Wednesday, May 4, 2011

விஜயகாந்த், சிம்பு Vs ஒசாமா

டிஸ்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப் பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

பாகிஸ்தானில் நேரடியாக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கி அமெரிக்கா லேடன் மகன் ஒசாமாவை அழித்துவிட்டது. இதில் பாகிஸ்தானுக்கு தங்கியதும் தெரியாது. இவர்கள் அழித்ததும் தெரியாது என்ற நிலைப் பாடுகளை கடைபிடித்துவருகிறார்கள்.


அமெரிக்க தலைமையிடம் இப்போது ஊடக நண்பர்களால் பெரிதும் நோண்ட முடியாத காரணத்தால்  அந்த படையில் இருந்த வீரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம்  நமது ஊடகங்கள் பேட்டி எடுக்கின்றன. அப்போது கீழ்கண்ட நபர்கள் அங்கிருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்:-


ரஜினி காந்த்: -  உண்மையில் என்ன நடந்ததுன்னா என்ன சுத்தி நிறைய ஊடக நண்பர்கள் இருந்தார்கள். அப்போது நான் கோப்பில் கையெழுத்து போடுவதுபோல படம் எடுக்க விரும்பினார்கள். அப்போது கைதவறி அந்த கோப்பில் கையெழுத்து விழுந்துவிட்டது. நான் எப்போதும் உலக நாடுகளின் இறையாண்மைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்


கமல்ஹாசன்:-  ஓ.கே. ஃப்ரண்ட்ஸ். இப்ப நடந்தது ஒத்திகைதான்.  திரும்பிக்கங்க நான்  உண்மையான நடவடிக்கை எடுக்கணும். இது ஹைலி கான்ஃபிடன்ஷியல்.


விஜய்காந்த் :-   என் கையால செத்தால் சொர்க்கம் நிச்சயம்.  அதுனாலத்தான் சாக வைச்சேன். 


அஜித் குமார்:-  நல்ல காரியம் செய்யமுன்னு ஆசை இருந்தா போதும் செய்திடலாம். அதனால் நான் ராணுவத்தை இன்னொயோட கலைச்சிடறேன்.

விஜய்:- (மனசுக்குள்ளயே) ஐயோ அப்பா இப்ப என்ன பண்ண

தங்கபாலு: சதாம் ஹூசைன் கொல்லப் பட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

டோனி:-  ஒருவேளை இதில் நாங்க தோற்றுப் போயிருந்தால் ஏன் பாகிஸ்தான் போன?  அவங்ககிட்ட ஏன் அனுமதி வாங்கல? அப்படின்னெல்லாம் கேள்வி வந்திருக்கும். ஆனா நல்லவேளை நாங்க ஜெயிச்சிட்டோம். அதிலயும் ஹெலிகாப்டர் ஷாட் ல ஜெயித்தது சந்தோஷமா இருக்கு.

யுவராஜ்சிங்:-  நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல ஒரு முக்கியமான நபருக்காகத்தான்னு .  அது எங்க அண்ணன் விஜயகாந்துக்குத்தான் சமர்ப்பணம். ஏன்னா அவர் படம் பார்த்துத்தான் நான் சண்டையே பழகினேன்.


சிலம்பரசன்:- என்ன வாழ்க்கைடா இது?  செத்தவன்கூட இருந்தது அவன் மனைவி இல்லையாமே!தனுஷ்:- நாங்களெல்லாம் ஒண்டியா ஆள்கிடைச்சா கும்மு கும்முனு கும்முவோம். இதுல ஒசாமாவே கிடைச்சா..,9 comments:

 1. ////யுவராஜ்சிங்:- நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல ஒரு முக்கியமான நபருக்காகத்தான்னு . அது எங்க அண்ணன் விஜயகாந்துக்குத்தான் சமர்ப்பணம். ஏன்னா அவர் படம் பார்த்துத்தான் நான் சண்டையே பழகினேன். /// பாஸ் இத மட்டும் விஜகாந் கேக்கணும் ரொம்ப சந்தோசப்படுவாரு )))
  http://nekalvukal.blogspot.com/

  ReplyDelete
 2. //கந்தசாமி. said...

  ////யுவராஜ்சிங்:- நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல ஒரு முக்கியமான நபருக்காகத்தான்னு . அது எங்க அண்ணன் விஜயகாந்துக்குத்தான் சமர்ப்பணம். ஏன்னா அவர் படம் பார்த்துத்தான் நான் சண்டையே பழகினேன். /// பாஸ் இத மட்டும் விஜகாந் கேக்கணும் ரொம்ப சந்தோசப்படுவாரு )))
  http://nekalvukal.blogspot.com/
  //


  வாங்க கந்தசாமி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. என்னடா வாழ்க்கை செத்தவன் கூட மனைவி இல்லை என்று சொல்லும் சிம்பு வானத்தை கோட்டைவிட்டது இதனாலோ!

  ReplyDelete
 4. //ஆ.ஞானசேகரன் said...

  அசத்தல் நகைசுவை
  //

  நன்றி தல, ஆனால் இதற்கு ஏனோ ஓட்டுக்களையும் காணோம், பின்னூட்டங்களையும் காணோம்

  ReplyDelete
 5. //Nesan said...

  என்னடா வாழ்க்கை செத்தவன் கூட மனைவி இல்லை என்று சொல்லும் சிம்பு வானத்தை கோட்டைவிட்டது இதனாலோ!
  //

  வாங்க தல.., நீங்கள் வேதம் பார்த்தவராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வானம், வேதத்திடம் மட்டும்தான் தோற்கிறது. மற்றபடி ஜெயித்துவிடும்.

  வேதம் ஐந்து பூதங்களையும் அடக்கியது. அதில் ஒன்றுதான் வானம்

  ReplyDelete
 6. பல மனைவி கொண்டவனே
  பெரிய குடும்பம் பெற்றவனே
  என்னை போன்றவனே
  என் கண்ணை போன்றவனே.....என்று கருணாநிதியின் கண்ணீர் மடலை விட்டு விட்டீர்களே நண்பரே

  ReplyDelete
 7. வாங்க அருள், இது நகைச்சுவைக்காக நகைச்சுவையாக எழுதப் பட்டது

  ReplyDelete
 8. உண்மைத் தொண்டர்கள்Friday, May 06, 2011 1:25:00 PM

  //தங்கபாலு: சதாம் ஹூசைன் கொல்லப் பட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்//

  ஈராக் கே பத்தி எரியும்

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails