அதற்காக தமிழ்ப் படத்தின் தூண்டுதலும் அல்ல..,
==============================================================
Saturday, January 23, 2010
இது ஒரு ஃபாண்டஸி கதை
Tuesday, January 26, 2010
ஃபாண்டஸிக் கதையின் தொடர்ச்சி
ஆகிய இரண்டு பகுதிகளையும் தொகுத்த மீள்பதிவாக தந்திருக்கிறேன்.
===========================================================
கொடைக்கானல் மலையுச்சியில் இருந்து கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு கிராமம் அது. அதற்காக மலையின் அடிவாரம் என்று நீங்களாக கணக்குப் போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த பாதாள லோகத்தில் ஒரு ஓட்டுச் சாவடி. அந்த மக்களுக்கு ஓட்டுரிமை இருப்பதே தெரியாமல் வசித்து வருகிறார்கள். ஆனால் நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு ஆகிக் கொண்டு இருக்கிறது. அங்கே பணிக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உயர் அதிகாரிகளும் உடனே அதற்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார் அந்த அதிகாரி. அத்தோடு காணாமல் போய் விடுகிறார்.
==================================================
அவரது தோழர் இன்னொரு அரசு அதிகாரி இருக்கிறார். அவர் சத்திய மங்கலத்திலிருந்து பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திற்குச் செல்கிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார்.
உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது. சாட்டிலைட்டின் உதவியோடு ஒரு தங்கப் பேழையும் பட்டுத்துணிகளும் கண்டறியப் படுகின்றன. அந்தப் பட்டுத்துணிகளில் அந்த கிராமத்திற்குச் செல்லும் வழிகள் கண்டறியப் படுகின்றன. அவைகளில் கொடுத்துள்ளப் படி அந்த கிராமத்திற்குச் செல்லும் வழியானது லண்டன் நகரத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர் கோவா வருகிறார்கள். கோவாவிலிருந்து புகை வண்டி மூலமாக சென்னை வந்து சென்னையிலிருந்து மதுரைவரை சாலை பயணமாகவும். பின்னர் வத்தலகுண்டுவரை மாட்டுவண்டிப் பயணமாகவும் வத்தலக் குண்டிலிருந்து கொஞ்சம் நடை ப் பயணம் சென்று பின்னர் காட்டுக்குள் கிடைக்கும் வழிகளெல்லாம் பயணித்தால் கிடைக்கும் வழிகள் மூலமாக அந்த கிராமத்திற்குச் சென்றடைய முடியும் என்பதாக அமைகிறது. அந்தக் காட்டுக்குள் வரும் மிருகங்கள் தரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தக் காட்டுக்குள் பிறந்த ஒரு ஆளை பிடிக்கிறார்கள்.
குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உடல் வலிமைமிக்க பெண்கள் நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக கிராமத்தான் கம்புவீரன் நியமிக்கப் படுகிறான்.
கம்புவீரன்: ஒரு குவாலிஸ் எடுத்துக்களாம் சார். நேரா வத்தலக்குண்டு தாண்டி அந்த கிராமம் வரைக்கும் போயிடலாம். அப்புறம் எப்படின்னு அங்க விசாரிச்சுக்கலாம்.
முக்கிய பொறுப்பாளர்: இப்படி பொறுப்பில்லாம போய்த்தான் இரண்டு அரசு அதிகாரிகள் என்ன ஆனாங்கன்னே தெரியல. பேசாம பட்டுச் சுவடிய பின்பற்றுங்க..
கம்புவீரன்: அப்பிடியில்ல சார். எப்படியும் சுத்தி சுத்தி வத்தலக் குண்டுதானே வரப்போறோம். அப்புறம் ஏன்சார்.
மு.பொ. இதுக்குத்தான் படிச்ச பசங்கள வேலைக்கு வெக்கணும்கறது. இத்தன பேர் ஆலோசனை பண்ணி போட்ட திட்டம் இது. அந்த கிராமத்துக்கு நாம நன்மை செய்தே தீர வேண்டும். அதுக்காக எவ்வளவு இடையூறு எவ்வளவு செலவு வந்தாலும் நாங்க கவலைப் பட போறதே இல்ல.
அந்தக் காலத்தில பல ஆராய்ச்சிகள் செய்து நம்ம முன்னோர் கண்டுபிடிச்ச பட்டுப் பத்திரம் இது. காரணம் இல்லாம எதையும் சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க பேசாம ஃபாலோ பண்ணுப்பா..,
இல்லேன்னா மக்காச்சோளவீரன் தயாரா இருக்கான். அவனைக் கூட்டிட்டுப் போய்விடுவோம்.
கம்புவீரன்:- என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்
=======================================================================
லண்டன் மாநகரில் அவர்களுக்காக பாய்மரக்கப்பல் தயாராக இருக்கிறது.
கம்புவீரன்: யோவ் என்னய்யா இது.., இப்பல்லாம் போக்குவரத்து பயங்கர வேகம்யா.., இப்பப் போய், பாய்மரப் படகு, நீராவி எஞ்சின் அப்படின்னு..,
முக்கியப் பொறுப்பாளர்:- கம்புவீரா., நீ இப்ப டம்மி பீஸு, வத்தலக் குண்டு வந்த பிறகு தான் உன் வேலை ஆரம்பிக்கும். அதுவரை அடக்கிவாசி
================================================================
கப்பலில் கேப்டன் தனித்தன்மை வாய்ந்த உடையுடன் இருக்கிறார்.
மு.பொ.:- கப்பலை நேராகச் செலுத்துங்கள்
கேப்டன்:- சார் நேரா போனா மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் போகும். அந்த வழியில போனா என்ன ஆகும்னு அமெரிக்கோ வெஸ்புகி சொல்லிட்டாரு.
மு.பொ. :- எங்க நாட்டுல ஒரு கிராமமே என்ன ஆச்சுன்னு தெரியல, உனக்கு வரலாற்று நக்கல் கேட்குதா போய்யா , சொன்ன வேலையை மட்டும் செய்.
====================================================================
படகு போகும் வழியில் கப்பலின் கேப்டன் முக்கிய பெண் அதிகாரியைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டே வண்டியை ஓட்ட கப்பல் ஒரு பெரிய பனிப் பாறையில் முட்டி பாய்மரங்கள் எல்லாம் சேதாரம் ஆகிவிடுகின்றன. கப்பலில் இருந்த முக்கிய பணியாளர்கள் இறந்து விடுகிறார்கள். சில பெண் அதிகாரிகள் மற்றும் கம்புவீரன் ஆகியோர் மட்டும் பக்கத்து தீவுக்குள் கரை ஒதுங்குகிறார்கள்.
அந்த தீவில் கறுப்பாக ஆஃப்ரிக்க தேசத்தவர் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களின் தலைவன் முன்னாள் நிறுத்துகிறார்கள்.
தலைவன்:- ஆஹா.., நம் வம்சம் விருத்தி செய்ய சிறந்த பெண்கள் இவர்கள்தான். நாளை பூஜை நடக்கட்டும்.
மூவரும் நடுமைதானத்தில் கட்டிவைக்கப் பட்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்கள் நிர்வாணமாக மது அருந்திய படி பூஜை நடக்கிறது. .....................,
..............................................,
................................ ....................... ..........................
...............................................................,
...........................
........................................( நடப்பதை எல்லாம் எழுதினால் ஓ.எஸ். கரப்ட் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் வெறும் புள்ளிகள் மட்டும் வைக்கப் பட்டுள்ளன)
இந்த நேரத்தில் கட்டை அவிழ்த்துக் கொண்ட கம்புவீரன் உடன் இருக்கும் பெண் அதிகாரிகளுடன் அந்த இடத்தைவிட்டு தப்பி விடுகிறான். தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான். அங்கிருந்து பறக்கும் ஒரு பெரிய பறவையின் காலில் கம்புவீரன் தொங்க அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு பெண்கள் தொங்க பெரிய பறவை பறந்து வந்து ஓரிடத்தில் போட்டு விடுகிறது.
எந்த இடம் என்றே தெரியவில்லையே..,
கொஞ்ச தூரம் நடந்து போவோம். எதாவது தென்படுகிறதா பார்ப்போம்.
சொல்லிய படியே மூவரும் நடந்து அந்தக் காட்டுக்குள் செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களது வழியைக் குறுக்கிடும் யானையை அடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டு நடக்கிறார்கள். ஓரிடத்தில் ஒரு திசை காட்டி கிடக்கிறது. அதில் வத்தலகுண்டு 30 கி.மீ. என்று எழுதப் பட்டு உள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.
உள்ளே செல்லச் செல்ல ஒரு பாறை தென்படுகிறது. அந்தப் பாறைக்கு அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று கம்புவீரன் பார்க்க உள்ளே இரு நாகரீக மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களிடம் பேச கம்புவீரனுடன் வந்த பெண்கள் முற்படுகிறார்கள்.
அப்போது அந்த மனிதர்கள் தங்களை கவுரவர்கள் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
என்ன கவுரவர்களா..,
ஆமாம். பாரதப் போரின் முடிவில் உயிர்பிழைத்த கவுரவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதாகவும் நல்ல செய்தி கிடைத்தால் திரும்பவும் பாரத தேசத்திற்கு திரும்பலாம் என்று இருப்பதாகவும் தங்களை பாண்டவர்களின் ஒற்றர்கள் என்று கைது செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவுரவர்களின் மன்னன் 110 ஆம் துரியோதனன் அங்கு வந்து மூவரையும் கைது செய்கிறான்.
==================================================================
இனி இரண்டாம் பாகம்
=============================================================
கவுரவர்களின் மன்னன் 110ஆம் துரியோதனன் நேரடியாக வந்து கம்பு வீரனையும் அவனோடு வந்த பெண்களையும் ( அதிகாரிகள்) கைது செய்து கொழுமண்டபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
கொழு மண்டபத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்கனவே காணாமல் போன இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரு கூண்டில் நிற்க கம்பு வீரனோடு வந்த மற்ற பெண்கள் ஒரு கூண்டில் அமர்ந்திருக்க 12203வது வது கர்ணன் ( கர்ணனின் மகன் போரிலேயே இறந்துவிட்டதாக சிலர் பேசலாம். ராஜவிசுவாசிகள் பலருக்கு கர்ணன் எனப் பெயரிடப் படுவதை இங்கு பதிவு செய்துவிடுவோம் ) பேச ஆரம்பிக்கிறார்.
மகாராஜாவுக்கு வந்தனம். சென்ற யுகத்தில் உங்களுக்கும் உங்கள் தந்தைகளுக்கும் நடந்த கொடுமை சரித்திரம் அறிந்ததே..,
மூத்தவருக்கே நாடு சொந்தம் என்பது பரம்பரை பரம்பரையாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.
ஆனால் கிருஷ்ணனின் தூண்டுதலின் காரணமாக தங்கள் முன்னோர் திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் மைந்தர்கள் நாட்டை துண்டாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கிருஷ்ணரே போர் களத்தில் இருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் கிருஷ்ணரின் படைகள் நம்மோடுதான் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,
பாண்டுவின் மைந்தர்களின் செய்த சதிகளை பல வழிகளில் முறியடித்த தங்கள் முன்னோர்களால் போரைத் தவிர்க்க முடியவில்லை. அபகரிக்க முடியாத சூழலில் நாட்டைத் துண்டாட நினைத்ததும், சில ஊர்களை மட்டுமாவது தனியாக பிரித்து பிரிவினை செய்தே தீரவேண்டும் என்று கிருஷ்ணரின் துணையோடு சதிவகைகள் செய்ததை இன்றைய மக்கள் திரைப்படம் மூலமாவது தெரிந்தே இருக்கிறார்கள்
கைது செய்யப் பட்டுள்ள அதிகாரி:
திரவுபதையை உங்கள் முன்னோர்கள் கையைப் பிடித்து இழுத்ததால்தான் அனைவரும் வெகுண்டு எழுந்து வன்மம் கொண்டாட வேண்டியதாகப் போயிற்று.
12203வது கர்ணன்: கவனியுங்கள். தம்பிகளின் மனைவி யாரையும் அவர்கள் அவமதிக்க வில்லை. சகோதர்களின் பொதுவான மனைவியை மட்டுமே அவர்கள் சபைக்கு அழைத்திருந்தனர்.
இன்னொரு அதிகாரி:
அதனால் நீங்கள் செய்தது சரியாகிவிடாது. இ.பி.கோ 376ன் படி கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் அது.
12203வது கர்ணன்:
அதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை. பாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளையும் இப்போது கைது செய்தாயிற்று.
அவர்களின் வழிவந்த பெண் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தாயிற்று.
இவர்களை அழித்துவிட்டு நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பாரத தேசம் முழுவதும் 100 கிராமங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டால் இந்த பாரத தேசமே மீண்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வந்துவிடும்.
===================================================
இரண்டு பெண்களும் மன்னரிடமும் தளபதியிடமும் தனியே பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். தனியே பேசுவதை சபையினர் முணுமுணுத்தலாக எதிர்த்தாலும் நேரடியாக சொல்ல் யாருக்கும் தைரியம் வரவில்லை.
முக்கிய அலுவல்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு மாலை நேரத்தில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள்
=========================================================
மன்னர் துரியோதனனும் தளபதி கர்ணனும் ஆயுதசாலைக்குச் செல்கிறார்கள். முக்கிய கேந்திரத்தில் உள்ள கண்ணாடி அறைக்குச் செல்ல அங்குள்ள மாயக்கண்ணாடிகள் மூலமாக மீதமுள்ள 99 கிராமங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார். மறைமுகத் தாக்குதலுக்கு இதுவே சரியான சமயம் என்றும் அனைவரும் தயாராக இருப்ப அறிவுறுத்துகிறார்கள்.
================================================================
மாலையில் பெண்களை சந்தித்த மன்னரும் தளபதியும் மிகவும் குழம்பிப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது.
பூட்டிய அறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மற்றவர்கள் குழம்புகிறார்கள்.அறையில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் மற்றவர்களுக்கு புலப் படுகிறது.
=============================================================
கம்புவீரன் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து கட்டுப் பாட்டு அறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்திய ராணுவ தளபதிகளை தொடர்பு கொண்டு அனைத்து நிலையங்களைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.
இந்திய ராணுவம் அனைத்து கிராமங்களையும் சுற்றி வளைக்க வலிமைவாய்ந்த கத்தி மற்றும் கதாயுதங்களின் முன் ஒவ்வொரு குண்டாக போட்டுச் சூடும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம் அனைவரையும் வீழ்த்துகிறது.
உள்ளூரில் நடக்கும் சண்டையில் கம்புவீரன் அனைவரையும் அழித்துவிடுகிறான். கம்புவீரனின் கையில் சக்கர ஆயுதம் வந்து நிற்கிறது. கம்புவீரனையும் மற்ற பெண்களையும் கொண்டுவந்த சேர்த்த பெரிய வகை கருடன் அவர்களின் அருகில் வந்து அமர்கிறது. (மீண்டும் முதல் பகுதியில் வந்த கருடனை நினைவில் கொண்டுவந்துவிடுங்கள்)..
முன்னறிவிப்பு படிச்சதுமே பயமா இருக்குது தலை!
ReplyDeleteஅப்புறம் அது என்ன, பக்கம் பெருசா இருக்கு.... workspace படைப்பிடம் குறைச்சலா இருக்கு? பாத்து எதனா செய்யுங்க தலை!
200 வாழ்த்துகள்!
ReplyDeleteayyaa neerum oru aayiraththil oruvan ayyaa. appadielllaam kathai vadikkereerkal.arumai vaalththukkal
ReplyDeleteதல எங்கேயோ போயிட்டிங்க.
ReplyDelete200 வாழ்த்துகள்!
ReplyDelete// பழமைபேசி said...
ReplyDelete200 வாழ்த்துகள்!//
// அக்பர் said...
தல எங்கேயோ போயிட்டிங்க.//
// T.V.ராதாகிருஷ்ணன் said...
200 வாழ்த்துகள்!//
நன்றி நண்பர்களே..,
// பழமைபேசி said...
ReplyDeleteமுன்னறிவிப்பு படிச்சதுமே பயமா இருக்குது தலை!
அப்புறம் அது என்ன, பக்கம் பெருசா இருக்கு.... workspace படைப்பிடம் குறைச்சலா இருக்கு? பாத்து எதனா செய்யுங்க தலை!//
செய்துவிடலாம் தல..,
// Madurai Saravanan said...
ReplyDeleteayyaa neerum oru aayiraththil oruvan ayyaa. appadielllaam kathai vadikkereerkal.arumai vaalththukkal//
வாங்க தல.., நன்றி,,
நல்லா இருக்கு :-)
ReplyDeleteunga blog nalla iruku
ReplyDelete(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
High Definition Youtube Video Download free Click here
MOVIE TICKETS BOOKING ONLINE :) CLIck HeRe
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
// thenammailakshmanan said...
ReplyDeleteநல்லா இருக்கு :-)//
// henry J said...
unga blog nalla iruku//
நன்றி நண்பர்களே..,
தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
ReplyDeletehttp://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html
படித்துவிட்டேன் தல,,கருத்தும் சொல்லிவிட்டேன்,.
ReplyDeleteகொரிய நாட்டு நண்பர்களின் அன்பினைத் தாங்க முடியாத காரணத்தால் இந்த இடுகையின் பின்னூட்டப் பெட்டி மூடப் படுகிறது. பின்னூட்டம் தரவிரும்புபவர்கள் முதல் இரண்டு தனித்தனிப் பகுதிகளுக்குச் சென்று பின்னூட்டம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ReplyDelete