Sunday, May 15, 2011

ஏமாந்திட்டீங்களே இளைய தளபதி

ஒருவழியாக அப்படி இப்படி என்று ஒருமாத கால இடைவெளிக்குப் பின்னர் முடிவுகள் வந்து விட்டன. அதிமுக தலைவர்  நான்காவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறார். அவர்தான் ஆட்சி அமைப்பார் என்று பெரும்பான்மையான பதிவர்கள் வளைத்து வளைத்து பதிவிட்டுக் கொண்டிருந்தனர். இணைய அளவில் பலரும் பிரச்சாரங்களில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தனர்.  சற்றும் எதிர்பாராத வகையில் அவர் வென்று நான்காவது முறையாக முதல்வராகப் போகும் வேளையில் அவர்ருக்கு ஆதரவாக இடுகைகள் இட்டுக் கொண்டிருந்த பதிவர்களே இது மாற்றத்திற்கான வாக்கு.  திமுக ஆட்சியைப் பிடிக்காதவர்கள் வாக்கு என்று சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள்.    ஒரு கட்சி பிடிக்காத நிலையில் அடுத்த கட்சிக்கு வாக்களித்தாக வேண்டிய நிலையில் தள்ளப் பட்டதாக வலைப்பூக்களிலும் ,  முகநூல்களிலும் ட்விட்டர்களிலும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.


பாருங்கள் இளைய தளபதி அவர்களே, பேசாமல் நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் பங்கெடுத்து இருக்கலாம். மாற்று அணி தேவை என்று நினைப்பவர்கள் உங்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். நீங்கள் தேர்தலில் நிற்காமல் பெரியார் வழியைப் பின்பற்றுவதாக சொல்லி கொண்டு இருக்கலாம். ஒரு வேளை தேசியக் கட்சியாக மாறினால்  காந்தி வழி என்று கூட சொல்லிக் கொண்டு சுற்றலாம்.  உங்கள் தந்தையை முதல்வராக்கி ரசித்திருக்கலாம். உங்கள் தாயாரை ஐ.நா.சபையில் பாடவைத்து அழகுபார்த்திருக்கலாம்.

மாணவர்கள் சபை என்று ஒன்றை புதிதாக உருவாக்கி அதில் உங்கள் மகனை முதல்வராக்கி ரசித்திருக்கலாம்.

நம்நாட்டில் நடிகரைத்தான் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒரு தயாரிப்பாளரை, இயக்குநரை, ஒரு வசன்க்காரரை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.  நீங்கள் தேர்தலில் நிற்காமல் இருக்கும் காரணத்தால்  பதவியை விரும்பா பத்தரை மாற்றுத் தங்கள் என்ற பட்டத்தை அமெரிக்கா, இங்கிலாந்து , ஈராக் போன்ற எல்லா நாடுகளிலும் அவரவர் மொழியில் பெயர் வைத்து உங்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.


இப்போது பாருங்கள் நமது பதிவர்களை மூன்றாவது அணி இல்லாத சூழலில் புலம்ப விட்டு விட்டீர்களே, 1996ல் ரஜினி எவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டாரோ அதே போல் நீங்களும் இந்த 2011ல் கோட்டை விட்டுவிட்டீர்கள் இளைய தளபதி அவர்களே.......,


ஒரு சந்தேகம்: கீழே வரும் முன்னோட்டத்தில் 0.50ல் சந்தானம் பேசும் வசனம் விஜய்க்கு தெரிந்து வைத்ததுதானா?விஜய் எதிரிகளை பழிவாங்கி விட்டதாக சந்தானம் சொன்னவுடன் விஜய் எவ்வளவு மகிழ்ச்சியாக சிரிக்கிறார். அதே போல் தாங்கள் ஆதரித்த கட்சி ஜெயித்த போது கூட அதை மகிழ்ச்சியாக் கொண்டாடாமல் வேறு வழியில்லாமல் ஆதரித்தோம் என்று சொல்லிக் கொண்டு சுற்றுவது எந்த வகை என்று தெரியவில்லை.  இத்தனைக்கும்  திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட புதிய ஆட்சிக்கு வாழ்த்து சொல்லிவிட்டார்கள்.

8 comments:

 1. அரசியலுக்கு ஒரு வடிவேலுவே போதும்...

  ReplyDelete
 2. Hello jaya is not 4th time. Now she is third time for chief minister post......

  ReplyDelete
 3. //Philosophy Prabhakaran said...

  அரசியலுக்கு ஒரு வடிவேலுவே போதும்...
  //

  வாங்க தல, வட்ஜ்வேலுவிட பெரியவர் சிவாஜி வந்திருக்கார், அடுத்து ஆச்சி வந்திருக்காக, வடிவேலு செய்தது வெறும் பிரச்சாரம் மட்டுமே, என்னைப் பொறுத்த மட்டும், அவர் கட்சி உறுப்பினரா என்றுகூட தெரியவில்லை. இதற்கு முன் பிரச்சாரம் செய்த நடிகர்களான சந்திரசேகர், டி.ஆர், தியாகு போன்றவர்கள் கட்சியின் உறுப்பினர்கள். வடிவேலு அப்படியில்லை என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 4. //ismailmohemed said...

  Hello jaya is not 4th time. Now she is third time for chief minister post......
  //

  1991ல் முதல்முறை, 2001ல் இரண்டாம் முறை, அடுத்து ஓபிஎஸ்க்கு பிறகு மூன்றாம் முறை, இப்போது நான்காம் முறை. சரிதானே நண்பரே

  ReplyDelete
 5. நெசமாத்தான் சொல்லுறீங்களா ?

  ReplyDelete
 6. //நசரேயன் said...

  நெசமாத்தான் சொல்லுறீங்களா ?
  //

  நமது நண்பர்கள் புலம்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது நண்பரே

  ReplyDelete
 7. //1991ல் முதல்முறை, 2001ல் இரண்டாம் முறை, அடுத்து ஓபிஎஸ்க்கு பிறகு மூன்றாம் முறை, இப்போது நான்காம் முறை. சரிதானே நண்பரே
  //


  Sari thaan.

  ReplyDelete
 8. //
  1991ல் முதல்முறை, 2001ல் இரண்டாம் முறை, அடுத்து ஓபிஎஸ்க்கு பிறகு மூன்றாம் முறை, இப்போது நான்காம் முறை. சரிதானே நண்பரே
  //

  ok ok.

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails