Wednesday, November 19, 2008

கமல்-ஸ்ரீதேவி, குடும்ப அமைதி

இன்று மதியம் டி.வி.யில் வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்க்க நேர்ந்தது. கமல் ஸ்ரீதேவியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்
"எத்தனை நாட்களுக்குத்தான் அடிமையாய் இருப்பிங்க. பிறந்ததும் அப்பாவுக்கு அடிமை,
கல்யாணம் ஆனதும் கணவனுக்கு அடிமை, குழந்தை பிறந்தால் அதற்கு அடிமை. எப்ப
சுதந்திரமாய் வெளிய வருவீங்க"

சாதரண்மாய் பார்த்தால் பெண்விடுதலைக்கான அற்புதமான ராக்கட் வசனமாக தோன்றும்.
ஆனால் கமலின் {வ.நி.சி.யில்} குடும்ப நிலையை சூழ்நிலையைப் பார்த்தால் ஒரு
உண்மை புலப் படும். இதே வசனத்தை ஸ்ரீதேவி, கமலைப் பார்த்தும் பேசலாம் .பேச விட்டுப்
பாருங்கள். வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்.

பாருங்கள். கமலுக்கும் அதே சூழ்நிலைதான். கமலும் தந்தைக்கு அடிமையாய் நினைக்கிறார். தந்தையும் கமலைஒரு சுமையாகவே நினைக்கிறார். இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் சுதந்திரம் வாங்க நினைக்கிறார்கள். குடும்பம் சிதைகிறது. கமல் தனது குடும்பத்தின் ஈன நிலையை ஒரு வசனத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு கூறுகிறார்.

பெற்றவர்களுக்கு பிள்ளையை நேர்படுத்தும் பொறுப்பு உண்டு. பிள்ளைகளுக்கும் பெற்றவர்களை கவனிக்கும் பொறுப்பு உண்டு, கண்வன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக (அடிமையாய் கூட இருக்கலாம்) இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்க முடியும். இல்லையென்றால் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து புரட்சி வாழ்க்கை வாழ முடியுமே தவிர மனித வாழ்க்கை வாழ முடியாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விரக்தியில் ஒரு கதாபாத்திரம் எதிர்மறையாய் பேசுவதை விழிப்புணர்வு வசனம் என்று இன்று பள்ளியில் கூட பேச்சுப் போட்டியில் பெண்விடுதலைக்காக இந்த வசனம் உபயோகப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீதேவி கமலிடம் கூறியிருந்தால் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பேசியிருக்க வேண்டும்.

7 comments:

  1. நன்றி சிபி,
    புரட்சிகளையும், புரட்சி முழக்கங்களையும் சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால் அவை நம்மை தூக்கி எறிந்து விடும்

    ReplyDelete
  2. உண்மைதான்..சரியான விழிப்புணர்வு முழக்கத்தில்தான் இருக்கிறது..புழக்கத்தில் இல்லை பாருங்கள்..

    ReplyDelete
  3. அய்யா,

    இது பாரதியார் சொன்ன வசனம்.பாலச்சந்தர் அல்ல.
    இதை எல்லோரும் எடுத்து
    ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. நன்றி கே.ர. ஐயா,

    தகவலுக்கு நன்றி,

    இப்போதும் எனது நிலை அதேதான்,
    ஸ்ரீதேவியை பேசவிட்டு பாருங்கள்,


    புரட்சிகளையும், புரட்சி முழக்கங்களையும் சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால் அவை நம்மை தூக்கி எறிந்து விடும்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails