Monday, January 5, 2009

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும்.........

திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வரும் ஒரு நிகழ்வு. வெகுசிலருக்கு வராமல் கூட இருக்கலாம். வராமல் போனது கூட ஒரு நிகழ்வாகவே கருதப் படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. சிலநேரங்களில் அது பெற்றோரால் நிச்சயக்கப்படும் வகையிலும் சில நேரங்களில் அவர்களாகவே நிச்சயிக்கப் படுவதாகவும் அமைகிறது.

அவர்களாகவே முடிவு செய்வது பற்றி நாம் பேசப் போவதில்லை. பெற்றோரால் உறுதி படுத்தப் படும் திருமணங்களிலிருந்து ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டும் பார்ப்போம். பல இடங்களில் ஆணும் பெண்ணும் நிச்சயத்திற்கு முன் பேசுகின்றனர். பெரும்பாலும் பேச ஆசைப் படுகின்றனர். இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?

பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இதில் அத்துமீறலுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர புரிந்து கொள்வது என்பது.............


ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே நிற்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்படக்கூடிய ஒரு சஸ்பென்ஸ் ப்போய்விடுவதால் பல நேரங்களில் சளிப்பு மட்டுமே மீந்து போகிறது. சின்ன குறைகள் வெளியே தெரியும் போது அது சண்டையாய் மாறி திருமணத்தையே முறித்துவிடக்கூடிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னமோ போங்க...........

51 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். //

    பாஸ், என்னோட ப்ளான ஒரு வரியிலே புட்டு புட்டு வச்சி பயமுறுத்துறீங்களே!! அநியாயம்.

    ReplyDelete
  3. சளிப்பு - சலிப்பு கொஞ்சம் மாத்திடுங்க

    ReplyDelete
  4. எல்லாரும் எப்போதும் இப்படித்தானா?

    ReplyDelete
  5. SUREஷ்,நீங்களே சொல்லிட்டீங்களே.
    என்னமோ போங்க ன்னு.கஷ்டம்தான்.

    ReplyDelete
  6. //காதலிக்க தைரியம் இல்லாதவ‌ர்க‌ள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
    தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை.//

    100% உண்மை:‍‍‍)

    ReplyDelete
  7. வாங்க ராம்சுரேஷ்,

    இளைய பல்லவன்,

    ஹேமா,

    இய‌ற்கை

    Karthik மற்றும்

    பெயரில்லா அவர்களே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. ராம்சுரேஷின் கருத்தினை நான் நீக்கவில்லை. அவரே நீக்கி இருப்பாரோ...

    ReplyDelete
  9. ***பெற்றோரால் உறுதி படுத்தப் படும் திருமணங்களிலிருந்து ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டும் பார்ப்போம். பல இடங்களில் ஆணும் பெண்ணும் நிச்சயத்திற்கு முன் பேசுகின்றனர். பெரும்பாலும் பேச ஆசைப் படுகின்றனர். இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?****

    ஏன் சாத்தியமில்லை??

    ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இவர் தனக்கு சரியானவர் இல்லை என்றுகூட முடிவுக்குவந்து, திருமணத்தை நிறுத்தி ஒருவரிடம் ஒருவரை காப்பாற்றிக் கொள்ளலாம், சுரேஷ்.

    பெற்ரோருக்காக சரி என்று சொல்லி இருந்தால், அதையும் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கு.

    இதில் பல நன்மைகள் இருப்பாதாக நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  10. ஒரு காலத்திலயும் இது எனக்கு புரியப்போறது இல்லை

    ReplyDelete
  11. //வருண் கூறியது...//


    //தனக்கு சரியானவர் இல்லை என்றுகூட முடிவுக்குவந்து, திருமணத்தை நிறுத்தி ஒருவரிடம் ஒருவரை காப்பாற்றிக் கொள்ளலாம்//


    உண்மைதான்.. ஆனால் ஏமாற்றுக் காரர்கள் எந்தவகையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாகத்திட்டமிட்டு ஏமாற்றிவிடுவார்கள்.


    வேஷமிடத்தெரியாத அப்பாவிகளின் திருமணங்கள்தான் நிறுத்தப் பட்டிருக்கின்றன.

    ReplyDelete
  12. வாங்க குடுகுடுப்பை அவர்களே...

    பெண்கள் மனதை எத்தனைகோடி ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்று அனுபவித்தறிந்த ஞானிகள் கூறுகிறார்கள். உங்களைப்போலவே,,,,

    ReplyDelete
  13. ****உண்மைதான்.. ஆனால் ஏமாற்றுக் காரர்கள் எந்தவகையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாகத்திட்டமிட்டு ஏமாற்றிவிடுவார்கள். ****

    இந்த உலகத்தில் ஏமாறுகிறவன் இருக்க வரை ஏமாத்துறவன் இருக்கத்தான் செய்வான்.

    காலப்போக்கில் கலாச்சாரம்னா என்னனௌமறந்து போய்விடக்கூடாது என்று தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கிறவன் இருக்கிறவர, அதை கேலி செய்யும் கலாச்சாரத்தை சீரழிக்கும் அரைவேக்காடுகளும் இருக்கத்தான் செய்வார்கள்.

    இந்த் உலகம் எல்லோருக்கும்தான்.

    ***வேஷமிடத்தெரியாத அப்பாவிகளின் திருமணங்கள்தான் நிறுத்தப் பட்டிருக்கின்றன.***

    எல்லாம் நன்மைக்கேனு போக வேண்டியதுதான்.

    அப்படி எதுவும் நடந்தாலும் That is not the end of the world. we can find someone appropriate later!


    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டுனு சொல்லுவாங்க.

    அதில் ஒண்ணு மனசாட்சி! அது என்றுமே நல்லவர்களை கைவிடுவதில்லை, சுரேஷ்!

    ReplyDelete
  14. //கலாச்சாரத்தை பாதுகாக்கிறவன் இருக்கிறவர, அதை கேலி செய்யும் கலாச்சாரத்தை சீரழிக்கும் அரைவேக்காடுகளும் இருக்கத்தான் செய்வார்கள்.//


    பண்பாடு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையில் அமைவது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்று சொல்வார்களே.. அதுபோல திருமணத்தை பெற்றோர் உறுதிசெய்த பின்னர் பேசி பழகுவதால் ஒரு பயனும் இல்லை. இதில் முற்போக்கு, பிற்போக்கு என்பதும் இல்லை.

    ReplyDelete
  15. நீங்க ஒரு பெண்ணை பெத்து போட்டுட்டு, அப்புறமா இந்த பதிவை படிச்சு பாருங்க. இப்போ சொன்னா புரியாது.

    -Navan

    ReplyDelete
  16. ***அதுபோல திருமணத்தை பெற்றோர் உறுதிசெய்த பின்னர் பேசி பழகுவதால் ஒரு பயனும் இல்லை. ***

    மறுபடியும், பயன் இருந்தால் என்ன, இல்லைனா நமக்கென்ன?

    நிறையப்பேர், இந்த கல்யாணத்திற்கும், நிச்சயத்திற்கும் இடையில் இருக்கிற கொஞ்ச நாட்களை, ஒருவருட்ன் ஒருவர் ஃபோனில் மற்றும் நேரில் பேசிக்கொண்டு எஞ்சாய் பண்ணுறாங்க.

    If you find that ridiculous, DONT DO IT.

    We cant say what someone esle does is "pointless" or "worthless".

    Who are we to say that?

    ReplyDelete
  17. நிச்சயம் பண்றதுக்கு அப்புறம் பேச தொடங்கி, பிடிக்காமல் போனாலும் வெகு சிலரே திருமணத்தை நிறுத்துவர்.

    அதுக்கு முன்னாடி பேசறது ஒரு வகையில் clarity ஐ கொடுக்கும்.

    ரொம்ப நொந்துட்டீங்களா?

    ReplyDelete
  18. //
    இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?
    //
    சில நிமிடங்கள் என்றில்லை பல வருடங்கள் ஆனாலும் சாத்தியம் ஆகாமல் போகலாம்.. அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள (அது கடலையா கூட இருக்கலாம்) முறையில் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

    ReplyDelete
  19. வாருங்கள் Navan,


    கபீஷ் ,

    ஆளவந்தான்,மற்றும்

    வருண் அவர்களே......

    ReplyDelete
  20. //நீங்க ஒரு பெண்ணை பெத்து போட்டுட்டு, அப்புறமா இந்த பதிவை படிச்சு பாருங்க. இப்போ சொன்னா புரியாது.

    -Navan///


    என்னை ஆதரிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    உண்மையில் இது இருவருக்கும் பொதுவானது.

    ReplyDelete
  21. //அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள (அது கடலையா கூட இருக்கலாம்) முறையில் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.//


    ஐ...... ஜாலி..........

    ReplyDelete
  22. //We cant say what someone esle does is "pointless" or "worthless".

    Who are we to say that?//


    இல்லை, இது தனிப் பிரச்சனை இல்லை. பொதுப் பிரச்சனை.

    இதில் உபயோகம் ஒன்றும் இல்லை, மறுப்பது அநாகரிகம் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது.

    உங்களுக்கு ஒரு நிமிடம் முன்னால் வந்து சொன்ன நவனின் கருத்தைப் பாருங்கள்.


    இது அடுத்த கட்டமான பழகலாம் வாங்க.. லெவலுக்குச் செல்லும், நிச்சயக்கும் முன் பேசுவது பல சமுதாய சீரளழிவுகளையும் அப்பாவிகளை கேலிக் கூத்தாக்குவதும் நடைபெறும்,,,

    ReplyDelete
  23. //என்னமோ போங்க........... //

    ஏனைய்யா இத்தனை சலிப்பு?

    ReplyDelete
  24. //பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இதில் அத்துமீறலுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர புரிந்து கொள்வது என்பது.............
    //

    சிந்திக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  25. ஆஹா பதிவ விட பின்னூட்டத்தில பெரிய விவாதம் போயிக்கிட்டிருக்கு

    ReplyDelete
  26. இதுல பிராடுகளை விட்டுரலாம். அவங்க எப்டியும் இருக்கத்தான் செய்வாங்க.

    அதேப்போல மாப்பிள்ளைகளின் பாலான பார்வைகளையும் விட்டிடரேன். ஏன்னா அவங்க, பொண்ணுகிட்ட ஒரு குறை அல்லது ஏதோ பிராடு வேலை இருக்கறது கண்டுப்பிடிச்சா, அதைச் சொல்லி கல்யாணத்தையே நிறுத்தற சாத்தியங்களும் நம்மூர்ல நல்லாவே இருக்கு.

    கபீஷ் சொல்லிருக்கறதும் ரொம்ப சரி.

    எனக்குத் தெரிஞ்ச ஒரு குடும்பத்தில் நடந்த விஷயம். அவனுக்கு நிச்சயம் பண்ணப்புறம் கிட்டத்தட்ட அந்த குடும்பமே பொண்ணு வீட்லதான் பழியா கெடந்தாங்க. பொண்ணு வீட்டுக்கு பிடிக்கலைன்னாலும் வேற வழியில்லாம சகிச்சுக்கிட்டாங்க. காரணம் அவங்க நடவடிக்கைகளால பொண்ணோட அப்பாவைத்தவிர வீட்ல எல்லாருக்குமே அவங்க மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சி. பையனோட நடவடிக்கைகளுக்கும் சந்தேகத்துக்கிடமாக இருந்தது. கல்யாணத்துக்கு முன்னயே பொண்ணு வீட்ல ஒன்னுமில்லாததுக்கெல்லாம் கத்தி அமக்களம் பண்ணான். எல்லாரும் கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொன்னப்போ, அவங்கப்பா மட்டும் நிச்சயதார்த்தம் ஆகிடுச்சி, என் மானம் போயிடும்னு, கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணிவெச்சார்.


    கல்யாணமான ஒரு வாரத்துலயே, அந்தப் பையன் பயங்கர மனநோய் உள்ளவன்னு தெரிஞ்சிடுச்சி. அந்தப் பொண்ணயே கொல்ல வந்தான். மனநல மருத்துவரே, இது என் பொண்ணா இருந்தா பிரிச்சி, வேறொரு கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன்னு சொன்னப்புறம்தான் அந்த அப்பா பிரிய வழிவிட்டார்.

    அதால நம்ம ஊரைப் பொறுத்தவரை, நிச்சயித்த கல்யாணங்களில், நிச்சயதார்த்தத்திற்கு பிறகு பேசறதால முக்காவாசி எந்தப் பயனும் இல்ல. யாரும் உஷாராகறதும் இல்ல. பிளஸ் எதாவது கண்டுப்பிடிச்சாலும், நிச்சயமாகிடுச்சி, கல்யாணத்த நிறுத்த முடியாதுன்னு சொல்ற லூசுக் குடும்பங்கள்தான் இன்னைக்கும் விகிதாச்சாரத்தில் ஜாஸ்தியா இருக்கு.

    ReplyDelete
  27. சிந்திக்கப்படவேண்டிய விடையம் தான்..

    ReplyDelete
  28. வாங்க

    பிளாகர் புருனோ Bruno

    A N A N T H E N

    முரளிகண்ணன்

    rapp


    rajeepan அவர்களே

    ReplyDelete
  29. ராப் அக்கா கூறியது

    //மனநல மருத்துவரே, இது என் பொண்ணா இருந்தா பிரிச்சி, வேறொரு கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன்னு சொன்னப்புறம்தான் அந்த அப்பா பிரிய வழிவிட்டார்.//

    பழகித்தான் கண்டுபிடிக்க வேண்டுமா என்ன.. முதலிலேயே விசாரிக்கலாமே...

    ReplyDelete
  30. //பிளஸ் எதாவது கண்டுப்பிடிச்சாலும், நிச்சயமாகிடுச்சி, கல்யாணத்த நிறுத்த முடியாதுன்னு சொல்ற லூசுக் குடும்பங்கள்தான் இன்னைக்கும் விகிதாச்சாரத்தில் ஜாஸ்தியா இருக்கு.//


    ஒன்றாக ஊர்சுற்றிவிட்டால் சம்பந்தப் பட்ட நபரும் சேர்ந்து அடம்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  31. //ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே நிற்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்படக்கூடிய ஒரு சஸ்பென்ஸ் ப்போய்விடுவதால் பல நேரங்களில் சளிப்பு மட்டுமே மீந்து போகிறது. சின்ன குறைகள் வெளியே தெரியும் போது அது சண்டையாய் மாறி திருமணத்தையே முறித்துவிடக்கூடிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.//

    சரியாக சொன்னீங்க...
    அப்ப எதுதாங்க உண்மையான காதல்...?
    பழைய டீ.ஆர் படங்களைங்களை எல்லாம் திரும்ப பாக்கனும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  32. யாருங்க அது ஒரு சூப்பரு பிகரு ஒண்ணு உங்க பிளாகாண்ட வந்து நிக்குது...அப்படி நம்ம பிளாக்குக்கும் வந்து எட்டிப்பாக்கச்சொல்லுங்க...

    ReplyDelete
  33. வாங்க நாஞ்சில் பிரதாப்..


    நீண்ட கருத்துக்களுக்கு நன்றி

    //அப்படி நம்ம பிளாக்குக்கும் வந்து எட்டிப்பாக்கச்சொல்லுங்க...//


    http://www.allblogtools.com/ போய் கூப்பிட்டீங்கண்ணா அவங்க வந்திருவாங்க

    ReplyDelete
  34. "பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். "

    அப்ப எனக்கும் ஒரு சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க

    ReplyDelete
  35. இதுகுறித்து பலரிடம் பேசியிருக்கிறேன்... பதிவால் பேச என் கை அழுகிறது... நாம் இருவரும் என்றேனும் சந்திக்க நேரிட்டால் கல்யாணம் குறித்து பேசுவோம்!! (நீங்க பெண்ணில்லையே??)

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  36. ஹ்ம்ம்... பெரியவங்க ஏதோ பேசுறிங்க.. நான் தெரியாம வந்துட்டேனோ ???

    ReplyDelete
  37. தல,

    இந்த பதிவு விஷயம் என்னுடைய இளம் வயதுக்கு மீறிய சங்கதி என்றாலும், என்னுடைய சீனியர்களின் கருத்தகளை கொண்டு இதனை கூறுகிறேன்.

    //ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர்// ஆனால் இது தானே தல மனித இயல்பு. இதில் தவறு என்ன இருக்கிறது?

    உதாரணமாக நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போகும்போது என்ன செய்வீர்களோ அதைத் தானே இவர்கள் செய்கிறார்கள்? இதில் தவறு என்ன?

    சரி, பொதுவாக ஒன்றை கேட்கிறேன்: நம்மில் யாராவது பெண் பார்க்கும்போது நம்மிடம் உள்ள குறைகளை சொல்வோமா? பெண் பார்க்கும்போது என்றில்லாமல் யாரயாவது முதல் தடவையாக பார்க்கும்போதாவது நம்முடைய குறைகளை சொல்வோமா? இவை எல்லாம் மனித இயல்பு தானே?

    நீங்கள் சொல்வது ஒரு ஐடியல் சமுதாயத்தில் சரியாக இருக்கும். ஆனால் நாம் வசிப்பது ஒரு ஐடியல் சமுதாயம் அல்லவே?

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  38. தல,

    தப்பா ஏதாவது சொல்லிட்டேனா?

    Over?

    ReplyDelete
  39. //அவர்களாகவே முடிவு செய்வது பற்றி நாம் பேசப் போவதில்லை.//

    ஏன் பேசிப்பாக்க வேண்டியது தான தல

    ஆட்டோ வருமோ?

    ReplyDelete
  40. //பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.//

    கண்டிப்பா ஒண்ணு இல்ல 100க்கும் மேற்பட்ட ஆட்டோ வரும்போல தல

    அதுக்குள்ள கேள்வி பதில போட்டுருங்க

    ReplyDelete
  41. //MayVee said...

    "பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். "

    அப்ப எனக்கும் ஒரு சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க
    //


    வாங்க தல...

    வாழ்க்கைத்துணையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.., ஊர் சுற்ற நினைக்காதீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. //ஆதவா said...

    இதுகுறித்து பலரிடம் பேசியிருக்கிறேன்... பதிவால் பேச என் கை அழுகிறது... நாம் இருவரும் என்றேனும் சந்திக்க நேரிட்டால் கல்யாணம் குறித்து பேசுவோம்!! (நீங்க பெண்ணில்லையே??)

    அன்புடன்
    ஆதவா
    //



    பேசலாம் தல..,


    புகைப்படத்துடன் பேரைப் போட்டபிறகும் இப்படி ஒரு சந்தேகமா?

    உங்கள் உள்ளத்தில் உள்ளதை எழுதுங்கள் தல.. ஆரோக்கியமான விவாதமாக வரும்போது நமக்கே தெரியாமல் நாம் கொண்டிருக்கும் சில தவறான கருத்துக்களைக் கூட தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  43. //கடைக்குட்டி said...

    ஹ்ம்ம்... பெரியவங்க ஏதோ பேசுறிங்க.. நான் தெரியாம வந்துட்டேனோ ???
    //


    வாங்க பாஸ்.., உங்களுக்காகத்தான் இதெல்லாம்..,

    ReplyDelete
  44. //King Viswa said...

    //ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர்// ஆனால் இது தானே தல மனித இயல்பு. இதில் தவறு என்ன இருக்கிறது?//


    உண்மைதான் தல..

    உங்கள் உதாரணமும் கூட சிறந்த உதாரணம்தான். ஆனால் வேலைக்குச் சென்று தனது தகுதியை உயர்த்திக் கொண்டு சிறப்பாக மேலும் மேலும் பதவி உயர்வடைய நினைக்கும் சராசரி மனிதனுக்கு உங்கள் வாதம் மிகச் சரியாக பொருந்தும்.

    ஆனால் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் hit& run உணர்விலும் இருப்பவர்களால் மிகவும் தொல்லைகள்தான்.

    தனது ரசனையை மற்றும் தகுதிகளை என்றும் உயர்த்திக் கொள்ள விரும்பாத முடியாத தன்மையுள்ள மனிதர்களுக்கு திருமணத்திற்குப் பின்னர் ஏமாற்றம்தான் ஏற்படுகிறது.

    ReplyDelete
  45. //King Viswa said...

    நம்மில் யாராவது பெண் பார்க்கும்போது நம்மிடம் உள்ள குறைகளை சொல்வோமா? பெண் பார்க்கும்போது என்றில்லாமல் யாரயாவது முதல் தடவையாக பார்க்கும்போதாவது நம்முடைய குறைகளை சொல்வோமா? இவை எல்லாம் மனித இயல்பு தானே?
    //



    குறைகளை கண்டிப்பாகச் சொல்ல முடியாதுதான் தல.. ஆனால் ஓவர் பில்டப் கொடுப்போமா?

    சராசரி சந்திப்பில் ஓவர் பில்டப் கொடுத்தாலும் ஒன்றும் பெரிய பிரச்சனைகள் வந்துவிடாது. ஆனால் இல்லாத விஷயங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்வதால் அதுவும் வாழ்க்கைத்துணை விஷயத்தில் காட்டிக் கொள்வதால் வரும் ஏமாற்றத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமாக அமைந்துவிடுமே தல..

    ReplyDelete
  46. //பிரியமுடன்.........வசந்த் said...

    //பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.//

    கண்டிப்பா ஒண்ணு இல்ல 100க்கும் மேற்பட்ட ஆட்டோ வரும்போல தல

    அதுக்குள்ள கேள்வி பதில போட்டுருங்க
    //


    போட்டு விடுகிறேன் தல..,

    ReplyDelete
  47. திருமணத்துக்கு முன் தான் அவன் சொல்வதை அவள் கேட்பால், அந்த சின்ன சந்தோசம் அவனுக்கு கிடைக்கட்டுமே.

    :)

    ReplyDelete
  48. நானும் எண்ட்ரி போட்டுடுறேன்.

    இதில் சில குறைகள் இருக்கின்றன என்பதற்காக இந்த வழக்கத்தையே ஒழிக்க வேண்டும் என்பது தவறு. இதனால் பல நன்மைகளும் இருக்கின்றன.. பெற்றவர்கள் திருமணம் பேசும்போதே ஆண், பெண் இருவரையும் பற்றி தீவிரமாக விசாரித்துவிட்டு திருமணம் நிச்சயம் செய்தால் நீங்கள் சொன்ன பொய் புரட்டு எல்லாம் ஓடோடிப் போய்விடும். மற்ற படி, மனம் விட்டுப் பேசிக் கொண்டால் ஒருவரிடம் இருக்கும் வெளியே தெரியாத சில குறைகள் வெளியே தெரிந்து விடும். ஆகவே இந்த முறையில் நிறைகளே நிறைய இருப்பதால், இதற்கு என் வோட்டு கண்டிப்பாக உண்டு.

    மற்றபடி எனக்கு இதற்கெல்லாம் குடுப்பினை இல்லை.

    ReplyDelete
  49. // கோவி.கண்ணன் said...

    திருமணத்துக்கு முன் தான் அவன் சொல்வதை அவள் கேட்பால், அந்த சின்ன சந்தோசம் அவனுக்கு கிடைக்கட்டுமே.

    :)//

    :0 :)

    ReplyDelete
  50. //முகிலன் said...

    மற்ற படி, மனம் விட்டுப் பேசிக் கொண்டால் ஒருவரிடம் இருக்கும் வெளியே தெரியாத சில குறைகள் வெளியே தெரிந்து விடும். //

    தெரிந்துவிட்டால் அடுத்து என்ன தல செய்யலாம்?


    1. விட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம்,

    2. திருத்தலாம். இந்த வாய்ப்பு திருமணத்திற்கு பின்பு கூட உபயோகப் படுத்தலாம் என்பதால் திருமணத்திற்கு முன் பேசுவதில் சிறப்பு நன்மை கிடைப்பதாகத் தோன்றவில்லை.


    விட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம்.

    மோசமான குணம் என்றால் எஸ்கேப் ஆவதான் சரி. அதற்காக ஊரறிய கடலை போட்டுத்தான் தெரியவேண்டுமா என்ன? மற்றவர்கள் விசாரித்து தெரிந்துகொள்ளமுடியாதா?

    அடுத்ததாக எஸ்கேப் ஆவதற்கு அதுவே ஒருவழியாக உபயோகப் படுத்தலாம் அல்லவா? அந்தமாதிரி அடுத்தடுத்து பலரோடு ஊர்சுற்றிவிட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தால் என்ன ஆவது?

    இந்தமுறையால் குறைகள்தான் அதிகம் தலைவரே.., நிறைகள்கூட கடலைமூலம்தான் கிடைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே நண்பரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails