இந்தக் கதை ஒரு சரித்திரக் கதைதான் கி.பி.26ம் நூற்றாண்டில் நடப்பதாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இதன் முதல் பாகத்திற்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்.
ஜேம்ஸ் வாண்டி கைது செய்யப் பட்டதும் அதிர்ச்சி அடைந்தான். இந்தியாவிற்குள் நுழையும்போதே இப்படி ஆகவேண்டுமா? அதுவும் தனது தலைவன் ப்ளாக்பூட் ராஜா கொடுத்த வேளையை முடிக்கும் முன்பே இப்படி கைது செய்யப் படுவதா? இது தனது வீரத்திற்கு இழுக்கல்லவா? பேசாமல் தனது நண்பன் அபிஷேக் மாறனின் பெயரைச் சொல்லித் தப்பி விடலாமா? அவனது எண்ணத்தில் முதலில் தான் அபிஷேக் மாறனின் நண்பனாக உள்ளே நுழைந்து சிரிது இலைப்பாறி விட்டு பின்னர் சென்னையை நோக்கிச் செல்வது என்றுதான் திட்டம் இருந்தது,
ஜேம்ஸ் வாண்டியைக் கைது செய்த வீரர்கள் நேரடியாக மும்பை நக்ரின் தலைவரான ஷாம்ப்பூ சென்ங்கர் முன்பாக நிறுத்தினர். வாண்டி எப்படி என்ன சொல்லலாம் என்று குழம்பிக்கொண்டு இருந்த போதே இடி இடியென சத்தத்துடன் ஒருவர் வ்ந்து கொண்டிருந்தார். அது ஏதோ எண்ணைப் போடாத புராதாண காலத்து கதவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தபோது அது ஒரு தனிநபரின் சிரிப்பாகவும் அந்த நபரின் முகத்தில் முக்கால்வாசி மீசையால் மறைக்கப் பட்டிருந்ததையும் கண்டான். அவனுக்கு பின்னால் ஒரு இளைஞன் ஓடுவருவதுபோல் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் வாண்டிக்குத் தெரிந்தவந்தான். அவன் நமது அபிஷேக் மாறன் தான். அபிஷேக் மாறனே 6 அடி உயரம் இருப்பான். ஆனால் அவனே ஒரு சிறுவன் போல் காட்சி அளிக்கும் படி இருந்ததென்றால் அந்த மீசைக்காரரின் தோற்றத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அப்பா, விடுங்கள் இவனை, இவன் எனது நண்பன் ஜேம்ஸ் வாண்டி. ஐரிஷ் நாட்டு யூத்து,
இப்போது அந்தப் பெரியவரும், மும்பைத் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நானும் இவனும் ஒன்றாகப் படித்தோம். ஐரிஷ் நாட்டின் ஒரு காலத்தில் இவனது பெற்றோர் முக்கிய அரசியல் கட்சியை சொந்தமாக வைத்திருந்தனர். பின்னர் ஜனநாயகம் தலைத்தோங்க இப்போது தேசம் விட்டு தேசம் வந்து விட்டான். மிகச் சிறந்த வீரன். கணிணியை கண் அசைவிலேயே இயக்குவான் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ஷாம்ப்பூ சென்ங்கர் அவன் கண்கள் போன திசையைக் கண்டு அதிர்ந்தார். அவன் கண் போன திசை யில் இருந்த மாடத்தில் இளவரசி கரினா காற்றுவாங்கிக் கொண்டிருந்தார். இருந்தாலும் ஏற்கனவே அபிஷேக் மாறன், கரினாவை எனது நண்பனுக்குத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வர ஜேம்ஸ் வாண்டி மேல் ஆத்திரமும், அதே நேரத்தில் அபிஷேக் கின் கணக்கு தப்பாது என்ற எண்ணமும் மேலோங்கி இருந்ததால் ஒரு இனம் புரியாத உணர்வு ஷாம்ப்பூ சென்ங்கருக்கு ஏற்பட்டது,
அபிஷேக் மாறனே ஜேம்ஸ் வாண்டியை அழைத்துச் சென்று அந்த மா....பெரும் மனிதரிடம் அறிமுகப் படுத்திவைத்தான். மாமா இவந்தான் ஜேம்ஸ் வாண்டி, நாங்கள் படிக்கும் காலத்திலேயே இவன் உங்கள் ரசிகன். இவனது மடிக் கணிணியின் வால்பேப்பரே உங்கள் படம் தான் வைத்திருப்பான். உங்களை சந்திக்க வேண்டுமென்பது இவனது நீண்ட கால ஆசை. எதிர் பாராத விதமாக அவன் இங்கு வரும் போதே நீங்களும் இங்கு இருக்கிறீர்கள் என்றான்.
அப்படியானால் இவர்....... இழுத்தான் வாண்டி
இவர்தான் நமது கல்லூரிக்கால நாயகன் பெரிய மீசைக் காரர். பல என்கவுண்டர்களை எளிமையாகப் போட்டவர். ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக அந்திய தேசங்களிலும் புகுந்து என்கவுண்டர் போடுவதில் வல்லவர்.
தலைவா என்று கூவி விட்டான் ஜேம்ஸ் வாண்டி. அபிஷேக் மாறனின் புகழுரைகளிலும், ஜேம்ஸ் வாண்டியின் கூவுதலிலும் உச்சி குளிர்ந்த பெரிய மீசைக்காரர் தனது மின்னல் அடிக்கும் வெண் மீசையைத் தடவிக் கொண்டே அபிஷேக் மாறா உன் நண்பனுக்கு அட்சயாவில் தங்க ஏற்பாடு செய்து விடு. அங்கே இருக்கும் உள்ளரங்கத்தில் இன்று 16ம் கீட் வின்ஸ்லெட்டின் கட்டை விரல் நடனம் இருக்கிறது. உன் நண்பன் மிகவும் மகிழ்வான். என்று சொல்லிக் கொண்டு அபிஷேக் மாறனின் தந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.
எப்படியோ விடுதலை ஆகி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாலும் ஜேம்ஸ் வாண்டியின் மனதில் வரும் வழியில் பார்த்த அழகியின் அங்கங்களே நெளிந்து கொண்டிருந்தன. மேற்கத்திய பாணியில் புரட்சிப் பெண்கள் அணியும் வகையில் வளைவுகளையும் நெளிவுகளையும் சுளிவுகளையும் மேடுகளையும் பள்ளங்களையும் காட்டி ஆடை அணிந்திருந்த அந்த மங்கை வடக்கத்தி பெண்கள் போல் முக்காடு போட்டு முகத்தை மறைத்திருந்தாள். அந்த முகமூடியை கண்டுபிடித்தவன் மட்டும் இப்போது வாண்டியின் கையில் கையில் கிடைத்தால் கைமா செய்திருப்பான்.
இதே நேரத்தில் அபிஷேக் மாறன் எதேதோ பேசிக் கொண்டிருந்தான். வாண்டியும் ஊ ஊக் கொட்டிக் கொண்டே வந்தான். அவன் எண்ணமெல்லாம் அந்த அழகியைப் பற்றியே இருந்தது. மாறனே ஒரு கட்டத்தில் என்ன சிந்தனை பலமாக இருக்கிறது என்று கேட்டபோது தடுமாறிப் போனான். இருந்தாலும் வழியில் தான் கண்ட அழகியைப் பற்றிச் சொன்னான். அந்த பெரிய வாகனத்தில் வந்த மங்கையைப் பற்றி சொன்னான். உடனே அபிஷேக் மாறனும் பெரிய சிந்தனை வசப் பட்டவனாக அந்த கதையை யாரிடம் சொல்ல.., கேட்பவர்கள் எல்லாம் கால்சட்டை கிழியும் அளவு சிரிக்கிறார்கள்.உள்ளாடை உரியும் அளவு சிரிக்கிறார்கள். அந்த மங்கை பெரிய மீசைக் காரரின் மனைவி, நார்வே பகுதிக்கு ஒரு என்கவுண்டருக்குப் போனபோது இந்த நாரீமணியைப் பிடித்து வந்திருக்கிறார்.
இதைச் சொன்னபோது வயசானாலும் உன் இளமை போகல என்றும், வாட் ஏ மேன் என்ற வசனத்திற்கும் ஒரு கமல் ரசிகர், ரஜினி ரசிகரை வம்புக்கிழுத்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களின் ரசிகர்களின் சண்டைத்தான் ஐந்து நூற்றாண்டு கழித்தும் தொடர்கிறது என்றால் இந்த பெரிய மிசைக்காரரும் அதே பாணிக்குப் போகிறாரே என்று வியந்தான் ஜேம்ஸ் வாண்டி.
அந்த அழகியை அவர் போகும் இடங்களில் எல்லாம் தனி ரதம் கொண்டே அழைத்து செல்கிறார். ஆனால் அவளை யார் கண்ணிலும் அவளைக்காட்டுவதில்லை. நீ பார்த்திருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை இணைய வாக்கெடுப்பில் விட்டால் கள்ள ஓட்டுப் போடாமலேயே முதல் இடம் பிடிக்கும் என்றான்.
இளம் பெண்ணை மணந்த வயதாவனர்கள் கதை எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல.., என்று நினைத்துக் கொண்டே வந்த ஜேம்ஸ் வாண்டி பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த வாரே தூங்க ஆரம்பித்தான். எழுப்ப நினைத்த அபிஷேக் மாறன் அப்படியே அவனை விட்டுவிட்டு மற்ற வேளைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
நடு இரவில் கண்விளித்த ஜேம்ஸ் வாண்டிக்கு பசி வயிற்றைக் கிள்ள அந்த மாளிகையை ஒரு சுற்று சுற்றீ வர ஆரம்பித்தான். அங்கிருந்த ஒரு நீராதாரம் ஒன்றில் ஒரு கொஞ்சம் நீரும், காஃபியாதாரத்திலிருந்து ஒரு கோப்பை காஃப்பியும் பிடித்தான். தானியங்கி பீஸ்ஜா மூளையிலிருந்து ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்ட அவன் ஓரிடத்தில் வந்து நின்றான். அங்கே அவன் கண்ட காட்சியில் அப்படியே சமைந்து போனான். இந்தியாவின் முக்கிய அரசிய்ல பிரமுகர்கள் பெரும்பான்மையோர் அங்கே குழுமியிருந்தனர். பார்த்தவுடனே யூகித்து விட்டான். இது ஏதோ அதிபயங்கர ஆலோசனைக் கூட்டமென்பதை...................,
தொடரும்...,

//ஏதோ அதிபயங்கர ஆலோசனைக் கூட்டமென்பதை...................,//
ReplyDeleteகொள்ளை கும்பல் மாதிரியே இருக்கு
//நசரேயன் said...
ReplyDelete//ஏதோ அதிபயங்கர ஆலோசனைக் கூட்டமென்பதை...................,//
கொள்ளை கும்பல் மாதிரியே இருக்கு
//
வாங்க தல உங்களுக்கு கதை பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்