Wednesday, July 1, 2009

நண்பனின் மனைவி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

நண்பனின் மனைவி இரண்டாம் பாகத்திற்கு இங்கே செல்லுங்கள்

இது ஒரு மீள் பதிவு. மீள்பதிவாக இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன...,

7 comments:

  1. வலிமையைக் கொடுக்குறோம்.

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது. எத்ர்பார்ப்பு கூடி உள்ளது.

    ReplyDelete
  3. அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி

    தமிழ்பிரியன்,

    சந்துரு,

    புருனோ அவர்களே

    ReplyDelete
  5. விறுவிறுப்பான நடை,

    தொடரும் போட்டுட்டிங்களே.

    நம்ம பக்கம் வாங்க (தொந்தரவுக்கு வருந்துகிறேன்.)

    ReplyDelete
  6. //அக்பர் said...

    விறுவிறுப்பான நடை,

    தொடரும் போட்டுட்டிங்களே.//

    நன்றி தல..,

    மீள்பதிவு என்பதால் தொடர்ச்சியையும் நீங்கள் படித்துவிட முடியும்

    ReplyDelete
  7. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails