Monday, May 9, 2011

இந்த ஆண்டு பதினொன்று சேரும் மாணவர்களுக்கு..,

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்டன.   இன்னும் சில நாட்களுக்கு மாறி மாறி வாழ்த்துக்களும்  பேட்டிகளும் வந்து கொண்டே இருக்கும்.    ஒவ்வொரு பள்ளியிலும் எம் மாணவர்களும் இத்தனை பேர் 1100+  , இத்தனை பேர் 1150+ , இத்தனை பேர் 1200+ என்றெல்லாம் மாறி மாறி விளம்பரம் கொடுப்பார்கள்.




அந்த விளம்பரங்கள் இப்போது வருவதைவிட 10ம் வகுப்பு முடிவுகள் வந்த பின்பு இன்னும் அதிகமாக இருக்கும்.  இந்த -------+  விளம்பரம் போடும் பள்ளிகள் எல்லாம் பெரும்பாலும் 475க்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கும் பள்ளிகளாக இருக்கும்.   முடிந்தால் இன்று வெளியாகியுள்ள + 2 தேர்வுகளில் ஒவ்வொரு தனித் தனி மாணவனும் +2ல் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு அதே மாணவன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு என்பது பற்றி  ஒரு ஒப்புமை பாருங்களேன்.  பெரும்பாலான பள்ளிகள் இதில் தோல்வியே அடைகின்றன.



பல 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்டு மதிப்பெண் வாங்கியவர்கள் 90-95ல் வந்து நிற்கிறார்கள்.  பல 90 % + மாணவர்கள் 90க்கும் கீழே போகிறார்கள்.  இவ்வாறு பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண் சதவிகிதத்தை இரண்டு ஆண்டுகளில் குறைத்திருக்கும் பள்ளிகளில் பல மாணவர்கள் 1150க்கும் மேல் வாங்கியிருந்தால் அது அந்த மாணவர்களால் வாங்கப் பட்டதா? அந்த பள்ளி கொடுத்த பயிற்சியினால் வாங்கப் பட்டதா? 



எனவே மாணவர்களே, மாணவர்களின் பெற்றோரே இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த கோணத்திலும் ஒரு முறை ஆய்வு செய்து பின்னர்  பள்ளியை முடிவு செய்யலாமே? மாணவர்களின் ஆளுமைத் திறன், போராடும் தன்மை போன்ற பல விஷயங்கள் முக்கியாக இருந்தாலும் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் தலையாய இடம் பிடித்து நிற்கின்றன. நமக்குத் தேவை சிறந்த பயிற்சி அளித்து உயர்வடையச் செய்யும் பள்ளிகளே.   சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு அவர்களின் சிறப்பான உழைப்பால் தாங்கள் பெயர் வாங்கிக் கொண்டு நிற்கும் பள்ளிகள் அல்ல


பின் குறிப்பு:- இவ்வாறு மதிப்பெண் வாங்கியிருப்பதாக விளம்பரம் செய்யும் பள்ளிகள் அந்த மாணவர்களின்  10 வகுப்பு மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்தால் சொல்லுங்களேன்.

பின்குறிப்பு 2: இணைய்ம மூலம் அதை தெரிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?

பின்குறிப்பு3:- உங்களுக்கு தெரிந்து இவ்வாறு மதிப்பெண் சதவிகிதம் குறைந்த மாணவர்கள் அதிகமா? அதிகரித்த மாணவர்கள் அதிகமா?


4 comments:

  1. சிந்திக்க வேண்டிய விசயம் தல.

    பெரும்பாலான இடங்களில் நல்ல படிக்கிற மாணவர்களைத்தான் சேர்த்து பேர்வாங்குகிறார்கள்.

    ReplyDelete
  2. //சிநேகிதன் அக்பர் said...

    சிந்திக்க வேண்டிய விசயம் தல.

    பெரும்பாலான இடங்களில் நல்ல படிக்கிற மாணவர்களைத்தான் சேர்த்து பேர்வாங்குகிறார்கள்.
    //


    அவ்வாறு பெயர் வாங்கும் பள்ளிகளில் சிலர் நல்ல மதிப்பெண்ணும் நிறைய மாணவர்கள் பத்தாம் வகுப்பை விட குறைந்த மதிப்பெண்களும் பெற்றுவிடுகிறார்கள்.

    ReplyDelete
  3. யோசிக்க வேண்டிய விசையம், அவசியமான பகிர்வு.

    ReplyDelete
  4. //சிங்கக்குட்டி said...

    யோசிக்க வேண்டிய விசையம், அவசியமான பகிர்வு.
    //

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails