Tuesday, January 19, 2010

ஒரு கப் காஃபியும் பழைய புடவையும்

ரேஷ்மாவிற்கு எப்படி இதை கணவனிடம் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

கணவனின் பேச்சை மீறி எதையும் செய்ய யோசிக்கும் சராசரிப் பெண்ணாக அவள் இருந்துவிட்டாள். இருந்தாலும் கணவன் தடுத்தாலும்கூட லட்சுமி பாட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அதுவும் லட்சுமி பாட்டியே ஏதாவது பழைய புடவை கொடு என்று கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை.  பார்த்துவைப்பதாக சொல்லி அனுப்பி விட்டாள்.


லட்சுமி அந்த பகுதியில் வசிப்பவர்தான். தெருவில் வசிப்பவர்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகள் செய்து வருவார். அந்த பகுதி மக்கள் கொடுக்கும் கொஞ்சம் உணவு, கொஞ்சம் உணவுகளில் காலம் தள்ளி வந்தார்.


ஒரு முறை லட்சுமி பாட்டிக்கு பழைய சோறு கொடுக்கும்போது ரேஷ்மாவின் கணவன் பார்த்துவிட்டு தடுத்துவிட்டான். அன்று பெரிய சண்டை. இன்னொரு நாள் பாட்டியிடம் ஒரு ஷாம்பு சாஷே வாங்கி வரச் சொன்னபோது அப்படித்தான், ஷாம்பு போடாவிட்டால் தலையென்ன கெட்டா போய்விடும் என்று சண்டை. 


சில நாட்களுக்கு முன்கூட லட்சுமி பாட்டிக்கு ஒரு கோப்பை காஃபி கொடுத்திருந்தாள். அப்போதுதான் ரேஷ்மாவின் கணவன் வந்து கோபமாகப் பார்த்துவிட்டுச் சென்றான். நல்லவேளை சண்டை இல்லை என்பதே நிம்மதிப் பெருமூச்சாக இருந்தது.


இருந்தாலும் லட்சுமி பாட்டியின் உதவி இல்லாமல் காலம் தள்ளுவது என்பது அந்தத் தெரு ஆட்களுக்கு சிரமான செயல்தான். அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள் சிறிது நேரமானால் கூட பக்கத்துவீட்டில் சொல்லி லட்சுமி பாட்டியை துணைக்கு இருக்கச் சொல்வார்கள். நம்பகமான பாட்டிதான் அவர்.


மாலை நேரத்தில் ஆரம்பித்தாள் ரேஷ்மா.


லட்சுமி பாட்டி பழைய புடவை ஏதாவது இருந்தா கேட்டாங்க.., நானும் தர்ரேன்னு சொல்லிட்டேன். சொல்லிவிட்டு கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


லட்சுமிப் பாட்டியே கேட்டாங்களா..,


ஆமா அவங்களே கேட்டாங்க..,


கொடுத்துட்டயா.., இனித்தான் கொடுக்க போறீயா..,


சும்மா கிடக்கறதுதானே.., கொடுக்கலாம்னு இருக்கேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கொடுக்கலாம்னு...., கொஞ்சம் எரிச்சலால்தான் சொன்னாள். இதைக்கூடவா மறுப்பார்கள்.


அவங்க கேட்டாங்க அப்படிங்கறதுக்காக பழைய புடவை கொடுத்துடாத.., 


ரேஷ்மாவுக்கு கோபம்தான் வந்தது.


புதுசாவே இரண்டு புடவை எடுத்துக் கொடுத்துவிடு. அந்த காலத்தில் பெரிய வாழ்வு வாழ்ந்தவங்க அவங்க.
அவங்களுக்குப் போய் பழசெல்லாம் கொடுத்தா நமக்குத்தான் பாவம் வரும்.  இந்தத் தெருவே அவங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. பாவம் பசங்க சரியில்லை. பாட்டி இப்படி இருக்காங்க.


ரேஷ்மாவுக்கு என்னவோ தெரு மக்கள் இன்றும்கூட லட்சுமிப் பாட்டிக்காக கடன் பட்டிருப்பதாகவே பட்டது.

12 comments:

  1. தல மீ த ஃபர்ஸ்ட்டு!

    கதையின் முடிவை எதிர்பார்த்தே படித்தேன். என்ன திடீர்னு சிறுகதையில் இறங்கி விட்டீங்க? வழக்கமாக தொடர் கதை தானே உங்க வழக்கம்.
    தொடருங்கள் தல.

    ReplyDelete
  2. வோட்டு போட்டாச்சு தல.

    ReplyDelete
  3. ஒரு கப் காபி கிடைக்குமா ...

    ReplyDelete
  4. குட்டி கதை அருமையா இருக்கு அண்ணே..வாழ்த்துகள்...இதே போல் கதை நான் நேரே பார்த்து அனுபவபட்டு இருக்கிறேன்...நியாபகம்...

    ReplyDelete
  5. மனதை தொட்ட கதை. மேலோட்டமாக படித்தேன். ஒரு முறை படித்தவுடன் இதய கதவை யாரோ தட்டுவது போல இருந்தது. மீண்டும் ஒருமுறை படித்தேன். இதயகதவு திறந்தது. மீண்டும் ஒருமுறை படித்தேன். பெரியவர்களின் நினைவில் கண்கள் பணித்தது.

    ReplyDelete
  6. சூப்பர் சுரேஷ் :-)

    ரொம்ப நல்ல கருத்து, பொதுவாகவே மாறுபட்ட சிந்தனையை புரிந்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.

    ReplyDelete
  7. தல சிறந்த கதை. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் சுவாரஸ்ய மான சிறுகதை கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  8. அப்பாடி...இங்க சொடுக்கவும்..அங்கே கிளிக்கவும் எல்லாம் இல்லாம ஒரு சிறுகதை..!

    ஆனால் நிஜமாகவே இப்படி ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பாட்டியை மதுரையில் எனக்குத் தெரியும் டாக்டர்..பெரிய பாடகரின் உறவினர் என்பார்கள்...

    ReplyDelete
  9. பர்ஸ்ட் கிளாஸ். நிஜமான மனித நேயம் பல சமயம் புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கும்... தப்பாக் கூட புரிஞ்சிப்பாங்க. முக்கியமா இந்தக் கதையோட un predictable last லைன் punch க்கு hats off!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  10. வருகை புரிந்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் நன்றி..,

    ReplyDelete
  11. வருகை புரிந்து கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails