அந்த சூடான காலகட்டத்தில் அந்தக் கிராமத்தின் ஒரு பெரிய தென்னந்தோப்பின் நடுவில் சில முக்கியதலைகள் அமர்ந்திருந்தன. இந்நாள் ஆளுங்கட்சியின் உள்ளூர் தலைவர், பழைய ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி, மற்றும் வருங்கால ஆளுங்கட்சியின் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் அந்த ஊரின் பரம்பரைப் பணக்காரர்கள் சிலரும் நடுராத்திரில் இளநீரை ஊறுகாய் தொட்டுக்கொண்டு குடித்துக் கொண்டிருந்தனர்.
ஏம்ப்பா நம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவர இப்படி பண்ணிப் போட்டானுங்களே
நானும் எவ்வளோ முயற்சி பண்ணினேன்.
மாத்தவே முடியாதுன்னு சொல்லிடானுக. இந்த வருஷம் இது ரிசர்வ் சீட்தான்.
காலனிக் காரனுகளுக்கு ஒதுக்கிட்டானுக
என்னப்பா.., இது அநியாயம்.., பரம்பரை பரம்பரையா நாம ஆண்டு அனுபவிச்ச பூமி. இவனுகளுக்கு என்ன தெரியும்? இதுல தலைவர் நாற்காலில இவனுகள எப்படி உட்கார வைக்கறது?
அதெல்லாம் இப்ப பேசி ஒரு பலனும் கிடையாது. இந்த தேர்தலை என்ன பண்றது?
கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி மாதிரி நாமும் தேர்தலை புறக்கணிச்சறலாம்.
அப்படியெல்லாம் செய்ய முடியாது தம்பி. இப்பெல்லாம் அவனுகளே யாரையாவது நிறுத்தி அப்புறம்தான் ராஜினாமா பண்ணச் சொல்றானுக
அப்ப நாமும் அப்படியே பண்ணுவோம்.
டேய், நம்மூர்ல அவனுகளும் பாதிக்கு மேல இருக்காணுக. நெரயாப் பசங்க படிச்சிருக்காணுக.., போலீஸ் நாலுபேர் இருக்காணுக. வாத்தியார் மூனுபேர் இருக்காணுக, பேங்கில ரண்டு பேர் இருக்காணுக, மிலிட்டரிக்கு பத்து இருபது பேர் போயிருக்காணுக, நாம சொல்றதெல்லாம் அவனுக கேட்க மாட்டாணுக
ஏதாவது செஞ்சுதான் நாம ஜெயிக்க முடியும்.
நாம நிக்கவே முடியாது. அப்புறம் எங்க ஜெயிக்கறது. எங்க கட்சில வெங்காய வெடிக்கு சீட் குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க...
யாரு, உங்கிட்ட எடுபிடியா இருப்பானே அவனா..
அவனேதான். இப்பவும் நான் உட்காருன்னா உட்காருவான். நில்லுன்னா நிற்பான்.
ஆனா ஜெயிச்சா நீ சொல்றதா கேட்பானா?
அதாண்ணே பயமாயிருக்கு, அவனுக்கு சீட் கிடைக்காம பண்றதுக்கு நான் எவ்வளவோ முயற்சி பண்ணிணேன். அவனுக்கு என் பேரச் சொல்லித்தான் சீட்டே கொடுக்கறானுக. நேரடியாத்தடுத்தாத்தான் உண்டு. அப்பிடிச் செஞ்சா பேர் கெட்டிடுமேன்னு பயமாயிருக்கு
பேசாம நீங்க அவனத் தோற்கடிச்சிருங்க
கஷ்டம்டா.., அவனுக்கு ஏற்கனவே ஆனாவுக்கு ஆவன்னா, கானாவுக்கு காவண்ணா போட்டு பேச வேற சொல்லிக் கொடுத்திருக்க. அவன் நின்னா காலனி ஓட்டுப் பூறா அவனுக்குத்தான்
நான் எங்க சொல்லிக் கொடுத்தேன். கூடவே எடுபுடி வேலை செஞ்சிட்டு இருந்தான். அவன்பாட்டுக்கு கத்துக்கிட்டான். சரி.., அவஞ்சாதி ஓட்டு கிடைக்கும்னு தம்பி, தம்பின்னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப அத வச்சே அவனுக்கு சீட்டு கிடைச்சிடும் போல இருக்கே..
ஏண்ணே... நாம வேற ஒருத்தன பினாமியா நிற்க வச்சா ..
வைக்கலாம்டா.., ஆனா அவனும் ஆளுகள சேத்திக்கிட்டு நம்மள மதிக்காம போயிட்டா..
மதிக்கறது இருக்கட்டும்ணே., நாமெல்லாம் மெம்பரா உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். அவனுக தலைவரா உட்கார்ந்தா எப்படின்னா..,
இப்போது பெரியவீட்டுக்காரர் பேசினார் " அதுக்குத்தான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பேசாம வசந்தாவ நிறுத்தலாம்னு இருக்கேன்"
வசந்தா பெரியவீட்டுக்காரரின் சின்னவீடு
அண்ணே அவ கீழ்சாதிக்காரியாண்ணே..
அது உனக்கெதுக்கு? அவ சாதிச் சான்று வச்சிருக்கா.., நாம சொன்னாக் கேட்பா..
நாம இல்ல.., நீங்கசொன்னா கேட்பாள்..
அட நாமெல்லாம் வேறயாடா? ஒரு வீட்டுப் பங்காளிக தானே?
அது வந்துண்ணே..,
டேய் காலணிக்காரன் உட்கார்ரதுக்கு இவ பரவாயில்லடா.., பொம்பளக்கு கொடுக்கறோம்னு சொன்னா பெண்கள் சுய உதவிக்குழு ஓட்டெல்லாம் இவளுக்கு விழுந்திடும். அப்புறம் உங்க காட்டுல வேளை செய்யவணுக எல்லாரும் ஓட்டுப் போட்டா இவ ஜெயிச்சிடுவாடா..,
உங்க கட்சில எல்லாம் ஆள நிறுத்தினா அந்த ஓட்டும் பிரியும் நம்ம சனத்துக்கிட்டச் சொல்லி வச்ந்தாவுக்கு ஓட்டுப்போடச் சொல்வோம்டா.., அவ கண்டிப்பா ஜெயிச்சிருவா.., சரி சரி எல்லாரும் சாப்பிடுங்க சொல்லிவிட்டு பெரிய வீட்டுக்காரர் இடத்தை விட்டு நகர்ந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் அவரது வம்சம்தான் இந்த ஊரை ஆட்சி செய்ததாம். அதனால் அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது..
சின்ராசு ஆரம்பித்தான்.., ஏண்ணே வசந்தாவப் போயி
ஏண்டா
அண்ணே
பெரியவீட்டுக்காரருக்கு சின்னவீடா இருந்தாக் கூட பரவாயில்லண்ணே..,
பத்து வருஷத்துக்கு முன்னாடி ரோட்டுல சுத்திகிட்டு இருந்தான்னே.., அவளப் போயி தலைவராக்கி.. இளநீர் பாணம் கொஞ்சம் , ஊறுகாய் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே புலம்பினான் சின்ராசு.
டேய் உனக்கு ரோட்ல நின்னு பார்ட்டி புடிச்சதுதான் தெரியும்.., அதுக்கு முன்னாடி கடலை மிட்டாய்க்கெல்லாம்..,, அவ நாடி நரம்பு எல்லாம் இதுதாண்டா
ரொம்ப காலமா அவளத் தெரியுமாண்ணே.., நெசமாவே அவ கீழ்சாதியாண்ணே..
யாருக்குடா தெரியும். அவ அம்மா இந்த தொழில்தான் பார்த்தாள். இவளும் வந்துட்டா.. அவ கலரப் பார்த்தியா.., வடக்கத்தி ஆளாட்டம்
ஏண்ணே.., வடக்கண்ணாலும் என்ன சாதிண்ணே..,
டேய்.. ரொம்ப பேசாத . அவுக நமக்கு தலைவர் ஆகப் போரவங்க..
அந்தக் காலத்தில அவ எப்படி யிருந்தா இப்ப என்னடா? தலைவர் சொல்லிட்டாரு.. அவளுக்கு ஓட்டுப் போடுவோம். #****%^& நாயிக போய் தலைவர் நாற்காலில உட்கார்ரதுக்கு இவ உட்கார்ரது எவ்வளவோ பரவாயில்லடா..
==========================================================
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
போட்டியில் தெரிவாக வாழ்த்துகள்!
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள் சுரேஷ் :)
ReplyDeleteசுரெசு ! துணிச்சலான பதிவு!!
ReplyDeleteநினைத்ததை எழுத்தாக்கும் மனத்திண்மை உங்களிடம் உள்ளது. இந்தக்கதைக்கு பரிசு-- நானே உங்களுக்கு அளித்துவிட்டேன்!!
ReplyDeleteஇப்பிடியா தல ஆள் எடுப்பாங்க ????
ReplyDeleteஅவிங்களுக்கு ஜெயிச்சா போதுமா ???
கருமம் கருமம்...
எல்லாம் அந்த அச்சடிக்கப்பட்ட நோட்டுக்காக.....
நானும் சக போட்டியாளர் அந்தப் போட்டிலன்னு சொல்றதுக்கே சந்தோசம்..
ReplyDeleteஜெயிக்க வாழ்த்துக்கள்... :-)
என்ன உலகமடா சாமி.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
காரசார(?)மான மீட்டிங் போல
ReplyDeleteநல்லாயிருக்கு தல
வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
என்ன சொல்றது.......... சாதீயத்துக்கு சாட்டையால் விளாசியது போல
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு
you should have finished the story with Vasantha became the Panchayat leader and joined Colony people...
ReplyDeletebut happy endings are not realistic...
சிறுகதை நடை ரொம்ப அருமை.கூடவே நிஜத்தையும் கொண்டு வர்ற மாதிரி வார்த்தைகள்.வாழ்த்துக்கள் வெற்றி பெற.
ReplyDeleteகதை நடை அருமை தலைவரே....
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்....
வாசிக்கும் போதே நினைத்தேன், போட்டிக்கு சரியான சிறுகதை என்று
ReplyDeleteஉரையாடல் போட்டிக்கு உரையாடலிலேயே கதை கொண்டு சென்று விட்டீர்கள்
வாழ்த்துக்கள் தல
வாழ்த்துகள் நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteகண்டிப்பா பரிசு உண்டு மருத்துவர் ஐயா
ReplyDeleteவெற்றி நமதே......
ReplyDeleteநீங்க எடுத்துக்கிட்ட கரு ரொம்ப முக்கியமான கரு சுரேஷ்..வெற்றி பெற வாழ்த்துக்கள்....
ReplyDeleteஎன்னத்த சொல்றது:-((
ReplyDeleteகதை சூப்பரா இருக்கு...
ReplyDeleteWishes..!
ReplyDeleteஒளிவும் இல்லை மறைவும் இல்லை..
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள்..
This comment has been removed by the author.
ReplyDeleteவித்தியாசமான கதை தேர்வு. போட்டியில் கலக்குங்கள் சுரேஷ்.
ReplyDeleteரஃபிக் ராஜா
காமிக்கியல்
நல்லா இருக்கு...
ReplyDeleteஒரு சந்தேகம்:- இள நீர் குடிக்கறதுக்கு எதுக்கு ஊறுகாய் தொட்டுக்கணும்??
பல சமுதாய அவலங்களை ஒரே கதையில் சலவைக்குப் போட்டிருக்கிறீர்கள்! சபாஷ் தல! இது ஓல்ட் மங்க் கலந்த இளநி!
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteguddu nallach chonneenga idhudhaan unmaiyaana sananaayagamungoov.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே..!
ReplyDelete