Friday, February 5, 2010

தேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசியம்

வழக்கம் போல் தமிழ்மணத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது எலிக்குட்டியை நகர்த்தும்போது  எதோ ஒரு இடத்தில் அழுத்தப் பட்ட உடன் ஒரு புது பக்கம் விரிந்துவந்தது.

அப்போது ஒரு உண்மை புலப்பட்டது. இது எனக்குத்தான் புதியதா? இல்லை நிறைய பேருக்கு இது தெரியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் எனக்குப் புதிதாக இருந்த காரணத்தால் இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.

================================================

எந்த நிறம் அழகு?   எழுதியவர் தேவன்மாயம்



thamizmanam


இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



thevanmayam geraldindia sridharrangaraj ktmjamal abdmalick NANDUnorandu harinicibi sureshpalani balasee Kailash
=================================================================

வாசகர் பரிந்துரைப் பகுதியில் உள்ள மேல் நோக்கிய கட்டைவிரலின் மேல் எலிக்குட்டியை வைத்து அழுத்தம் கொடுக்க இப்படி ஒரு கட்டம் விரிந்து அவருக்கு யார் யார் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.

இதில் எதிர் ஓட்டுப் போட்டது யார் என்பது தான் தெரியவில்லை. அதைத் தெரியப் படுத்தும் தொழிற்நுட்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

18 comments:

  1. தமிழ்மணம் தான் சொல்லணும், இல்லை எதிர் ஓட்டு போட்டவங்க தான் சொல்லணும்

    ReplyDelete
  2. எதிர் வாக்கு போடறவங்களும் தெரிஞ்சதுன்னா யாருக்குமே எதிர் வாக்கு விழாதே.....

    ReplyDelete
  3. தெரியுதுன்னு யாரோ சொன்னாங்களே??

    ReplyDelete
  4. சமீபத்தில் தான் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளனர் என்று எங்கேயோ படித்தேன்

    ReplyDelete
  5. ஆகா.. விரிகிறதே.. தெரிகிறதே.. எனக்கும் மறக்காமல் எதிர்வாக்கு போடுவோரைத் தேடப் போறேன்..

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு சுரேஷ்.

    எதிர் ஓட்டு என்ன பாகிஸ்தானா போட போகிறது!, எல்லாம் நம்ம நண்பர்களாத்தான் இருக்கும் விடுங்க.

    ஆனா, எப்படி பார்ப்பது என்று தெரிந்ததும் மறக்காம எனக்கும் சொல்லி கொடுங்க :-)

    ReplyDelete
  8. ஆஹா! நல்ல மேட்டரா இருக்கே

    இனி நிறைய போலி ஐடிகள் உருவாகும்

    நம்ம பேர்லையே கூட உருவாகும்.

    எப்படியோ பிரபலமானா சரிதான் ;)

    ReplyDelete
  9. ஆஹா ... இது நல்லா விஷயமாவுல்ல இருக்கு ...

    ReplyDelete
  10. //அதைத் தெரியப் படுத்தும் தொழிற்நுட்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். //

    இதற்கு இப்படி ஒரு குதர்க்கமான தலைப்பு????

    டாக்டர் சரியில்ல,.. ஆமாம்.

    அந்த தொழில் நுட்பம் தெரிஞ்சா சொல்லுங்க,..அடுத்த தடவ மைனஸ் ஓட்டு போடும் போது எச்சரிக்கையா போடணும்,..

    ReplyDelete
  11. வருகையும் கருத்துக்களையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  12. அது சரி... பகிர்வுக்கு நன்றி தல :)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails