சிங்கப்பூருக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு பூரண நலத்துடன் தாயகம் திரும்பி ராணா, ஜீணா, நீனாம் கானா, இந்தன்னா, இத்தண்ணா என்று பல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக வாழுவதற்கு நம்மால் முடிந்த பிராத்தனைகளை செய்வோம்.
ஏற்கனவே ஒரு முறை ரஜினி உடல்நலம் இல்லாதபோதும் அவரது குருநாதர் கே.பாலசந்தரின் ஏற்பாட்டின்படி சிங்கப்பூர்தா அப்போது அங்கு படமாக்கப் பட்டதுதான் நினைத்தாலே இனிக்கும்.
இந்தப் படம் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே வந்திருந்தாலும்கூட ஒரு சராசரி மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்தில் நம்மைப் போன்ற ஒரு ஜீவனாக தோன்றிய பாத்திரம்தான் இந்த காணொளியில் வரும் ரஜினி. நமக்கே இவ்வாறு தோன்றியதென்றால் அந்தக் கால கட்ட மாணவர்களுக்கு தங்களில் ஒருவராக ரஜினி தோன்றியிருப்பார். தங்களில் ஒருவராக முதல்மதிப்பெண் வாங்கிய மாணவரை தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடும் சகமாணவர்களாக அப்போது ரஜினியை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

இந்த்க் குறிப்பிட்ட காட்சியில் துவக்கத்தில் ரஜினி காட்டும் அலட்சியம் பின்னா அவர் காட்டும் பதட்டம். அதையெல்லாம் விளக்கும் சக்தி நமக்கு இருப்பதாகவே தோன்றவில்லை.
ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கமே ரஜினியை மனதில் வைத்து ரஜினிக்காக மட்டுமே செய்தது போல இருக்கும். கொஞ்சம் பிசகினாலும் என்னவோ போல ஆகிவிடும் கதாபாத்திரம் அது. ரஜினியின் நண்பர் வீட்டில் விடைபெரும்போதும், கமல் வீட்டில் கிளம்பும்போது நகைச்சுவை செய்யும்போது பரிசோதனை செய்யும்போதும் விமானத்திலும் நிதானமாக மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.
மேடை நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் பலரும் சேர்ந்துதான் அந்த கலைநிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பேர் குறிப்பாக அன்று மட்டும் நிகழ்ச்சிகளை ரசிக்கும் நபர்கள் முன்னால் நிற்கும் மாணவனைத்தான் பாராட்டுவார்கள். கதை திரைக்கதை எழுதும் அதாவது ரூம்போட்டு யோசிக்கும் நபர்களுக்கு பாராட்டு மிக மெதுவாகத்தான் கிடைக்கும். அந்த உணர்வை ரஜினி இந்தப் பாடலின்போது அழகாக வெளிக்காட்டுவார். அது.................
முதன்முதலாக நகரத்திற்கு செல்லும் மாணவனுக்கும் இந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இது ஒரு பக்தி பாட்டுன்னும் சொல்லலாம். ஒரு ஆட்டத்தில் ரிசர்வ் பிளேயர் எப்படி தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாக இந்தக் கதாபாத்திரம் எனக்குப் படுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற ரஜினி நலமுடன் திரும்பியத்தைப் போல இம்முறையும் நல்லபடி திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்வோம்
No comments:
Post a Comment