Thursday, November 20, 2008

ரீமேக் சுவடே இல்லாத தமிழ் திரைப்படங்கள்

  • இன்று பழைய படங்கள் பலவற்றை ரீமேக் செய்வதைப் பார்க்கிறோம். சில படங்களை இன்ஸ்பிரேசன் என்று கூறுவார்கள். ஆனால் 80 களில் வெளீயான சில திரைப் படங்கள் அதற்கு முந்தைய கால படங்களீன் ரீமேக், ஆனால் புதிதாக வந்தது போல் வந்தன்.



  • 1.புதுமைப் பித்தன் VS நானும் ஒரு தொழிலாளி

  • MGRன் படத்தில் தந்தை மன்னர். மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.

  • நானும் ஒரு தொழிலாளீயில் தந்தை முதலாளி. மகன் வெளி நாடு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கதைகட்டி அவரை மறைத்து வைத்து பத்திரத்தில் கையொப்பம் கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். மகன் வந்து மாறுவேடத்தில் மறைந்திருந்து உண்மைக் கண்டறிகிறார்.



  • 2.பெரிய இடத்துப் பெண் & சகலகலாவல்லவன்

    பெ. இ. பெ.வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது முறைப் பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்கிறார்கள். அக்காவை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்

  • ச.க.வ..வில் நாயகன் கிராமத்தான்.குடுமிக்காரன், பட்டணத்துக் குடும்பம் வருகிற்து. அவரது சொத்தை ஏமாற்றி விடுகிறார்கள். தங்கைவயை சீரழித்து விடுகிறார்கள். நாயகன் குடுமை வெட்டி ஸ்டைலாக நகரத்திற்கு சென்று அந்த்க் குடும்பப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு த்ங்கைக்கும் வாழ்க்கைக்கும் உறுதி செய்து உண்மைகளை கண்டறிந்து ஊருக்கு உணர்த்துகிறார்.

  • அன்று வந்ததும் அதே நிலா பாடல் இன்று வந்தபோது இளமை இதோ, இதோ



  • 3.படிக்காத மேதை & பேர் சொல்லும் பிள்ளை

    இதனைப் பற்றி பலரும் பேசிவிட்டதால் ரீமேக் ஒரளவு வெளியே தெரிந்து விட்டது.


  • 4.உத்தம புத்திரன் & 23ம் புலிகேசி

    அதே இரட்டை பிள்ளைகள், அதே மாமன், அதே போல் ஒரு குழந்தை கடத்தப் படுகிறது. ஒரு பிள்ளை மாமன் சொல் கேட்டு வளர்ந்து யாரடி நீ மோகினி பாடுகிறார். இதில் ஆடிவா தேடிவா பாடுகிறார். இன்னொரு பிள்ளை சொந்த புத்தியுடன் வளர்ந்து தம்பியை சிறையில் தள்ளி மாமணைத்திருத்தி நாட்டை மீட்டு தம்பியைத்திருத்தி கடைசியில் சுபம்.

  • இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷ்யம். முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையும் சமுதாய சீர்திருத்த கருத்துக்களும் இது கண்டிப்பாக வர வேற்கத்தகுந்த ஒன்று.


  • எங்க வீட்டுப் பிள்ளை கூட மேலே சொன்ன கதைதான் அது முற்றிலும் கண்ணாடி பிம்மம் போல் ரீமேக் செய்யப் பட்டுக் கொண்டேஏஏஏ இருக்கிறது

இதே போன்று மேலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

17 comments:

  1. சுவராசியமான தகவல்கள் சார். தொடருங்கள்

    ReplyDelete
  2. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் சார்.நல்ல பதிவு

    ReplyDelete
  3. நம் நாடு - இந்தியன்,
    பொம்மலாட்டம் - உள்ளத்தை அள்ளித் தா

    இவற்றையும் எதிர்பார்த்தேன் :-)

    நல்ல பதிவு.

    ReplyDelete
  4. நிறைய படம் பார்க்காதீங்க சார். கனவுகள் வந்து தொந்திரவு படுத்தும்.

    ReplyDelete
  5. பினாத்தல் சார்
    'உள்ளத்தை அள்ளித் தா - சபாஷ் மீனா' தான் சாரியா இருக்கும்.

    ReplyDelete
  6. ஆதவன்,

    பொம்மலாட்டம்+நான்+சபாஷ் மீனா = அந்தாஸ் அப்னா அப்னா

    அந்தாஸ் அப்னா அப்னா == உள்ளத்தை அள்ளித்தா :-)

    ReplyDelete
  7. good post...
    remove word verification... plz....

    ReplyDelete
  8. நன்றி மு.க.,cable sankar, நவநீதன்,பினாத்தல் சுரேஷ்,நான் ஆதவன் ,தமிழ் ஓவியா.

    இதன் தொடர்ச்சியை எழுதுகிறேன். வெளியே தெரியாத படங்களை தொடரலான் என்று எண்ணம்.

    இந்தியன் போல ஒரு படம். சிவாஜி அப்பா, கமல் மகன். அப்பா சுதந்திரத்திற்காக ஜமீனை இழ்ந்தவர். மகன் தவறுகள் செய்ய அப்பாவே அவரைக் கொள்கிறார். அன்று சிந்திய ரத்தம் என்று நினைக்கிறேன். படத்தை டி.வி.ல் ஒரு நாள் பார்த்தது முழுதாக பார்த்தால் ஸ்டடி செய்யலாம்

    ReplyDelete
  9. முரளி கண்ணன் அவர்களுக்கு போட்டியா எழுதறீங்களே ;-)

    நல்லா இருக்குங்க ஒப்பீடு

    ReplyDelete
  10. நவநீதன் word verification எப்படி remove செய்வது?

    ReplyDelete
  11. இந்தியனைப்போலவே ஒரு முரளி படம் உண்டு

    இறுதி காட்சியை day of jackalலில் இருந்து அப்படியே சுட்டிருப்பார்கள்

    அது எந்த படம் என்று ஞாபகம் இருக்கிறதா

    ReplyDelete
  12. //1.புதுமைப் பித்தன் VS நானும் ஒரு தொழிலாளி//

    இதுக்கூட ராஜாதி ராஜாவையும் சேர்த்துக்கலாம்....

    ReplyDelete
  13. தனது மோசமான படைப்புக்களில் ஒன்று என்று நானும் ஒரு தொழிலாளியை சிறீதர் குறிப்பிட்டிருக்கிறார். பேர் சொல்லும் பிள்ளையும் கமலின் மொக்கை படங்களில் ஒன்று.
    மற்றையவை மோசமில்லை.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி

    கிரி சார்,

    சரவனக்குமாரன் சார்,

    புருனோ சார்,

    கானாபிரபா சார்

    ReplyDelete
  15. அந்த முரளி படம், ‘புதிய காற்று’ எனநினைக்கிறேன். ‘பாலம்’ கார்வண்ணன் இயக்கம்.
    பல காட்சிகள் இந்தியனுக்கு மூலம்தான்.

    ReplyDelete
  16. நன்றி தமிழ் பறவை அவர்களே.........

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails