ஒரு உள்குத்தோடு ஒரு தொடர்பதிவு ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் சம்பந்தமாக சில பல கேள்விகள் வைத்து அதில் நம் பதில்களை வைக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமைன்னா , அதில் சில கேள்விகளுக்கான காரணமே இல்லாமல் இருப்பதுதான். பிடித்த வலதுகை ஆட்டக்காரர் பெயர் கேட்டு இடது கை ஆட்டக்காரர் பெயரும் கேட்கிறார்கள். ஆனால் பிடித்த ஒருநாள் ஆட்டக்காரர் பெயர் ட்டெஸ்ட் ஆட்டக்காரர் பெயரெல்லாம கிடையாது.
அதே போல நடுவர் பெயர் கேட்கிறார்கள். ஆனால் மைதானத்தின் பெயர் கிடையாது. நாங்கள் கிரிக்கெட் பார்க்கும்போது மைதானம் அமைந்த ஊர் பெயரைக் கவனித்து இருக்கிறோம். ஆனால் மைதானத்தின் பெயரோ , அதில் நிற்கும் நடுவர்களின் பெய்யரோ பெரிய அளவில் எங்கள் கவனத்தை ஈர்தது கிடையாது. கிரிக்கெட்டின்பால் எங்களது கவனம் அவ்வளவுதான்.
அதற்காக எங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்பதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேர்வுக்கு முந்தய நாள்கூட கிரிக்கெட் பார்த்துவிட்டு கண்கள் வலி ஏற்பட தூங்கும் ஒரு சராசரி இந்திய மாணவன் தான் நான். ஆனால் நான் வசித்த பகுதுகளில் ஏனோ ஆஸ்திரேலியர்கள் எங்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அதைவிட ஒரு ஆச்சரியம். அங்கிருந்த பிற வெளிநாட்டவர்களில் ஒருவர்க்கூட என்னைப் பார்த்து நீ ஒரு இந்திய மாணவனா என்று கேட்டதில்லை, ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் எந்த தேசம் என்று கேட்டதுண்டு. ஏனென்றால் கோயமுத்தூரில் கோயமுத்தூர் வாசம் வீசும் ஒருத்தனிடம் அந்தக் கேள்விக் கேட்பது தேவையா என்று அந்த ஆட்கள் நினைத்திருக்கக் கூடும்.
ஆனால் என்னைப் பார்த்து நண்பர் வருண் கிரிக்கெட் கேள்விகளை ஃபார்வேட் செய்திருக்கிறார். அதற்கு பதில் சொல்ல களத்தில் இறங்கி இருக்கிறேன்,.
ஏறக்குறைய முண்ணனி பதிவர்கள் களத்தில் இறங்கி பல ஹிட்டுகளை குவித்து பின்னர் நானும் இதில் குதித்து இருப்பதால் எனது ஆட்டம் எந்த அளவ்ல் எடுபடும் என்று தெரியாவிட்டாலும் இதுவும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆட்டமாகவே அமையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷன் அஜய் ஜடேஜாதான். அவர் இறங்கும்போது களதடுப்பாளர்கள் ஏற்கன்வே வெற்றி பெற்றுவிடுவோம் எனற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். அதனால் பந்துவீச்சு, ஒருமாதிரித்தான் இருக்கும். அந்த நிலையில் இவர் ஏதாவது ரன் எடுத்து தனது நிலையை ஸ்திரப் படுத்திக் கொண்டு காலந்தள்ளிவந்தார்,
1) பிடித்த கிரிக்கெட் வீரர்கள்:
நவாப் பட்டோடி என்று சொல்லிவிடுவதுதான் உத்தமம். இல்லையென்றால் சச்சின், கங்கூலி போன்றவர்களின் மனக்கசப்புக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது பாருங்கள். அவர்கள் இருவரின் பெயரைச் சேர்த்துச் சொன்னாலும் கூட சண்டக்க்கு வர வாய்ப்பு இருக்கிறது பாருங்கள்.
2) பிடிக்காத கிரிக்கெட் வீரர் :
அஃபிரிடியைத்தவிர இந்தப் பதவிக்கு யார் பொறுத்தமாக இருக்கக்கூடும். பந்தின் மீது பலாத்காரத்தை பிரயோகிக்கும் கொடுமைக்கார ஆட்டக்காரர் அவர். அந்த ரகசியவீடியோ வேறு இணையத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருந்தது.
3) பிடித்த வேகப் பந்து வீச்சாளர்-
கபிலின் தேவ்தான்
4) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்
என்ன கொடுமை சார்? இது . யார் பேரும் தோன மாட்டாங்குது. அக்தர் பேர எழுதலாம்னா அவர ஒரு விளையாட்டு வீரரா ஒத்துக்கவே மனசு வரமாட்டேங்குது.
5) பிடித்த சுழல் பந்து வீச்சாளர்- சச்சின், முன்னொரு காலத்தில் சச்சின் என்றொரு சுழல் பந்து வீச்சாளர் இருந்தார். அவர் வலது, இடது சுழற்சியிலும், மணிக்கட்டு, முழங்கை சுழற்சி போன்ற வகைகளிலும் பந்து போடுவார். காலத்தில் சுழற்சியில் அவர் காணாமல் போய்விட்டார்.
6) பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்- பிடிக்காத ஒரு நபர் சுழல் பந்து வீசுகிறார். அவரை இந்த இடத்தில் எழுதலாம் என்று ஆசை. ஏதாவது கெட்ட வார்த்தையில் பேசுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர் அமீர்கான் வேடத்தில் நடிக்கவேறு போகிறாராம். அவர் ஹர்பஜன் சிங்க்.
7) பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்-
9) பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்-
பிடித்த முன்கால் துடுப்பாட்டக் காரர், பின்கால் துடுப்பாட்டக்காரர், ஸ்வீப் ஆட்டக்காரர். என்று ஒவ்வொரு வகைக்கும் வைக்காத மர்மம் என்ன என்று இண்டர் போல் விசாரிக்க வேண்டும் என்பதே நமது ஆசை.
8) பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்-
10) பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் சென்ற கேள்விக்கான பதிலேதான் இங்கும். இருந்தால் கூட ஒரு துடுப்பாட்டக்காரர். ஒரு பந்து வீச்சாளருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கவேண்டும் அல்லவா? நானும் ஒரு பந்து வீச்சாளன் என்ற முறையில் எனக்கு பிடிக்காத ஒரு துடுப்பாட்டக் காரர். விவியன் ரிச்சர்ட்ஸ். அவருக்கு பந்துவீச வேண்டும் என்பதும் அவரது மூன்று ஸ்டம்ப்புகளையும் தனியே களட்ட வேண்டும் என்பதும் ஒருகாலத்தில் நமது லட்சியம்.
11) பிடித்த களத்தடுப்பாளர்- ரோட்ஸ்.., அவருக்கு பிந்தான் இப்படி ஒரு பணியே வெளியே தெரிய வந்தது.
12) பிடிக்காத களத்தடுப்பாளர்- கெட்டவார்த்தை பேசும் எல்லாரும்
13) பிடித்த ஆல்ரவுண்டர்- எனக்குத் தெரிந்து இந்தப் பெயருக்கு சொந்த காரர்கள் இருவர்தான். கபில்தேவ், இம்ரான்கான். அவர்களில் கபில் மிகவும் பிடித்தவர், சோபர்ஸ் முதல், யூசுப் பதான் வரை பலரையும் ஆல்ரவுண்டர் என்று சொன்னாலும் அவர்கள் எல்லாம் இரண்டு துறையிலும் முன்னிலை வகிக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டூம். அப்புறம் மனோஜ் பிரபாகர், ரவி சாஸ்திரி எல்ல்லாம் ஆல்ரவுண்டர் பேட்ஜ் கேட்டு போராடுவார்கள்.
14 & 15) பிடித்த நடுவர் & பிடிக்காத நடுவர்-
இந்தக் கேள்வியை வன்மையாக கண்டிக்கிறேன்.
16) பிடித்த நேர்முக வர்ணனையாளர்-
17) பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்- நமக்கு ஆங்கிலமும் புரியாது, இந்தியும் தெரியாது. இதில் எதைவைத்து பிடித்த, பிடிக்காத என்றெல்லாம் சொல்வது.
இருந்தாலும் மந்திரா பேடியை பிடிக்காது என்று யாராவது சொல்ல முடியுமா?
18) பிடித்த அணி- நியூசிலாந்து
பிண்ணனியில் - என்னண்ணே இது.
இனி எல்லாமே இப்படித்தான்.
19) பிடிக்காத அணி- தென்னாப்பிரிக்கா
சுத்தமாக முதுகெலும்பே இல்லாத அணி. பல நேரங்களில் ஹன்சி குரேன்யேவின் ஆவியின் அறிவுரைப் படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.
20) விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி-
இங்கிலாந்து ஆஸ்திரேலியா
21) விரும்பாத அணிகளுக்கான போட்டி- ஒருத்தனை போட்டு மொத்து மொத்துன்னு மொத்திட்டு ரொம்ப நல்லவன்னு அவார்டு குடுக்கற எல்லாப் போட்டிகளும்..,
22) பிடித்த அணித்தலைவர்- அர்ஜூன் ரணதுங்க.., சின்ன பசங்கள பெரிய ஆளாக்கியவர்.
23) பிடிக்காத அணித்தலைவர்- ஐந்தரைப் பெட்டி நிறைந்திருந்தால் அறியாதவளும் கரி சமைப்பாள் என்ற பழமொழிக்கேற்ப சிறந்த ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு பெரிய கேப்டன் என்று பேட்ஸ் போட்டு சுற்றிக் கொண்டிருந்த ரிக்கிபாண்டிங். அவரது திறமை, இப்போது வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது.
24) பிடித்த போட்டிவகை- கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட்தான். ஒண்டே என்பது சிற்றுண்டி போன்றது. 20-20 என்பது ஃபாஸ்ட் ஃபுட் அது விரைவில் 10-10, 5-5 என்று ஆகி ஒத்தைக்கு ஒத்தை ஆகி கடைசியில் காசு சுண்டும் சூத்தாட்டமாகக் கூட மாறலாம். அப்படி மாறினாலும் பக்கத்தில் அழகிகளை ஆட விடுவார்கள்.
25) பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- ஹேய்ன்ஸ்,கிரினிட்ஜ்
26) பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- ரவி சாஸ்திரி- மனோஜ் பிரபாகர்
27) சிறந்த டெஸ்ட் வீரர்- ரீச்சர்ட் ஹாட்லி..,
28) கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்-
லாரா , அவர் வேறு ஏதாவது நாட்டில் பிறந்திருந்து அல்லது அவர்களது கிரீக்கெட்போர்டு கொஞ்சமாவது கருணையோடு இருந்திருந்தால் இந்த மனிதர் சாதனைகளை குவித்து தள்ளியிருப்பார். ஆனால் ஐயோ பாவம்..,
இந்த நிலையிலும் சாதனைகளை குவித்த ஜாம்பவான்.
இது இல்லாமல் நான் சேர்க்க நினைக்கும் கேள்வி:
உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பரிதாப கரமான கேப்டன்.
1. அவரது மிக இளவயதில் கேப்டன் ஆனவர்.
2.அவரது அணியில் பிரதான பந்துவீச்சாளர்களே இருந்ததில்லை.
3.அணியில் அவர் மட்டுமே மட்டைபிடிப்பாளர். பிற்காலத்தில் அவரது அணியிலிருந்து நல்ல மட்டையாளர்கள் உற்பத்தி ஆனார்கள்.
4ஒவ்வொரு முறையும் அப்போதைய சிறந்த அணியை அவர் நாட்டிலேயே எதிர்கொள்ள அனுப்பப் படுவார்.
5.அணியிலிருந்த மற்ற வீரர்கள் எல்லோரும் பெரிதாக வெட்டி முறித்தது போல இவர் மட்டும் ஒழுங்காக ரண் எடுக்காதது போல பேசப் படுவார்.
6. அப்படியே அவர் எடுத்தாலும், அவர் ரன் எடுத்ததால்தான் அணி தோற்றதாக பத்திரிக்கைகள் எழுதுவார்கள். அவர் ரன் எடுக்காவிட்டாலும் அணி தோற்றுத்தான் போயிருக்கும்.
7.அவரது கேப்டன் திறமை சரியில்லை என்று கூறி ஏற்கனவே அணியைவிட்டு நீக்கப் பட்டவரை மீண்டும் அணிக்கு தலைவராக கொண்டுவருவார்கள். (அணீயில் இருக்கும் மற்றவர்கள் நிலமை அப்படி)
8.அவரது அணியிலிருந்து முக்கியத்தூண்கள் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.
9.அவரது துணைத் தலைவர் பிற்காலத்தில் தலைவராக ஆக்ரோஷமான தலைவராக பேர் எடுத்தவர். இவரின் பந்துவீச்சுத்திறமையை சுத்தமாக குழி தோண்டிப் புதைத்தவர்.
10. அந்த பரிதாபகரமான கேப்டனே அதை மறக்க நினைப்பார் என்பதால் அந்த பரிதாபகரமான கேப்டன் கேள்வியை தொடருக்கு சேர்க்கவேண்டாம் என்று விட்டுவிடுவோம்.
இந்தத் தொடரைத் தொடர
இன்கம்ப்ளீட் மேன் மற்றும் மகி ஆகியோரை அழைக்கலாம்.
எனக்கு அந்த பரிதாபமான கேப்டனின் பேர் தெரியுமே...
ReplyDeleteஅப்புறம் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர், சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர், சிறந்த மைதானம் எல்லாம் ஒரிஜினலில் இருக்கு..
அது அப்பிடியே மாறி மாறி வரும்போது வேணாம்கிறதை விட்டுடுறாங்க, வேண்டாததை சேத்துக்கிறாங்க..
என்னோட பதிவுல இருக்குற பவன் - இவர்தான் இதை தொடங்கின பிரகஸ்பதி - பதிவுக்கான தொடுப்புக்குப் போய் பாருங்க. முழுக் கேள்விகளும் இருக்கும். :)
பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர், பிடிக்காத சுழல்பந்து வீச்சாளருக்கான பதில்களை ரசித்தேன்.
சில பதில்கள் என் தேர்வுகளோடு ஒத்துப்போனது..
எனக்கும் அந்த பரிதாபகரமான கேப்டன் தெரியும் தல.
ReplyDeleteபதில் சூப்பர் ரசித்தேன்.
தல இந்த தொடருக்கு உங்கள முன்னாடியே அழைந்திருந்தேன், மின்னஞ்சல் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை :(
ReplyDeleteஉங்க நையாண்டிகளை அதிகம் ரசித்தேன். குறிப்பாக T20 போட்டிகள் குறித்தவை :)
// எட்வின் said...
ReplyDeleteதல இந்த தொடருக்கு உங்கள முன்னாடியே அழைந்திருந்தேன், மின்னஞ்சல் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை :(
உங்க நையாண்டிகளை அதிகம் ரசித்தேன். குறிப்பாக T20 போட்டிகள் குறித்தவை :)//
வேலைப் பளு அதிகம் இருந்ததால் தங்கள் பதிவினை தவற்விட்டுவிட்டேன் தல..,
தங்கள் அழைப்பிற்கு நன்றி
// முகிலன் said...
ReplyDeleteஎனக்கு அந்த பரிதாபமான கேப்டனின் பேர் தெரியுமே...
அப்புறம் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர், சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர், சிறந்த மைதானம் எல்லாம் ஒரிஜினலில் இருக்கு..
அது அப்பிடியே மாறி மாறி வரும்போது வேணாம்கிறதை விட்டுடுறாங்க, வேண்டாததை சேத்துக்கிறாங்க..
//
அப்படியா தல சேர்த்து விடுவோம்.,
// அக்பர் said...
ReplyDeleteஎனக்கும் அந்த பரிதாபகரமான கேப்டன் தெரியும் தல.
பதில் சூப்பர் ரசித்தேன்.//
நன்றி தல.,
பகிர்வுக்கு நன்றி தல.
ReplyDeleteசச்சின் - தனது மனைவி, குழந்தைகளுடன் - Sachin Tendulkar Rare Picture Collections
//Techshankar @ டெக்ஷங்கர் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தல.
சச்சின் - தனது மனைவி, குழந்தைகளுடன் - Sachin Tendulkar Rare Picture Collections//
மிக அற்புதமான தொகுப்பு தல,,,
வித்யாசமா இருந்தது டாக்டர்...
ReplyDelete//ஸ்ரீராம். said...
ReplyDeleteவித்யாசமா இருந்தது டாக்டர்...//
வாங்க தல..,
//லாரா , அவர் வேறு ஏதாவது நாட்டில் பிறந்திருந்து அல்லது அவர்களது கிரீக்கெட்போர்டு கொஞ்சமாவது கருணையோடு இருந்திருந்தால் இந்த மனிதர் சாதனைகளை குவித்து தள்ளியிருப்பார். ஆனால் ஐயோ பாவம்..,
ReplyDeleteஇந்த நிலையிலும் சாதனைகளை குவித்த ஜாம்பவான்.//
Its true Sachin ku oru nalla poattiya irundhirupparu
namakkum inum interesta irundhirukkum.
***ஆனால் என்னைப் பார்த்து நண்பர் வருண் கிரிக்கெட் கேள்விகளை ஃபார்வேட் செய்திருக்கிறார். அதற்கு பதில் சொல்ல களத்தில் இறங்கி இருக்கிறேன்,.***
ReplyDeleteநன்றி, சுரேஷ்! :-)))
// உயிரெழுத்து said...
ReplyDelete//லாரா , அவர் வேறு ஏதாவது நாட்டில் பிறந்திருந்து அல்லது அவர்களது கிரீக்கெட்போர்டு கொஞ்சமாவது கருணையோடு இருந்திருந்தால் இந்த மனிதர் சாதனைகளை குவித்து தள்ளியிருப்பார். ஆனால் ஐயோ பாவம்..,
இந்த நிலையிலும் சாதனைகளை குவித்த ஜாம்பவான்.//
Its true Sachin ku oru nalla poattiya irundhirupparu
namakkum inum interesta irundhirukkum.//
அவர் விளையாடிய காலத்தில் சச்சினொடு பல வகைகளில் ஒப்பிட தகுதிவாய்ந்தவராகவே இருந்தார்.
ரிக்கி பாண்டிங்ஐ விட லாரா பல வகைகளில் மேலானாவர். அவரது ஆட்டக்காலம் விரைவில் முடிவடைய அவரது கிரிக்கெட் போர்டு மிக முக்கிய பங்கு வகித்தது..,
// வருண் said...
ReplyDelete***ஆனால் என்னைப் பார்த்து நண்பர் வருண் கிரிக்கெட் கேள்விகளை ஃபார்வேட் செய்திருக்கிறார். அதற்கு பதில் சொல்ல களத்தில் இறங்கி இருக்கிறேன்,.***
நன்றி, சுரேஷ்! :-)))//
வாய்ப்புக் கொடுத்தமைக்கு நாந்தான் நன்றி சொல்ல வேண்டும் தல..
//இவரின் பந்துவீச்சுத்திறமையை சுத்தமாக குழி தோண்டிப் புதைத்தவர்.//
ReplyDeletetavaru. avarukum pin vanthavarthan athai seythar...
சில பதில்கள் என் தேர்வுகளோடு ஒத்துப்போனது..
ReplyDelete// LK said...
ReplyDelete//இவரின் பந்துவீச்சுத்திறமையை சுத்தமாக குழி தோண்டிப் புதைத்தவர்.//
tavaru. avarukum pin vanthavarthan athai seythar...//
அப்படியா தல..,
// T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteசில பதில்கள் என் தேர்வுகளோடு ஒத்துப்போனது..//
சில??
//10. அந்த பரிதாபகரமான கேப்டனே அதை மறக்க நினைப்பார் என்பதால் அந்த பரிதாபகரமான கேப்டன் கேள்வியை தொடருக்கு சேர்க்கவேண்டாம் என்று விட்டுவிடுவோம்.
ReplyDelete//
:)
// புருனோ Bruno said...
ReplyDelete//10. அந்த பரிதாபகரமான கேப்டனே அதை மறக்க நினைப்பார் என்பதால் அந்த பரிதாபகரமான கேப்டன் கேள்வியை தொடருக்கு சேர்க்கவேண்டாம் என்று விட்டுவிடுவோம்.
//
:)//
:) :))