Sunday, May 1, 2011

உண்மையான புரட்சி எப்போது?

மேதினம், தொழிலாளர் தினம் இவை பற்றி பேசும்போதெல்லாம் அலசப் படும் வார்த்தைதான் புரட்சி.  தொழிலாளர்களை சுரண்டி, விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுபவர்களிடம் இருந்து மக்களை விடுவிப்பது என்பதுதான் புரட்சி என்பதாக பலரும் பொருள் கொண்டிருக்கிறார்கள்.   பொதுவுடமைத் தத்துவமே  பணம் நிறைய சேர்த்து வைத்திருப்பவர்களிடமிருந்து  பிடுங்கி மற்றவர்களுக்கு கொடுப்பது என்பதாக உருவகப் படுத்தி இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு லாபத்தில் சரி பங்கு கொடுக்க வேண்டும் என்பதாக பல திரைப்படங்கள் சில, பல ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கின்றன.

நாம் புரிந்து கொண்டிருக்கும் பொதுவுடமைத் தத்துவம் அப்படித்தான். நாம் மட்டும் என்றில்லை ரஷ்ய தேசம் கூட அப்படித்தான் போல. பொதுவுடமையை நாம் புரிந்து கொள்ளாததுதான் நம் பிரச்சனை.


ஒரு தேநீர் கடை இருக்கிறது. அதில் வேலை செய்ய தேநீர் போடுபவர்,  போண்டா போடுபவர், மேசை துடைப்பவர், சில நேரங்களில் பரிமாறுபவர் இருப்பார்கள். தனிநபராக சிறிய கடை வைத்திருக்கும்போது எல்லாமே ஒருவராக இருப்பார். லாபம் முழுவதும் அவருக்குத்தான். கொஞ்சம் பெரிய அளவில் கடை வளரும்போது தனித்தனி நபர்களாக வேலைக்கு வைத்திருக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால் பல நேரங்களில் அவ்வாறு எதிர்பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி என்றால் முழுவதும் முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டுதான் போக வேண்டுமா?   ஒவ்வொரு தொழிலாளிக்கும் முதலாளியால் அல்லது முதலாளியின் தொழிலாளியால் ஒவ்வொரு வேலையுமே நிர்ணயிக்கப் பட்டிருக்குமே அப்போது அவரவர் அவரவர் வேலை செய்ய வேண்டுமே என்ன செய்வது?  சில மாதங்களுக்கு முன் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஒரு தொழிலாளியை இயந்திரத்தை உடைக்காமல் காப்பாற்ற நினைத்து  உயிரைப் பலிக் கொடுத்த மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் .  அதற்கென்ன காரணம். அந்த இயந்திரத்தின் செயல் வேகம் தெரியாதவர்களா?  தெரியாதவர்கள் என்றால் தொழிலாளியா? அலலது தொழிலாளியின் மேற்பார்வையாளரான (  முதலாளியின் )  தொழிலாளியா? அப்படி என்றால் அவர் அந்த இடத்தில் தொழிலாளியைக் காப்பாற்ற என்ன செய்து இருக்க வேண்டும். இயந்திரத்தை உடைத்திருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டச் சொல்லி இருக்க மாட்டார்களா? அல்லது இன்சூரண்ஸ் கம்பெணீயிலிருந்து கொடுத்திருக்க மாட்டார்களா?   கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால் கேள்விகள் வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கான முழுக்காரணம்  முதலாளிகள் தொழிலாளிகளின் நிலையை அறியாமல் இருப்பதும்.   மேற்பார்வை செய்ப்வர்களுக்கு உற்பத்தியை பெருக்குவதற்காக எதையும் செய்து முதலாளியிடம் நல்ல பேர் வாங்க நினைப்பவர்களும்தான்.   முதலாளியிடம் நல்ல பேர் வாங்கினால் அவர் சம்பளம் கொஞ்சம் சேர்த்துக் கொடுப்பார். 


பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் பல மடங்கு அடுக்குகளாக தொழிற்சாலைகள் வைத்து செய்து கொண்டிருக்கிறார்களே?  இதையே சிறு தொழிற்சாலைகளாக மாற்றிச் செய்ய முடியாதா?  ஒவ்வொரு உதிரி பாகத்தையும் தயாரிப்பதை யாராவது ஒருவரிடம் இருந்து கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாதா?


பல பொம்மைகளை சைனா தயாரிப்புகள் என்று சொல்லுகிறார்களே.., குறிப்பாக கோயில் திருவிழாக்களில் விற்கப் படும் பொம்மைகள். அவைகளை சைனாவின் பெயரினைச் சொல்லித்தான் விற்கவேண்டுமா? சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி செட்டுக்கள் என்று டிரான்ஸிஸ்டர், டேப் களை விற்பார்களே அவையெல்லாம் இன்று சைனா என்று சொல்லி விற்கவேண்டிய அவசியம் என்ன?  

அலை பேசிகள் பலவும் சைனாத் தயாரிப்புகளாக வந்து இறங்குகின்றனவே. அதையெலாம் நம் ஊரிலேயே தயாரிக்க முடியாதா? இந்திய நிறுவனங்களின் சில தயாரிப்புகளில் நேட் இன் சைனா என்று எழுதப் பட்டு இருக்கிறதே அதையெல்லாம் இந்தியாவிலேயே தயாரிக்க முடியாதா? அதன் ஒவ்வொரு உதிரி பாகங்களையும் இந்தியாவில் இருக்கும் ம்க்களிடமே தயாரித்துக் கொடுக்க சொல்லி தொழிலகளை பரவலாக்க முடியாதா? ஏகபோக உரிமையாக ஒருவரிடமே எல்லாவற்றையும் குவிப்பதை விட பலரையும் முதலாளிகளாக மாற்ற முடியாதா? 


சில தொழில்களில் பெரிய முதலீடு தேவை என்று சொன்னாலும் கூட திருப்பூர் போன்ற இடங்களில் குறிப்பிட்ட வேலைகளை தனியே எடுத்து செய்பவர்கள் இருக்கிறார்கள். பீஸ் ரேட் என்று சொல்லுவார்கள். அவர்களில் டெய்லர்களுக்கு ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய அமையும் (இன்றிருக்கும் தேக்க நிலை தற்காலிகமானதுதான்) . ஆனாலும்கூட அவர்கள் முதலாளிகளாக மாறிவிட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இத்தனைக்கும்  கம்பூனிஸ்ட்களின் பல வடிவங்கள் அங்கு நிறியை இருக்கின்றன. 


அப்படி யென்றால்  மாற்றத்தினை யார் ஏற்படுத்துவது?  க்ம்யூனிசப் பாதையில் அனைத்து சொத்துக்களை பொதுவுடமை யாக்கினால் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வு மழுங்கு போய் விடுமே?

ஆயுதம் ஏந்தி  சுரண்டல் பேர்களிடமிருந்து மக்களின் பங்கைப் பிரித்துக் கொடுப்பது நல்ல வழியா என்றால் அதுவும் கிடையாது. சுரண்டல் பேர்வழிகள்  ஆயுதம் ஏந்திய இன்னும் பலரை அதிக சம்மளத்துக்கு வேளைக்கு வைத்துக் கொண்டு இன்னும் தைரியமாக சுரண்டத் தொடங்குவார்கள். அப்படியென்றால் என்னதான் செய்வது என்று தோன்றலாம். 



ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக  தனிநபர்கள் போராடுகிறார்களே அவர்களுக்கு ஆதரவு தரலாமா? அவர்கள் மூலம் சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த முடியுமா என்றால் அதுவும் சிரமமான காரியமே. இது போன்ற தனிநபர்கள் முக்கியக் குழுக்களில் தங்களின் செல்வாக்கு மிக்கவர்களை இடம் பிடிக்க வைத்து  அவர்க்ளின் வளத்திற்காக போராடுகிறார்களே தவிர மக்களின் நலம் மிகக் குறைவாகவே இருக்கிறது.

அப்ப்டியென்றால் என்னதான் செய்ய முடியும்.  இன்றைய சூழலில் பொதுவுடமையை நிலைநாட்டுதல் என்பது ஜனநாயகத்தால் மட்டுமே முடியும். ஒரு இயக்கம், மக்களால் நடத்தப் படும் மக்களுக்காக நடத்தப் படும் இயக்கம மட்டுமே அதை சாதிக்க முடியும்.  மக்களின் மூலமாக  தெளிவான கருத்துக்களை அடித்தட்டு சமுதாயம் வரைக்கும் கொண்டு செல்லுதல் வேண்டும்.  ஏற்றத்தாழ்வு இல்லாத வாழ்க்கையை ஏற்படுத்தும் வகையில் அந்த இயக்கம் செயல் படுதல் வேண்டும்.  இயக்கத்தில் இருக்கும் அனைத்து நபர்களின் வாழ்க்கையையும் கவனித்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும்.  தலைமை ஏற்று நடத்தும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அந்த அமைப்பின் செயல்வீரர்களுக்கு இருக்க வேண்டும்.   குறிப்பாக பதவி ஆசை பிடித்தவர்களிடம் அந்த இயத்தினர் விலை போகக் கூடாது. ஆனாலும் அவர்கள் ஜன்நாயகத்தில் பங்கேற்ற வேண்டும்.  

பதவி ஆசை பிடித்தவர்களிடம் விலை போக ஆரம்பித்தால் அந்த இயக்கமே பதவி ஆசை பிடித்தவர்கள் கைக்கு போய் விடும்.   அரசியலில் இறங்காமல் மக்களுக்காக சேவை மட்டும் செய்து கொண்டு ஒரு இயக்கம இயங்க முடியுமா? இயக்க முடியுமா என்றால் அதில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன.  அரசியலில் இயங்க முடியவில்லை என்றால் அந்த இயக்கம் ஒரு மிரட்டல் இயக்கமாகவே செயல் படும்.  பெரும்பாலும் பேரங்களில் படிந்துவிடக் கூடிய இயக்கமாகவும், நான் நல்லவன் என்று மட்டுமே சொல்லமுடியும். என்னுடம் இருப்பவர்கள் எப்படி என்றெல்லாம் சொல்லமுடியாது போன்ற தத்துவ வித்தகங்களை சொல்லவேண்டிய ஒரு சூழல்  அந்தப் போராளிகளுக்கு வந்து விடும். 

ஒரு இயக்கம், முழுக்க முழுக்க மக்களால் நடத்தப் படும் இயக்கம் சாத்தியமா என்றால் அது சாத்தீயமே, ஏற்கனவெ தமிழகத்தில் பெரியார் அது போன்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து தமிழ்கம் முழுவதும் கொண்டு சேர்த்தார்.  ஆனால் அரசியலில் ஈடுபடுத்தவில்லை.   அவர்கள் அரசிய்லில் இறங்கி சில பல கட்டங்கள் தாண்டிய பிறகும் கூட மற்ற மாநிலங்களை விட ஓரளவு நேர்த்தியாக தமிழகம் இருப்பதற்கு அவர் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இப்போது கூட ஊழல் ஒழிப்பு என்ற  ஒளியில் குவிந்த மக்கள் எத்துணை பேர். இவர்களை யெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும்.  ஆனால் இந்த் ஒருங்கிணைப்பு என்ற செயல் மட்டும் ஒரு தலைவனால் மட்டுமே நடக்கிறது. நடந்திருக்கிறது.



ஒவ்வொரு சமுதயாத்திலும் இந்தத் தேவை ஏற்படும்போது ஒரு மனிதர் தோன்றுகிறார். ஒரு மதத்தினை அமைக்கிறார். அந்த மதத்திறு ஒரு கொள்கைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.  இதுதான் காலம்காலமாக நடந்து வ்ந்திருக்கும் நிலைகள். இன்றைக்கு அவை கட்சிகளாக மாறி இருக்கின்றன.  அப்படி ஒரு தலைவன்  என்ற நிலையில் கொள்கை என்று அமைந்தால்  ஒரு பெரிய மாற்றமாக அமையும். ஆனால் அந்த கொளகையையும்கூட நாம் நம் வசதிக்கு ஏற்றாற்போல புரிந்து கொள்ளும் நிலைமையும் இருக்கிறது. 

முற்போக்கு சிந்தனையாக செயல் பட வேண்டிய மதங்கள் விலங்குகளாக , கைக்கால்களை கட்டிப் போடும் விலங்குகளாக மாறியது இந்த இடத்தில்தான்.  அந்த நிலையை மாற்ற படிக்கும் வழக்கத்தினை அதிகப் படுத்த வேண்டும் என்பதைவிட  உருவாக்க வேண்டும் என்றே சொல்லவேண்டும்.  பல பட்டங்கள் வாங்கியவர்களிடம்  கூட தினமும் செய்தித்தாள் படிக்கும்வழக்கம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.  தினமலர், தினத்தந்திம் தினமணி போன்றவை ஒரு கட்சியை ஆதரித்தும்,  பரபரப்புக்காக செய்தி வெளிவிடுவதால்  அதைப் படிப்பதில்லை என்று சொல்லுவார்கள். அபப்டியென்றால் டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு போன்றவை படிக்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது. குறைந்த பட்சம் அனைத்து இரண்டு மூன்று பத்திரிக்கைகளாவது படிக்க வேண்டும். ஏதாவது புத்தகங்கள் கதைப் புத்தகங்கள் கூட பரவாயில்லை. ஏதாவது படித்துக் கொண்டும் அதைப் பற்றிப் பொதுவில் பேசும் பேசும் வழக்கமும் வந்தால் கருத்துக்களை ஆராய்ச்சி செய்யும் நிலை உருவாகும்.  குறிப்பிட்ட காலகட்டங்களில் நல்ல புத்தகங்களையும் பற்றி பேசும் நிலை உருவாகும். ஒவ்வொரு பணியிடத்திலும் இரண்டு மூன்று தினசரிகள் மற்றும் சில பல புத்தகங்களை வைத்து படிப்பகங்களை உருவாக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களையும் சபையில் வைத்துப் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான்  கருத்துக்கள் முன்னிலை படுத்தப் படும். சிந்தனைகள் செயல் படத் துவங்கும். உண்மையான புரட்சி உலகை வசப் படுத்தும். வளப் படுத்தும்.

1 comment:

  1. நல்ல அலசல். கண்டிப்பாக இப்போதைய தேவை வழி நடத்த ஒரு நல்ல தலைவன் தான்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails