Thursday, November 27, 2008
நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின்................
இதற்காக தனியாக சம்பளம் வேறு கொடுக்கிறார்கள். காமிக்ஸ்களில் இதற்கென்றே தனியாக விஞ்ஞானிகளும் இருப்பதாக காட்டுவார்கள். அவர்களுக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். காமிக்ஸ் பற்றிய இணைய தளங்களே இவர்கள் பெயரில்தான் நடத்தப் படுடின்றன. என்பதே மக்கள் இவர்களை எவ்வாறு கவர்ந்துள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக அமைகின்றன.
ஆனால் உலகத்தின் அதிபயங்கர ஆயுதம் என்னவென்பதனை உலகலந்த தமிழ் சமுதாயம் ஏற்கன்வே கண்டறிந்து விட்டார்கள். பழைய பாடல் ஒன்றினைக் கேட்க நேர்ந்தது. அதில்தான் இதைப் பற்றி பேசுகிறார்கள். நிலைகெட்டுப் போன நயவஞ்சகனின் நாக்குதான் உலகத்தில் பயங்கர ஆயுதம்.
பில்டப் பாருங்கள். வெருமனே நாக்கு என்று கூறினாலே தத்துவார்த்தமாக ஏற்றுக் கொள்வார்கள். கவிஞர் அதனை இன்னும் கூர்படுத்துகிறார், (மிகைப் படுத்துவதாக சொன்னால் ஏற்க முடியாது)
வஞ்சக எண்ணம் கொண்டவனின் நாக்கினைச் சொல்லுகிறார். அவனும் நயவஞ்சகனாக இருக்கிறான். அவனும் தன்னிலை தவறியவனாக இருக்கிறான். அவனது பேச்சுக்களைப் போன்ற அழிவு தரக்கூடிய ஆயுதம் உலகத்தில் வேறெதுவும் கிடையாது.
நாட்டில், உலகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் அதன் தொடர்ச்சியாக பலரும் பல்வேறு விதங்களீல் பேசுவதைப் பார்க்கும் போதும் அணு ஆயுதங்களை விட கொடிய நிகழ்வுகள் இதனை வாய்க்கு வந்த படி பேசுவதால் ஏற்படுகிறது என்பதனை உணர வேண்டும். அன்றே சொன்னவன் தமிழன் என்பதனை தமிழ் கூறும் நல்லுலம் உணர வேண்டும். ஊருக்கும் சொல்ல வேண்டும்.
மறக்காமல் தமிழீஸிலும், உயர்த்திப் பிடித்த தமிழ்மணக் கட்டை விரலிலும் கிளிக் செய்து விடுங்கள்
Tuesday, November 25, 2008
ஒரே கதை தனித்தனிப் படங்களின் ஹீரோக்களாக அஜித், வடிவேலு
60களில் வந்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. ராஜா கதை ஜமீந்தார் கதையாகி நவீனப் படுகிறது. 20ம் நூற்றாண்டுக் கதையாய் மாறி வெளிவருகிறது.
சில ஆண்டுகள் கழித்து கதை இன்னும் நவீனப் படுகிறது. தொலைந்து போன குழந்தை வில்லன் கட்டுப் பாட்டில் வளர்கிறார். திருடனாக வளர்கிறது. பின்னர் ஆள்மாறாட்டம். தந்தையைக் கொண்றவனை சகோதரர்கள் ஒன்று சேர்ந்து பழிவாங்கி கடைசியில் சுபம். குடியிருந்த கோவில்
மூன்றிலுமே நம்பியார் கட்டுப் பாட்டில்தான் ஹீரோ.
அடுத்த கட்டத்தில் இன்னும் ந்வீனப் படுகிறது. சென்ற படத்தில் வில்லனைப் பிடிக்க ஆள்மாறாட்டம் நடக்கிறது. இதில் கொள்ளை அடிக்க உருவ ஒற்றுமையை பயன்படுத்துகிறார் வில்லன்(ஹீரோ). நினைத்ததை முடிப்பவன்.
கொள்ளை என்ற அளவில் இருந்த கதை கொலைக்குச் செல்கிறது. ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப் பட அடுத்தவர் ஆள்மாறாட்டம் செய்து ஹீரோவைக் காப்பாற்றுகிறார். சிவாஜியின் உன்னைப் போல் ஒருவன்.
ஆள்மாறாட்டம் செய்யும் ஹீரோவைக் காப்பாற்ற வரும் குப்பத்து இளைஞனாக ரஜினி தோன்ற போக்கிரி ராஜா.
மீண்டும் பின்னோக்கிச் சென்று மாற்றங்கள் ஏற்படுகிறது. வில்லனைப் பிடிக்க ஆள்மாறாட்டம் உபயோகப் படுத்தப் படுகிறது. ஆள்மாறாட்டம் செய்த அதிகாரி இறந்துவிட கதை பில்லா.
போக்கிரி ராஜாவில் இருவரும் சகோதாரர்களாக மாறுகிறார்கள். ஒருவர் வெளியூரிலிருந்து கிராமத்திற்கு வந்து சகோதரனைக் காப்பாற்ற உழவன் மகன்.
கொலைக்குற்றத்தை போதைப் பழக்கமாக மாற்ற வருகிறது. தூங்காதே தம்பி தூங்காதே.
சரி தலைப்புக்கு வருவோம். உத்தம புத்திரன் 23ம் புலிகேசியாகவும் ( அது எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கும் சுட்டி இது) பில்லா, பிற்காலத்தில் பில்லா2007ஆக வந்ததல்லவா. அதுதான் மேலே தலைப்பு.
மற்க்காமல் தமிழ் மண கட்டைவிரலிலும். தமிழிலீஸிலும் கிளிக் செய்யுங்கள்
Monday, November 24, 2008
தந்தை-மகன் சினிமாக்கள்.
மூன்று முகம்.
அலெக்ஸ் பாண்டியனைக் கொன்றவனை ம்கன் ரஜினிகள் போட்டி போட்டுக் கொண்டு கொலை செய்யும் படம் ஒரு ரஜினி அ.பா.வின் மறு பிறவியா? என நினைக்கும் வகையில் எடுக்கப் பட்டிருக்கும். மசலா படம் என்றாலும் ரஜினியின் மாறுபட்ட வேடங்களில் திறமை காட்டியிருப்பார்.
கடல் மீன்கள்.
தந்தையை மகன் பழிவாங்கும் படம். பண்பாட்டை வேறு கட்டிக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கப் பட்டிருக்கும். கடைசியில் அப்பா அம்மா ஆகியோர் ஜலசமாதி அடைந்து விடுகிறார்கள். உழைப்பிற்கு உதாரணம் ஆன அப்பா, கமலின் உழைப்பைக்கும் எடுத்துக் காட்டும் முயற்சி.
முத்து
அப்பாவை தெய்வமாக காட்டி மகனை பக்தனாகக் காட்டி ரஜினியை வணங்கும் ரசிகர்களுக்கு விடுகதை போட்டு காலத்தின் கையில் பொறுப்பை ஒப்படத்த படம்.
அருணாச்சலம்
அப்பா சொன்னார் மகன் முடிப்பார் என எடுக்கப் பட்ட படம். மகன் எப்படி முடித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப படம் பார்க்கும் போது கூட தந்தையின் ஞாபகம் வரலாம்
இந்தியன்
அப்பா மகன் தானே.... ஒவ்வொரு மகனும் நினைத்திருக்கலாம். எங்க அப்பா சுதந்திரப் போராட்ட வீரர் அட்டை வைத்திருந்தால் ரிசர்வேசன் கிடைக்கும் என்று. கடைசியில் பயந்திருக்கலாம்.
வானத்தைப்போல....
படம் பார்க்கும் வரை அப்பா என்றே நினைக்க வைத்த படம். அப்பானா இவர் அப்பா என சொல்ல நினைத்து அண்ணா என்று சொல்ல வைத்த படம்.
சூரிய வம்சம்.
அமிதாப் பச்சனையே அப்பாவை நினைத்து கண்கலங்க வைத்த படம். பிறகு ரீமேக் கில் நடித்தும் கண் கலங்கினார்.
தியாகம் செய்தே கலங்கடித்த அப்பாக்களுக்கு மத்தியில் கட்சி ஆரம்பிக்க கூப்பிட்ட அமைதிப் படை அப்பாவும் உண்டு.
ஆக சினிமாவில் அப்பாக்கள் ஆயிரம்.
Thursday, November 20, 2008
ரீமேக் சுவடே இல்லாத தமிழ் திரைப்படங்கள்
- இன்று பழைய படங்கள் பலவற்றை ரீமேக் செய்வதைப் பார்க்கிறோம். சில படங்களை இன்ஸ்பிரேசன் என்று கூறுவார்கள். ஆனால் 80 களில் வெளீயான சில திரைப் படங்கள் அதற்கு முந்தைய கால படங்களீன் ரீமேக், ஆனால் புதிதாக வந்தது போல் வந்தன்.
1.புதுமைப் பித்தன் VS நானும் ஒரு தொழிலாளி- MGRன் படத்தில் தந்தை மன்னர். மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
- நானும் ஒரு தொழிலாளீயில் தந்தை முதலாளி. மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.
- 2.பெரிய இடத்துப் பெண் & சகலகலாவல்லவன்
பெ. இ. பெ.வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது முறைப் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்கிறார்கள். அக்காவை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார் - ச.க.வ..வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது சொத்தை ஏமாற்றி விடுகிறார்கள். தங்கைவயை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு த்ங்கைக்கும் வாழ்க்கைக்கும் உறுதி செய்து உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்.
- அன்று வந்ததும் அதே நிலா பாடல் இன்று வந்தபோது இளமை இதோ, இதோ
- 3.படிக்காத மேதை & பேர் சொல்லும் பிள்ளை
இதனைப் பற்றி பலரும் பேசிவிட்டதால் ரீமேக் ஒரளவு வெளியே தெரிந்து விட்டது. - 4.உத்தம புத்திரன் & 23ம் புலிகேசி
அதே இரட்டை பிள்ளைகள், அதே மாமன், அதே போல் ஒரு குழந்தை கடத்தப் படுகிறது. ஒரு பிள்ளை மாமன் சொல் கேட்டு வளர்ந்து யாரடி நீ மோகினி பாடுகிறார். இதில் ஆடிவா தேடிவா பாடுகிறார். இன்னொரு பிள்ளை சொந்த புத்தியுடன் வளர்ந்து தம்பியை சிறையில் தள்ளி மாமணைத்திருத்தி நாட்டை மீட்டு தம்பியைத்திருத்தி கடைசியில் சுபம். - இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷ்யம். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையும் சமுதாய சீர்திருத்த கருத்துக்களும் இது கண்டிப்பாக வர வேற்கத்தகுந்த ஒன்று.
- எங்க வீட்டுப் பிள்ளை கூட மேலே சொன்ன கதைதான் அது முற்றிலும் கண்ணாடி பிம்மம் போல் ரீமேக் செய்யப் பட்டுக் கொண்டேஏஏஏ இருக்கிறது
இதே போன்று மேலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்
MGR ஆக மாறிய M.N.நம்பியார் சாமி
எம்.கே.ராதா, நாகையா, சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர். இந்தியில் அனைத்து நடிகர்களும் (அமிதாப் கூட) செய்துள்ளனர். அந்த வலிமை வாய்ந்த தந்தை அல்லது பெரியவர் வேடத்திற்கு பழைய நாயகர்களே சிறப்பாக அமைய முடியும்.
80களில் எம்ஜியாரின் இடத்தை திரையுலகம் நம்பியார் சாமி அவர்களுக்குக் கொடுத்து மரியாதை செய்தது. தூரல் நின்னு போச்சு, தாய் வீடு, தாய் நாடு, உழவன் மகன் ஆகிய படங்களின் பாத்திரங்கள் ஒரு நாயக நடிகர் செய்ய வேண்டிய பாத்திரங்களே. இந்த பாத்திரங்களை அவருக்கு கொடுத்ததன் மூலம் திரையுலகம் அவரை ஒரு நாயகனாக ஏற்றுக் கொண்டு முழு மரியாதை செய்ததாகவே ஏற்றுக் கொள்ளலாம்.
நாயகனாக ஆரம்பித்தவர், நகைச்சுவையாளனாக பின்னர் வில்லனா(ர்)க வலம் வந்தாலும் தமிழகம் அவரை பெரிய பலசாலியாகவே பார்த்தது. அது உண்மையும் கூட. அவரை வெற்றி பெருவதன் காரணமாகவே பல படங்களில் நாயக நடிகர்களின் பாத்திரம் வெற்றி அடைந்ததாகச் சொல்லலாம். சராசரி வில்லன்கள் செய்திருந்தால் படம் தோல்வி அடையக் கூடிய அபாயம் இருந்திருக்கிறது. அதனாலேயே இரண்டு கூடாரங்களிலும் அவரால் தொடர்ச்சியாக நடிக்க முடிந்தது.
எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நட்பு இருந்தது என்பதை நம்பியாரே
ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:எனக்கு
எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர்
என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர்
போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப்
போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.அந்த விழாவில் தலைமை
விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சொல்லுவதானால் அவர் மட்டுமே நம்பியார் மற்ற யாருமே துவக்க காலத்தில் இவ்வளவு மரியாதையுடன் அழைக்கப்
பட்டதில்லை
Wednesday, November 19, 2008
கிரிக்கெட் ஏன் இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது?
2.கிரிக்கெட்டின் பரபரப்பை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இன்னும் எத்தனை ரன்? எத்தனை பால்? எளிதில் புரியும். கால்பந்தில் கூட எத்தனை கோல் என கேட்க முடியும், ஆனால் கிரிக்கெட்டில் நிமிடத்திற்கு நிமிடம் புள்ளிவிவரங்கள் மாறும். பரபரப்பு கூடும். மற்ற விளையாட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது.
3.கால்பந்து, கைபந்துகளில் யார் சிறப்பாக விளையாடிகிறார்கள் என்பது பார்த்தால் மட்டுமே புரியும்.
4.அதுவும் விளையாட்டு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிரிக்கெட்டுக்கு அந்த அவசியம் கிடையாது.
5கிரிக்கெட் பற்றி நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும்.(20/20 பத்தி அப்புறம் பார்ப்போம்).
6.தூய வெள்ளை மற்றும் கவர்ச்சியான கல்யாண மாப்பிள்ளை போன்ற உடைகளுடன் கிரிக்கெட் விளையாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளில் அப்படி இல்லை.(செஸ், துப்பாக்கி தவிர).
7.டி.வி.யில் பல கோணங்களில் காட்டும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. (ஸ்டம்பிலயே காமிரா வைக்கிறாங்களே)
8. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஒளிபரப்பும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. அதனால் தொலைக்காட்சிக்கு தனிகாதலே உண்டு.
9.கிரிக்கெட் முடிந்த பின் அரைமணிநேரம் விவாதிக்க முடியும்.அதற்கு மேல கண்ட காரணங்களே உதவும்.
10.மூச்சு விடுவது கூட சாதனையாக கிரிக்கெட்டில் மட்டுமே கருதப்படுகிறது. தொடர்ச்சியாக 0 எடுப்பது கூட இங்கு சாதனை. தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் கடைசி பந்துகளில் 4 எடுத்தால் இந்த மைதானத்தில் இது 3ம் தடவை. இந்த நாட்டிக்கெதிராக இது 8ம் முறை. இந்த நவம்பர் மாதத்தில் இது முதல் முறை. அந்த நேரத்தி சச்சின் மிட் ஆனில் நிற்பது இது 15ம் முறை என்றெல்லாம் சாதனைப்பட்டியல் போடுவார்கள்.
11.இந்தியாவும் பாகிஸ்தானும் சமபலத்தில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஹாக்கி கூட ஒரு காலத்தில் புகழுடன் இருந்தது நினைவு இருக்கலாம்.
மீள்பதிவு அண்ணாச்சி
கமல்-ஸ்ரீதேவி, குடும்ப அமைதி
கல்யாணம் ஆனதும் கணவனுக்கு அடிமை, குழந்தை பிறந்தால் அதற்கு அடிமை. எப்ப
சுதந்திரமாய் வெளிய வருவீங்க"
சாதரண்மாய் பார்த்தால் பெண்விடுதலைக்கான அற்புதமான ராக்கட் வசனமாக தோன்றும்.
ஆனால் கமலின் {வ.நி.சி.யில்} குடும்ப நிலையை சூழ்நிலையைப் பார்த்தால் ஒரு
உண்மை புலப் படும். இதே வசனத்தை ஸ்ரீதேவி, கமலைப் பார்த்தும் பேசலாம் .பேச விட்டுப்
பாருங்கள். வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்.பாருங்கள். கமலுக்கும் அதே சூழ்நிலைதான். கமலும் தந்தைக்கு அடிமையாய் நினைக்கிறார். தந்தையும் கமலைஒரு சுமையாகவே நினைக்கிறார். இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் சுதந்திரம் வாங்க நினைக்கிறார்கள். குடும்பம் சிதைகிறது. கமல் தனது குடும்பத்தின் ஈன நிலையை ஒரு வசனத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு கூறுகிறார்.
பெற்றவர்களுக்கு பிள்ளையை நேர்படுத்தும் பொறுப்பு உண்டு. பிள்ளைகளுக்கும் பெற்றவர்களை கவனிக்கும் பொறுப்பு உண்டு, கண்வன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக (அடிமையாய் கூட இருக்கலாம்) இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்க முடியும். இல்லையென்றால் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து புரட்சி வாழ்க்கை வாழ முடியுமே தவிர மனித வாழ்க்கை வாழ முடியாது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக விரக்தியில் ஒரு கதாபாத்திரம் எதிர்மறையாய் பேசுவதை விழிப்புணர்வு வசனம் என்று இன்று பள்ளியில் கூட பேச்சுப் போட்டியில் பெண்விடுதலைக்காக இந்த வசனம் உபயோகப் படுத்தப் படுகிறது.
ஸ்ரீதேவி கமலிடம் கூறியிருந்தால் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பேசியிருக்க வேண்டும்.
Saturday, November 15, 2008
பெண்கள் கல்லூரியில் கலைவிழா
அனைவரும் புறப்பட தயாராயினர். கல்லூரியில் இருந்த அனைத்து ஆண்களும் ரெடி. கடைசியில்தான் தென்பட்டது அந்த விதி. போட்டியாளர்கள் மட்டுமே கல்லூரியின் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.
எங்கள் கல்லூரி அப்போது கலை நிகழ்ச்சிகளில் முன்னணி வகிப்பவர்கள்தான். எனவே கலைக்குழு கிளம்பினர். லக்கேஜ் அதிகமாக இருந்ததால் அதைத் தூக்க ஆட்கள் தேவைப் பட்டபோது நாங்கள் தென்பட்டோம். அதிஷ்டமா இல்லையோ நாங்களும் கலந்து கொள்ள சென்றோம். பாட் பூரியில் நாங்கள் கல்ந்து கொள்வதாக பேர் எழுதிக் கொண்டு அடையாள அட்டை பெற்றுதந்தார்கள். கல்லூரியில் நுழைந்ததும்...........................................................
கல்லூரியில் நுழைந்ததும் ஒரு அதிர்ச்சியை குழுத்தலைவர் வெளியிட்டார். பேர் குடுத்தவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் நெகடிவ் மார்க். மற்றும் அந்த அணி ஒட்டு மொத்த சாம்பியன் வெல்ல முடியாது. எங்களுக்கு அது ஒன்றும் பெரிதாக படவில்லை. ஒரு ஆண்டாக காதில் மட்டுமே கேட்டு வந்த இடத்தை நேரில் பார்க்கிறோமே................. பரவாயில்ல சார் நாங்க ஸ்டேஜ் ஏறிடுவோம்............. எங்கள் தைரியத்தை மெச்சினார்கள். ஆனாலும் லக்கேஜ் தூக்குவதிலேயே காலம் களிந்தது..... தீடிரென எங்களுக்கு அழைப்பு. அடுத்த ஈவண்ட் உங்களோடதுதான் ரெடியாகுங்க............... நாங்கள் கேட்டோம். பாட் பூரினா என்ன சார்? அனைவரும் அதிர்ந்தனர் ...................................................................................
எங்களுக்கு ஏதோ சாப்பாட்டு போட்டி என்ற எண்ணமே இருந்தது. மேடை ஏறச் சொன்னதும் திருதிருவாணோம்..... நெகடிவ் மதிப்பெண்ணுக்கு பயந்து எங்களை மிரட்டி மேடை ஏற்றினார்கள்.. வினாடி வினா மாதிரி சில சுற்றுக்கள் சென்றன.. அடுத்த சுற்று திரைப்பட பெயரை கண்டுபிடிக்கும் சுற்று. எங்களுக்கு கிடைத்த படம் சிதம்பர ரகசியம். நிகழ்ச்சியின் போது ஓடுவது உள்ளத்தை அள்ளித்தா. ஒருவர் நடிக்க் மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். சீக்கிரம் கண்டுபிடிக்க நிறைய பாயிண்ட்.
அந்த படத்தை நாங்கள் எப்படி கண்டு பிடித்தோம். எங்கள் வகுப்பு மாணவர் ஒருவருக்கு சீணியர்கள் வைத்தபெயர்(உடைகளின் தன்மையை வைத்து) அது. அவரை போல நடித்து படத்தைப் பிடித்தோம்.
அடுத்து சில சுற்றுக்கள். . மாற்று மொழி கலக்காமல் இருநிமிடம் பேசும் சுற்று கூட இருந்தது. கடைசிசுற்று. ஐந்து வால் பேப்பர்களை கிழித்து போட்டிருந்தனர். ஒருவர் கையில் ஒரு கிழியாத படம்... கேள்விகள் கேட்டுக் கொண்டே குவியலில் இருந்து படத்தை எடுத்து ஒட்ட வேண்டும். ந்ண்பன் புத்திசாலி. கருப்புவெள்ளையா.... பெண்ணா இரண்டே கேள்விகளில் வேலை முடித்தான், கடைசியில் பரிசும் கிடைத்தது.
ஜேம்ஸ்பாண்ட் Vs வந்தியதேவன்
2.ஜேம்ஸ் பாண்ட் முதல் காட்சியில் துப்பாக்கியுடன் அறிமுகம் ஆவார். பொ.செல்வனில் குதிரையுடன் வந்திய தேவன் அறிமுகம் ஆகிறார்.
3. அவர் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட். இவர் வந்தியத்தேவன், வல்லவரையன் வந்தியத்தேவன்
4.பாண்ட் படத்தில் நுழையும்போது சண்டை போடுவார். இவரும் கடம்பூர் மாளிகையில் நுழையும் போது சண்டை போட்டுக் கொண்டே நுழைவார்.
5. இருவரும் ஒற்றர்கள்.
6.மாடியில், நீரில், நிலத்தில்,சுரங்கப்பாதையில் எல்லா இடங்களிலும் சண்டை போடுவார்கள்.
7.பெண்களைப் பார்த்ததும் மெய்மறந்து போவார்கள்.
8.அனுப்பியவர்கள் நேரடியாக இவருக்கு உதவிசெய்ய தயங்குவார்கள்
9.எந்த ஒரு பிரச்சனையிலும் மனம் தளரவே மாட்டார்கள்
10.பல நாடுகளுக்கு பயணம் செய்வார்கள்
11.அனைத்து இடங்களிலும் பெண்பிள்ளைகள் இவருக்கு உதவுவார்கள்
12.நந்தினி போன்ற பல குழப்பங்களைக் கொண்ட லட்சிய வெறிமிக்க பெண்கள், பாண்டுவுக்கும் வந்திய தேவனுக்கும் மட்டுமே எதிரிகளாக இருப்பார்கள்
13.என்றுமே தனது அரசுக்கு விசுவாசமாக இருப்பார்கள். மண்ணாசை, பொண்ணாசை தாண்டி
14.கதை முடிந்ததும் தனக்கு விருப்பமான பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.
Thursday, November 13, 2008
உலக நாயகன் உருவாகும் விதம் ( மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு)
1.முத்லில் கதாநாயகன் தேர்வு. இரண்டு வழிகள் உள்ளன. பழைய நாயகனையே புக் செய்வது. அல்லது சீன் கானரி மாதிரி உள்ள புதிய நாயகனை தேர்வு செய்வது (அவரை மட்டுமே பாண்ட் என்று பழம்பெரும் ரசிகர்கள் கருதுவார்கள். அதனால் ப்ராஸ்னனை விட டேனியல் கிரய்க் பெட்டர்)
2.நாயகி தேர்வு. இது இட ஒதுக்கீட்டுக் கொள்கை படி செய்யப் படும். உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு வழங்கப் படும். (சில நேரங்களில் கூடுதல்[extra] இட ஒதுக்கீடு மூலம் அழகிகளூக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப் படும்0
3.முதல் காட்சி படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.அந்த சண்டையில் பாண்ட் மட்டுமே தப்பி வருவார். அப்போது ஏதாவது வகையில் அதிசயம் நிகழ்த்த வேண்டும். உடனே டைட்டில் சாங்
4.நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு ஆகிய இடங்களீல் சண்டைகள் அமைய வேண்டும்.{எல்லாப் படங்களீலும் உண்டு} அத்துனை இடங்களிலும் சண்டை ஆரம்பிக்கும் முன்னரோ, பின்னரோ பெண்களுடன் பின்னி பிணைய வேண்டும்.
5.ஜேம்ஸ்க்கு உதவி செய்ய எதிரி நாட்டு பெண் உள்வாளி வருவார் தேச துரோகியாக மாறி ஜேம்ஸ்க்கு உதவி செய்வார். சில நேரங்களில் துணை நாட்டு பெண்களும் வருவார்கள். (அல்லது வில்லனின் காதலி)
6.நீர்மூழ்கி கப்பலாக மாறும் கார். பாரசூட்டாக மாறும் டை. வெடிக்கும் பேனா, ரிமோட் கார், மினி சாட்டிலைட் ஏதாவது வர வேண்டும்.(இல்லைனா அது வெறும் படம்தான்)
7.உங்கள் உதவிக்கு யாரும் வரமாட்டோம் என்று கூறி அனுப்புவார்கள், அதனால் அவர் பெண்கள் உதவியை நாடுவார்.
8.படம் முடிந்த உடன் பெண்களுடன் ஐக்கியம் ஆகி விடுவார். அனைவரும் தேட வேண்டும்.
9.இதையெல்லாம் முடிந்த உடன் அப்போதைய உலகப் பிரச்சனைப் பற்றியோ, சென்ற படத்தின் தொடர்ச்சி பற்றியோ பேச விட்டு படத்தில் இணைக்க வேண்டும். அதுதான் படத்தின் கதை.
10.படத்தை ஆல்பர்ட் புரோக்கொல்லியின் பேனரில் வெளீயிட வேண்டும். இல்லையென்றால் அதை பாண்டு படம் என ஒப்புக் கொள்ள மாட்டார்கள், நம்பரும் தர மாட்டார்கள.
உங்களுக்குப் பிடித்த பாண்டு யாருங்க?