Friday, July 31, 2009

ரஜினிகாந்த்தின் சம்பளத்தை குறைப்பது எப்படி?

இன்றைய தினத்தந்தி பார்த்த போது மனோரமா ஆச்சி அழகாக ஒரு புள்ளி விவரம் கொடுத்திருந்தார்.

தமிழக மக்கள்த் தொகை ஆறு கோடி;
தமிழ்நாயகர்களின் சம்பளமோ பத்துக் கோடி.

எம்.ஜி.ஆர் வாங்கியது பதினொரு லட்சம்,
சிவாஜி வாங்கியது ஆறு லட்சம்.




இப்படி சம்பளம் வாங்கினால் எப்படி படம் எடுப்பது என்று கேட்டிருக்கிறார்.

.........................................................

தமிழ்நாட்டில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க இருக்கிறார்கள்,

(இன்னும் பச்சையாகச் சொன்னால் பதிவுலகிலிருந்து கூட நிறையப் பேர் வரக் கூடும்)

ராமராஜன், அப்பாஸ், முரளி, பாண்டியராஜன் போன்ற வெள்ளிவிழா நாயகர்கள் அவ்வளவு வாங்குவது போல் தெரியவில்லை. இவர்களது முகவரியை யாராவது ஆச்சிக்குக் கொடுங்களேன். மகிழ்ச்சியடைவார்.

.........................................................................

இந்த விழாவில் இயக்குநர் பேரரசுவும் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கே உரித்தான அரசியல் நெடி கலந்த பன்ச் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆட்சிகள் வரலாம். ஆனால் ஆச்சினா அது மனோரமா ஆச்சிதான்.


......................................... இது ஒரு மீள்பதிவு

மறக்காமல் தமிழ்மண ஓட்டு
தமிழீஷ் ஓட்டு
பின்னூட்டம் கொடுத்துவிட்டுப் போங்கள்

25 comments:

  1. அப்போதிருந்த மக்கள் தொகை, பண மதிப்பு அதையெல்லாம் ஆச்சி கணக்கில் எடுக்கவில்லையா?

    ReplyDelete
  2. வாங்க முரளிக் கண்ணன் சார்

    குறைந்த சம்பளத்தில் பணியாற்ற நிறையப் பேர் காத்திருக்கும் போது எதற்காக இவர்கள் பத்துக் கோடி சம்பளம் கொடுக்க வேண்டும்? அதற்கு காரணம் என்று ஒன்று இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே.

    எதற்காக புலம்ப வேண்டும்

    ReplyDelete
  3. பதிவு நெத்தியடி

    முரளி கண்ணன் பதிலு

    சுத்தியடி

    ReplyDelete
  4. வாங்க ஜமால்..'

    நட்புடன் அடித்ததற்கு நன்றி

    ReplyDelete
  5. சந்தசி சாக்கில் என் தலைவன் ராமராஜனை கிண்டலடிக்கும் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  6. //சந்தசி சாக்கில் என் தலைவன் ராமராஜனை கிண்டலடிக்கும் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்//

    வழிமொழிகின்றேன்

    ReplyDelete
  7. //தமிழ்நாட்டில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க இருக்கிறார்கள்,//

    நான்கூட ரெடி. :)))

    ReplyDelete
  8. //தமிழக மக்கள்த் தொகை ஆறு கோடி;
    தமிழ்நாயகர்களின் சம்பளமோ பத்துக் கோடி.
    //
    ஆச்சி எவ்வளவு வாங்கறாங்க?

    ReplyDelete
  9. ரஜினி படம் ஜப்பானில் கூட ஓடுகிறதல்லவா

    ReplyDelete
  10. வாங்க
    நான் ஆதவன்
    ஆ.ஞானசேகரன் அவர்களே..

    //சந்தசி சாக்கில் என் தலைவன் ராமராஜனை கிண்டலடிக்கும் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்//

    வழிமொழிகின்றேன்.

    ராமராஜன் வெள்ளிவிழா நாயகன் என்பது ஒரு சரித்திர உண்மை. அதை யாரும் மறுத்தல் இயலாது.

    ReplyDelete
  11. வாங்க கணிணி தேசம்

    எல்லோருடைய கருத்தும் அதுதான்

    ReplyDelete
  12. வாங்க புருனோ

    தங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. /தமிழ்நாட்டில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க இருக்கிறார்கள்,

    (இன்னும் பச்சையாகச் சொன்னால் பதிவுலகிலிருந்து கூட நிறையப் பேர் வரக் கூடும்)
    //

    :)

    கேரளவுலா மூணு கோடிக்கு அதிகமாக திரைப்பட பட்ஜெட் போடணும்னு தயாரிப்பாளர்கள் முடுவு பண்ணி இருக்காங்க!

    இங்க அப்படியா?

    கதையை நம்பி படமெட்டுக்கும் காலம் போயி, கதாநாயகர்கள், பெரிய அளவுல பட்ஜெட்னு இவற்றை நம்பி படமெடுக்கிறார்கள்! அப்புறம் எப்படி நடிகர்கள் சம்பளம் குறையும்!

    ReplyDelete
  14. வாங்க சிபி,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. சம்பளம் குறையணுமா? ஏன்? அப்ப யாருக்கு அந்த பணம் போகணும்னு விரும்பறீங்க?

    ReplyDelete
  16. வாங்க சிவாஜி த பாஸ்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    நீங்க சொல்றத்தான் எல்லோரும் சொல்றாங்க

    ReplyDelete
  17. தமிழன் எப்போதுமே பகட்டுக்கும், போலிக்கும் அடிமை என்பதையே இது காட்டுகிறது.

    ReplyDelete
  18. எந்ததுறை எடுத்தாலும் சம்பளப் பிரச்னை இருக்கிரது - அந்தக் காலம் அந்தக் காலம் என்றெல்லாம் பேசுவது காரியத்துக்கு ஆகாது. அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றால் கொடுத்துத்தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  19. இன்றுள்ள சந்தையின் அளவு,தயாரிப்பாளர்களின் லாபம் மற்றும் படமெடுக்க இன்று ஆகும் செலவு எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.என் தாத்தா காலத்தில் முப்பத்தி ஐந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு குடும்பமே வாழ்ந்திருக்கிறது.

    ReplyDelete
  20. ரஜினி, கமல் அவ்வளோ சம்பளம் வாங்குறாங்கன்னா, இந்த நிலமைய அடையுறதுக்கு அவுங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுக்காங்க இத்தன வருஷமா.. மேலும், அவுங்க மார்க்கெட் வேல்யு அப்படி..

    ReplyDelete
  21. // Anonymous said...

    தமிழன் எப்போதுமே பகட்டுக்கும், போலிக்கும் அடிமை என்பதையே இது காட்டுகிறது.//

    என்ன கொடுமை இது; இது போலி என்றால் ஹாலிவுட் கூட அப்படித்தானா நண்பரே..,

    இது பகட்டு என்றால் கூலியைக் கூட்டவே கூடாதா நண்பரே...

    ReplyDelete
  22. // cheena (சீனா) said...

    எந்ததுறை எடுத்தாலும் சம்பளப் பிரச்னை இருக்கிரது - அந்தக் காலம் அந்தக் காலம் என்றெல்லாம் பேசுவது காரியத்துக்கு ஆகாது. அவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றால் கொடுத்துத்தான் ஆக வேண்டும்//

    நன்றி ஐயா..!

    ReplyDelete
  23. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி; பாஸ்கர். பிரசன்னா...,

    ReplyDelete
  24. வெண்ணிலா கபடிக் குழு, சுப்ரமண்யபுரம் மாதிரிப் படங்கள் வெற்றி அடைவது ஒரு நல்ல டிரென்ட். கோடி கேட்கும் நாயகர்களை நாடிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் திறமையான இவர்களைத் தேடித் போக ஆரம்பிப்பார்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  25. // Jawarlal said...

    வெண்ணிலா கபடிக் குழு, சுப்ரமண்யபுரம் மாதிரிப் படங்கள் வெற்றி அடைவது ஒரு நல்ல டிரென்ட்.//

    பதினாறு வயதினிலே
    புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் வந்தபோது கூட அப்படித்தான் சொல்லியிருப்பார்கள் தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails