Wednesday, February 10, 2010

ஆந்திர அமைச்சர் ஆவேச கடிதம்- ஐ.பி.எல் அதிரடி துவக்கம்

ஐ.பி.எல் துவக்க விழா நடக்க இருந்த இடமான ஹைதராபாத் மற்றும் அங்கு நடக்க இருந்த போட்டிகளையும் ஐ.பி. எல் நிர்வாகம் மாற்றி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதனால் ஆவேசமடைந்த ஆந்திர அரசு டெக்கான் சார்ஜர்ஸ் அணியை போட்டியிலிருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதா செய்திகள் வந்துள்ளன.  இது பற்றி ஆந்திர விளையாட்டு அமைச்சர் திரு. வெங்கட் ரெட்டி  பிசிசிஐ தலைவர் திரு சரத் பவாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. 



==================================================================

நமது கேள்விகள்:-

1. டெக்கான் சார்ஜர் ஆந்திர மாநில அணியா?

2. டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெயர்களே இல்லாத அணியாக டெக்கான் சார்ஜர் திகழ்வதற்கு ஏதாவது காரணம் இருக்குமா?  இருக்கிறது என்றால் அந்த தீர்க்க தரிசி யார்?

3.  டெக்கான் அணி போடியிலிருந்து விலக மறுத்தால் ஆந்திர வீரர்களை மட்டும் விலக் சொல்லுவார்களா? அப்படியென்றால் டெக்கான் அணியிலிருந்து மட்டும் விலகுவார்களா? இல்லை மற்ற அணிகளிலிருந்தும் விலகுவார்களா?

4. வேணுகோபால் ராவ், அம்மன அபிஷேக் ரெட்டி போன்ற வீரர்கள் பெயர் தமிழ் பத்திரிக்கைகளில் மற்றும் உலகப் பத்திரிக்கைகளில் இடம் பெற ஆந்திர அரசு என்ன செய்யப் போகிறது? அதாவது இவர்களின் தியாகத்திற்கு என்ன ஆங்கீகாரம் கொடுக்கப் போகிறார்கள்.

5. இது கடிதத்தோடு நின்றுவிடுமா? இல்லை தந்தியும் அடிப்பார்களா?

================================================================

படித்து விட்டீர்களா!!

6 comments:

  1. இன்னொரு கேள்வியையும் சேத்துக்குங்க. போன வருடம் மத்திய அரசு போட்டி நடத்த பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று சொன்னபோது போட்டிகளை நடத்தித் தர நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?

    ReplyDelete
  2. அய்யய்யோ! இப்படியே போனா நாட்ட கூறு போட்டிருவான்களே!!!

    ReplyDelete
  3. // முகிலன் said...

    இன்னொரு கேள்வியையும் சேத்துக்குங்க. போன வருடம் மத்திய அரசு போட்டி நடத்த பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று சொன்னபோது போட்டிகளை நடத்தித் தர நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?//

    சேர்த்துக் கொள்வோம்

    ReplyDelete
  4. // என் நடை பாதையில்(ராம்) said...

    அய்யய்யோ! இப்படியே போனா நாட்ட கூறு போட்டிருவான்களே!!//

    இதெல்லாம் சாதாரண ரகளை தலைவரே.., நீங்கள் பயப் படும்படியெல்லாம் ஆகாது

    ReplyDelete
  5. // அக்பர் said...

    இது என்ன புது குழப்பம்.//

    நிலை, சூழ்நிலை

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails