அது ஒரு காதலர் தினம்। நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது।। ஒரு வி।ஐ।பி। வருகிறார் என்று ஊரே பரபரப்பாக இருந்தது। எங்களுக்கும் ஒரு பரபரப்பாக இருந்தது। எங்கள் நண்பன் அரவிந்தசாமி, மணிஷாவிடம் காதலைச் சொல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்। அவர்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே தவிர மற்றபடி காதலர்கள்போல்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்।
அவர்களுக்கு அடிக்கடி பாடங்களில் சந்தேகம் வரும்। அதை சரி செய்ய இவர் இருக்கும் இடத்திற்கு அவரும் அவர் இடத்திற்கு இவரும் வருவார்। ஓரே வகுப்புதான்। ஆனால் செயல்முறை வேறுவேறு இடங்களில்।। அருகில் இருக்கும் எங்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்க மாட்டார்கள்। இவர்கள் ஒன்றாக படிப்பது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காரணத்தால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றே நினைக்கிறேன்। பொதுவாக இது போன்று ஆரம்பிக்கும்போது மற்ற நண்பர்களை வெட்டி விடுவார்கள்।
லஷ்மி காம்ப்ளக்ஸில் என்னமோ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்। அரவிந்தசாமி। । கல்லூரி விடுதியில் மதிய உணவு எடுத்தபின் கிரிக்கட் ஒன்பிச் விளையாடிக் கொண்டிருந்தபோது காந்தி புரத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது। இவன் வேற அங்கதானே போயிருக்கிறான்। ஒன்றும் புரியவில்லை। யூனிட்ஸ்க்கு என்ன ஆச்சோ என்று என் ரூம்மேட் வேறு புலம்ப ஆரம்பித்தான்। மனிஷாவும் அவனுக்கும் ஒரே இடத்தில் செயல்முறை வகுப்பு இருப்பதால் அப்படி।
சிறிது நேரம் கழித்தபின் நிஜமாகவே எங்களுக்கு படபடப்பு அதிகம் ஆனது। நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்றால் எங்கள் சீணியர் மாணவர்கள் அனுமதிக்கவில்லை। (யாரும் வண்டி கடன் கொடுக்கவில்லை)। மாலைப் பொழுது ஆனது। அவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை। ஆனால் ஊரில் ஆங்காங்கே குண்டு வெடிப்பதாக மட்டும் தகவல் வந்து கொண்டே இருந்தது। இந்த நேரத்தில் அரவிந்தசாமி வீட்டில் இருந்து வேறு பத்திரமாக இருக்கிறீர்களா? என்று போண் வேறு செய்துவிட்டார்கள்। அப்போது செல்போன் கிடையாது।
மிகக் கொடுமையான நேரங்கள் அது। அந்தநேரத்தில் அடுத்த தகவல் வந்தது। மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலேயே குண்டுவெடித்தது। செவிலியர்கள் பலி। மற்றும் படுகாயம்। யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்। உலகப் போர் காலத்தில் கூட மருத்துவமனைக்குள் குண்டு வெடித்து கிடையாதாம்।
நாங்கள் என்ன செய்ய முடியும் அரவிந்தசாமியின் வீட்டிலிருந்து மீண்டும் போன் வந்தால் என்ன சொல்வது। கூப்பிடுகிறோம் என்று சொல்லி வைத்துவிட்டோம்। அதன்பிறகு போண் பிசியாகவே இருந்தது। எல்லா மாணவர்களையும் அவர்கள் வீட்டில் விசாரித்துக் கொண்டிருந்தனர்।। இரவும் வந்துவிட்டது। அப்போது மருத்துவ மனையை விசாரித்து ரெண்டும் இருக்கா என்றும் கேட்டோம்। ஒரு தகவலும் இல்லை।
மருநாள் காலை। கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை। ஆனால் மருத்துவ கல்லூரி படுவேகத்துடன் இயங்கி கொண்டிருந்தது। வேகமாக மருத்துவ மனைக்குச் சென்று காயம் அடைந்தவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்று எல்லா பகுதிகளையும் சுற்றி சுற்றீ வந்தோம்। மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிய வேலை ஒன்றும் கிடையாது என்றாலும் அன்று பார்க்க வருபவர்களுக்கு கூட நிறைய வேலை இருந்தது।
ஒவ்வொரு முறை சுற்றும் போதும் தப்பித்து விட்டார்கள் என்று மனம் சந்தோஷப் படும்। அடுத்த வினாடியே இப்போது ஏதும் கொண்டுவந்திருப்பார்களோ நாம் சரியாய் பார்க்கவில்லையோ என்று துக்க பட வைக்கும்। உடனே மீண்டும் ஒரு சுற்று। நரக வேதணை என்பது அதுதான்। இப்போது கூட அன்று கண்ட காட்சிகள் குலைநடுங்க வைக்கின்றன। அடுத்த மூன்று நாட்களும் எல்லா வார்டுகளையும் சுத்தோசுத்து என்று சுத்தி ஒருவழியாக நிலமை கட்டுக்குல் வந்தது।
,
இவர்கள் என்ன ஆனார்கள்।? அங்கேதான் விதி।। காதலர் தினத்தை கொண்டாட முதலில் தேர்ந்தெடுத்த இடம்। ஈச்சனாரி பிள்ளையார் கோவில்। அவ்விடம் ஊரின் நுழைவாயிலில் இருக்கிறது। அங்கேயே செய்தி கிடைத்த உடன் அப்படியே அவனது பைக்கில் பொள்ளாச்சிக்கு (சொந்த ஊர்) போய் மணிஷாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டான்। மறுநாள் அவன் மாணவர் விடுதிக்கு போன் போட்டிருக்கிறான்। நாங்கள் பயிற்சி மருத்துவர்களுடன் இருந்திருக்கிறோம்।எங்களுக்கு மூன்று நாள் கழித்து தெரிந்தது.
எப்படியோ என்னோட ரூம்மேட் யூனிட்ஸ்க்கு ஒன்னும் ஆகல என்று மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.
==========================================================
மீள்பதிவுதான், முதலில் வெளியான தேதி முதல் பின்னூட்டத்தில்