Monday, August 10, 2009

நன்றி உரையாடல் சிறுகதைப் போட்டி

உரையாடல் போட்டியில் கலந்து கொண்டது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. பொதுவாக போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எப்போதுமே நான் முடிவை எதிர்பார்ப்பதில்லை.

இதற்கு முன் நடந்த போட்டிகளின் போது மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து நமது பெயரைக் காப்பாற்றிக் கொண்டோம்.பொதுவாக முதல்நாளே எழுதி அனுப்பிவிடுவேன். உரையாடல் போட்டிக்கு மட்டும் எழுத சில நாட்கள் ஆகிக் கொண்டிருந்தது.

அவர்கள் கட்டுடைப்பு என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதில் கொஞ்சம் திகிலடைந்து போயிருந்தேன்.

இருந்தாலும் ஏதாவது ஒரு முடிச்சு வேண்டுமே என்று தேடி க் கொண்டிருந்த போது கிடைத்த முடிச்சு தான் விலைமகளே பரவாயில்லை.

உண்மையில் கதையென்றால் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் பல்ருக்கும் உண்டு. முடிச்சை அவிழ்க்காமலேயே ஒரு கட்டுடைப்பு செய்வோம் என்று எண்ணி அந்தக் கதையை எழுதிவிட்டேன்.

எழுதிய பிறகுதான் தெரிந்தது நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக சமூகப் பிரச்சனையைக் கையில் எடுத்து வந்திருக்கிறோம் எனப்து.

கொஞ்சம் மிரட்சி வந்திருந்தது. வழக்கமாக மென்மையான விஷயங்களை மட்டுமே எழுதி வரும் நமக்கு இது போன்ற ஒரு மிகப் பெரிய முடிச்சினை தாங்கும் வலிமை இருக்கிறதா என்று யோசிப்பதை விட வெளியிட்டு விடுவோம். பின்னர் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று வெளியிட்டுவிட்டேன்.

வெளியிட்ட பிறகு புருனோ சுட்டிக் காட்டிய பிறகே அந்தக் கதை உரையாடல் பாணியிலேயே எழுதப் பட்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிந்தது. கொஞ்சம் முன்னதாகவே கவனித்திருந்தால் நூறு சதவிகிதம் உரையாடலிலேயே வெளியிட்டு இருக்கலாம்.

அந்தக் கதை வெளியிடப் பட்ட பிறகு ஹிட் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டே போனது. தவிரவும் புதிதாக பத்து பின் தொடர்பவர்கள் கிடைத்தார்கள். அதையும் விட மின்னஞ்சல் மூலமாக நட்பானவர்களும் அதிகம்.

கதையின் முடிச்சை அவிழ்க்க நினைத்தால் அது மிகப் பெரிய புத்தகமே எழுத வேண்டிய கட்டாயத்துள்ளாகும் வாய்ப்பே தெரிந்தது. தவிரவும் அது மிகப் பெரிய எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியம். யார் அதை எழுதினாலும் அவர் மிகப் பெரிய எழுத்தாளர்தான்.

உண்மையில் இட ஒதுக்கீடு என்பது மன் அளவில் ஒரு மாற்றம் ஏற்படுத்திக் கொடுக்கப் பட ஒரு விஷயம்.

பிற்படுத்தப் பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெருவதை ஏற்றுக் கொள்பவர்களில் பலரும், தாழ்த்தப் பட்டவர்களில் இட ஒதுக்கீடு பெருபவர்களை கொஞ்சம் ஏளனமாகவே பார்க்கிறார்கள். இது பல ஆண்டுகளாகவே இருக்கிறது.
முக்கிய தேர்வுகளில் கலந்து கொள்ளும் பலரும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து உங்களுக்கு தனி ஒதுக்கீடு இருப்பதால் சுலபமாக தேர்வாகிவிடலாம் என்று சொல்வது மிக சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தமிழ்கத்தில் பிற்படுத்தப் பட்டவர், மிகப் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதை கொஞ்சம் உணராதது போல பேசுவார்கள்


( இட ஒதுக்கீடு பற்றிய எனது கருத்துக்களை மரு.புருனோ அவ்ர்களின் பதிவின் பின்னூட்டங்களாகக் கொடுத்துள்ளேன். அதை அருள்கூர்ந்து வாசித்து விடுங்கள். ஒரே அந்தஸ்த்தில் உள்ள ஆசிரிய அல்லது அலுவலகப் பணியில் உள்ள நபர்கள் தங்களின் பெண்களின் திருமணத்தை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். அப்போது அவர்களது சமுதாய அந்தஸ்து, நிலை, மற்றும் பணச்சுழற்சி செய்யும் சக்தி ஆகியவை சமுதாயத்தைப் பொறுத்தே அமைகிறது என்பது புலப் படும். இதில் புரட்சித்திருமணங்களை ஒதுக்கிவிட்டுப் பாருங்கள்)

இது போன்ற ஒரு சூழலில் நான் எடுத்த முடிச்சு சில சம்பவங்களை பதிவு செய்யவே முடிந்தது. சில கதைகளுக்கு சம்பவங்களின் தாக்கமே போதும் என்ற நிலைப்பாடுடன் அந்தக் கதை அமைந்தது. குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள் போல. இதில் எல்லாம் முடிச்சுக்களை அவிழ்த்து சுபமாக முடிக்க வேண்டிய அவசியமில்லை. அவலங்களைப் பதிவு செய்தாலே போதும். எந்த அளவு மக்களுக்கு உறைக்கிறதோ அந்த அளவு படைப்பாளிக்கு வெற்றி.


நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் கதையின் முடிவினை தலைப்பு சொல்லிவிட்டதால் கதையின் விறுவிறுப்பு கொஞ்சம் தடைபட்டாற்போல் இருக்கிறது என்றார். உண்மையில் கதையின் தலைப்புதான் தொடக்கம். அந்தத் தொடக்கத்தில் சில் சம்பவங்கள் அதில் வரும் கதாபாத்திரங்கள் தாழ்த்தப் பட்டவரை ஏற்கத்தயாராக இல்லை. அந்த பெண்ணைக்கூட ஒருவேளை தாழ்த்தப் பட்டவாளாய் இருந்தால் ஏற்க தயாராக இல்லை. அந்தப் பெண்ணின் குணங்களைக்கூட கடுமையாக விமரிக்கும் அந்தக் கூட்டம் அந்தப் பெண்ணின் ஜாதியினைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு மேலும் கிளராமல் விட்டுவிடுகிறார்கள். தாழ்த்தப் பட்டவனை தவிர்க்க நினைத்து வென்று விடும் அந்தக்கூட்டத்தினை பதிவிட நினைத்து அதில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

அந்தப் போட்டிக்கு என்றில்லாமல் தனியனாக வலைப்பூவில் இடம் பெற்றிருந்தால் வழக்கமாகப் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அதைப் படித்திருப்பார்கள். பலருக்கும் கொண்டு சேர்த்ததில் உரையாடல் போட்டி அமைப்பாளர்களுக்கு நான் பெரிய அளவில் நன்றி சொல்லக் க்டமைப் பட்டிருக்கிறேன்.

வெறும் பொழுது போக்கு எழுத்தாளனாக(?) மட்டும் சக நண்பர்களின் எண்ணத்தில் இருந்தவனை கடுமையான எழுத்துக்களை எழுதவும் எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தை விதைத்த கதையாக அமைந்தது.

தவிரவும் பின்னூட்டத்திற்குப் பதில் சொன்னால் அந்தக் கதையின் வீரியம் குறைந்து விடுமே என்ற எண்ணத்தில் ( சரியா தவறா தெரிய்வில்லை)
பின்னூட்டங்களை அப்படியே விட்டிருந்தேன். பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நன்றி நன்றி என்று உரக்கக்கூவிக் கொள்கிறேன்.

===========================================================

போட்டியின் முடிவு பற்றிய எனது எண்ணங்கள்

பொதுவாக போட்டியின் முடிவுகள் என்பது நடுவர்களின் முடிவுதான். அவர்களின் ரசனையின்படி எடுக்கப் படும் முடிவுதான். 250 கதைகளில் தேர்வு செய்தல் என்னும்போது முற்றிலும் ரசனை மாறுபட்ட பத்து எழுத்தாளர்கள் அனைத்து கதைகளையும் படித்து எடுத்தால் ஓரளவு அதுவும் ஓரள்வுதான் பெரும்பாலானோரை திருப்தி செய்ய முடியும். நம் எழுத்தாளர்கள் ஒரு மணிநேர நிகழ்ச்சியில் கல்ந்து கொள்ளவே பணம் நிறைய கேட்பார்கள். உண்மையில் நமக்காக நேரம் செலவிடுவதால் நாமும் கொடுக்கத்தான் வேண்டும். தானே கைக்காசு போட்டு நடத்தப் படும் அமைப்பால் அப்படி வெளி ஆட்களைப் போட்டு தேர்ந்தெடுப்பது என்பது கட்டுபடியாகாத ஒரு செயல். தவிரவும் நடத்துபவர்களுக்கு என்று ஒரு கவுரவம் தேவை அது அவர்கள் நடுவர்களாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். அவர்களும் பிரபல எழுத்தாளர்கள்தான்.

எனவே உரையாடல் போட்டியின் முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டு இனிமேலும் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஊக்கப் படுத்த வேண்டும்

12 comments:

  1. போட்டியின் முடிவு பற்றிய எனது எண்ணங்கள்]]

    உங்களின் இந்த எண்ணங்கள் அருமை.

    ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க தல.., வருகைக்கும் அதிவேக கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. //உரையாடல் போட்டியின் முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டு இனிமேலும் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஊக்கப் படுத்த வேண்டும் ///

    நெசமாலும் உண்மை

    ReplyDelete
  4. ;)

    சிறப்பான கருத்துக்கள்!

    ReplyDelete
  5. //எனவே உரையாடல் போட்டியின் முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டு இனிமேலும் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஊக்கப் படுத்த வேண்டும் //
    கண்டிப்பா தல

    ReplyDelete
  6. நானும் வாழ்த்துறேங்க!!!!

    ReplyDelete
  7. @ஆ.ஞானசேகரன் நன்றி தல

    @சென்ஷி நன்றி தல

    @ஜெட்லி நன்றி தல

    //குறை ஒன்றும் இல்லை !!! said...

    வாழ்த்துறேங்க!!!!
    கார்த்திக் said...

    நானும் வாழ்த்துறேங்க!!!!//

    நன்றிங்க ஆனா எதுக்குங்க!

    ReplyDelete
  8. உங்களுக்கு பரிசு கிடைக்கும்ன்னு எதிர்பார்த்தேன் தல ப்ச்...

    ReplyDelete
  9. // நடத்துபவர்களுக்கு என்று ஒரு கவுரவம் தேவை அது அவர்கள் நடுவர்களாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். அவர்களும் பிரபல எழுத்தாளர்கள்தான்.//

    வித்தியாசமான, நான் ஏற்றுக்கொள்ளும் சிந்தனை

    ReplyDelete
  10. கதை படிச்சேன். அங்கியே பின்னூட்டமும் போட்டாச்சு! கதை சூப்பர் தல! //போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எப்போதுமே நான் முடிவை எதிர்பார்ப்பதில்லை// தல ​போல வருமா? //மிகப் பெரிய எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியம். யார் அதை எழுதினாலும் அவர் மிகப் பெரிய எழுத்தாளர்தான்// இதெல்லாம் அப்படியே ஒரு ப்ளோவுல வர்றதுதானே? //பிற்படுத்தப் பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெருவதை ஏற்றுக் கொள்பவர்களில் பலரும், தாழ்த்தப் பட்டவர்களில் இட ஒதுக்கீடு பெருபவர்களை கொஞ்சம் ஏளனமாகவே பார்க்கிறார்கள்// ​ரொம்ப சரி. நல்ல தீர்க்கமான கருத்து. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. போட்டி பற்றிய தங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails