந்த குழந்தை சேர்ந்தப்புல ஒரு ரெண்டு மணி நேரம் தூங்க மாட்டேங்குது...நீங்க வேற?
ReplyDeleteஅட என்ன டாக்டரே ...
ReplyDeleteபடத்துக்கு போனோமா வந்தோமான்னு இல்லாம புதுசா யோசிக்க வெச்சுட்டீகளே????
சமுதாயப் பார்வைக்கு ஒரு சலாம் :-)
ஆமா இங்க எதுக்கு சிம்பு நயன்?
ReplyDeleteபாதிநேரம் தாய் குழந்தையை சுமந்தபடியே தியேட்டரின் நுழைவாசல் அருகே நின்றுக்கொண்டிருப்பதை சிலமுறை பார்த்திருக்கிறேன்.பாவம் தாய்மார்கள்.
ReplyDelete*** இந்த குழந்தைகள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின் திரைப்படம் விட்டுவரும் கூட்டங்களைப் பார்த்தால் எப்படியும் பல தாய்மார்கள் குழந்தைகளுடன் படம்பார்த்துவிட்டு வருகிறார்கள். எப்படி இது சாத்தியம்...?***
ReplyDeleteசுரேஷ்: தியேட்டர்லயும் பொதுவா குழந்தைகள் அழத்தான் செய்வார்கள்- ரஜ்னி படக்ங்களைத்தவித்து மற்ற படங்களில்! :-))))
//கிரி said...
ReplyDeleteஒரு சர்வர் டவுன் ஆனா கூட பார்த்து விடலாம், ஒரு குழந்தையை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் :-)
//
உண்மைதான் தல
//thevanmayam said...
ReplyDeleteகுழந்தைகளைப்பற்றி நிறைய ரகசியங்கள் பெற்றோர்களுக்கே தெரியாது!!!!
//
உண்மையான வார்த்தை
//ராம்சுரேஷ் said...
ReplyDeleteஉங்க பதிவின் விஷயத்துக்கும் சிம்பு நயன்தாரா ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம் சார்?
//
//சே.வேங்கடசுப்ரமணியன். said...
சீதைக்கு ராமன் சித்தப்பா!!!
-):....:)
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபழமைபேசி
கடைக்குட்டி
பிரியமுடன்.........வசந்த்
T.V.Radhakrishnan
வருண் அவர்களே..,
சுரேஷ்:
ReplyDeleteநீங்க ரஜினி மற்றும் விஜய் படம்னு என்னை திருத்துவீங்கனு நெனச்சேன் :)
குழந்தை தூங்கியிருக்கும் இல்லன்னா அதோட அப்போ அத தூக்கிட்டு வெளிய நடந்திருப்பாரு ;)
ReplyDelete//வருண் said...
ReplyDeleteசுரேஷ்:
நீங்க ரஜினி மற்றும் விஜய் படம்னு என்னை திருத்துவீங்கனு நெனச்சேன் :)
//
ண்ணா....,
//ச.பிரேம்குமார் said...
ReplyDeleteகுழந்தை தூங்கியிருக்கும் இல்லன்னா அதோட அப்போ அத தூக்கிட்டு வெளிய நடந்திருப்பாரு ;)
//
அப்போ= அப்பா
சரியா தல
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
செயற்கையான அமைதியா இருக்கும் நண்பரே,..
ReplyDeleteசினிமா டிக்கட் வாங்க சென்ற தாய் தன் கைகுழந்தை இறந்தவிட்டது தெரியாமலே படத்தையும் பார்த்து முடித்துவிட்டு வந்த செய்தியும் உண்டு...
பழமையார் கவலைக்கு பதில் சொல்லுங்க. :-))
ReplyDeleteநான் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பேர் சிறு குழந்தைகளோட படம் பார்க்க போவதை பார்த்துள்ளேன்.
கொடுமைதான் ஆ.ஞானசேகரன் சார்.
ReplyDelete//குறும்பன் said...
நான் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பேர் சிறு குழந்தைகளோட படம் பார்க்க போவதை பார்த்துள்ளேன்.
//
நான் சமீபத்தில் இதைக் கவனித்தேன்.
//பழமையார் கவலைக்கு பதில் சொல்லுங்க. :-)) //
உண்மைதான். குழந்தையின் தூக்கத்திற்கேற்ற சூழலை கொடுத்தால் மட்டுமே குழந்தையால் அமைதியாக தூக்கத்தைத் தொடரமுடியும்
குழந்தை தூங்குமோ இல்லையோ கண்டிப்பா திட்டு வாங்கியிருக்கும்.(சனியன் நிம்மதியா படம் பார்க்க வுடாம நை..நைன்னுன்டு)
ReplyDelete//பொதுவாக குழந்தைகள் அரை மணிநேரம் அடங்கி இருந்தாலே அது ஆச்சர்யப்படத்தக்க விஷ்யம் தான். இவர்கள் எப்படி மூன்று மணிநேரம் குழந்தையுடன் படம் பார்த்திருப்பார்கள்.? உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரியுமா..//
ReplyDelete3 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகள்ன்னா நிச்சயம் கொஞ்ச நேரம் படம் பார்ப்பார்கள்.அப்புறம் தூங்கி விடுவார்கள்.1 வயதுக் குழந்தைன்னா நிச்சயமா பால் மயக்கமா இருக்கலாம் அல்லது சினிமாச் சத்தம் அந்த வயசிலேயே புடிச்சிப் போகுதோ.இல்லையே லாஜிக் எங்கயோ உதைக்குதே இடையிடையே ஹொய் ஹொய்ன்னு கத்தாம அதெப்படி மூணுமணி நேரம் சும்மா இருக்கும்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteதண்டோரா சார், ராஜநடராஜன் சார்.