Monday, December 29, 2008

ரஜினி, சரத், பாம்பே, பழனி

ரொம்ப நாள் ஆகிவிட்டமாதிரி இருக்கிறது நமது விருப்பத் தலைப்பான ரீமேக் சுவடே தெரியாத தமிழ் படங்கள் வரிசையை ஆராய்வது,இந்த முறை இரண்டு சூப்பர் ஹிட் படங்களை ஆராயலாம். சில வருடங்களில் ரீமேக் செய்யப்படங்கள் இவை.

பா(ட்)ஷா:-
பாஷா கதையைப் பற்றி சொலவதற்கு என்ன இருக்கிறது. அந்தப்படம் வந்த போது பெரும்பாலான வலைஞர்கள் பம்பரமாக சினிமா பார்ர்க்கும் பருவத்தில் இருந்திருப்பார்கள் என்பதால் அந்தக் கதையை அப்படியே விடுகிறேன். இந்தப் படம் வந்தபோது நாங்கள் மாநிலம் தழுவிய பொது தேர்வில் பங்கெடுக்க இருந்ததால் படம் பார்க்க அனுமதி இல்லை. நகரத்தில் இருந்த மாணவர்கள் பார்த்துவிட்டு படத்தில் சுத்தமாக நகைச்சுவையே இல்லை. அப்புறம் எங்க.. என்பதே அவர்கள் விமர்சனமாக இருந்தது. நக்மாவுக்கு லிப்ட் கொடுக்கும் முதல் காட்சியில் மட்டுமே நகைச்சுவை தலை காட்டும்.


அப்புறம் மே மாதத்தில்தான் படம் பார்த்தோம். கல்லூரிக்கு போனபின் தான் தெரிந்தது எந்த ரஜினி படம் என்றாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டுதான் படத்திற்குச் செல்ல வேண்டுமாம். அப்போதுதான் நமது ரசனைக்கு அங்கீகாரம் கிடைக்குமாம். ஆனால் எங்கள் சீனியர் ராம்ஸ் அந்தப் படம் சுற்றுவட்டாரம் பதினெட்டுப் பட்டியில் எங்கு படம் போட்டாலும் பார்ப்பார். துணைக்கு எங்களை மாதிரி யாரையாவது கூட்டிச் செல்வார். ஒவ்வொரு ஜூனியர் மாணவரும் இருபத்தைந்து முறையாவது பார்த்திருப்பார்கள். இந்த நிலை அவர் பாஸ் செய்து பி.ஜி. வாங்கும் வரை தொடர்ந்தது.

ஏய்:-

இதில் சரத் குமார் பழனியில் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது லட்சியம் தங்கையை கலக்டெர் ஆக்குவது. ரஜினியும் அப்படியே... ஆனால் ரஜினிக்கு டாக்டர், இன்ஸ்பெக்டர். கல்யாணம் என்று பல லட்சியங்கள். இதில் தங்கை சொந்தத் தங்கை அல்ல. அதிலும் மாற்றாந்தாய் பிள்ளைகள்தான். இதில் நண்பன் சத்தியம் வாங்குகிறார். அதில் அப்பா...


ஃபிளாஷ்பேக்:- வில்லனின் அட்டூளியம் தாங்காமல் சரத் தனது நண்பருடன் சேர்ந்து பழி வாங்குகிறார். ரஜினியும் அப்படியே.. ரஜினியின் தந்தை கொல்லப் படுகிறார். இதில் நண்பன் கொல்லப் படுகிறார்.

தங்கைக்காக கண்டபடி அமைதி காக்கிறார்கள்

அவர்களுக்குள் அடங்கியிருக்கும் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ருவது தெரியும்.. விரல் மட்டும் தூக்குவது, ஒருதடவ சொன்னா என்று மட்டும் சொல்வது.. சரத்துக்கும் அப்படித்தான் கண் புருவம் துடிப்பது, சதைகள் இருகுவது என்று படிப்படியாக போகும்.

வில்லன் அவர்களது தங்கை மேல் கைவைக்க நினைக்க.. அவர்கள் சுயரூபம் வெளிப் படுகிறது. கடைசியில் வில்லன் அழிய சுபம்.


அதில் அவன யாருன்னு நினைச்ச என்று தாயார் ஆரம்பிப்பார். இதில் தங்கை பேசுவார்.


மிகவும் சீரியஸாக வந்த படம் பாஷா... வடிவேலு, தங்கை, நமிதா, மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நகைச்சுவையில் புகுந்து விளையாடி இருப்பார் சரத் குமார்.

இரண்டும் சூப்பர் ஹிட்தான். இருந்தாலும் நக்மாவைவிட நக்மாவின் ரீமேக் நமிதா சூப்பரோ சூப்பர் ஹிட்.

26 comments:

 1. ரெண்டு ஓட்டையும் போட்டதினாலே நீங்க "ஏய்" ன்னு "பாட்சா" மாதிரி சட்டைய பிடிக்க மாட்டீங்களே

  ReplyDelete
 2. You have much time much more time to think about that........good thought keep it upppp - -- - -- my dear,....

  ReplyDelete
 3. பகவதி, திமிருன்னு இந்த டைப் படங்கள் வந்திட்டுதான் இருக்கு.

  ReplyDelete
 4. இது மாதிரி எத்தனை படம் வந்தாலும் சரி
  பாட்ஷா பாட்ஷா தான் !!

  ReplyDelete
 5. basha itself was inspired from hindi movie HUM.rajini also acted in it.
  kumaran

  ReplyDelete
 6. மனிதனின் மறுபக்கம் எனும் படத்திற்கும் விருமாண்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, அது என்ன என்று சொல்லுங்கள், பார்(டி)ப்போம்..?!

  ReplyDelete
 7. ஏய்(படத்தின் பேரு தானுங்கோ). படத்தின் பாதி ரமணா டைப்

  ReplyDelete
 8. வாருங்கள் நசரேயன்

  Madhan


  சரவணகுமரன்

  புருனோ Bruno

  பெயரில்லா


  nagoreismail


  ஆளவந்தான் அவர்களே..


  வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி

  ReplyDelete
 9. //பகவதி, திமிருன்னு இந்த டைப் படங்கள் வந்திட்டுதான் இருக்கு.//


  நாங்கெல்லாம் பெரிய ரவுடி. அடக்கி வாசிக்கறோம். வடிவேலு சொல்வாரே.. அது கூட பாட்சா கதை தானுங்க...

  ReplyDelete
 10. //HUM.rajini also acted in it.//


  ஆனால் ஹம் தோல்விப் ப்டம்.


  அதில் போலீஸ்காரர், கடைசித்தம்பி கோவிந்தா பெரிய அண்ணன் எல்லோரும் நகைச்சுவையாளர்கள்.

  ReplyDelete
 11. //ஏய்(படத்தின் பேரு தானுங்கோ). படத்தின் பாதி ரமணா டைப்//


  இந்தியன் என்பதே சரி....


  ரமணாவின் முக்கிய விஷயம். தமிழகம் முழுவதும் ஆட்களைக் க்டத்தி அதில் அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு மட்டும் பரிசு கொடுப்பது.

  ReplyDelete
 12. //நாங்கள் மாநிலம் தழுவிய பொது தேர்வில் //

  அப்போது +2 படிச்சீங்களா?
  நான் +1,அதனால் முதல் நாள் முதல் காட்சி,ஒரே சத்தம்,அப்புறம் இரண்டு வாரம் கழித்து மீண்டும் பார்த்தப்போதான் டயலாக்கெல்லாம் காதில கேட்டுச்சு,ரஜினியின் மாஸ் பாட்ஷாவில்தான் நான் நெரடியாக பார்த்தேன்.

  ReplyDelete
 13. அஜீத் நடிச்ச ஜனா படத்த விட்டுட்டீங்க..

  ReplyDelete
 14. ரஜினி மிகச்சிறந்த கமர்சியல் படம் பாட்சா!!!
  நானும் ரொம்ப நாள் கழித்துதான் பார்த்தேன்!!!
  தேவா...

  ReplyDelete
 15. நமீதாவின் புகைப்படத்தைப் பற்றி யாரும் கருத்து கூறாதது ஏன்?

  ReplyDelete
 16. புதுமையான பட்டியல்...இவ்வளவு விஷயம் இருக்கா?

  ReplyDelete
 17. வாருங்கள்

  நாடோடி இலக்கியன்,

  ராம்சுரேஷ் ,


  thevanmayam ,


  இளைய பல்லவன்,

  இசக்கிமுத்து அவர்களே.


  தங்களின் பேராதரவுக்கு நன்றி.

  ReplyDelete
 18. // ராம்சுரேஷ் கூறியது...

  அஜீத் நடிச்ச ஜனா படத்த விட்டுட்டீங்க..//


  அதைத தழுவல் என்று வேண்டுமானால் கூறலாம். இது போன்ற அப்பட்டமான ஒற்றுமை இருக்காது சார்.

  மணிச்சித்திரத்தாள் படத்துக்கும் சந்திரமுகிக்கும் உள்ள ஒற்றுமையை விட இவ்விரண்டு படங்களுக்கு ஒற்றுமை அதிகம்.

  ReplyDelete
 19. // இளைய பல்லவன் கூறியது...

  நமீதாவின் புகைப்படத்தைப் பற்றி யாரும் கருத்து கூறாதது ஏன்?//


  ஏன்?........ ஏன்?........

  ReplyDelete
 20. நன்றி நர்சிம் அவர்களே....

  ReplyDelete
 21. ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 22. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே..

  தலவரு படம போடாம.. யாரோ ஒரு பொன்னு படத்த போட்டிருக்கீங்க

  ReplyDelete
 23. என்னது ஏய் ஹிட் படமா?

  ReplyDelete
 24. @கூட்ஸ் வண்டி
  @ஆளவந்தான்
  @ஷாகுல்


  நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 25. \\இது மாதிரி எத்தனை படம் வந்தாலும் சரி
  பாட்ஷா பாட்ஷா தான் !!\


  கன்னா பின்னா வென வழிமொழிகிறேன்

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails